Social Icons

Pages

Monday, December 15, 2008

கொடுப்பதும் கிடைப்பதும்!

ஒருதந்தையும் மகனும் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலைமீது ஏறி அதன் உச்சியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். திடிரென மகன் கல் ஒன்றுதடுக்கி கீழே தடுமாறிவிழுந்துவிட்டான் , \ஆ\ என்று கத்தினான்.

\ஆ\ என்று எதிரொலி வந்தது.


என்ன இது என்றான்

என்ன இது என்று மறுபடி எதிரொலிகேட்டது.

என்ன நடக்கிறதெனப்புரியாமல் சிறுவன் தந்தையை குழப்பமாய் பார்த்தான்.

புன்னகைபுரிந்தபடியே அந்தத்தந்தை மலையை நோக்கிக்கூவினார்.

நான் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என்றார்.

நன் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன் என பதில்வந்தது.

நீ ஒரு வீரன் என்றார் அதே பதிலாக வந்தது.

வியப்புடன் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த மகனிடம் அவர் சொன்னார்.

:இதனை எதிரொலி என்பர்கள். ஆனால் ,மகனே! உண்மையில் இதுதான் வாழ்க்கை !

வாழ்க்கை என்பது நமது செயல்களின் பிரதிபலிப்பே.

இந்த உலகத்தில் உனக்கு நிறைய அன்பு வேண்டுமானால் நீ நிறைய அன்பு செலுத்தவேண்டும் .உன் இதயத்தில் அன்பு சுரக்கவேண்டும்.

நட்பு பெருகவேண்டுமானால் நீ பிறரோடு நட்பாய் இரு.

வாழ்க்கை , இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!:



(பின்குறிப்பு..வாசித்ததில் பிடித்ததால் பகிர்ந்துகொண்டபதிவு இது!)

14 comments:

  1. நல்லா இருக்கு

    வாழ்த்துக்கள்.

    கட்டாயம் உங்க எழுத்தப்படிச்சிட்டு கருத்து சொல்றேன்.

    எதிரொலி
    “கட்டாயம் உங்க எழுத்தப்படிச்சிட்டு கருத்து சொல்றேன்.”

    ReplyDelete
  2. //வாழ்க்கை , இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!://

    இதை அற்புதமாய் விளக்கியிருக்கிறார் தன் மகனுக்கு தந்தை. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ஷைலஜா.

    ReplyDelete
  3. அன்பு அக்கா. அருமையான‌ ப‌கிர்வு. மிக‌ ச‌ரியே அன்பு, ந‌ட்பெல்லாமே எதிரொலி தானே

    ReplyDelete
  4. /////இதனை எதிரொலி என்பர்கள். ஆனால் ,மகனே! உண்மையில் இதுதான் வாழ்க்கை !

    வாழ்க்கை என்பது நமது செயல்களின் பிரதிபலிப்பே./////

    நன்றாக உள்ளது சகோதரி!
    இடுகைக்கு நன்றி!

    ReplyDelete
  5. கே.ரவிஷங்கர் said...
    நல்லா இருக்கு

    வாழ்த்துக்கள்.

    கட்டாயம் உங்க எழுத்தப்படிச்சிட்டு கருத்து சொல்றேன்.

    எதிரொலி
    “கட்டாயம் உங்க எழுத்தப்படிச்சிட்டு கருத்து சொல்றேன்.”

    8:07 AM
    <<>>>>>>>>>>>>>>>>ரவிசங்கர் !இன்னும் உங்கபதிவை நான்படிச்சி ஒண்ணும் சொல்லலைன்னுதானே இந்த எதிரொலி இருங்க இருங்க வந்துடறேன் என்ன!

    ReplyDelete
  6. கே.ரவிஷங்கர் said...
    நல்லா இருக்கு

    வாழ்த்துக்கள்
    >>>>>>நன்றி ரவிசங்கர் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மேலான வருகைக்கும்!(முந்தையமடல்ல சொல்ல மறந்துட்டேன்!)

    ReplyDelete
  7. ராமலக்ஷ்மி said...
    //வாழ்க்கை , இந்த உலகிற்கு நீ எதைக்கொடுக்கிறாயோ அதனையே திருப்பிக்கொடுக்கும்!://

    இதை அற்புதமாய் விளக்கியிருக்கிறார் தன் மகனுக்கு தந்தை. அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி ஷைலஜா.

    8:25 AM
    >>>>நன்றி ராமலஷ்மி கருத்துக்கும் வருகைக்கும்!

    ReplyDelete
  8. மின்னல் said...
    அன்பு அக்கா. அருமையான‌ ப‌கிர்வு. மிக‌ ச‌ரியே அன்பு, ந‌ட்பெல்லாமே எதிரொலி தானே

    11:21 AM
    >>>>>>>ஆமாம்‍‍‍‍_____‍‍
    ‍‍‍‍‍‍‍‍ஒலி
    ஆமாம்‍‍‍_______
    எதிரொலி!

    Thanks Minnal

    ReplyDelete
  9. SP.VR. SUBBIAH said...
    /////\./////

    நன்றாக உள்ளது சகோதரி!
    இடுகைக்கு நன்றி!>>>>>>>

    நன்றி சகோதரரே!

    12:04 PM

    ReplyDelete
  10. திகழ்மிளிர் said...
    அருமை

    4:08 PM
    <<<<<<<<<<<<<<>ந‌ன்றி திகழ்மிளிர்

    ReplyDelete
  11. கதை நல்லாயிருக்கு...(கொஞ்சம் லேட்டு) ;))

    ReplyDelete
  12. நல்ல கருத்து அக்கா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.