Social Icons

Pages

Sunday, June 29, 2008

முகுந்தா!முகுந்தா!!

'முகுந்த் முகுந்த்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா ஒருவாரமாய் மௌனவிரதம் இருக்கிறாள்.

'அழுத்தக்காரி ....அவளோடு தசாவதாரம் சினிமா போகாமல் அறைநண்பன் ரிஷியோடு போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு? '

நினைத்தபடி முகுந்த் பெருமூச்சுவிட்டான்..அன்று...." லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் கப்பன் பார்க்குலயும் ·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.


பாதிசினிமால பாப்கார்ன் சாப்பிடும்போதுகூட பவித்ரா போன் செய்தாள்.

"என் அழகான ராட்சசியே சொல்லும்மா சொல்லு?:)"

"முகுந்த்..சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ஆமாம்மா...இதுக்குப் பழிக்குப்பழி ஆஃபீஸ் விட்டு நேரா என் ஹாஸ்டல் ரூம் போனதும் பயங்கர ஹாரர்மூவி சிடி பாக்க்கப்போறேன் ஆ..ம்..மா" என்றாள்.......மெய்யெழுத்துக்களை அழுத்தி உச்சரித்து தன் கோபத்தைக்காட்டியபடி.

" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!

'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள். கோபம்போலதெரியவில்லை அப்படி சில்லியாய் கண்டதுக்கும் முகம் சிணுங்கும் 19ஆம் நூற்றாண்டுப் பெண்ணும் இல்லை பவித்ரா.
சங்ககாலப் பெண் போல காதலனைக் காணாவிட்டால் 'பாலும் கசந்ததடி' எனப் பாடும் பாவை.

அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்என முகுந்திடம் உயிராய் பழகுபவள்.

அப்படிப்பட்டவளிடமிருந்து...ஒருவாரமா ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...

.'என்னாச்சு பவித்ராவுக்கு? நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி?'

'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'

முகுந்த் வீரமாய்க் கிளம்பினான். அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கே ஒருவாரமாய்
வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...

அப்போ உடம்புதான் சரி இல்லை...
எட்டுகிலோ எடையா....என்ன ஏழுகிராம் எடைகூட இல்லாத அந்த உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே?

அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.

"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப்பாடலாய்க் கூவி அழைத்தான்.

அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 90.5கிலோ எடை தி.மகால்!

முகுந்தைக்கண்டதும் கண்மலர" முகுந்த்! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்
.
ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..

அவளுக்கு பவித்ராவின் காதலன் முகுந்த் என நன்கு தெரியும் ஓரிருமுறை மூவரும் அடிகாஸில் 'செட் தோசை' சாப்பிட்டிருக்கிறார்கள்.

"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல பெங்களூர்வந்து ஒண்ணேகால் வருஷமே ஆகி இருக்கும். என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'

" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .
நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி நிங்க தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'

புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்! செய்யம்மா செய்.. என்று மனசு சொல்ல "மாடு தாயி மாடு"என்றது முகுந்தின் வாய்! (மாடு=செய் (கன்னடத்தில)

நிஜமாவே கோவிச்சிட்டாளா? இல்லைஉடம்புசரி இல்லையா?

அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.

கண்டதும் முன்பு காதல் வந்தது இப்போ கத்தல்தான் வந்தது முகுந்த்திற்கு.

"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு முகுந்த். ஒருவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான் தசாவதாரம் சினிமா போனால் அதுக்கு நீ நரசிம்ம அவதாரம் எடுக்கணுமா இப்படி?

மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.

அடப்பாவி பவி! ஒருவாரமா பாக்கலயே! இப்போ கண்டதும் முகுந்தா முகுந்தான்னு கட்டிப்பேன்னு நினச்சா? அதுக்குதானே லால்பாக் ப்ளான் போட்டிருக்கா உன் தோழி - அந்த கன்னடத்துப் பைங்கிளி?"


அது அது....

என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..

அது அது...எனகு பேசவே வரல

ஏன் அதான் பேசறியே?

அது அது...முகுதா முகுதா


என்ன கண்றாவிமொழி பேசறே இப்போ?

நா தமிதான் பேசறது

என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.வாவ் நமீதா!!!(..........){புள்ளீயிட்ட இடங்களில் முகுந்த் மனசு நினச்சதது என்னன்னு யாருக்குத் தெரியும்?:)}

ஐயொ முகுதா முகுதா எனகு ஒருவாரமா பேசவரல முனபோல
வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு


இல இல

என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!

எபடி சொலவே முகுதா?

என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்ககாட்டு..

கைப்பையிலிருந்து தேடி ரிலையன்ஸ் பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.

அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,
" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா அந்த ஹார்ரர் மூவிபார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி? அதான் முகுதாமுகுதா என்கிறாயா? அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",


ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசுமுகுதா


வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா?

உனகு சிரிபா இருகா முகுதா இதுகுதான் நா எதுவு சொலல ஒரு வாரமா....

கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.

பைக்கை ஸ்டார்ட் செய்தான்முகுந்த். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது. லால்பாக் வாசல் வரை நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.

சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.

சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?

பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.


கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.." என்றார் கிண்டலாய்.

நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து முகுந்த் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்


"தாஙஸ் முகுதா? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.

பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..

எபடிமுகுதா சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?

கஷ்டம்தான் உனக்கு...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால் கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா


ஹே சிரிகாத...

டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு மூக்குக்கண்ணாடியை கழற்றியபடி,


" இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... "


இதற்கு என்னசிகிச்சை டாக்டர் அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"

நோ நோ...இது ஒருமனபிராந்தி

அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?

யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்


எப்போ டாக்டர்? இன்னும் மூணுமாசத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!
\

"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க
க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.

"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.

பவித்ராவை அழைத்துக்கொண்டு முகுந்த் தன்அறைக்கு வந்தான்.

"என்ன பெரிய படம் அது? ச்சும்மா உஜல்பா!(உஜல்பா= ஒன்றுமே இல்லாத என அர்த்தம்! இது எந்த மொழியுமில்லை...சொந்தமொழி:)) படத்துக்கு நீ பயந்து இப்படி ஆகி இருக்கணுமா? அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?

நானா? நோ முகுதா நோ... பய பய எனகு

அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!

தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.
படம் ஆரம்பமானது..

பார்த்துக்கொண்டே வந்த பவித்ரா " வேடா வேடா " என்றாள்

யார் வேடன்?

இல...மூவி பாக வேடா

படம் பாக்க வேண்டாமா?

ஆமாஆமா

எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."

அடுத்த சில நிமிடங்களில் முகுந்தனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...
அய்யோ.....இதென்ன இப்படி என் மேல வந்து அட்டாக் பண்றதே
பிசாசு...யேய் யேய் விடு..உவ்....

" ஐய்யோ" என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.

திடுக்கிட்ட பவித்ரா"முகுந்த்த..என்னாச்சு முகுந்த்? இப்படிகூச்சல்போடறே, பயந்துட்டீயா நீயும்?"என்றாள்
அப்போதுதான்
சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.

"முகுந்ந்ந்ந்த் ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.

மயக்கம் தெளிந்த முகுந்த்,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என் வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.

"ஐய்யோ..முகுந்தா முகுந்தா என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா... முகுந்தா! முகுந்தா..."--

36 comments:

 1. வேடா வேடானு சொல சொல இத கத பட்ச எனகு இபிடி ஆகிடுசெ
  :((((((

  ReplyDelete
 2. //இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... //

  'குருவி'பார்த்தப்ப இப்படித்தான் எனக்கும் ஆச்சு :(

  ReplyDelete
 3. vaaalpaiyan8:47 PM

  இது நிஜமாவே நடந்த மாதிரி தெரியல... ஆனாலும் சிறுகதை என்று எடுத்து கொண்டு....!
  ....அருமைய்....

  -- வால்

  ReplyDelete
 4. இத கதை ரொப நலா இகு.

  எகே ஆளையே காணோ?

  பினூடதயு காணோ?
  சேலேயு வ்ரதில?

  எனுடைய பதிவுவெலா பாதீகளா?

  ReplyDelete
 5. Hai,

  xllent Shylajaa, superaa sirichen. epadithaan ungaluku ipadilam karpanai varodhoo? nijamavey romba superaa iruku.

  ReplyDelete
 6. Hai,

  //வேடா வேடானு சொல சொல இத கத பட்ச எனகு இபிடி ஆகிடுசெ
  :)))))))))))))))))//

  repeateeeeeeeeeeeee

  ReplyDelete
 7. மங்களூர் சிவா said...
  வேடா வேடானு சொல சொல இத கத பட்ச எனகு இபிடி ஆகிடுசெ
  :((((((
  //

  சிவா....இதுக்கு சிகிச்சை மெய்யெழுத்துக்களை கரைச்சிக்குடிக்கணும்:)

  ReplyDelete
 8. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... //

  'குருவி'பார்த்தப்ப இப்படித்தான் எனக்கும் ஆச்சு :(

  .///

  குருவி அப்படிப்பட்ட் படமா ரிஷு?:)

  ReplyDelete
 9. vaaalpaiyan said...
  இது நிஜமாவே நடந்த மாதிரி தெரியல... ஆனாலும் சிறுகதை என்று எடுத்து கொண்டு....!
  ....அருமைய்....

  -- வால்

  >>>நன்றி வால்
  கதைவிட்ருக்கேன் எல்லாம் தசாவதார எஃபெக்ட் தான் வேறென்ன?:)

  ReplyDelete
 10. லதானந்த் said...
  இத கதை ரொப நலா இகு.

  எகே ஆளையே காணோ?

  பினூடதயு காணோ?
  சேலேயு வ்ரதில?

  எனுடைய பதிவுவெலா பாதீகளா?

  >>வாங்க லதான்ந்த்..என்னாச்சு
  உங்களுகும் மெய் மறந்து போயிடிச்சா?:)
  வந்தேனே உங்க வலைமனைக்கு பாருங்க அங்க!

  ReplyDelete
 11. Sumathi. said...
  Hai,

  xllent Shylajaa, superaa sirichen. epadithaan ungaluku ipadilam karpanai varodhoo? nijamavey romba superaa iruku.

  >>>>>வாங்க சுமதி நலமா? நன்றி கருத்துக்கு!! ச்சும்மா ஏதாவது எழுதி எல்லாரையும் அறுக்கலாம்னு இப்படி.....:)

  ReplyDelete
 12. Sumathi. said...
  Hai,

  //வேடா வேடானு சொல சொல இத கத பட்ச எனகு இபிடி ஆகிடுசெ
  :)))))))))))))))))//

  repeateeeeeeeeeeeee///


  >>>>>ஹஹ்ஹா!!! படிச்ச எல்லாரையும் மெயோபோஃபியோ பாதிச்சிடிச்சு போல?:):)

  ReplyDelete
 13. Ezhilanbu8:40 AM

  nanga elleum unga kathaiya padichittu mei marandhu nikkirom... :-)

  ReplyDelete
 14. ஹிஹி, சிருசு சிருசு கணுல தணி வதுடுசு. நலா இருகு. :))

  ReplyDelete
 15. Ezhilanbu said...
  nanga elleum unga kathaiya padichittu mei marandhu nikkirom... :-)

  >>>>>
  வாப்ரியா நலம்தானா?
  மெய் மறந்துட்டியா :):) ஹ்ஹ்ஹா..அதானே வேணும்?:0

  ReplyDelete
 16. ambi said...
  ஹிஹி, சிருசு சிருசு கணுல தணி வதுடுசு. நலா இருகு. :))

  //


  வாக அபி! காமெடி அரசு நீக! உக பதிவுல எனகு பிடிசதே உக நகைசுவை தான? நீகளே சொலிடீக நலா இருகுனு..நறி நறி!!(ஆங்கிலநரி இல்ல:):)))

  ReplyDelete
 17. முகுந்தா பாட்டுல .. வரம் தாவை .. சொல்லும்போது tha க்கு பதிலா dha ன்னு பாடி இருக்காங்க பாத்தீங்களா பல்லவில.. சாதனா.எனக்கு அந்த பாட்டைக்கேட்டு ரொம்ப சிரிப்பு.. இப்ப நீங்க என்ன எழுதி இருக்கீங்கன்னு பாத்தா.. ரொம்ப ரொம்ப சிரிப்பு இது.. :)
  பின்னூட்டங்களும் நல்ல இருக்கு..
  நறி - நன்றி ஆகா.. எப்படிங்க இப்படி எல்லாம்..

  ReplyDelete
 18. Anonymous11:29 AM

  ரொம்ப நல்ல கதை. ரசிக்கும் படி இருந்தது. வித்யாசமான முயற்சி. நான் உங்கள் ப்ளாக்குக்கு வருவது இதுவே முதன் முறை. மீண்டும் வர தூண்டி விட்டீர்கள். நன்றி. அடிக்கடி எழுதுங்கள்.

  முருகானந்தம்
  http://kaluguppaarvai.blogspot.com/

  ReplyDelete
 19. யக்கா
  ரொம்ப நேரம் சிரிச்சேன்!
  முகுந்தா முகுந்தா-ன்னு சிரிக்கிறதா இல்லை ஷைலஜா ஷைலஜா-ன்னு சிரிக்கிறதான்னு தெரியாம, எல்லாத்துக்கு சேர்த்து, சிரிச்சி சிரிச்சி...

  ஒழுங்கா வயித்து வலிக்கும் நீங்களே மருந்தையும் அனுப்பி வையுங்க!

  ReplyDelete
 20. //12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ..ஆ.........awesome!//

  வாழ்க 12ம் நூற்றாண்டு!
  ஒழிக தையல்காரர்கள்!!
  :-))

  ReplyDelete
 21. கயல்விழி முத்துலெட்சுமி said...
  முகுந்தா பாட்டுல .. வரம் தாவை .. சொல்லும்போது tha க்கு பதிலா dha ன்னு பாடி இருக்காங்க பாத்தீங்களா பல்லவில.. சாதனா.எனக்கு அந்த பாட்டைக்கேட்டு ரொம்ப சிரிப்பு.. இப்ப நீங்க என்ன எழுதி இருக்கீங்கன்னு பாத்தா.. ரொம்ப ரொம்ப சிரிப்பு இது.. :)
  பின்னூட்டங்களும் நல்ல இருக்கு..
  நறி - நன்றி ஆகா.. எப்படிங்க இப்படி எல்லாம்..

  >>>>
  லட்சுமி வாங்க! நலமா?
  நான் பதிவு போட்டதை விடுங்க .. பின்னூட்டம் படிச்சி எனக்கே சிரிப்பை அடக்கமுடியல:) நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!

  ReplyDelete
 22. Anonymous said...
  ரொம்ப நல்ல கதை. ரசிக்கும் படி இருந்தது. வித்யாசமான முயற்சி. நான் உங்கள் ப்ளாக்குக்கு வருவது இதுவே முதன் முறை. மீண்டும் வர தூண்டி விட்டீர்கள். நன்றி. அடிக்கடி எழுதுங்கள்.

  முருகானந்தம்
  http://kaluguppaarvai.blogspot.com/

  //வாங்க முருகா னந்தம்....அடிக்கடி வாங்க இங்க....வருகைக்கும் கருத்துக்கும் நன்றீ

  ReplyDelete
 23. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  யக்கா
  ரொம்ப நேரம் சிரிச்சேன்!
  முகுந்தா முகுந்தா-ன்னு சிரிக்கிறதா இல்லை ஷைலஜா ஷைலஜா-ன்னு சிரிக்கிறதான்னு தெரியாம, எல்லாத்துக்கு சேர்த்து, சிரிச்சி சிரிச்சி...>>>>

  வாங்க என் செல்ல தம்பியே!!!ஷைலஜாஷைலஜான்னு சிரிச்சீங்களா
  நேத்து தண்ணீகுடிக்கறப்போ அதான் புரை ஏறிடிச்சி:):)

  //ஒழுங்கா வயித்து வலிக்கும் நீங்களே மருந்தையும் அனுப்பி வையுங்க!//

  ஓகே...அந்த மருந்து சாப்ட்டா வேற வலி வந்தா மதுரையம்பதிகிட்ட அதுக்கு மருந்து கேட்டுக்குங்க( மதுரைய இங்க வம்பு இழுத்தாச்சு அப்பாடி:))))

  10:01 AM

  ReplyDelete
 24. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ..ஆ.........awesome!//

  வாழ்க 12ம் நூற்றாண்டு!
  ஒழிக தையல்காரர்கள்!!
  :-))
  //
  >>>>>ஒழிக ஒழிக!! என்பது முகுந்த(நான் இல்லப்பா:)))))

  ReplyDelete
 25. இன்னைக்குதான் உங்க ப்ளாக்குக்கு வந்தேன்.(உங்கள் மை.பா பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன்).பதிவு நல்ல நகைச்சுவையோடு இருந்தது.(சுஜாதா கதை படிக்கும் வேகம்). பிறகு வந்து பொறுமையாக எஞ்சிய பதிவுகளைப் படிக்கிறேன்..

  ReplyDelete
 26. தமிழ்ப்பறவை said...
  இன்னைக்குதான் உங்க ப்ளாக்குக்கு வந்தேன்.(உங்கள் மை.பா பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன்).பதிவு நல்ல நகைச்சுவையோடு இருந்தது.(சுஜாதா கதை படிக்கும் வேகம்). பிறகு வந்து பொறுமையாக எஞ்சிய பதிவுகளைப் படிக்கிறேன்..//


  வாங்க தமிழ்ப்பறவை இங்க பறந்து வந்ததற்கு நன்றிங்க

  சுஜாதா கதை படிக்கும் வேகமா? அவரும் நானும் ஒரே ஊரு என்பதைத்தவிர வேற எந்த விதத்திலும் அந்த இமயம் பக்கத்துல இந்த பரங்கிமலைக்குன்று நிற்கமுடியாதுங்க...நகைச்சுவை பிடிக்கும் ஆகவே இப்படி சில முயற்சிகள்...கருத்துக்கு நன்றி.
  என்னங்க மைபா மட்டும் தெரிஞ்சி வச்சிருக்கீங்க அதையும் மீறி கவிதை கதை கட்டுரை எழுதினதெல்லாம் பறவையின் கண்ணில் படாமல் போயீடிச்சே..இது மைபாவின் மகிமைபோலும்!!!

  ReplyDelete
 27. மெய்யோபோபியா கதை நல்ல கற்பனை தான். :-)

  ReplyDelete
 28. Anonymous8:44 AM

  கதை அருமை! " தாஙஸ் முகுதா? " 'ஸ்' மெய் எழுத்துதானே

  அன்புடன்
  இராசகோபால்

  ReplyDelete
 29. வித்தியாசமான கதை...நல்லாயிருக்கு.
  எந்த புஸ்தகத்துக்கு அனுப்பியிருக்கீங்க? :-)

  //ஓகே...அந்த மருந்து சாப்ட்டா வேற வலி வந்தா மதுரையம்பதிகிட்ட அதுக்கு மருந்து கேட்டுக்குங்க( மதுரைய இங்க வம்பு இழுத்தாச்சு அப்பாடி:))))//

  என்ன சந்தோஷம்..அட...அட..
  யக்கா உங்க எழுத்தே வலி, வியாதின்னு வர வச்சுடுமானாக்க மைபா/கேசரி/ஆனியன் பக்கோடா எல்லாம் என்ன பண்ணும்...

  ரங்கா! ரங்கா!!

  ReplyDelete
 30. //Anonymous said...
  கதை அருமை! " தாஙஸ் முகுதா? " 'ஸ்' மெய் எழுத்துதானே

  அன்புடன்
  இராசகோபால்
  //வாங்க ராசகோபால்...கதை அருமையா ? நன்றிங்க....ஸ்? மெய்யெழுத்துதான் ,,ஸ்ஸ்ஸ் எப்படி அதை அனுமதித்தேன் கதைல?:0 கண்டுபிடிச்சிடீங்களே?:) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 31. மதுரையம்பதி said...
  வித்தியாசமான கதை...நல்லாயிருக்கு.
  எந்த புஸ்தகத்துக்கு அனுப்பியிருக்கீங்க? :-//

  )>>>

  இன்னும் அனுப்பல!!! ஜூடா இங்கதான்!

  //மதுரைய இங்க வம்பு இழுத்தாச்சு அப்பாடி:))))

  என்ன சந்தோஷம்..அட...அட..
  யக்கா உங்க எழுத்தே வலி, வியாதின்னு வர வச்சுடுமானாக்க மைபா/கேசரி/ஆனியன் பக்கோடா எல்லாம் என்ன பண்ணும்...

  ரங்கா! ரங்கா!!//

  எதை என்ன வேணாலும் சொல்லுங்க ஆனா மைபாவை ஏதும் சொன்னீங்கன்னா பெரும்படை வந்து தாக்கும் ஆம்மா?:):)

  ReplyDelete
 32. குமரன் (Kumaran) said...
  மெய்யோபோபியா கதை நல்ல கற்பனை தான். :-)

  //


  ஆமா குமரன்.....மெய்யாலுமே இதெல்லாம் நடக்குமா என்ன?:):)
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 33. //ஓகே...அந்த மருந்து சாப்ட்டா வேற வலி வந்தா மதுரையம்பதிகிட்ட அதுக்கு மருந்து கேட்டுக்குங்க( மதுரைய இங்க வம்பு இழுத்தாச்சு அப்பாடி:))))//

  கணா, மைபாகா ஒரு கிலோ மைபா அனுபி வைபாகல. அதா மருது :)

  செ.த.வை வபுகு இழுகாம இருக முடியுமா :)

  நல கபனை மைபாகா! வாக, வாக!

  ReplyDelete
 34. கவிநயா said...
  //ஓகே...அந்த மருந்து சாப்ட்டா வேற வலி வந்தா மதுரையம்பதிகிட்ட அதுக்கு மருந்து கேட்டுக்குங்க( மதுரைய இங்க வம்பு இழுத்தாச்சு அப்பாடி:))))//

  கணா, மைபாகா ஒரு கிலோ மைபா அனுபி வைபாகல. அதா மருது :)///

  வாங்க அபிநயசரஸ்வதி கவிநயா!!! கண்ணா என்று கேஆர் எஸ்ஸை இங்கே அழைத்து ஒருகிலோ மைபாவை நான் அனுப்பிவைப்பதே மருந்தென்கிறீகளா? ஹ்ஹா//சிரித்தேன்!!!

  //செ.த.வை வபுகு இழுகாம இருக முடியுமா :)//

  செல்லத்தம்பிய வம்புக்கு இழுக்காம இருக்க முடியாதுதான்!! ஆனா செ.த=மதுரையம்பதி அல்ல..மதுரை=வெ.த!!!!!(இருகு இதுக்கு எனக்கு:))

  //நல கபனை மைபாகா! வாக, வாக!//

  நல்ல கற்பனையா?:) நன்றி
  மைபாக்காவை வாழ்க வாழ்க என மெய்மறந்து வாழ்த்தியதற்கும் நன்றி தங்கையே!!

  ReplyDelete
 35. Anonymous5:00 AM

  \\வேடா வேடானு சொல சொல இத கத பட்ச எனகு இபிடி ஆகிடுசெ\\
  ரிபீடே
  ரிபீடே

  ReplyDelete
 36. கலகிடடிஙக ;))

  எப்படி தான் இப்படி எல்லாம் ஐடியா கிடைக்குதோ!! ;;))

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.