Social Icons

Pages

Saturday, June 01, 2013

குழந்தையும் நாமும்!



 

ஜூன்  1. உலக குழந்தைகள் தினம்
 
 1949ல் வெளிவந்த அட்லாண்டிக் மாத இதழ்  ஒன்று கண்ணில் பட்டது.
Miltred Howland   அவர்கள்  இப்படி  எழுதி உள்ளார் ஆங்கில வரிகளை
தெரிந்தவரை தமிழில்  மொழி பெயர்க்கிறேன்.( ஆங்கிலக்கவிதை  கீழே)
 
 தன் நிலையினின்றும் உயர்ந்து
விண்ணையும் தொடும் ஆற்றலை
 ஒரு குழந்தைக்கு
நாம் எப்படிக்கற்றுத்தருவோம்-மிகவும்
கீழான நிலையில் தாழ்ந்துவிட்ட நாம்?
 
 நாணயமாகவும்  கௌரவமாகவும் வாழ்ந்திரு
உண்மையின் பொருட்டே  உயிர் வாழ்ந்து
அதற்காகவே உயிர் விடுஎன்று ஒரு
குழந்தையிடம் எப்படிச்சொல்வோம்
பொய்யோடு பொய்யாய் வாழ்ந்துவிட்ட நாம்?
 
வாழ்க்கையின் சரியான பாதை அன்பின்
 வழிதான்என்று அவனிடம் எப்படிக் கூறுவோம்
.வெறுக்கவே கற்றுவிட்ட நாம்?
 
 பிரார்த்திக்கக் கற்றுக் கொடுக்கவும், அவனை
 பக்தனாக  மாற்றவும் எப்படித் துணிவோம்-
பிரார்த்தனையே செய்தறியாத நாம்?
 
 How shall we teach
A child to reach
Beyond himself
And touch the stars
We who stooped so much?
 
How shall we tell
A child to dwell
With honour ,live and die
For Truth
We who have lived a lie?
 
 How shall we say
To him' the way
Of life is through the gate
Of Love'
We, who have learned to hate?
 
How shall we dare
to teach him Prayer
and turn him toward the way
Of faith
We who no longer pray?
 
 
 
 

--

--
 
 

10 comments:

  1. தவறாக கற்பித்தால் அல்லது தவறாக நடந்தால் / இருந்தாலும் கூட 'இன்றைய' குழந்தைகள் கண்டுபிடித்து விடுவார்கள்...

    நாம் முதலில்... பிறகு அவர்களுக்கு...

    அருமையான சிந்திக்க வேண்டிய கவிதை... நன்றி...

    ReplyDelete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் நன்றி...

    ReplyDelete
  3. வாழ்க்கையின் சரியான பாதை அன்பின்
    வழிதான்’ என்று அவனிடம் எப்படிக்
    கூறுவோம்...வெறுக்கவே கற்றுவிட்ட நாம்?

    முதலில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டும் போல !

    ReplyDelete
  4. arumai...!

    tamizhaakkam seyythamaikku mikka nantri!

    ReplyDelete
  5. நாம்தான் முதலில் கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் ...

    ReplyDelete
  6. 1949 லேயே இப்படித்தானா?

    குழந்தையாக இருந்தபோது நாமும் நல்லவர்களாக, கள்ளம் கபடமற்றுத்தான் இருந்தோம். வயதாக ஆக, சுயநலம் அதிகமாகி நிலை பிறழிவிட்டோம்.
    பால பாடங்களை மறுபடி கற்போம். இந்தக் குழந்தைகள் தினத்தில் குழந்தைகளுக்கு நல்ல உதாரணமாக இருப்போம் என்று உறுதி எடுப்போம்.

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்க நினைத்ததை நீங்க கேட்டுட்டீங்க ரஞ்சனி நாராயணன்.

      Delete
  7. அருமையான பகிர்வு.

    நாமே தவறு செய்யும்போது குழந்தைகளை எப்படி திருத்துவது.... அதானே....

    ReplyDelete
  8. குழந்தைகள் ப்ளெயின் ஸலேட் நாம்தான் நல்லபடியாக இருந்து நல்லவற்றைப் பதிக்க வேண்டும். கவிதை சொன்ன கருத்தும், உங்களி்ன மொழிபெயர்ப்பும் ரொம்ப அருமைக்கா!

    ReplyDelete
  9. கருத்து கூறிய கணேஷ் அப்பாதுரை ரஞ்சனிநாராயணன் டிடி. வெங்கட் நாகராஜ் சீனி ரிஷபன் இராஜேஸ்வரி......அனைவர்க்கும் மிக்க நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.