Social Icons

Pages

Monday, June 02, 2008

மானே மானே மானே உன்னைத்தானே!

எதற்கும் ஆசைப்படாத சீதா தேவி மானைக்கண்டு மட்டும் மயங்கியது மானுக்கே சிறப்பு! ராமாயணம் தோன்ற மையக்காரணமே மான் தான் என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளலாம்.


அந்த காலத்து அரசியர்களது நந்தவனத் தோட்டத்தில் மான்கள் தான் முக்கிய இடத்தைப்பெற்றிருக்கின்றன. இலக்கிய நூல்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் தலைவன் - தலைவி காதலுக்கு மான்கள் உவமையாகப் பயன்படுத்தப்படிருக்கின்றன. 'குறுந்தொகை'யில் இவற்றை நிறையவே காணலாம்.


விலங்குகளில் பெண்மையைக் கண்ணில் கொண்ட பிராணி மான்தான். புராணகாலத்திலிருந்தே மான்களுக்கு ஒரு மரியாதையான செல்வாக்கு இருந்திருக்கிறது




"மானல்லவோ கண்கள் தந்தது?" என்று இந்தகாலத்திய கவிஞர் பெண்களைப்பற்றி அவளது கண்களை மான்களோடு ஒப்பிட்டு இருக்கிறார்! 'அன்புள்ள மான்விழியே' --இப்படி ஏராளப்பாடல்கள்!


'இந்தமான் உங்கள் சொந்தமான்' என்ற பாடலில் ஒருபெண்ணே தன்னை மானாக பாவித்துப்பெருமைப்படுகிறாள். இன்னும் மான் பாட்டு நிறைய இருக்கலாம்.


இறைவனை நோக்கி வழிபடும் அடியார்கள்'எம்மான் பெருமான்' என்றே பக்திப்பரவசமாய் அழைக்கிறார்கள்.


ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்களெல்லாம் தவம் செய்யும்போதும் தங்கி அமர்ந்துகொள்ளவும் மான்தோலையே உபயோகப்படுத்தினார்கள்.


மானம் பற்றிக்குறிப்பிடும்போது கவரிமானைத்தான் அடிப்படையாக வைத்துப் பாக்கள்புனையப்படுகின்றன .உதாரணத்திற்கு அனைவரும் அறிந்த திருக்குறளேஇருக்கிறது.


இப்படி அனைவராலும் போற்றப்படும் மான் ஒருவகையில் பாவப்பட்ட பிராணி என்றும் சொல்லத் தோன்றுகிறது. ஆமாம்,


மானைப்படைத்த இறைவன் புலியையும் படைத்ததுபற்றி இரக்கமனங்கள் நிறையவே சிந்திப்பதுண்டு.


அனைவரையும் வசீகரிக்கும் அபூர்வமான தோல் அமைப்பு மான்களுக்கு அதிலும் புள்ளிமானுக்கு உண்டு. இது இயற்கை அவைகளுக்கு கொடுத்துள்ள வரப்பிரசாதம்


புள்ளிமான் தவிர சாம்பல்நிறமான் ஒற்றைக்கொம்புமான் கலைமான் கவரிமான் எனப்பலவகைகள் இருக்கின்றன.

சாம்பல்நிற மான்கள் குட்டிக்காளைமாடுகள்போல இருக்கும் இதை அவ்வளவாய் யாரும் பார்த்து ரசிப்பதில்லை.

இந்தியாவின் எல்லா காடுகளிலும் இந்தவகை மான்கள் அதிகமிருக்கும்

இறைச்சிக்காக இவற்றைக்கொல்லுகிறார்களாம்

இந்தியக் காடுகளில் 5000புள்ளிமான்களுக்குஒன்று என இது இருப்பதாய் சொல்கிறார்கள்.(காட்டிலாகா அதிகாரி திருலதானந்த் இதை விளக்கினால் உதவியா இருக்கும்)

கவரிமான் இலக்கியங்களில் பெரிதும் சொல்லப்பட்டாலும் இதைபப்ற்றி மான் சரணாலய்ங்களில் விசாரித்த போது அப்படி ஏதும் இல்லை என்கிறார்களாம்.டைனோசர் போல முன்பு எப்போதோ இருந்திருக்கலாம்.

பொதுவாக மான்கள் இயல்பில் பயந்த சுபாவமுடையவை. மிகமிக சென்சிடிவ் என்கிறார்கள்.

எதிரிகளிடமிருது தன்னை காத்துக்கொள்ள மணிக்கு 150முதல்200மைல்வேகதில் ஓடினாலும் அதனிடம் மனதில் பயம் அதிகம் உண்டு. தைரியம் எதிர்த்துப் போராடுதல் என்பதெல்லாம் மான்களுக்கு இல்லை



அந்த பயம் காரணமாக்தான் தன் உடம்பில் வேற்றுப்பிராணிகள் கால் அல்லது பல் பட்டாலும் பதறிவிடும்.

கலைமான் என்பது இன்னொரு ஜாதி. இதற்கு அழகேஅதன் கொம்புகள்தான். நான்குவகை சிலசமயம் ஆறுவகையான்கொம்புகள் கூட இருக்கும். இந்தமான்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் நடக்கும் .கொம்புகளை முட்டி முட்டிஅவைகளை இழந்துவிடும்

டிஸ்கவரி ஆஃப் இண்டியா சானலில் இந்தகலைமான்கள் ஒன்றுகொன்று முட்டிக்கொண்டு மோதி காயப்பட்டு கொம்புகளை ஏன் இழக்கின்றன என்று சிலர்கேட்டபொழுது அவர்கள் சொன்னபதில்"எல்லாம் பெண்மானூக்காகத்தான் இப்படி ஆண்மான்கள் முட்டிக்கொள்கின்றன இப்படி மோதும்பொழுதில் அவற்றிர்க்கு அருகில் ஒருபெண்மான் இருக்கும் என்று ஆதாரபூர்வமாய் சொல்கிறார்கள்

இந்தப்போட்டியில் எந்த மான் ஜெயிக்கிறதோ அந்த மானோடுதான் பெண் மான் இணையுமாம்!(மானுக்குக்கூட ஆணிடம் வீரம்தான் பிடிச்சிரூக்கு:))

மான்கள்கூட்டம்கூட்டமாகதான் போகும்.
தனியாக எந்தமானாவது சென்றுவிட்டால் அந்தமானை வேறு எந்த மான்கூட்டமும் அவ்வளவு எளிதாக தங்கள்கூட்டத்தில் இணைத்துக்கொள்ளாது ,முட்டித்தள்ளும்

இந்த நிலை சிலநாட்களுக்குமட்டுமாம் பிறகு அந்த மான் கொஞ்சம்கொஞ்சமாய் வசியம்செய்து மற்றமான்களோடு சேர்ந்து கொண்டு விடுமாம்!

மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுகே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))

நான்குவகைக்கிளைகள் இரண்டுவகைகிளைகள் ஒற்றைக்கொம்புமான் என்று முன்றுவகையான மான்கள் உண்டு' இந்தக்கொம்புகள் பார்க்க கம்பீரமாய் அழகாய் இருப்பதோடு மான்கொம்புகள் மானிடர்க்கு மருத்துவ ரீதியாய் நல்லபலனும்
தருகிறது.

புற்று நோய்தடுக்க உடம்பில் அடிபட்ட புண்களை ஆற்றுவதற்கு ரத்தம் சுத்திசெய்ய இதயத் துடிப்பை சரிசெய்ய மான்கொம்பு துகள்கள் புராணகாலத்திலிருந்தே உதவிக்கொண்டிருப்பதைஅறிகிறோம்.

கஸ்தூரி எனும் மருந்து மானிடமிருந்துதான் எடுக்கப்படுகிறது.

இது எல்லா மான்களிடமிருந்தும் கிடைக்காது குறிப்பிட்ட வயதான் மானின் கழுத்துப் பகுதியில் ஒரூபக்கம் வெட்டி எடுக்கப் படுகிறது.
சிலமான்கள் இறந்த உடனேயும் எடுத்துவிடுவார்கள்

மானின் இறைச்சிக்காக அவைகள் சமீபமாய் அநியாயமாய் கொல்லப்ப்படுகின்றன.இவற்றால்புள்ளி மான் இனமே அழிய வாய்ப்பு உள்ளது

மற்றநாட்டின் காடுகளைவிட இந்தியக் காடுகளில் தான் புள்ளிமான்கள் அதிகமாம்

மானை யாரும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கக்கூடாது அப்படி ஆசைப்பட்டால் அரசிடமிருந்து லைசன்ஸ்பெற்றிருக்க வேண்டுமாம்.

சென்னை கிண்டி மான்கள் பராமரிக்கும் வளாகத்தில் வளர்கின்ற மான்கள் நம்மைப்போல சாதம் உப்புபோட்டுதயாரிக்கும் பலகாரமெல்லாம் உண்பதாய் சிலர் சொல்கிறார்கள் ...பெங்களூர் லால்பாக்கில் மான்களுக்கென்று தனிபகுதி உண்டு. கடலைகளை தடுப்புக்கம்பிவழியே நம்கையில்வைத்துக்
கொடுத்தால் தயங்கிவந்து பின்
எடுத்துக்கொள்ளும்!

காட்டுவிலங்குகளில் மான் தான் சாதுவானது(அதனால்தான் பெண்ணோடு ஒப்பிடுகிறார்களோ)

மான்கள் இருக்கும் பகுதியில் நாம் பிளாஸ்டிக் பேப்பர்களை போடாமலிருந்தால் அவைகள் அவற்றை தின்னாமல் ஆரோக்கியமாய் இருக்கும்.

புராணகாலம்மூதல் இன்றுவரை இந்தியாவிற்கு பெருமைதேடித் தரும் மான்களை விரும்பாதவர்கள் இருக்கமுடியாது.

ஆமா, இந்த அதியமான் சக்திமான் வேங்கைமான்...என்றெல்லாம் எப்படி வந்தன?:)
நடிகர்சல்மான்கானுக்கு சிலநாட்கள்முன்பு மான்விஷயத்தில் பேர் கான்!(GONE!)

சரி..ஒரு ஜோக்கோட பதிவை முடிச்சிடலாமா?:)

ஒருகோயிலில் ஒருத்தர் துள்ளிதுள்ளி ஓடிட்டு இருந்தாராம் . ஏன் அப்படி ஓடறார்னு கேட்டதுக்கு 'அவர் பக்திமான் அதான்' னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்களாம்!!

************************************************************************

32 comments:

  1. போன பதிவில் மயில், இப்போ மான்...தகவல்கள் எல்லாம் சூப்பர்..;)

    \\டிஸ்கவரி ஆஃப் இண்டியா சானலில் இந்தகலைமான்கள் ஒன்றுகொன்று முட்டிக்கொண்டு மோதி காயப்பட்டு கொம்புகளை ஏன் இழக்கின்றன என்று சிலர்கேட்டபொழுது அவர்கள் சொன்னபதில்"எல்லாம் பெண்மானூக்காகத்தான் இப்படி ஆண்மான்கள் முட்டிக்கொள்கின்றன இப்படி மோதும்பொழுதில் அவற்றிர்க்கு அருகில் ஒருபெண்மான் இருக்கும் என்று ஆதாரபூர்வமாய் சொல்கிறார்கள்\\

    சுத்தம்...;)))

    ReplyDelete
  2. அந்தமானைப் பாருங்கள் அழகு..

    இந்த மான் எந்த மான்னு சொல்லுங்க பெம்மான்.

    ReplyDelete
  3. மானை பற்றீ தோண்டி தோண்டி இவ்ளோ தொகுப்பு குடுத்து இருக்கீங்க, வெரி குட்.

    எனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை இங்க சொல்றேன்:

    ஆண் பெண் ஜாதக பொருத்தம் பாக்கும் போது யோனி பொருத்தம்னு ஒன்னு பாப்பாங்க. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மிருகத்தை உவமையாக சொல்வார்கள்.

    சிலது மான், சிலது நாய், எருமை, யானை, குரங்கு முதலியன. இதிலும் ஆண் மான், பெண் எருமை வேற.

    இந்த பொருத்தம் இருந்தா பரஸ்பரம் சண்டை அதிகம் வராது.

    யாராவது ஒருத்தர் அடங்கி போவர், இல்லைனா எதுக்கு வம்புனு ஜிங்க்ஜக் போட்டு விடுவர்.

    *ahem, உங்க வீட்ல எப்படி? :p


    சாமுத்ரிகா லட்சணத்திலும் மான் சாயல் உள்ள பெண்களை உயர்வாக சொல்வர்.

    (மீரா ஜாஸ்மின் சாமுத்ரிகா பட்டு, சர்வ லட்சணமான பட்டுனு சொல்வாங்களே ஹிஹி)

    ReplyDelete
  4. இவ்ளோ சொல்லிட்டு கலைஞர் டிவியில் வரும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை ஏன் சொல்ல வில்லை? :))

    மயில் ஆடும், பாத்ருக்கேன், மான்..?

    ReplyDelete
  5. கோபிநாத் said...
    போன பதிவில் மயில், இப்போ மான்...தகவல்கள் எல்லாம் சூப்பர்..;)

    \\டிஸ்கவரி ஆஃப் இண்டியா சானலில் இந்தகலைமான்கள் ஒன்றுகொன்று முட்டிக்கொண்டு மோதி காயப்பட்டு கொம்புகளை ஏன் இழக்கின்றன என்று சிலர்கேட்டபொழுது அவர்கள் சொன்னபதில்"எல்லாம் பெண்மானூக்காகத்தான் இப்படி ஆண்மான்கள் முட்டிக்கொள்கின்றன இப்படி மோதும்பொழுதில் அவற்றிர்க்கு அருகில் ஒருபெண்மான் இருக்கும் என்று ஆதாரபூர்வமாய் சொல்கிறார்கள்\\

    சுத்தம்...;)))>>>

    :):)என்ன கோபி! அது சரிதானே?:0 நன்றி வருகைக்கு

    ReplyDelete
  6. Anonymous1:42 PM

    Romba nalla pathivu..
    maanai patri -a vivarangal, discovery channel prrof- arumai...

    ReplyDelete
  7. ILA said...
    அந்தமானைப் பாருங்கள் அழகு..

    இந்த மான் எந்த மான்னு சொல்லுங்க பெம்மான்.

    12:15 PM
    வாங்க இளா..பெம்மான்னா பெருமானா?

    ReplyDelete
  8. ambi said...
    மானை பற்றீ தோண்டி தோண்டி இவ்ளோ தொகுப்பு குடுத்து இருக்கீங்க, வெரி குட்//

    .>>>
    அங்க இங்க படிச்சி கேட்டதைத்தான் பகிர்ந்திட்டேன்...வெரிகுட்டா? தாங்க்ஸ் அம்பி.

    //எனக்கு தெரிஞ்ச ஒரு விஷயத்தை இங்க சொல்றேன்:

    ஆண் பெண் ஜாதக பொருத்தம் பாக்கும் போது யோனி பொருத்தம்னு ஒன்னு பாப்பாங்க. ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு மிருகத்தை உவமையாக சொல்வார்கள்.

    சிலது மான், சிலது நாய், எருமை, யானை, குரங்கு முதலியன. இதிலும் ஆண் மான், பெண் எருமை வேற.

    இந்த பொருத்தம் இருந்தா பரஸ்பரம் சண்டை அதிகம் வராது.

    யாராவது ஒருத்தர் அடங்கி போவர், இல்லைனா எதுக்கு வம்புனு ஜிங்க்ஜக் போட்டு விடுவர்.//

    இதெல்லாம் எனக்கும் தெரியும் !! ஆனா நம்பிக்கை இல்லை அம்பி...அப்படியேவா எல்லாம் நடக்கமுடியும்?:)

    *//ahem, உங்க வீட்ல எப்படி? :p//

    எங்கவீட்ல நான் எப்படின்னு என்னைக்கேட்டா நான் சொல்றத நம்பமாட்டீங்க:0 ரங்கமணிகிட்டயே கேட்டுடுங்க இங்க வரப்போ:)

    நன்றி அம்பி வருகைக்கு.

    ReplyDelete
  9. (

    ambi said...
    இவ்ளோ சொல்லிட்டு கலைஞர் டிவியில் வரும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியை ஏன் சொல்ல வில்லை? :))//

    எல்லாம் நானே சொல்லிட்டா எப்டி அம்பி?:0 மானாட மயிலாடவை எதுக்கு நீங்க சொல்றீங்கன்னு தெரியாதா எனக்கு?:)

    //மயில் ஆடும், பாத்ருக்கேன், மான்..?//
    ஆடாது.

    நன்றி அம்பி வருகை+கருத்துக்கு

    ReplyDelete
  10. Ezhilanbu said...
    Romba nalla pathivu..
    maanai patri -a vivarangal, discovery channel prrof- arumai...

    >>>> வா ப்ரியா. நலமா?
    நன்றி பின்னூட்டத்துக்கு

    ReplyDelete
  11. //இறைவனை நோக்கி வழிபடும் அடியார்கள்'எம்மான் பெருமான்' என்றே பக்திப்பரவசமாய் அழைக்கிறார்கள்//

    என்னாது?....இதுக்கும் மான் என்கிற மிருகத்துக்கும் என்னா சம்மந்தம்...புதசெவி...

    ஆ! ஸ்ரீரங்கத்து பூனைக்குட்டி வெளில வந்துடுச்சு...

    ஈசன், சோமாஸ்கந்த மூர்த்தி ரூபத்தில் இருக்கும் மான் (இன்னோரு கையில் இருப்பது மழூ)பற்றிச் சொல்லாமல் மறைக்க பார்க்கும் திருவரங்கப்ரியாவை
    என்ன செய்வது? :))

    சரி ஈசனை வேண்டுமென்றே மறக்கவில்லை என்பது உண்மையானால், அவரது இன்னொரு கையில் இருக்கும் மழூ என்னும் ஆயுதம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்....சரியா? :))

    ReplyDelete
  12. மதுரையம்பதி said...
    //இறைவனை நோக்கி வழிபடும் அடியார்கள்'எம்மான் பெருமான்' என்றே பக்திப்பரவசமாய் அழைக்கிறார்கள்//

    என்னாது?....இதுக்கும் மான் என்கிற மிருகத்துக்கும் என்னா சம்மந்தம்...புதசெவி...

    ஆ! ஸ்ரீரங்கத்து பூனைக்குட்டி வெளில வந்துடுச்சு...

    ஈசன், சோமாஸ்கந்த மூர்த்தி ரூபத்தில் இருக்கும் மான் (இன்னோரு கையில் இருப்பது மழூ)பற்றிச் சொல்லாமல் மறைக்க பார்க்கும் திருவரங்கப்ரியாவை
    என்ன செய்வது? :))>>>//

    மறைக்கல மதுரை(யம்பதி):) இதெல்லாம் உங்களமாதிரி விவரம் தெரிஞ்சவங்க சொன்னா அதன் சுவையே தனி.



    //சரி ஈசனை வேண்டுமென்றே மறக்கவில்லை என்பது உண்மையானால், அவரது இன்னொரு கையில் இருக்கும் மழூ என்னும் ஆயுதம் பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்....சரியா? :))//

    இதென்ன மிரட்டலா வேண்டுகோளா?:)
    மழுப்பாம மழூ பத்தி எழுதிடறேன், எனது
    ஒருகண்ணில் அரங்கன் மறுகண்ணில் ஆனைக்காஅண்ணல் ஐயா! மறப்பேனா என்ன?:0

    2:44 AM

    ReplyDelete
  13. /
    மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுகே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))
    /

    அதானே என்ன ஒரு அநியாயம் கூப்பிடுங்க அந்த 'படைத்தவனை'!!!!
    :)))))

    ReplyDelete
  14. /
    காட்டுவிலங்குகளில் மான் தான் சாதுவானது
    /





    /
    (அதனால்தான் பெண்ணோடு ஒப்பிடுகிறார்களோ)
    /

    ஏன் இப்பிடி தவறா ஒப்பிடறாங்க!?!?!?
    மானை கேவலப்படுத்தறாங்க????

    ReplyDelete
  15. //ஒருகோயிலில் ஒருத்தர் துள்ளிதுள்ளி ஓடிட்டு இருந்தாராம் . ஏன் அப்படி ஓடறார்னு கேட்டதுக்கு 'அவர் பக்திமான் அதான்' னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்களாம்!!//

    ஹா..ஹா..:)))))

    ReplyDelete
  16. //மழுப்பாம மழூ பத்தி எழுதிடறேன், எனது
    ஒருகண்ணில் அரங்கன் மறுகண்ணில் ஆனைக்காஅண்ணல் ஐயா! மறப்பேனா என்ன?:0//

    அப்போ திருஆனைக்காப்ரியா அப்படின்னு
    பெயரை மாத்துங்க.. :))

    ReplyDelete
  17. அந்த மான் எழுதிய கட்டுரைக்கு இந்த MAN வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  18. நல்ல பதிவு
    நிறைய தகவல்கள்
    ஆனால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக இருந்தது.
    நன்றி

    ReplyDelete
  19. ஆகா. சொற்பிறப்புகளை மிக அழகாகக் காட்டிச் செல்கிறீர்கள் அக்கா. மானம் என்ற சொல் பிறந்தது எவ்வழி என்று இன்று அறிந்தேன்.

    மானைப் பற்றி நல்ல விரிவான கட்டுரை அக்கா.

    ReplyDelete
  20. நல்ல் நடை. சுவாரசியமான விஷயங்கள். எங்கே கொஞ்ச நாளாக் காணோம் நம்ம ஏரியாவுல?

    ReplyDelete
  21. மங்களூர் சிவா said...
    /
    மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுகே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))
    /

    அதானே என்ன ஒரு அநியாயம் கூப்பிடுங்க அந்த 'படைத்தவனை'!!!!
    :)))))
    >>>>>>>>>>>>>>>

    ஹலோ ரொம்பக்கிண்டலாக்கும்?:அந்தப்படைத்தவனே அன்னையிடம் ஒரு வார்த்தை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார் தெரியுமா?:)

    ReplyDelete
  22. மங்களூர் சிவா said...
    /
    காட்டுவிலங்குகளில் மான் தான் சாதுவானது
    /



    /
    (அதனால்தான் பெண்ணோடு ஒப்பிடுகிறார்களோ)
    /

    ஏன் இப்பிடி தவறா ஒப்பிடறாங்க!?!?!?
    மானை கேவலப்படுத்தறாங்க????

    >>>>>>>> சொல்வீங்கப்பா....:):) தவறாமே தவறு:) ம்ம்ம்..எல்லாம் நேரம் தம்பி:)

    ReplyDelete
  23. ரசிகன் said...
    //ஒருகோயிலில் ஒருத்தர் துள்ளிதுள்ளி ஓடிட்டு இருந்தாராம் . ஏன் அப்படி ஓடறார்னு கேட்டதுக்கு 'அவர் பக்திமான் அதான்' னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்களாம்!!//

    ஹா..ஹா..:)))))

    >>>>>>>>>
    கடி ஜோக்குக்கு சிரிச்சிடீங்களா நன்றி ரசிகன்!!

    ReplyDelete
  24. மதுரையம்பதி said...
    //மழுப்பாம மழூ பத்தி எழுதிடறேன், எனது
    ஒருகண்ணில் அரங்கன் மறுகண்ணில் ஆனைக்காஅண்ணல் ஐயா! மறப்பேனா என்ன?:0//

    அப்போ திருஆனைக்காப்ரியா அப்படின்னு
    பெயரை மாத்துங்க.. :))

    >>>மதுரேஏஏஏ..இதென்ன சோதனை?:) வேணூம்னா 'அரங்கஆனைப்ப்ரியா'ன்னு மாத்திக்கறேன் ஆனா ஒருமாதிரி இருக்கே கேட்கவே:)

    ReplyDelete
  25. லதானந்த் said...
    அந்த மான் எழுதிய கட்டுரைக்கு இந்த MAN வாழ்த்துகிறேன்.

    >>>>உங்க வாழ்த்துக்கு நன்றியை இந்த woman சொல்லிக்கறேன்.:):)

    ReplyDelete
  26. புகழன் said...
    நல்ல பதிவு
    நிறைய தகவல்கள்
    ஆனால் போரடிக்காமல் சுவாரஸ்யமாக இருந்தது.
    நன்றி

    >>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புகழன்

    ReplyDelete
  27. குமரன் (Kumaran) said...
    ஆகா. சொற்பிறப்புகளை மிக அழகாகக் காட்டிச் செல்கிறீர்கள் அக்கா. மானம் என்ற சொல் பிறந்தது எவ்வழி என்று இன்று அறிந்தேன்.

    மானைப் பற்றி நல்ல விரிவான கட்டுரை அக்கா.

    >>>>>>>>> நன்றி குமரன்....மனம்திறந்த உங்கள் பாராட்டில் மனம் மகிழ்கிறேன்.

    ReplyDelete
  28. லதானந்த் said...
    நல்ல் நடை. சுவாரசியமான விஷயங்கள். எங்கே கொஞ்ச நாளாக் காணோம் நம்ம ஏரியாவுல?

    >>>இதோ வந்தாச்சுங்க

    ReplyDelete
  29. என்ன அவ்வளவு தானா? மானைப் பத்தி?
    இன்னும் சொல்லுங்க பின்னூட்டத்துல!

    க"மான்" ஷைலுக்கா, க-மான்!
    மான் மான், க-மான்! :-)

    ReplyDelete
  30. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    என்ன அவ்வளவு தானா? மானைப் பத்தி?
    இன்னும் சொல்லுங்க பின்னூட்டத்துல!

    >>> பொய்மான்கரடுன்னு ஒண்ணு சேலம் பக்கம் இருக்காம் ...அதைவிட்டா மான்சரக்கு இப்போ ஏதுமில்லை ஜெண்ட்டில்மான்!!

    //க"மான்" ஷைலுக்கா, க-மான்!
    மான் மான், க-மான்! :-)//

    >>>>>>>>>>>யபபா..மான் வந்தா துள்ளிட்டு வார்த்தகளும் இங்கு விளையாடுதே!! நன்றி ரவி!!

    ReplyDelete
  31. ஷை, அப்படியே அந்தமான் பெயர் காரணம் கூறுக?

    //ஹலோ ரொம்பக்கிண்டலாக்கும்?:அந்தப்படைத்தவனே அன்னையிடம் ஒரு வார்த்தை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார் தெரியுமா?:)//


    இல்லையா பின்ன? மிஸஸ் சரஸ்வதி பிரம்மா எம்புட்டு எஜிகேட்டட் லேடி!

    ReplyDelete
  32. ramachandranusha(உஷா) said...
    ஷை, அப்படியே அந்தமான் பெயர் காரணம் கூறுக?//

    >>>
    வாங்க உஷா வாங்க...வருகைக்கு மிக்க மகிழ்ச்சி... அந்தமான் பெயர்க்காரணம்.. அந்தம் ஆண் அதாவது ஆதி பெண் ,அந்தம் ஆண்!(மூணு சுழி ண் பிறகு மெலிஞ்சி ன் ஆகி இருக்கலாம்:))

    //ஹலோ ரொம்பக்கிண்டலாக்கும்?:அந்தப்படைத்தவனே அன்னையிடம் ஒரு வார்த்தை கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார் தெரியுமா?:)//


    இல்லையா பின்ன? மிஸஸ் சரஸ்வதி பிரம்மா எம்புட்டு எஜிகேட்டட் லேடி!//

    ஹஹ..சப்போர்ட்டுக்கு நன்றி..ஆமா இப்போ எங்க அதே ஊரா மாறி வந்தாச்சா?

    8:53 PM

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.