மலர் என்றால் தாமரை அன்னை என்றால் பாண்டிச்சேரி அரவிந்த அன்னை!
அரவிந்தர் சொல்லுவார்..” நான் பத்துவருடங்களில் அடைந்திருக்ககூடிய ஸித்தியை ஒரே வருடத்தில் அடைந்திருக்க முடிகிறதென்றால் அதற்குக்காரணம் அன்ன்னையின் ஆன்மீக சாதனையே.அன்னையினால்தான் எனது பூரண யோகத்தை நடைமுறையில் கொண்டுவர முடிந்தது.அன்னை இல்லையென்றால் இந்த ஆஸ்ரமம் இல்லை”
அன்னையெனும் அருள் நதியில் நாம் உண்மை உள்ளத்துடன் மூழ்கிஎழும்போது பரிசுத்தமாகிறோம். அவள் அருளில் சிறப்பெல்லாம் பெறுகிறோம்.அன்னையே சரணம்!
ஓம் ஆன்ந்த மயி சைதன்யமயி சத்யமயி பரமே!
அன்னையின் அருள்மொழிகளில் சில....
"நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்,எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம்.பின் சமுதாயம் தானே சீர்திருத்தம் பெற்றுவிடும்!!
மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!
எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறேன் என்று விளக்கும் உணர்வே ஸ்ரீ அன்னையின் உணர்வும் உண்மையும் ஆகும்!!
மனிதனின் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்வதே மகிழ்ச்சியாகும்!!
தன் கடமைகளை முறையாகவும்,ஒழுங்காக செய்வது மட்டுமே உண்மையான பக்தியும்,கடவுளை வேண்டி நிற்பது மட்டுமே ஆசனமும் ஆகும்!!
நான் எனக்காக மட்டும் அல்ல என்று சொல், உனது வாழ்வின் பொறுப்புகளை எல்லாம் - நம்பிக்கைகளை எல்லாம் உண்மையிடம் அதாவது இறைவனிடம் ஒப்படைத்து விடு, அனைத்தும் சீராக நடக்கும்.
இறைவனது அருளைப் பெற விரும்புவதே உயர்ந்த ஞானம் ஆகும். அப்படிப்பட்ட உயர் ஞானத்தை அடைய வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்."
அன்னையின் திரு அவதாரத்திருநாளான இன்று அன்னைக்கு எனது எளிய காணிக்கையாக இந்தப்பாடலை எழுதி சமர்ப்பிக்கிறேன் .அன்னையின் திருவடிகளுக்கு பணிவான நமஸ்காரங்கள்.
ராகம் பாக்யஸ்ரீ
பல்லவி
ஆதாரம் நீயென்று ஆனந்தமாய் இங்கு
அரவிந்த அன்னையை சரண்புகுந்தோம்-நமக்கு (ஆதாரம்)
அனுபல்லவி
ஏதாகிலும் பிழை அறியாமல் செய்திடில்
மாதா அவள் நம்மை மன்னித்தே அருள்செய்வாள்(ஆதாரம்)
சரணம்
அறியாமை இருள்தன்னில்
அநியாயமாகவே
அடைந்துகிடந்து அவதி யுற்றோமே
தெரியாமல் பிறர்நோக தெளிவின்றி பல சொல்லை
நெருபென்ன நெடிதாக வீசி எறிந்தோமே
கருமேகத்திரையாக கவலைகள் சூழ்கையில்
சிறுபிள்ளைபோலவே தவித்துப்போகையிலே
அருள் நதியாகவே அரவணைப்பவளை
அன்னை! அன்னை! அன்னை, எனப்பாடி(ஆதாரம்)
Tweet | ||||
உண்மைதான். அன்னை என்றால் பாண்டிசேரி அன்னைதான் நினைவுக்கு வருவார்கள். பாடலை உங்கள் குரலுடன் பதிவு செய்து இருக்கலாமே ??
ReplyDeleteஆமா எல்கே....அன்னை தினம் இன்றுமட்டுமல்ல என்றுமேதான் ...கண்டிப்பாக பாடி பதிவு செய்கிறேன் நேரம்தான் கிடைப்பதில்லை..நன்றி கார்த்திக்.
ReplyDeleteஷைலஜா
அன்னையின் அவதார திருநாளுக்கு அன்னையின் பொன்மொழிகள்,பாடல் பதிவு மனதுக்கு மகிழ்ச்சி.
ReplyDeleteநன்றி.
அன்னையின் திருவடிகளுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteஷைலஜா மேடம்...
ReplyDeleteஉங்களுடன் இந்த பதிவில் இணைந்து நானும் அன்னையின் தரிசனம் பெற்றேன்...
அன்னை அவர்களின் அவதார திருநாளன்று இந்த பதிவு ரொம்பவே விசேஷம்...
அன்னையை பற்றி பதிந்தமைக்கு மிக்க நன்றி மேடம்...
அடடா.. ஆன்மீகப்பதிவா? கும்மி அடிக்க முடியாதே? உம்மாச்சி கண்ணை குத்திடுமே.. சாரி மேடம்.. பை ...பை
ReplyDelete