''உலகின் மீது கடவுள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் வற்றவில்லை என்பதன் அடையாளம்
தான் பூக்களும் குழந்தைகளும் ' ' என்கிறார் தாகூர்.
நீ அசைந்தாய்
நானும்
புதிதாகப்பிறந்தேன்
அப்பாவாக!
என்கிற கவிஞர்தமிழ்முருகனின் பரவசம் எல்லா பெற்றோர்களுக்கும் உரியது.
செடிகளைப்போல அன்றாடம் பூத்துவிடுகிற மலர்ச்சியுடன் அலைகிற வித்தை குழந்தைகளுக்கே சாத்தியம்.
ஒருகுழந்தை , பேருருகொண்ட இறைவனின் சிறுவடிவம்போன்றே தோற்றம் தருகிறது. ஒரு சின்னஞ்சிறு
மழலையின் வரவு இல்லத்தை பூக்கள் நிரம்பிய தோட்டம்
ஆக்குகிறது.
அன்பின் தூதுவர்கள் குழந்தைகள்!
குழந்தைகள்மீது பெற்றோர் கொள்ளும் பாசம் அடர்த்தியானது.
(இன்று என்னகுழந்தைகள் தினம் கூட இல்லையே எதற்கு
இப்படி ஒரு பதிவு என்கிறீர்களா? ஒரு குழுவில்' வா வா
வசந்தமே ' என்ற தலைப்பிற்கான போட்டிக்கு அனுப்பிய என் கவிதை பரிசுக்குத் தேர்வானதும் குழந்தைபோல மனம் குதூகலித்தது!அதனால் அந்தக் கவிதையை அளிக்குமுன்பாக ஒருமுன்னுரை!)
இனி அந்தக் கவிதை!
அழகிற்சிறந்த மழலைகள்
அகத்தைக்காட்டும் கண்கள்
பொழியும் அருவித்தேன்கள்
புதையலோ குழந்தைகள்!
கொடிபோல் இழையும்கைகள்
கொழுகொழுவெனும்கன்னங்கள்
பிடித்திட ஓடிடும் வேளையில்
நடித்துச்சிரிக்கும் கள்வர்கள்!
கருவிழிகளில் என்றும் களிப்பு
கட்டியணைத்திடல் என்ன மறுப்பு?
புருவவளைவிலும் துறுதுறுப்பு
புன்னகையோ ஆண்டவன் படைப்பு!
பெண்மைக்குப்பெருமை சேர்க்கும்
கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தம்!
Tweet | ||||
வாழ்த்துகள்
ReplyDelete/கொடிபோல் இழையும்கைகள்
கொழுகொழுவெனும்கன்னங்கள்
பிடித்திட ஓடிடும் வேளையில்
நடித்துச்சிரிக்கும் கள்வர்கள்!
கருவிழிகளில் என்றும் களிப்பு
கட்டியணைத்திடல் என்ன மறுப்பு?
புருவவளைவிலும் துறுதுறுப்பு
புன்னகையோ ஆண்டவன் படைப்பு!
பெண்மைக்குப்பெருமை சேர்க்கும்
கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தமே! /
அருமையான வரிகள்
திகழ்மிளிர் said...
ReplyDelete]////வாழ்த்துகள்
நன்றி திகழ்மிளிர்
கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தமே! /
அருமையான வரிகள்]/////
வசந்தம் மழலைகள் தானே?!
12:57 PM
\\என் கவிதை பரிசுக்குத் தேர்வானதும் \\
ReplyDeleteவாழ்த்துகள்
அருமையான வரிகள்.வாழ்த்துகள்.
ReplyDelete:)
\\உண்மையில் மழலைகள் மட்டுமே
ReplyDeleteஉலகின் முதல் வசந்தமே!\\
சிறப்பான உண்மை
நல்லாருக்கு.....
ReplyDeleteஆனால்
//உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தமே! //
இதில் வசந்தமே ! என்று விளிப்பு வருவது சரியா என்றொரு சந்தேகம் எனக்கு.
நான் நினைப்பது,
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தம்!
என்பதுதான் சரியாக இருக்கலாம் !
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ஷைல்ஸக்கோவ்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பு அக்கா :)
ReplyDelete(மை.பா.பார்சல் இதுக்காவது அனுப்பி வைங்க :) )
//கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்//
ReplyDelete:)
பொதுவா பெரியவங்க தான் குழந்தைக்குக் கதை சொல்லணும்!
குழந்தைங்க கதை நூறு சொல்லுதா உங்க கவிதையில்?
இப்படியெல்லாம் சொல்லி நீங்க கதை சொல்லாமல் போவதை இந்தக் குழந்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று இதோ பின்னூட்டம் போடுகிறது! :)
வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதையும் வசந்தமே.
வாழ்த்துக்கள் ஷைலஜா!
ReplyDeleteகுழந்தை எத்தனை அழகோ அதே போல அவரைக் கொண்டாடும் இக்கவிதையும் அழகோ அழகு!
வாழ்த்துக்கள் அக்கா ;)
ReplyDeleteகவிதை அருமை ;)
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\என் கவிதை பரிசுக்குத் தேர்வானதும் \\
வாழ்த்துகள்
1:21 PM
நன்றி மிக ஜமால்
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஅருமையான வரிகள்.வாழ்த்துகள்.
:)
1:21 PM
>>>>>>
வாங்க அப்துல்லா
கருத்துக்கு நன்றி
நட்புடன் ஜமால் said...
ReplyDelete\\உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தமே!\\
சிறப்பான உண்மை
1:22 PM
>>>>..ஜமாலுக்கு தன் மழலை நினைவு வந்திருக்குமே! கருத்துக்கு நன்றி ஜமால்
மயாதி said...
ReplyDeleteநல்லாருக்கு.....>>>
நன்றி மயாதி
/////ஆனால்
//உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தமே! //
இதில் வசந்தமே ! என்று விளிப்பு வருவது சரியா என்றொரு சந்தேகம் எனக்கு.
நான் நினைப்பது,
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தம்!
என்பதுதான் சரியாக இருக்கலாம் !
வாழ்த்துக்கள்.../////
நானும் அப்படி நினைத்தேன்.
மாற்றிவிடறேன் நன்றிங்க
1:48 PM
மதுரையம்பதி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைல்ஸக்கோவ்.
2:51 PM
>>>>
நன்றி வெல்லத்தம்பி!
எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பு அக்கா :)
(மை.பா.பார்சல் இதுக்காவது அனுப்பி வைங்க :) )
3:35 PM
>>>>>>>>>>>>>.வாராது வந்த மாமணியே ரிஷான் ஷெரீஃபே!
வாங்கப்பா வாங்க.
மைபா எவ்வளோ கிலோ வேணும் சொல்லுங்க அனுப்பிடலாம்:)(தப்பிச்சிட்டேனா?:)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்//
:)
பொதுவா பெரியவங்க தான் குழந்தைக்குக் கதை சொல்லணும்!
குழந்தைங்க கதை நூறு சொல்லுதா உங்க கவிதையில்?
இப்படியெல்லாம் சொல்லி நீங்க கதை சொல்லாமல் போவதை இந்தக் குழந்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று இதோ பின்னூட்டம் போடுகிறது! :)
3:42 PM
>>>>>>>>>>>
குழந்தாய் ரவி! உங்க வயசுக்கு யார் கண்ணு 100கதை சொல்லும்னு எனக்கும்தெரியும்:):) அடிக்கடி ரியோடிஜெனிரோ வேற பயணம் போல இருக்கு சரி சரி:):)
மாதேவி said...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கவிதையும் வசந்தமே.
4:33 PM
>>>>>>
நன்றி மாதேவி கவிதையையும் வசந்தம் என்றமைக்கு
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைலஜா!
குழந்தை எத்தனை அழகோ அதே போல அவரைக் கொண்டாடும் இக்கவிதையும் அழகோ அழகு!
4:46 PM
>>>>
வாங்க ராமலஷ்மி!
இந்தக்கவிதைக்கு ஈடு இணை இல்லா உங்களின் தயிர்சாதம் பரிசாக உண்டா?:)
கோபிநாத் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அக்கா ;)
கவிதை அருமை ;)
4:48 AM
>>>>>>
கோபிக்கு எப்போதும் நன்றி. மறக்காம பின்னூட்டம் போடும் உங்களுக்கு அன்புகலந்த நன்றி மறுபடி
//மதுரையம்பதி said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஷைல்ஸக்கோவ்.
2:51 PM
>>>>
நன்றி வெல்லத்தம்பி!//
சந்தேகம் தீர்ந்ததா ஷைல்ஸக்கா?...:-), மீண்டும் வெல்லத்தம்பி டைடில் வந்துருக்கே அதான் கேட்டேன் :)))
கவிதை அழகு. வாழ்த்துகள் ஷையக்கா!
ReplyDeleteமதுரையம்பதி said...
ReplyDelete\\\\சந்தேகம் தீர்ந்ததா ஷைல்ஸக்கா?...:-), மீண்டும் வெல்லத்தம்பி டைடில் வந்துருக்கே அதான் கேட்டேன் :)))
///
6:45 PM
எப்போதும் செல்லத்தம்பி அவரென்றால் வெல்லத்தம்பிதானே நீங்க அதிலென்ன சந்தேகம்?:)
கவிநயா said...
ReplyDeleteகவிதை அழகு. வாழ்த்துகள் ஷையக்கா!
6:58 AM
>>>>>
நன்றி கவிநயா.. என் ப்ளாக் பக்கம் இன்னிக்குத்தான் வந்தேன் அதுதான் தாமதமான பதில்
கவிதை வரிகள் அழகு!
ReplyDeleteதமிழ் said...
ReplyDeleteகவிதை வரிகள் அழகு!
9:28 AM
>>>>>>>>>
நன்றிங்க தமிழ்! உங்க பெயரும் அழகு!