Social Icons

Pages

Monday, September 09, 2013

தோள் கண்டார் தோளே கண்டார்!
அறத்தை  நிலைநிறுத்தத்தோன்றிய இரு காப்பியங்கள்  ராமாயணமும் மகாபாரதமும். காலம் பல கடந்தும் அவைகள்  இன்றும் நம்மிடையே  பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகமே ஒரு சிறு கருவிக்குள் கைக்கு அடக்கமாக வந்துவிட்டது.இளமையில் செல் (cell)என்றாகிவிட்ட இந்த நவீன யுகத்தில் தர்மங்களும் நியாயங்களும் கூட  மெல்ல மெல்ல சென்றுகொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும்  கற்றறிந்த சான்றோர்கள் அவற்றை  இழுத்துப்பிடித்து வைத்திருக்கின்றனர். அறம் நெறி  நீதி நியாயம் என்பதை வலியுறுத்தும் பெருமைகளை  கூறிவருகின்றனர்.
 
ராமாயணத்தைக்கம்பன் தேர்ந்தெடுத்தமைக்குக்காரணம் தன் திறமையை
முற்றிலும் வெளிப்படுத்துவதற்காகத்தான் என்று  சொல்லுவார்கள்.
இந்தக்கதை காலத்தினால் மட்டும் பெரிதல்ல இராமன் பிறப்பதற்கு முன்னால் தொடங்கும் கதை. இராமன் முடி சூட்டி தன்னுடன் இருந்தவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும்வரைஎன்று வடக்கே இருக்கும் கோசலநாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள இலங்கைவரை நீடிக்கிறது.
 
இராமாயணம் போன்ற  ஒரு காப்பியத்தை கம்பன் பாடப்புகும்போது
பல பாத்திரங்களைப்பற்றி யும் பல தேசங்களைப்பற்றியும்,பல்வேறுபட்ட மனிதர்களைப்பற்றியும் அரக்கர்களைப்பற்றியும்மட்டுமல்ல பலவிலங்குகள் பறவைகள்  பற்றியு்ம்  விவரிக்க வேண்டி உள்ளது.
 
அத்தனையையும்  கம்பன்  விளக்குகிறான்.
 
அவன் காட்டும் திறமைக்கூறுகளையும் அவை மிளிரும் கதைப்பகுதிகளையும்  கூறவேண்டுமானால் அதற்கே பல நூல்கள் எழுதவேண்டும் என்பார்முன்னாள்  நீதிபதி திரு இஸ்மாயில் அவர்கள்.
 
பொழுதுபோக்கிற்காக சொல்லப்படும் கதைகள் அல்ல  இரு காப்பியங்களும்நிரந்தரமாக என்றும் அழியாத  ஓர் உண்மையை  ஒரு தர்மத்தை வலியுறுத்துவதற்காகவே இந்தக்கதைகள் 
தோன்றியிருக்கின்றன.
 
தனது முதல்பாடலில் கம்பர் ‘

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,


அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
என்று ஆரம்பிக்கிறார்! 
 
 ஆண்டவன் சுவாமிகளை ஒருமுறை தரிசி்க்க சென்றபோது  ஒருவர்  கம்பன் ஏன் இப்படி  தாம் உள ஆக்கலும் என்றார் எனக்கேட்க அதற்கு வடமொழியிலும் தமிழிலும் மிகப்புலமை நிறைந்த  அந்தஆச்சாரியசுவாமிகள் சொன்னார்.
 
**” இருப்பதை ஆக்கினால் எப்படி ஜகத் காரணத்வம் வரும்? ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்டனானவன்   ஸ்தூல சித சித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்றார்.(இதன் அர்த்தம் கடைசியில்)
 
வாழ்வியலை அவன் கூறுவது இருக்கட்டு்ம் தேசம் பற்றி கூறுவது இருக்கட்டும்
 
பெண்ணின் மனநிலையை  அப்பட்டமாக கூறுகிறானே அதைத்தான்  ஒரு பெண்ணாக என்னால்வியக்காமல் இருக்கமுடியவில்லை!
 
 
மிதிலைவீதியில் தேரில்-கவனியுங்கள்-தேரில்தான் இராமன் வருகிறானாம். அவனைப்பார்க்க பேதைமுதல் கடைப்பேரிளம் பெண் வரை  வீதியில் வநதனர் என்று மட்டும் எதிர்கொள் படலத்தின் கடைசிபாடலில்  சொன்னவன்  பிறகு அடுத்து  வரும்உலாவியற்படலத்தில்  மகளிர் அனைவரும்  ராமனைக்காண  மொய்க்கும் விதத்தை   பெண்பாத்திரமாகவே மாறி சொல்கிறான் அல்லது செல்கிறான்!!
 
பார் என்றது பருவம்    என்று ஒரு திரைப்பாடல்கூட உண்டே!
 
.இராமனைக்காண வந்த மகளிரின் தன்மைகளை  ‘தமை வலித்தவன்பாற் செல்லும்உள்ளத்தைப்பிடித்து நாமென்றோருகின் றாரு மொத்தார்’என்கிறார். ராமனைக்காண அவர்களுக்கு முன் அவர்களின் உள்ளம்  ஓடுகிறதாம்  அதைப்பிடிக்க ஓடுகiிறார்களாம்!
 
 
17பாடல்களில்  கம்பனின் கைவண்ணத்தில் அந்தமகளிரின்  உடல்கோலமும்  உள்ளக்கோலமும் மிளிர்கின்றன!
 
 
கடைசியiில் இப்படி சொல்லி முடிக்கிறார்!
 
 
""தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''

__________________________________________________________________________________

**சிதசித்விசிஷ்டம் = சித் + அசித் + விசிஷ்டம்
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் சித், அசித், ஈச்வரன்
எனும் மூன்று தத்வங்களை ஒப்புக்கொள்கிறது -

சித் - ஜீவன், ஜீவகோடிகள்
அசித் - உயிரற்ற பிரபஞ்சம்
ஈச்வரன் - ஸ்ரீமந்நாராயணன்
இம்மூன்றும் அழிவற்றவை.

பிரளய காலத்தில் அனைத்தும் உருவத்தை
இழந்து நுண்ணிய நிலைபெற்று ஈச்வரனான
நாராயணனிடம் ஒடுங்கும். [அழிவதில்லை]
படைப்பின் போது உருவம் பெற்று தூல
வடிவுடன் கண்ணுக்குப் புலப்படும்.

அதைத்தான் ”ஸூக்ஷ்ம சித் அசித் விசிஷ்டனானவன்
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்று
ஸாதிச்சிருக்கிறார் ஆண்டவன் சுவாமிகள். பர தத்வம் என்றால் மூன்றும் எப்போதும்
பிரிக்க முடியாத வண்ணம் சேர்ந்தே இருக்கும் நிலை.

உலகம் யாவையும்  தாம் உள ஆக்கல் - படைத்தல்
நிலை பெறுத்தல் - காத்தல்
நீக்கல் - அழித்தல்
ஆக முத்தொழில்
 
இப்படி எண்ணற்ற உலகங்களை ஆக்கி, அழிப்பது
அலகிலா விளையாட்டு!
 
(கம்ப  மகா சக்கரை சமுத்திரத்திலிருந்து ஒரு துளி .இன்றைக்கு!)
 
 

16 comments:

 1. அருமையான கட்டுரை...
  பருகத் தந்தமைக்கு நன்றி.
  வாழ்த்துக்கள் அக்கா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமார் வருகைக்கும் கருத்துக்கும்
   உங்கள் வலைப்பூவில் என்னால் கருத்துக்கள் அளிக்க இயலவில்லையே ஏன்?

   Delete
 2. விளக்கம் அருமை... இனிமை...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. என்ன ஆச்சு டிடி முதல்ல வருவீங்களே! கருத்துக்கு நன்றி மிக

   Delete
 3. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. இதற்கு சிறப்பு நன்றி எப்பொதும் இப்பணி செய்யும் சகோதரர் டிடியை தமிழ் இருக்கும்வரை நலம் காக்கும்!

   Delete
 4. கம்பன் இன்றும் நமது கவிஞர்களை வாழவைத்துக் கொண்டு இருக்கிறார் என்று உங்கள் பதிவில் இறுதி புரிந்துக் கொள்ள முடிகிறது !
  த.ம 2 !வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி திரு பகவன் ஜீ!(பெயர் சரியா சொல்றேனா?)

   Delete
 5. கம்ப மகா சக்கரை சமுத்திரத்திலிருந்து ஒரு துளி இன்றைக்கு பருக உதவிய உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். மற்ற பகுதிகளையும் படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வியபதி அவர்களுக்கு நன்றி மற்ற பகுதிகளையும் அளிக்கப்பேராவல்தான் எம்பெருமான் அதற்கான திறமைதனை எனக்கு அளிக்கவேண்டும் !

   Delete
 6. ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள். கம்பரின் கவிதை ரசனையே தனி. ’சக்கரவர்த்தி திருமகனில்’, ராஜாஜி நிறைய இடங்களில் கம்பரது கவிதையையும், டி.கே.சி அதை அனுபவிப்பது பற்றியும் எழுதியிருப்பார். தோள் கண்டாரைக் கொஞ்சம் விரிவாகத்தான் எழுதுங்களேன். யார் எழுதினாலும், எத்தனை முறை படித்தாலும் திகட்டாத அமுதமல்லவா கம்பன் தமிழ்! நான் மிகவும் ரசித்தது குகப் படலம், அதுவும் பரதனுடைய சந்திப்பு. கம்பனை அனுபவிக்க ஒரு வாழ்நாள் போதாது. என் வலைத்தளத்திற்கும் வந்து பாருங்கள்.
  http://tamizhnesan.blogspot.ae/

  அன்புடன் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. திருவெங்கட் அவர்களுக்கு நன்றி மிக
   கம்பன் தம்ழி திகட்டாத அமுதம்தான்/ கம்பராமாயண வகுப்பு பெங்களூரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடக்கிறது அதில் பங்கேற்பதால் சாகரத்தில் சங்கமமாகி சிறு துளியினைப்பருகும் பேறு கிடைக்கிறது அதைப்பகிர்கிறேன் வேறொன்றும் நானறியேன்!
   நீங்கள் சொல்வதிலிருந்து கம்பனிடம் உங்களுக்கான ஆழ்ந்த அனுபவம் தெரிகிறது வருகிறேன் உங்கள் வலைப்பூவிற்கும்.

   Delete
  2. திரு வெங்கட்

   என்னால் உங்கள் தளத்தில் கருத்து சொல்லமுடியவில்லையே ..

   Delete
 7. விசிஷ்டாத்வைதிகளுக்கெனவே ஏற்றதொரு
  விளக்கம்.

  அற்புதம்.

  சுப்பு தாத்தா.
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 8. அருமையான கட்டுரை. அழகாக எழுதியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள் + நன்றிகள்.

  ReplyDelete
 9. ராமபிரானின் அழகை வர்ணிக்கும் இந்த அழகான கம்பர் பாடலுக்கு ஈடு இணை அந்த ராமபிரானின் அழகே தான்.எந்த அங்கத்தை பார்த்தாலும் அதை விட்டு வேறொரு அங்கத்தை பார்க்க மனமில்லாமல் மிதிலாபுரி பெண்கள் ஒரு இயலாமையில் கஷ்டப்பட்டனர்.
  அழகாக எழுதி உள்ளீர்கள் தெவிட்டாத ரசனையுடன்

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.