Social Icons

Pages

Wednesday, April 28, 2010

த்ரிசக்திகுழுமம் நடத்தும் இனிய இரு விழாக்கள்!

மே மாசம் 2ஆம்தேதி ஞாயிறு மாலை த்ரிசக்திகுழுமம் பெரிய விழா நடத்த இருக்கிறார்கள்!
அதுல அவங்க மூணு புத்தகங்கள் அதாவது பத்திரிகைகள் வெளியிடப்போறாங்க. ரசனை என்கிற இலக்கிய மாத இதழ், கொலுசு என்கிற நாவல்மாதாமாதம், அப்புறம் த்ரிசக்தி ஜோதிடம் என்று.

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYo1c9MatxwhRJwx4qmFXMLm4U116DOxaF85_Hz3Tt6Wuuq7kAx5q7KB7MxiolN1aTH-9ZEd04ngqdYHvJM5kAT4q1DOLOFyrThazTo2MmT4wfU_xb4iM8L2ZayxN1Mg_31cDH5g/s1600/Invitation++for+2nd+May+++function.jpg">



அதுக்கு வைரமுத்து வராரு எழுத்தாளர் ரமணிசந்திரன் வராங்க மேலும் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் சில பிரபலங்களும்!
தில்லானா மோகனாம்பாள் மறுபதிப்பு வெளியிடறாங்க புத்தகமாக.. புத்தகம் எழுதியவரும் இல்லை,அந்தப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பான்மையினர் இப்போ இல்லை நடிகைமனோரமாவை விழாக்கு வரும்படி கேட்டுட்டாங்க அவங்களால வர இயலவில்லை. அதனால நாவலை எழுதிய கொத்தமங்கலம் சுப்புகுடும்பத்தினருக்கு அமரர்இயக்குநர் ஏபிநாகராஜனின் மகன் பரமசிவன் அவர்கள் அளிக்க இருக்கிறார்.
நிகழ்ச்சில மதுரைஎம்பிஎன் பொன்னுசாமி(சேதுராமன்) குழுவினரின் தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.
தி நகர்ல வாணி மஹால்ல நடக்குது எல்லாரும் வரலாம்! தேமதுரத்தமிழோசையை செவி குளிரக்கேட்கலாம். நிறைய புத்தகங்களை அங்கே நீங்க வாங்கலாம்!

இந்த நிகழ்ச்சிக்கு 2நாட்கள் முன்பாக அதாவது ஏப்ரல் 30 தேவநேயப்பாவாணர் அரங்கில் த்ரிசக்தி குழுமத்தினரின் வெளியீடாக 12 நூல்கள் வருகின்றன. முன்னர் நிலாரசிகன் விழியன் அவர்களுது வந்தமாதிரி இப்போ அவனும் இவனும் என்கிற 16சிறுகதைகள் அடங்கியதும் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரை பெற்ற எனது சிறுகதை நூல் அன்னிக்கு வரப்போகுது.இதற்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் வராங்க. இதற்கும் வர முடியுமானால் அனைவரும் வரவும் நன்றி.










9 comments:

  1. ஆஹா.. எழுத்தாளர் ஆயிட்டீங்க..! வாழ்த்துக்கள் மேடம்..!

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஷைலஜா! அட்டைப் படம் அசத்தல்:)!

    ReplyDelete
  4. வாழ்த்துகள்!

    30 சந்திப்போம்

    2 வர இயலாது.

    ReplyDelete
  5. //ஆஹா.. எழுத்தாளர் ஆயிட்டீங்க..!//

    ithu enna kathai?...
    akka eppovo ezhuthaaLar thaan!
    venumnaa, antha ezhuthaaLarai neenga ippo thaan paakuren-nu chollunga! :)

    all the best-ka for the book release function!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் யக்கோவ்!...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அக்கா ;)

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஸ்ரீரங்கப்ரியா

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.