அப்போதுதான் ஒருநாள் மகாகவியின் இல்லத்திற்குவந்துசேர்ந்தார். பசியில் உடல்தள்ளாட கை மகாகவியின் சின்ன மகளிடம் யாசகம் கேட்டது.
சேர்த்துவைத்திருந்த இரண்டணாவை அந்த சின்னப்பெண் அவரிடம் கொடுக்க பெற்றுக்கொண்ட பெருமகனார் இரவில் திரும்பிவந்தார்.
பாரதியிடம்,”தோழா உன் மகளிடம் நான் பெற்ற இரண்டணா இன்றைய பசியை தீர்த்தது இனி நான் என் செய்வேன்? செல்வரிடம் கொள்ளையடித்துத்தான் காத்துக்கொள்ளவேண்டும் வறுமைவாட்டுகிறது இனியும் தாங்கமுடியாதையா முடியாது” என்று தேம்பினார்.
கேட்டதும் மகாகவி எரிமலையானார். “என்ன உலகமடா இது ஒரு பணக்காரனின் சுகத்துக்கு ஆயிரம் ஏழைகள் பலியாவதா? தம்பி நீலகண்டா நீ தடுமாறாதே தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் காத்திடுவாள் சக்தி கவலைப்படாதே” என்று ஆறுதல்கூறினார். அருகில்குடி இருந்தோரை அணுகி ஐந்துரூபாய்வரைப்பெற்று நண்பரை அனுப்பிவைத்தார் . தன்னைக்கும்பிட்டு நகர்ந்த நீலகண்டரைப்பற்றி எழுதினார் மகாகவி.
பாரத சமுதாயம் வாழ்கவே!
(திருமதி சகுந்தலாபாரதி வெளிப்படுத்திய நிகழ்ச்சியைக்கேட்ட என் தந்தை கூறியதிலிருந்து)
Tweet | ||||
நல்ல பகிர்வு ஷைலஜா.
ReplyDeleteபாரதியின் பிறந்தநாளில், அவரைப் பற்றிய நினைவுப் பகிர்வு. அருமை.
ReplyDeleteமகா கவியைப் பற்றி இன்று பதிவு எழுதியதற்கு வாழ்த்துகள்.நன்றி.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteமகா கவிக்கு வண்க்கங்கள்.
மகாகவி பாரதியாரையும், நீலகண்ட பிரும்மச்சாரி அவர்களையும் இன்று நினைவு கூர்ந்தது பாராட்டத்தக்கது...
ReplyDeleteஎத்தனையோ தியாகிகள் தீயாய் எரிந்த சுதந்திர வேட்கையுடன் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கித்தந்த சுதந்திரம் இன்று கொள்ளையர்களின் சிக்கி என்ன பாடுபடுகிறது என்பதை விளக்குவதற்கு என்னிடம் வார்த்தையில்லை...
போன வாரம் தான் சகுந்தலா பாரதி படிக்கவில்லை என்று எனது பாரதி பதிவு பின்னூட்டம் ஒன்றில் தெரிவித்தேன்.. அதில் ஒரு செய்தி படிக்கும் வாய்ப்பு உங்கள் பதிவில் கிடைத்தற்கு நன்றி ....
ReplyDeleteதனியோருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழிப்போம் எனும் பாரதியின் ரெளத்திரம் தோன்றிய விதம் குறித்த பகிர்வும் அருமை...
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
தாமதமான எனது பதிலுக்கு மன்னிக்கவும் இங்கு பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி மிக.
ReplyDelete