Social Icons

Pages

Sunday, April 12, 2015

ஆதரவு...சிறுகதை




''டீச்சர்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,'' என்று சொல்லி, தன் அருகில் வந்து நின்ற சுமதியை, வியப்புடன் பார்த்தாள் தேவகி. 'வகுப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருப்பவள், இப்போது வீட்டிற்குக் கிளம்பும்போது பேச வர்றாளே...' என்று நினைத்து, ''எதுவானாலும் நாளைக்குப் பேசு; எனக்கு இப்ப நேரமில்ல,'' என்றாள் சற்று எரிச்சலுடன்!
சாதாரணமாய் யாரிடமும் எரிந்து பேசத் தெரியாதவள் தேவகி. பிறவியிலே வலது கால் ஊனம் என்பதால், உள்ளூர தாழ்வு மனப்பான்மையுடன் வளர்ந்தவளுக்கு, சுமதியை பார்த்த பின், அந்த எண்ணம் முற்றிலும் மாறியது.
ஐந்தாம் வகுப்பில் புதிதாய் சேர்ந்திருக்கும் சுமதி, ஆதரவற்றோர் இல்லத்து சிறுமி. சுமதியைப் போல சிலரை பள்ளியில் சேர்க்க வந்த போது, இல்லத் தலைவி சுகன்யா, 'எல்லாம் அனாதைங்கம்மா... ஏதோ நானும், என் புருஷனும் இதுங்களுக்காக இல்லம் நடத்தி காப்பாத்தறோம்; இதுங்களைப் படிக்க வச்சு, பெரியாளாக்க வேண்டியது ஆசிரியர்களான உங்க பொறுப்பு...' என்றாள்.

அந்த எண்ணத்தில் தான், தன் வகுப்பில் சேர்ந்த சுமதிக்கு பாடம் சொல்லிக் கொடுத்தாள் தேவகி. சற்று கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டாலும், எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாள் சுமதி. பள்ளி முடிந்ததும் விழுந்தடித்து, இல்லத்திற்கு ஓடி விடுவாள்.
இது குறித்து, ஒரு முறை இல்லத் தலைவி சுகன்யாவிடம் பேசினாள் தேவகி.
'எங்க இல்லத்துக்கு, யாரோ ஒருத்தர் இவளையும், இவ தம்பியையும் கொண்டு வந்து விட்டாங்கம்மா. சாப்பிட மட்டும் தான் வாயத் திறப்பா. சாயந்திரம், 5:00 மணிக்கு இல்லத்துல டிபன் போடுவோம்; அதுக்காக ஓடி வந்துடுறா போலிருக்கு... அழுத்தக்கார கழுதை; விட்டுத் தள்ளுங்க...' என்று, அலுத்துக் கொண்டாள் சுகன்யா.
அவளை தனிமையில் அழைத்து, 'சுமதி...நீ, வகுப்புக்கு வந்து மூணு மாசமாச்சு; ஏன் எப்பவும் இறுகிப் போன முகத்தோடயே இருக்கே... உனக்கு என்ன பிரச்னைன்னு என்கிட்ட சொல்லு. நான் உனக்கு டீச்சர் மட்டுமில்ல, தாய் மாதிரி. அதனால, என்கிட்ட பயமில்லாம பேசு...' என்றாள்.

'ஒண்ணுமில்ல டீச்சர்...' என்றாள் தயக்கத்துடன்!

மேலும் வாசிக்க...)
 இன்றைய வாரமலர்  புத்தகத்தில்.பக்கம் 26...


4 comments:

  1. வாழ்த்துகள் ஷைலஜா.

    மனதைப் பதற வைக்கும் இது போன்ற நிகழ்வுகள்தாம் எத்தனை :( ? ஆசிரியையின் கதாபாத்திரம் மூலமாக சமூகத்தின் கடமையை வலியுறுத்தியிருக்கும் விதம் மிக நன்று.

    ReplyDelete
  2. அருமையான சிறுகதை

    ReplyDelete
  3. நல்ல சிறுகதை. இப்படி நிறைய கயவர்கள் இப்பூமியில்.......

    ReplyDelete
  4. நன்றி கருத்து உரைத்த ராமலஷ்மி வலையுகம் மற்றும் வெங்கட்நாகராஜ் மூவருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.