நடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்
=========================================================
இரண்டாம் பரிசுக்குரிய கவிதை
(ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது)
உன்னை நினைக்கையிலே
உல்லாசத் துள்ளலில்
முன்நிற்கும் நெஞ்சத்தை
எந்த முகப்படாமிட்டு
மறைப்பதென்று தவிக்கையிலே
மலையாக உன் நினைவே
முன்னின்று எதிர்கொள்ளும்.
முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச்சுற்றியே
நினைவு.
வழிப்பாதை இடைஇடையே
பொதி சுமக்கும் கழுதையின்
முரண்டாய் பிடிவாத நினவுகள்,
ஆக்கிரமிக்கும் தன் ஆளுமையை.
ஒப்பனைக்குப் பின்னும்,
என் கண்ணில்
உன் முகமே தெரிவதாக
தோழி சொல்கிறாள்.
உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?
ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப்பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
நம் பள்ளியறைக் கணக்கில்.
நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.
- ______________________
அன்புடன்..சுட்டி இங்கே உள்ளது.
http://groups.google.com/group/anbudan
unnai_ninaikkaiyil... |
Hosted by eSnips |
Tweet | ||||
வாழ்த்துக்கள் ஷைலஜா.:-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா! வெற்றி பெற்றதோடு நின்று விடாமல், எங்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! நன்றி! நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா!
ReplyDelete//ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப்பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
நம் பள்ளியறைக் கணக்கில்//
மிக அருமையான வரிகள்!
கணக்கில் கூட ஒன்றும் ஒன்றும் ஒன்று தான்...அன்பைக் கூட்டாது, பெருக்க வேண்டும் என்று எண்ணினால் 1x1=1 :-)))
வாழ்த்துக்கள் ஷைலஜா!!
ReplyDeleteRadha
//சிறந்த நடுவர்களிடமிருந்து பரிசு கிடைத்ததில் உள்ளத்தில் உற்சாக நயாகரா!//
ReplyDeleteஎத்தனை பேர் பாராட்டினர் என்பதை விட யார் பாராட்டினர் என்பதும் முக்கியம். நயமாக சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள் ஷைலஜா
வாழ்த்திய வருத்தப்படாத வாலிபன் ப்ரசன்னா ஷ்ருதி காட்டாறு ரவி ராதா கபீரன்பன்--அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா!
ReplyDeleteகவிதைக்கு பொய் அழகு என்கிறார்கள். இல்லை இல்லை, வார்த்தைகளில் தீட்டப்படும் ஓவியமோ கவிதை. உணர்வுபூர்வமாக எழுதியுள்ளீர்கள்.