Social Icons

Pages

Friday, May 15, 2009

ரியாத் கவியரங்கமேடையில் வாசிக்கப்பட்டகவிதை

நட்பு.

(இந்த தலைப்பில் நான் எழுதிய கவிதையை ரியாத் கவியரங்கமேடையில் வாசித்தவருக்கு நன்றி. எழுதவைத்த சகோதரர் ஷாஜகானுக்கு மிக்க நன்றி)



தமிழ்வாழ்த்து.

பிறந்ததும் செவியில் விழுந்தது தமிழ்
வளர்ந்ததும் இன்னும் வளர்ப்பதும் தமிழ்
தமிழென்பது ஒரு சர்க்கரைக்கடல்
அமிழ்ந்து குளித்துமுத்தெடுக்கமுத்தெடுக்க
விழுந்துவிடுவதில்லை தமிழ் நம்மை
வீழ்த்தியும் விடுவதில்லை
உலகெங்கும் ஒலிக்கும் தமிழுக்கு
தலை சாய்த்து வணக்கம் சொல்வேன்



அவை வாழ்த்து



பல்வேறுபடிப்பினராய்
பண்பட்ட இளைஞர்களாய்
நல்ல செயல்களிலே
நாட்டம் கொண்டவராய்
அயல்நாடு சென்றிடினும்
முயன்றுதமிழைப்பேணும்
மணியான நட்புக்கூட்டம்.
சொற்பொழிவும் சொற்போரும்
கருத்தரங்கும் காண்பவராய்
உழைக்கும் அன்பர்களே!
உங்களுக்கு முன்தோன்றி
உளறிவைக்க ஒரு வாய்ப்பு
எனக்குக்கொடுத்துள்ள
எல்லோர்க்கும் என் வணக்கம்!



அவைத்தலைவருக்கு வணக்கம்.


சிறுமை கண்டு சீறும்
சீர்திருத்த செம்மல்
இழிவுகண்டால்பொங்கும்
இரும்பு நிகர் நெஞ்சம்
இன்னல்கண்டால் நோகும்
இரக்கம் அதில் மிகுதி
பகுத்தறிவு பெரியாரின் மூச்சு- பொய்மைப்
பகட்டிற்க்கு இவர் ஏச்சு.

இடித்துரைக்கும் நகைச்சுவைக்கு
ஈவேராபெரியாரைப்போல் யாருண்டு?
ஆணித்தரமான பேச்சால் கருத்தை
ஆழமாகப்பதியவைத்தார்
அச்சமில்லாத்தலைவர்
அவர்தம் கொள்கைபோற்றும்
அவருக்கு ஒரு தாசன்
அவையரங்கத்தலைவர்
திரு பெரியார்தாசனுக்கு
அன்பும் பண்பும் கலந்த
அடக்கமானஒருவணக்கம்.

*******************


இனி கவிதை.....


**************************



வாடாத பூ இது.

உயிர்ச்செடியில் பூத்த
உன்னதப் பூ இது.
இதன் பெயர் நட்பு.

இந்த நட்பூக்களை
நரம்பு நாரினில்
தொடுக்கின்றோம்
அதனால்தான்
உற்சாக வாசம்
உள்ளம்வரை வீசுகிறது!

கர்ப்பத்தைப்பரிசோதிக்க
நாடிபார்ப்பார்கள்
நட்பைப் பரிசோதிக்கவும்
நாடி பார்க்கலாம்
அதுவும் துடிக்கும்.

நட்பு நமக்கு நம்(பிக்)கை!
பலவிரல்கள் கொண்டது!
அதனால் அடையும் செயல்வேகம்
அதன் பொருட்டு வரும் பீமதேகம்!

மழைக்குமட்டுமே விரியும்
குடையல்ல நட்பு,
அழைக்கும்போதெல்லாம்
அன்பைத்தயங்காமல்தரும்
இன்னொரு தாய்மை!


நட்பில்மட்டுமே
ஆண்பாலும் பெண்பாலும் சேர்ந்து
திரண்டுதரும் திரட்டிப்பால்!
திகட்டுமே தவிர
திரிந்துபோகாது!

சாபங்களே வாழ்க்கை என்றநிலையில்
உற்சாக ஊற்றினை
உருவாக்கிய கடவுள்
அதனை நட்பென்ற நீர்த்துளியில்
அனுப்பிவைக்கின்றான்.

காதலில்தான்
காமம் கோபம்
ஏக்கம் ஏமாற்றம்
நட்பில் கிடைப்பது
ஒன்றேஒன்றுதான்
அதன் பெயர் நிறைவு.

நட்பில் அந்தரங்கம்
பகிரங்கமாகாது

கொடுக்கலும் வாங்கலும்
கொடைபோல நடக்கும்
அன்பும் வாழ்த்துகளும்
அளவின்றி கிடைக்கும்

இதர உறவுகள்
காய்ந்த வைக்கோல்பிரி
போலானாலும்
நட்புக்கயிறு என்றும்
இறுகியே கிடக்கும்.

திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுமாம்!
சொர்க்கத்தைவிட
மேலான இடம் உண்டு
என்பதை
அங்கு உருவான
நட்பு நிரூபிக்கிறது!

உறவுகள் பட்டியலில்
நட்புக்கு இடமில்லை
அதனால் என்ன
உள்ளத்துப்பட்டியலில்
அதுதானே முதலிடம்!

7 comments:

  1. //நட்பில்மட்டுமே
    ஆண்பாலும் பெண்பாலும் சேர்ந்து
    திரண்டுதரும் திரட்டிப்பால்!
    திகட்டுமே தவிர
    திரிந்துபோகாது!//

    யக்கா....
    அப்படியே திரட்டிக் கொடுத்துட்டீங்க நட்பென்னும் திரட்டிப் பாலை!

    //காதலில்தான்
    காமம் கோபம்
    ஏக்கம் ஏமாற்றம்
    நட்பில் கிடைப்பது
    ஒன்றேஒன்றுதான்
    அதன் பெயர் நிறைவு.//

    ஹா ஹா ஹா
    இதை முழுக்க ஒப்புக்க முடியாது!
    காதலில் நிறைய இன்பமும் கிடைப்பதால் கூடவே பை-ப்ராடெக்ட் மாதிரி இவை எல்லாம்!
    நட்பில் இன்பத்தைக் காட்டிலும் நிறைவு என்பதால் பை-ப்ராடெக்ட் குறைவு!

    அக்காவே சொன்னாலும், காதலை விட்டுக் கொடுக்க மாட்டோம்-ல? :)))))))))

    ReplyDelete
  2. என்றைக்கும் ‘வாடாத பூ’வாக நட்பின் உயர்வை மணமாகப் பரப்பி நிற்கும் இந்த உங்களது கவிதை. அருமை ஷைலஜா.

    ReplyDelete
  3. kannabiran, RAVI SHANKAR (KRS) said.../////

    காதலில்தான்
    காமம் கோபம்
    ஏக்கம் ஏமாற்றம்
    நட்பில் கிடைப்பது
    ஒன்றேஒன்றுதான்
    அதன் பெயர் நிறைவு.//

    ஹா ஹா ஹா
    இதை முழுக்க ஒப்புக்க முடியாது!
    காதலில் நிறைய இன்பமும் கிடைப்பதால் கூடவே பை-ப்ராடெக்ட் மாதிரி இவை எல்லாம்!
    நட்பில் இன்பத்தைக் காட்டிலும் நிறைவு என்பதால் பை-ப்ராடெக்ட் குறைவு!

    அக்காவே சொன்னாலும், காதலை விட்டுக் கொடுக்க மாட்டோம்-ல? :)))))))))///////

    >>>வாங்க வாங்க ஆன்மீகச்செம்மல்! பந்தலின் சொந்தக்காரர், வலை உலக ரஜனி அவர்களே! என் செல்லத்தம்பியே!
    ஹலோ நட்பில் நிறைவு ஒண்ணுதான் கிடைக்கும்னு சொன்னேனே


    உங்க காதல நாங்களும் விட்டுக்கொடுக்கமாட்டாம்ல:0 காதலினால் மானிடர்க்கு துன்பம் போகும்னு புலவர் ஒருத்தர் சொல்லி இருக்காரே மறுக்கமுடியுமா?:)

    ReplyDelete
  4. ராமலக்ஷ்மி said...
    என்றைக்கும் ‘வாடாத பூ’வாக நட்பின் உயர்வை மணமாகப் பரப்பி நிற்கும் இந்த உங்களது கவிதை. அருமை ஷைலஜா.

    6:36 AM

    >>>>>>>>>>>>>>>>>>>>>
    வாங்க ராமலஷ்மி.

    நட்புபற்றிய கவிதைக்கு உங்களை நான்முதலில் எதிர்பார்க்கவும் நீங்களும் வரவும் சரியாக இருக்கிறது,
    மிக்க நன்றி ராமலஷ்மி

    ReplyDelete
  5. தமிழ்வாழ்த்து,அவை வாழ்த்து,அவைத்தலைவருக்கு அப்புறம் கவிதை எல்லாமே கலக்கல் ;)

    ReplyDelete
  6. அருமையான வரிகள்

    /நட்பில்மட்டுமே
    ஆண்பாலும் பெண்பாலும் சேர்ந்து
    திரண்டுதரும் திரட்டிப்பால்!
    திகட்டுமே தவிர
    திரிந்துபோகாது!/

    இந்த வரியைப் படிக்கும்பொழுது
    என்றோ படித்த வரிகள் தான் நினைவிற்கு
    வருகிறது.

    ஆண்பாலும்
    பெண்பாலும்
    பொதுவானது
    நட்பால்

    /நட்பு நமக்கு நம்(பிக்)கை!
    பலவிரல்கள் கொண்டது!/

    /உறவுகள் பட்டியலில்
    நட்புக்கு இடமில்லை
    அதனால் என்ன
    உள்ளத்துப்பட்டியலில்
    அதுதானே முதலிடம்!/

    அருமை

    வாழ்த்துகள்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.