Social Icons

Pages

Friday, April 26, 2013

சொல் ஓவியம்!





இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற  கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது.
     

அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும்

தமிழில்கம்பனும் நம்மில்

பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !

கீட்ஸ் ஓர் அற்புதக்கவிஞன்!

 வசதி இல்லாத வாழ்க்கை வசீகரமான கற்பனை அற்ப ஆயுள் அற்புதமான சிந்தனை  இதுதான் கீட்ஸ்!  தனது 21 வயதில் கவிதை உலகில் பிரவேசித்து 24வயதில் மரணத்தின் பிடியில் வீழ்ந்தார் நம் பாரதியைவிட குறைந்தகால வாழ்வு தான் இவருக்கு. காதல் நோயும் காசநோயும் கீட்சின் நெஞ்சினைக் கூறுபோட்டுவிட்டன இளமையில் மரணம் அவரை வென்றது.

கவிதை உலகில் இரண்டாம் மறுமலர்ச்சிக்குவித்திட்ட கற்பனைவியல் கவிஞர்கள் வாட்ர்ஸ்வொர்த் கீட்ஸ் ஷெல்லி மூவரும் உலகின் கவனத்தை ஈர்த்தவர்கள்.

அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

சொல் ஓவியம்!

பார்த்தீர்களா. சொல்சிற்பம் சொல் இசை என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது! ஏனென்றால் சித்திரம் நம்மிடம் பேசும்! திரைப்படங்களைக்கூட திரைச்சித்திரங்கள் என்பார்கள் தூய தமிழில்.

ஆம்!..கம்பனும் கீட்சும் ஓவியத்தை தங்கள் பாடல்களில் ஒளித்துவைத்ததை சற்றே பார்க்கலாம்.

ஆயகலைகள் அறுபத்திநான்கு! சிற்பம் ஓவியம் நாட்டியம் எழுத்து பேச்சு, மகிழ்வு ஊட்டும் கருவிகள் என்று பல உண்டு. இவைகளில்  ஓவியம் ஒருதனிச்சிறப்பைப்பெறுகிறது.


குறிப்பாக காதல்நோயில் வீழ்ந்தவர்களுக்கு ஓவியம் ஒருசிறந்த உறுதுணையாக அமைகிறது.

ஆணாயினும். பெண்ணாயினும் தங்களுடைய அன்புக்குரியவர்களின் முகத்தினன நினைத்து,படத்தினைப் பார்த்து மனம் மகிழ்கின்றனர்.

நடைமுறைவாழ்க்கையில் சிறந்தபொருளை நமக்குஒருவர் கொடுக்காவிட்டால் உடனே,' அதென்ன பெரிய ஓவியமோ?' என்று கேட்கிறோம்.

கதைகளில்கூட அவள் அஜந்தாஓவியம்போலிருந்தாள் எனகதாசிரியர்கள் எழுதுவார்கள் அழகுச்சித்திரம், சித்திரம் பேசுதடி,காதல் ஓவியம் என்றெல்லாம் பாடல்களில் கேட்டுவருகிறோம்.

மக்கள்தங்களுக்கென்றுமொழி உருவாகாத காலத்தில் குகைகளில் சித்திரங்களைவரைந்து அதன்மூலம் உணர்ச்சிகளை வெளிபடுத்திக்கொண்டார்கள்.

 உணர்ச்சிபூர்வமான சிறந்தஓவியம் பல கதைகளை நமக்குச்சொல்லிவிடும்.

அத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம் ஒன்றினை புலவன் கீட்ஸ் காண்கிறான்

அந்தஓவியம் வரையப்பட்டிருந்தது ஒரு தாளில் அல்ல..குகைச்சுவர்களில் அல்லது மரத்தூண்களில் அல்ல.மாறாக ஒருதாழியில் !(URN)

அந்தத் தாழி,கிரேக்கநாட்டுச் சார்புடையதாக அவனுக்குத் தோன்றியது எனவே அந்தப்பானைக்கு Greecian Urn என்று பெயர்வைத்தான்' அந்ததாழியை வ்ரலாற்று
ஆசிரியனாகவும் (Sylvan Historian)நினைத்து அதனுடன் பேசுகிறான்.

காதலன் காதலிக்கு ஊதுகுழல் ஊதி மகிழ்வித்து அவளைப் பின் தொடர்ந்து தன் அருகில் அழைத்திடுவதுபோன்ற ஓவியம் .

அவன் அழைப்பதை செவிசாய்க்காமல் அவனுடைய இன்னிசையைக்கேட்டு இசைவுகொடுக்காமல் தப்பி ஓட முயற்சி செய்கிறாள் அந்தப்பெண்

ஒருமரத்தடியிலே இந்தக்காதல்நாடகம் நடக்கிறது ,இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஓவியம் கீட்சின் சிந்தனையைக் கவர்கிறது.


அந்தஓவியக்காதலனிடம் கீட்ஸ் பேசுகிறான்

"இந்தமரத்தினடியில் நீ எப்போதும் நின்றுகொண்டிருக்கலாம் நீபாடுகின்ற பாட்டினைக் கேட்காமல் அவள் எங்கேயும்தப்பித்துப்போகமுடியாது. இந்தமரங்களும் உன்னுடைய      பாட்டைக் கேட்டுப்  பழக்கப்படவேண்டியதுதான்.

நீ அவளைமுத்தமிடமுயற்சிக்கிறாய் ,ஆனால் முடியாது.

நீ உனதுகுறிக்கோளில் வெற்றிக்குப்பக்கத்தில் நிற்கிறாய், அதற்காகபயப்படாதே !

அவளும் உன்னைவிட்டுமறைந்துவிடமுடியாது. எப்பொழுதும் உனது காதல் இருந்துகொண்டே இருக்கும் அவளும் அழகு மாறாமலே இருப்பாள்'

என்னும்பொருள்பட தாழியிலுள்ளஓவியக் காதலர்களைப்

பார்த்துச்சொல்லுகிறான் கீட்ஸ்.


அமரத்துவம் வாய்ந்தகாதல் ஓவியம் அழியாதது!

அந்தக்காதலர்களுக்கு மூப்புஇல்லை என்பதைகீட்ஸ்மறைமுகமாகசொல்கிறார்..

அதனைக்கீழ்கண்ட ஆங்கிலவரிகள் நமக்கு உணர்த்திவிடும்.


Thou still unravish'd bride of quietness,

Thou foster-child of silence and slow time,

Sylvan historian, who canst thus express

A flowery tale more sweetly than our rhyme:

What leaf-fring'd legend haunts about thy shape

Of deities or mortals, or of both,

In Tempe or the dales of Arcady?

What men or gods are these? What maidens loth?

What mad pursuit? What struggle to escape?

What pipes and timbrels? What wild ecstasy?



Heard melodies are sweet, but those unheard

Are sweeter; therefore, ye soft pipes, play on;

Not to the sensual ear, but, more endear'd,

Pipe to the spirit ditties of no tone:

Fair youth, beneath the trees, thou canst not leave

Thy song, nor ever can those trees be bare;

Bold Lover, never, never canst thou kiss,

Though winning near the goal yet, do not grieve;

She cannot fade, though thou hast not thy bliss,

For ever wilt thou love, and she be fair!

(From "ode on a Grecian urn"by John Keats)



கீட்சின் இந்தவிவரிப்பும்,கம்பனின் காவியத்தில் ஒரு நிகழ்ச்சிகோர்வையையும் பார்த்தால் ஓவியக்கலையின் சிறப்பை நாம் இன்னும் உணரமுடியும்.



ஆற்றமுடியாத துயரத்துடன் அசோகவனத்தில் அன்னை சீதை இருக்கிறாள்.

"இராமன்வருவானா? என்னைமீட்பானா?

என் தலைவன் இராமன் நல்லவன்! பேரழகன்!

ஆமாம்! அரசாட்சியை ஏற்றுக்கொள் என்றபோதும் ராஜ்ஜியம் உனக்குஇல்லை என்றபோதிலும் அவன்முகம் சித்திரத்தில்மலர்ந்த செந்தாமரையாகவே இருந்தது. "

அந்தமுகத்தை எண்ணுகிறாள் சீதை. வறண்டபாலையாய் இருந்த அவள் உள்ளத்தில் வசந்தம் எட்டிப்பார்க்கிறது.


"மெய்த்திருப்பதம் மேவு என்ற போதிலும்

இத்திருத்துறந்து ஏகென்ற போதிலும்

சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை

ஒத்திருந்த முகத்தினை உன்னுவாள்"

கம்பன் காட்டும் இந்த சொல் ஓவியம் இதுதான்!

ஓவியக்கலையின் சிறப்பை மிக நுணுக்கமாக பொதித்துவைக்கிறான் கம்பன் இங்கு,

அரசுரிமையைத்துறந்து காட்டிற்குச்செல்லவேண்டும் என்றுகைகேயிகூறியபோது 'அன்றலர்ந்த தாமரையினை வென்றதம்மா' என்று இராமனின்முகத்தை வர்ணிக்கிறார்.


கைகேயின் சுடு சொல் கேட்டமுகம் அன்றுமலர்ந்த தாமரையாம்.அன்றுமலரும்தாமரைக்கு உயிருண்டு ..நேரமாகிவிட்டால் வாடிவிடும் .

ஆனால் சீதையைப்பற்றி கம்பன்கூறும்போது 'சித்திரத்தில் அலர்ந்ததாமரை' என்கிறார், இராமனின் முகவதனத்தினை!

சித்திரத்தாமரைக்கு அழிவில்லை என்றும் மலர்ந்தே இருக்கும்.

கம்பன்காட்டிய சொல்லோவியத்தையும் தாழியில்வரையப்படிருந்த காதலர்களின் உள்ளப்பாங்கினை கீட்ஸ் நமக்கு உணர்த்தும் உருவகமும் நாம் படித்து மகிழ வேண்டிய சுவையான காட்சிகள் !
கலைகளில்பலபிரிவுகளில் ஓவியம் ஓர் உயர்ந்த இடத்தைபிடிக்கிறது என்பதில் ஐயமே இல்லை.

இதனால்தானோ என்னவோ, கம்பனையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?

காலங்களில் அவள் வசந்தம்!
கலைகளிலே அவள் ஓவியம்!







11 comments:

  1. என்னவொரு ரசிக்க வைக்கும் ஒப்பீடு...! மனதை கவர்கிறது கீட்ஸின் விவரிப்பு...!!

    முடிவில் இனிமையான பாடல்...

    நன்றி...

    ReplyDelete
  2. சொல்லோவியத்தை விளக்கிய விதம் அழகு. கீட்ஸின் அற்புதமான காதல் கவிதையை இங்கே பகிர்ந்தமைக்கும் கம்பரசத்தை ரசிக்கத் தந்தமைக்கும் நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  3. ஆழ்ந்த ரசனையுடன் எழுதப்பட்ட பதிவு. படிக்கப் படிக்க ஆனந்தமாக இருந்தது. என்ன அருமையான வரிகள்!!!. இந்தப் பதிவுமொரு சொல்லோவியமே!!!பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Anonymous11:23 PM

    வெகு சுவாரசியம். பலே!

    ReplyDelete
  5. அருமையான ஒப்பீட்டு விளக்கம் சகோதரி...
    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள்...
    நம் கம்பனுக்கு இணையான மேலைநாட்டு கவிஞரையும்
    எங்களுக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல சகோதரி...

    ReplyDelete
  6. படித்ததும் பிரமிப்புதான் மனசில் எழுநததுக்கா! அற்புதமா எழுதியிருக்கீங்க! எனக்குல்லாம் இங்கிலீஷ் கதைகளை படிச்சு ரசிக்க (கொஞ்‌சம் சிரமத்துடன்) முடியுமே தவிர கவிதைல்லாம்... ரொம்ம்ப்ப தூரம்! நீங்க தந்திருக்கற கீட்ஸின் ஓவியம் அருமை! கம்பரைப் பற்றி நாம் வியக்க ஏராளம் ஏராளம் உண்டே! கலைகளிலே அவன் ஓவியம்னு சொன்ன கவிஞனுக்கு உங்களோட சேர்ந்து ஒரு ஜே போடறேன்!

    ReplyDelete
  7. இந்த அற்புதமான பதிவை விமரிசிக்க வார்த்தைகள் இல்லை.ஆங்கில கவிஞர்களின் படைப்புகளிடமும் கம்பனின் காவியத்திடமும் உங்களுக்கு உள்ள நெருங்கிய பரிச்சயம் நன்றாக புலப்படுகிறது.சில இடங்கள் மனதை தொட்டது.

    ReplyDelete
  8. அருமையான ஒப்பீடு. மேலுள்ள படமும் ரசிக்க வைத்தது.

    ReplyDelete
  9. //அற்ப ஆயுள் அற்புதமான சிந்தனை
    அற்புதக் கலைஞர்களின் நிலை.

    ஒப்பீட்டை ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  10. மிக்க நன்றி திரு அப்பாதுரை திரு பார்த்தசாரதி கணேஷ் தனபாலன்
    மகேந்திரன் மற்றும் மாதேவி கீதமஞ்சரி பார்வதி!

    ReplyDelete
    Replies
    1. கடைசிபெஞ்சுக்கும் நன்றி!

      Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.