மரங்களிலே விலை உயர்ந்த மரம் எதுன்னா சந்தனமரம்தான் (என்பதை மறைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் புராணமே நமக்குச்சொல்லிடும்!)
இந்தியா-குறிப்பா காவிரி உற்பத்தியாகும் கர்னாடகாதான் இதுக்கு- தாய்வீடு.அடுத்து தமிழ்நாடு. உலக்த்திலேயே இந்தியா இலங்கை பிலிஃபைன்ஸ் என மூணு நாடுகளில்தான் சந்தனமரங்கள் வளர்கின்றன.
உயிரோட இருக்கிறவரை பார்க்கவும் ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி அழகில்லாத ஒரு ம்ரம் எதுன்னா அதுதாங்க சந்தன மரம்! அதுமட்டுமில்ல சந்தனமரம்லாம் உயிர் இருக்கிறவரைக்கும் ஒரு வாசனையையும் கொடுக்காதாம். நல்லா சிவப்புகலர்ல பூக்களோட இருந்தாலும் அந்தப்பூக்களில் மணமே இருக்காதாம்.
12முதல் 40மீட்டர் வரை வரை வளரும் இந்த மரங்களுக்கு டீன் ஏஜ் முடிஞ்சதும் அதாவது 20வயசுல வேரோட வெட்டி வெய்யில்ல காயவைக்கிறாங்க. மரம் நல்லாக் காய்ந்தான் மணம் ஜோரா வர ஆரம்பிக்கும்.
கொஞ்சம் உசத்தியானதெல்லாமே சொகுசாகவும் இருக்கும் இல்லையா இந்த சந்தனமரமும் அப்படித்தான். மத்த எந்தச்செடியாவது இது பக்கத்துல இருந்துதுன்னா நைசா அந்தச் செடிகளின் வேர்களை உறிஞ்சிடும். அவைகளை வளரவிடாம செஞ்சிடும். செடிகளில் தாதா இது!
ஒரு டன் சந்தனமரத்தின் விலை நான்கு லட்சம் ரூபாயாம்!
மரத்தின்பருமனுக்கு ஏற்ப விலை கூடும். (காட்டிலா அதிகாரியும் பிரபல எழுத்தாளர் இணையதள வலைப்பதிவருமான திரு லதானந்த இதுபற்றி இன்னும் விவரம் சொல்லுவார் என எதிர்பார்க்கலாம்)
வெளிஉபயோகம் மட்டுமில்லாமல் உள் மருந்தாகவும் சந்தனம் பயன்படுகிறது.
சந்தன எண்ணை மரத்தின் மையப்பகுதியில் கிடைக்கிறது, வேர்ப்பகுதியிலும் கிடைக்கிறது.
நேபாளம் வழியா சீனாக்கு சந்தனம் கடத்தறாங்களாம்...சந்தனக்கடத்தலில் ஒரு வீரப்பன் பிடிப்பட்டாலும் இன்னும் பல வீரப்பன்கள் இருக்கறாங்கன்னு தினசரி கடத்தலில் மாட்டிக்கிறவங்களப்பற்றி செய்தி படிக்கறப்போ தெரியுது.
சந்தனம் தமிழர்வாழ்வில் முன்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது ..தாம்பூலம் போல சந்தனமும் மங்கலப்பொருள். இறைவனுக்கு உகந்தது. குருராகவேந்திரர் சந்தனக்கட்டையை கல்லில் இழைத்த கதை அற்புதமானது. குருவாயூர் போல சிலகோயில்களில் சந்தனமே முதன்மைப்ப்ரசாதமாக பக்தர்களுக்குத்தராங்க.
மொட்டை அடிச்சா தலைல சந்தனம் தடவறாங்க..கோடைக்கட்டி வந்தா குளிர்ச்சிக்கு சந்தனம் பூசறாங்க....
எங்க வீட்டுக்கல்யாணங்களில் நலங்கு என்ற சடங்கின்போது மணப்பெண் மணமகனின் கழுத்து கைகளீல் சந்தனம் பூசவேண்டும். பக்கத்துல இருக்கறவங்க செய்ற கேலிகிண்டல்ல்ல நாணத்தைதான் மணப்பெண் பூசிக்கணும்!
சந்தனக்காற்றே, சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து, சாந்துபொட்டு சந்தனப்பொட்டு...இப்படி
சந்தனம் மணக்கும் திரைப்பாடல்கள் பல இருக்கு!
சந்தனசிந்தூர குங்கும பூஷணீ என்று ராகமாலிகைல கர்னாடிக் மியூசிக்ல ஒருபாட்டு தெரியும்.சரிசரி முறைக்காதீங்க, பாடிபதிவு செய்து படுத்தலைங்க!
இங்க பெங்களூர்ல 10வருஷம் முன்னாடி வனத்துறை இலாக்கிவினர் ஒருநாள் டெம்போல நிறைய சந்தனச்செடிகள் கொண்டுவந்து ஒவ்வொருத்தர் வீட்லயும் அவங்களே நட்டாங்க..
”என்னது இது சந்தனச்செடியா?” ஆச்சர்யமாய் கேட்டேன்.
”ஆமாங்க..இதை பாதுகாப்பா வளர்க்கணூம் நீங்க. ஆனா இது அரசுக்கு சொந்தமானது என்கிறதையும் நினைவுல வச்சிக்கணும்”
”ஓ அதனால என்ன நாளைக்கு சந்தனமரமாகி வெட்டி கட் செய்யறப்போ கால்டன்னாவது வளர்த்த நன்றிக்கு தரமாட்டீங்களா என்ன ?” என்று மனசுக்குள்ள சொல்லிக்கொண்டேன்.
ஊருக்கு விஷயத்தை போனில் சொன்னதும் அம்மா” ஒரு சந்தனக்கட்டை எனக்கு எடுத்து வச்சிடு. ஆத்துல இருக்கறது தேஞ்சி நோஞ்சானா இருக்கு.” என்றாள்
“ஹேய் ஷைலஜா ! எனக்கு சாண்டல்னாஉயிர்டி. சந்தன எண்ணை எனக்கு அட்லீஸ்ட் 100கிராமவது நீ தரணும் என்ன?” திருச்சி தோழியின் கோரிக்கை.
“ நல்ல தச்சனை விட்டு சந்தன மாலை செஞ்சி வாசல்ல நுழைஞ்சதும் நிலைப்படில மாட்டிவை உள்ள நுழையறப்போ எட்டூருக்கு மணக்கும்!” மாமியாரின் உத்தரவு.
எனக்கு கனவில் சந்தனக்காடாய் வரும்.சந்தனக்காற்றை சுவாசித்தபடி சந்தனப்பேனாவால் சந்தனக்கவிதை ஒன்று ’தந்தன தந்தனம் சந்தம் வரும் அதில் மந்திரதந்திர ஜாலம் வரும் ’என்று இஷ்டத்துக்கு எழுதுவேன்! எல்லாம் கனவில் எழுதிமடித்த கவிதைகள்!!
“அம்மா! சந்தனச்செடிக்கு நாந்தான் தண்ணீ ஊத்துவேன்... “ என் சின்னப்பெண் பிடிவாதமாய் செடிமூழ்க மூழ்க நீரை ஊற்றிவிடுவாள்.இலவச இணைப்பாய் மழைவேற
அடிக்கடிவந்துவிடும். .
எக்ஸ்பையரி தேதியைத் தாண்டின பழைய டானிக்பாட்டில்களை மகள்கள் அக்கறையாய் செடிக்குழிக்குள் ஊற்றி உரமிட்டனர்.
அக்கம் பக்கம் பலர்வீடுகளீல் சந்தனசெடி எவ்வளோ சென் ட்டிமீட்டர் உயர்ந்துள்ளது என்பதை சின்னமகள் பார்த்துவருவாள்.
ஒருவாரத்தில் ஒரு சின்ன துளிர் தலைகாட்டவும் ஆர்வம் தாங்காமல் அதை மெல்லத்தேய்த்து நாங்க முகர்ந்து பார்த்தோம் முன்னே ஒருமுறை கருவேப்பிலைச்செடில நாலு இலை வந்தபோது ஒரே கிள்ளுதான் இலை கைமுழுக்க மணத்துபோனதினால் அதே நினைப்பில் இந்த இலையைக்கிள்ளினோம்.
அப்போல்லாம் தெரியாது சந்தனச்செடி என்பது மரமாகி 20வயசுலதான் மணக்கும் அதுவும் வெட்டிக்காய்ந்ததும்னு!
“என்னாச்சு சந்தன இல்லைல வாச்னையே இல்லயேம்மா”
“ ஐயோ ப்ரியா....கொஞ்சம் வெயிட் பண்ணு அது மரமாகும் நாலஞ்சிவருஷத்துல அப்றோம் சந்தனம்தான் நம்மவீட்ல! சந்தனக்குழம்புகூட செய்யலாம்”
“சந்தன ரசம் சந்தனப்பொறியல் சந்தனப்பச்சடி செய்வியா?” கணவர் தன்பங்குக்கு கடித்தார்.(சாதாரணமா மனுஷனுக்கு சிரிக்கவே சில்லறைதரணும் ....கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல கடிமன்னியான எனக்குக்கணவரானதால் அப்பப்போ இப்படிக்கடிஜோக்குகளை வீசுவார் வீட்டுக்காரர்!)
சந்தனச்செடியின் மகத்தான முப்பதாவது நாள்!
அன்றுகாலை எழுந்ததும் நாங்கள் வாசல் தோட்டத்தில் நட்டிருந்த சந்தனச்செடியின் அரை அங்குல வளர்ச்சியைக்காண ஆவலோடு போனோம்!
ஆனா அங்க செடி பொசுக்கென்று தலைகுனிந்து வாடி இருந்தது.
“ஐய்யெயோ செடிக்கு என்னாச்சு?”
இப்படி அக்கம்பக்கம் எல்லாருமே கூவினர்.
ஆமாம் காலனில 150பேர் வீட்ல ஒருத்தர்வீட்லயும் செடி வளரலை. பொசுக்கென வாடி வதங்கி உயிரைவிட்டிருந்தது.
“வன இலாக்கா ஆளுங்களுக்கு என்னபதில் சொல்றது?”
“ ஆமாம் இந்த செடி சொகுசா இருக்கு. இதுக்கு ரொம்ப வெப்பமும்கூடாதாம் ரொம்ப குளிரும் கூடாதாம் ரொம்ப மழையும்கூடாதாம் தரை ஈரமாகவே இருக்கவும்கூடாதாம் சுமாரா மழைபெய்து உடனே உலரமாதிரி இருக்கணுமாம். ராஜகுமாரியைக்கொண்டுவந்து குடிசைக்குள்ள உக்காரவச்சிமாதிரி இருக்கு..பெங்களூர்ல வெயில் அடிக்கறதேன்னு நினச்சா மழைபெய்யும்.,மழைல நனயறோமேன்னு குடைய விரிக்கறதுக்குள்ள வெய்யில் விஜாரிக்கும் நமக்கெல்லாம் இதுசரிப்படாதும்மா.. இது எந்தகாலத்துல வளர்ந்து நாம எந்தகாலத்துல சந்தனக்கட்டையை கண்லபாக்கறது? இது அக்கம் பக்கம் எல்லா செடியோட வேர்களையும் உறிஞ்சி அதையும் வள்ரவிடாம தடுக்குது..போனா போவட்டும் விடுங்க...அவங்க வந்தா உண்மையைசொல்லிடலாம், எங்களுக்கு இது சரி இல்லப்பான்னு”
காலனி மக்கள்,தமிழில் ஹிந்தியில் கன்னடத்தில் தெலுங்கில் மலையாளத்தில் ஏகமனதாக முடிவெடுத்தோம்.
வனத்துறை இலாக்காவினர் வீடுவந்து ஏதும் அதட்டுவாங்களோ என்றும் பயமாக இருந்தது.
ஆனால் அவர்களும் இதை ஒரு முயற்சியாய் சோதனையாய்த்தான் செய்ததாய் சொல்லிபோனதும் நிம்மதியானது .
ஆனாலும் சந்தனக்கனவுகள் கண்ட அந்த சில நாட்களை மறக்கமுடியவில்லை.
இப்போதும் சந்தனபொம்மைகள் சந்தன சீப்பு டூத்ப்ரஷ் சந்தன மாலைகள் என்று சகலமும் சந்தனத்தில் செய்து யானைவிலையில்(சந்தன யானை விலையைக்கேட்டா நிஜயானை வாங்கிடலாம்:))) காவேரி கைத்தொழிலகம்(கர்னாடகா)
கண்ணாடி ஷோகேசில் வைத்திருப்பதைப் பார்க்கும்போது அன்று செடியை இன்னும் பார்த்துகவனமாய் வளர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!
தன்னை
வெட்டிவீழ்த்தும்
கோடாரியையும்
மணக்கச்செய்கிறது
சந்தனமரம்!
எப்படி கமகமன்னு இருக்கா இந்தப்பதிவு?!
.
Tweet | ||||
மண மணக்கிறது
ReplyDeleteஇடுகையும் கடைசி வரியும்
வாழ்த்துகள்
//சந்தன யானை விலையைக்கேட்டா நிஜயானை வாங்கிடலாம்:))) //
ReplyDeleteநிஜ ஆனைக்குத் தீனி போட முடியாது என்பது வேறு விஷயம்:))! ஆனா சொன்ன மாதிரி ‘காவேரி’க்கு போனா கண்ணகலப் பார்த்து ரசித்துவிட்டு வந்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்:)!
//
தன்னை
வெட்டிவீழ்த்தும்
கோடாரியையும்
மணக்கச்செய்கிறது
சந்தனமரம்!//
அப்போ உங்க பதிவை மணக்கச் செய்யாம் போயிடுமா என்ன:)? ஒரே 'கமகம கமகம'தான்:)!
சந்தனத்தை பற்றி பல செய்திகள் நல்லா இருக்கு நன்றி நண்பா
ReplyDeleteசந்தன வாசம்
ReplyDeleteம்ம்ம் ஜோர் ...
\\வெட்டிவீழ்த்தும்
கோடாரியையும்
மணக்கச்செய்கிறது
சந்தனமரம்\\
வாழ்வின் தத்துவம் கூட ...
சந்தன ரசம்
ReplyDeleteசந்தன பொறியல்
சந்தன குழம்பு இப்படி ஏகப்பட்ட மெனுஸ் கேள்விப்பட்ட கையோட யப்பா சாமி வளரவுட்டு காலி பண்ணப்போறாங்கப்பா அதுக்கு இப்பவே உசுர வுட்டுடலாம்ன்னு நினைச்சிருக்குமோ...??!! :)))))))
கவிதை வரிகள் மிக அருமை :)
akka, you veerappan friend? :)))
ReplyDeletechollave illa! irunga...paiya vaaren!
சந்தனம் பற்றிய கட்டுரை நன்கு வந்துள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteநீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சந்தன மரத்துடையது அல்ல.
பூக்களும் சிவப்பு நிறத்தில இருக்காது. somewhat வெள்ளையாய் இருக்கும்.
சந்தனமரம் தானாகவே இறந்த பிறகுதான் silviculturally matured and dead அதை extract செய்வார்கள். சந்தனத்தின் மையப் பகுதியில் முதிர முதிர அதனுடைய “வேஸ்ட்” பொருட்கள் சேர்ந்து கெட்டியான ஹார்ட் உட் சேரும். இதுதான் வாசனையைத் தரும்.
அடுத்த தடவை நேர்ல பாக்கிறப்போ சின்னதா ஒரு பீஸ் தர்ரேன். தேச்சுக்கோங்கோ!
\\திகழ்மிளிர் said...
ReplyDeleteமண மணக்கிறது
இடுகையும் கடைசி வரியும்
வாழ்த்துகள்
7:28 AM
///
வாங்க திகழ் நலமா?
மணத்தது என்று மனமாற சொன்ன தங்களுக்கு நன்றி
’’’ராமலக்ஷ்மி said...
ReplyDeleteநிஜ ஆனைக்குத் தீனி போட முடியாது என்பது வேறு விஷயம்:))! ஆனா சொன்ன மாதிரி ‘காவேரி’க்கு போனா கண்ணகலப் பார்த்து ரசித்துவிட்டு வந்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்:)!>>>>
ஆமாம்..கண்ணோடுகாண்பதெல்லாம் தலைவி, கரங்களுக்குச் சொந்தமில்லைன்னு பாடிட்டேதான் நான் அங்கே நுழைவேன்!!!
\\\\அப்போ உங்க பதிவை மணக்கச் செய்யாம் போயிடுமா என்ன:)? ஒரே 'கமகம கமகம'தான்:)!///
ஆஹா! எத்தனை கமகம? நன்றி நன்றீ.
7:35 AM
???
ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteசந்தனத்தை பற்றி பல செய்திகள் நல்லா இருக்கு நன்றி நண்பா
<><>>>
நன்றி ஞானசேகர்.
நண்பாக்குபதிலா தோழி எனலாம்!
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteசந்தன வாசம்
ம்ம்ம் ஜோர் ...
\\வெட்டிவீழ்த்தும்
கோடாரியையும்
மணக்கச்செய்கிறது
சந்தனமரம்\\
வாழ்வின் தத்துவம்
>>>வாங்க ஜமால்,,கிளி உங்களுக்கு பதிவிட்ட சேதி சொல்லிடிச்சா? டக்குனு வந்து பின்னூட்டம் போடும் உங்க பண்புக்கு மிக்க நன்றி.
வாழ்வின் தத்துவம் என்ற உங்க பார்வைக்கோணம் சிறப்பு
ஆயில்யன் said...
ReplyDeleteசந்தன ரசம்
சந்தன பொறியல்
சந்தன குழம்பு இப்படி ஏகப்பட்ட மெனுஸ் கேள்விப்பட்ட கையோட யப்பா சாமி வளரவுட்டு காலி பண்ணப்போறாங்கப்பா அதுக்கு இப்பவே உசுர வுட்டுடலாம்ன்னு நினைச்சிருக்குமோ...??!! :)))))))
கவிதை வரிகள் மிக அருமை :)
7:57 AM
?>>>>>>>>>>>>>>
ஆயில் வாங்க வாங்க நலமா?
ஆமா பின்னாடி இப்படில்லாம் தன் உடம்பை சிதைப்பாங்கன்னுதான் உசுரை விட்ருக்கும் போல!
நன்றி கருத்துக்கு
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteakka, you veerappan friend? :)))
chollave illa! irunga...paiya vaaren!
7:59 AM
>>>>>>>>>>>>>>>>>>>
ஆமா வீரப்பன் என் ஃப்ரண்ட்தான் எந்தவீரப்பன்னு கேக்கலையே நீங்க? இயக்குநர் வசந்தின் நிஜப்பேரு வீரப்பந்தான் நாங்க ரொம்ப நாளாவே ஃப்ரண்ட்ஸ்! ஹெஹே! வாங்கவாங்க வந்து மணக்கமணக்க
ஆன்மீகத்துல சந்தனம் எங்கெல்லாம் வருதுன்னும் சொல்லுங்க இணையஆன்மீகரஜனியே!
லதானந்த் said...
ReplyDeleteசந்தனம் பற்றிய கட்டுரை நன்கு வந்துள்ளது. பாராட்டுக்கள்.
நீங்கள் வெளியிட்டுள்ள புகைப்படம் சந்தன மரத்துடையது அல்ல.
பூக்களும் சிவப்பு நிறத்தில இருக்காது. somewhat வெள்ளையாய் இருக்கும்.
சந்தனமரம் தானாகவே இறந்த பிறகுதான் silviculturally matured and dead அதை extract செய்வார்கள். சந்தனத்தின் மையப் பகுதியில் முதிர முதிர அதனுடைய “வேஸ்ட்” பொருட்கள் சேர்ந்து கெட்டியான ஹார்ட் உட் சேரும். இதுதான் வாசனையைத் தரும்.
அடுத்த தடவை நேர்ல பாக்கிறப்போ சின்னதா ஒரு பீஸ் தர்ரேன். தேச்சுக்கோங்கோ!
8:13 AM
>>
வாங்க வனத்துறை அதிகாரியே!
காட்ல யானை சிங்கம்லாம் சௌக்கியமா?:) சந்தனப்பதிவில் உங்களின் திருத்தங்களுக்கு நன்றி
இணயத்துல இதைத்தான் சந்தனமரம்னு கொடுத்ததால் அதையே இட்டுவிட்டேன். நல்லவேளை சொன்னிங்க.
சந்தனக்கட்டை தரீங்களா ஓகே அட்வான்ஸா நன்றி
ம்ம்ம் ... தலைப்பு என்னை உங்கள் தளத்திற்கு இழுத்து வந்தது...
ReplyDeleteஇப்போ என் கணனியில் ஒரு வாசம் வீசுகிறது
மயாதி said...
ReplyDeleteம்ம்ம் ... தலைப்பு என்னை உங்கள் தளத்திற்கு இழுத்து வந்தது...
இப்போ என் கணனியில் ஒரு வாசம் வீசுகிறது
8:53 AM
>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாங்க மயாதி...வரவுக்கு நன்றி
சந்தனம் உங்க கணிணியிலும் மணக்கிறதா ஆஹா! நன்றிங்க
//சாதாரணமா மனுஷனுக்கு சிரிக்கவே சில்லறைதரணும் ....கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல கடிமன்னியான எனக்குக்கணவரானதால் அப்பப்போ இப்படிக்கடிஜோக்குகளை வீசுவார் வீட்டுக்காரர்//
ReplyDeleteஇது செல்லாது! செல்லாது!
எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! யாரு கம்பரு? யாரு கட்டுத் தறி?
ஷைலஜாக்கா கையில கம்பு வச்சிட்டு இருந்தா கம்பர் ஆயிருவாங்களா? :)
யக்கா, அது சந்தனக் கம்பு தானே? அப்படீன்னா அடி வாங்கிக்கிறேன்! :)
இவ்வளவு சொன்ன அக்கா, மைசூர் சாண்டில் சோப் பத்தி சொல்லவே இல்லையே! :(((
ReplyDeleteஅந்த வாசம் சூப்பரு! சின்ன வயசுல அந்த சோப்பு தான் வேணும்-ன்னு அடம் பண்ணுவேன்! இல்லீன்னா குளிக்கவே மாட்டேன்! :))
சிவப்பு சந்தனம்னு சொல்றாங்களே
ReplyDeleteஅதை பத்தியும் ரெண்டு வரி எழுதுவீங்கன்னு நினைச்சேன்
மற்றபடி பதிவு சுவாரஸ்யம் குறையாம கொண்டு போறீங்க...
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//சாதாரணமா மனுஷனுக்கு சிரிக்கவே சில்லறைதரணும் ....கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல கடிமன்னியான எனக்குக்கணவரானதால் அப்பப்போ இப்படிக்கடிஜோக்குகளை வீசுவார் வீட்டுக்காரர்//
இது செல்லாது! செல்லாது!
எனக்கு இப்பவே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! யாரு கம்பரு? யாரு கட்டுத் தறி?
ஷைலஜாக்கா கையில கம்பு வச்சிட்டு இருந்தா கம்பர் ஆயிருவாங்களா? :)>>>>>
வாங்க வம்பரே!!!! மாமாவை ஒண்ணும் சொல்லிடக்கூடாதே வந்துடுவீங்களே சப்போர்ட்டுக்கு:)
//யக்கா, அது சந்தனக் கம்பு தானே? அப்படீன்னா அடி வாங்கிக்கிறேன்! :)//
அடி மணக்காதுப்பா:):)
10:57 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteஇவ்வளவு சொன்ன அக்கா, மைசூர் சாண்டில் சோப் பத்தி சொல்லவே இல்லையே! :(((
அந்த வாசம் சூப்பரு! சின்ன வயசுல அந்த சோப்பு தான் வேணும்-ன்னு அடம் பண்ணுவேன்! இல்லீன்னா குளிக்கவே மாட்டேன்! :))
10:59 AM
>>>>>>......
சாண்டல் சோப் பத்தி நெறய சொல்லணும் என் இஷ்ட சோப் ஆச்சே
என்மேனி எழிலுக்கு(ஆ அடங்கு ஷைலஜா:)) நான் தினமும் பாவிப்பது மைசூர் சந்தன சோப்பே!!!
NESAMITHRAN said...
ReplyDeleteசிவப்பு சந்தனம்னு சொல்றாங்களே
அதை பத்தியும் ரெண்டு வரி எழுதுவீங்கன்னு நினைச்சேன்
மற்றபடி பதிவு சுவாரஸ்யம் குறையாம கொண்டு போறீங்க...
4:39 PM
>>>>>>>>>>
சிவப்பு சந்தனமா என்ன அது தெரியாதே
நன்றிங்க கருத்துக்கும் வரவுக்கும்
செஞ்சந்தணம்ன சொல்லுவாங்க. மருத்துவ குணம் மிக்கதென அறிந்திருக்கின்றேன். மஞ்சள் நிறத்தில் செம்மை சேர்ந்து காவி நிறத்தில் வரும். எங்கள் நாட்டின் கிழக்குப் பகுதியில் கூகைக் கட்டு அல்லது கூவைக்கட்டு என அழைக்கப்படுகின்ற தாடை வீக்கத்திற்கு இந்தச் செஞ்சந்தணத்தை அரைத்துப் பூசுவது வழக்கம்.
ReplyDeleteநறுமணம் கமழும் பதிவு:)
சந்தனத்தை பற்றி பல செய்திகள் நல்லா இருக்கு...
ReplyDeleteநறுமணம் கமழும் பதிவு:)
என்ன இருந்தாலும் வற்றல் குழம்பு வாசனைக்கு இது ஈடாகுமா?
ReplyDeleteபின்ன என்ன, எல்லாருமே இது வாசமான பதிவுன்னு சொல்லிகிட்டிருந்தா எப்படிண்றேன்?
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
LA_Ram said...
ReplyDeleteஎன்ன இருந்தாலும் வற்றல் குழம்பு வாசனைக்கு இது ஈடாகுமா?
பின்ன என்ன, எல்லாருமே இது வாசமான பதிவுன்னு சொல்லிகிட்டிருந்தா எப்படிண்றேன்?
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
8:43 AM
>>>>>>>>>>>>>>>>
ஆ நான் காண்பது கனவா அன்றி நிஜமா?:) எல்லேக்காரங்க இந்த எல்லைவரை வந்திருக்காங்களா? அட அட வாங்க வாங்க ராம்! திரைப்படமணம் வீசறப்பவே நினச்சேன் ராம் வந்திருக்கலாம்னு!
ஜீன்ஸ் போன்ற பலபடங்களில் நடிச்சவர் எழுத்துலக சிகரம் எல்லே ராம் அவர்களுக்கு நல்வரவு. ஆமாமா
வற்றல்குழம்புமட்டுமா உங்க ஃபேவரிட் ஃபில்டர் காபியை மறந்துட்டீங்களே நண்பரே!
வண்ணத்துபூச்சியார் said...
ReplyDeleteசந்தனத்தை பற்றி பல செய்திகள் நல்லா இருக்கு...
நறுமணம் கமழும் பதிவு:)
9:54 AM
>>>>>>>>>
வாங்க சூர்யா
சந்தன விவரம் நிறைய விட்டுப்போயிருக்கு. இன்னொருவாட்டி மணக்கச்செய்துடறேன்
கருத்துக்கு நன்றி