வருடும் மயிலிறகாகும்.
யாழையும்குழலையும்
ஓரங்கட்டிவிடும்
மழலையின்
சொல்லாகும்.
இதன் வழிகள் மூன்று.
கனியும்; காதலாகிக்கசியும்;
கடிந்தும்மிரட்டும்
என சிறுவாசல்கொண்ட
விழிவழிமுதல்வழி.
தொலைவிலிருந்தாலும்
குரல் அடையாளம்காட்டும்
உணர்வுக்கு ஏற்றபடி
ஒலிவடிவத்தை
மாற்றித்தரும்
சாமரமும் வீசும்
சாட்டையாய் அடிக்கவும் செய்யும்
நாவின் துணையோடுவரும்
இதழ்வழி,
இதன் இரண்டாம் வழி
முதலிரண்டையும்
முட்டாளாக்கிவிடும்
முழுமையான உணர்வுகளை
முக்கியமாய் தெரிவிக்கும்
தொடுகைவழி அதுவே
மூன்றாம் வழி.
அரிசி சிந்தினால்
அள்ளிவிடலாமாம்
இது சிதறினால்
அள்ள இயலாதென்று
வாழ்க்கைப்பாடத்தில்
முதல்பக்கத்தில் இது
இருப்பது இதன்
தனிச்சிறப்பு
அதை மனதில்கொள்வது
மனிதருக்கு மதிப்பு.
தேகத்தைக்
குதறவும் செய்யும்
குதூகலமாக்கி
உற்சாகத்தைக்
கொடுக்கவும் செய்யும்.
அகத்தில்
பெருமௌனவெளியில்
உலாவரும்
புறத்தில் ஒலிவடிவங்களுக்கு
உயிரைத்தரும்.
கவிஞர்களுக்கு
களிமண்ணாய்க்
குழைந்துவரும்.
வார்த்தைஇல்லா உலகில்
வாழ்வதும்
சாத்தியமா என்ன?
Tweet | ||||
சூப்பரா இருக்கு! அருமையான என் சமீபத்திய வாசிப்பு கவிதை இது!
ReplyDeletestunning!! that was Mesmerizing!! i read it again and again!!
ReplyDeleteshailajakaa..neenga bangaloreaa
ReplyDeleteshailajakaa..neenga bangaloreaa
ReplyDelete”வார்த்தைஇல்லா உலகில்
ReplyDeleteவாழ்வதும்
சாத்தியம் இல்லை!”
என்று முடித்திருக்கலாம்!
நன்று!
//
ReplyDeleteகுதூகலமாக்கி
உற்சாகத்தைக்
கொடுக்கவும் செய்யும்.//
உண்மைக்கா... உற்சாகமான வார்த்தைகளைக் கேட்டாலே நமக்கு ஒரு நிம்மதி மனதில் பிறந்து விடும்.. சிறப்பான கவிதை.
யாழையும்குழலையும்
ReplyDeleteஓரங்கட்டிவிடும்
மழலையின்
சொல்லாகும்.\\
துவக்கமே அருமை.
இது சிதறினால்
ReplyDeleteஅள்ள இயலாதென்று\\
சொன்னது சிறப்பு
அபிஅப்பா said...
ReplyDeleteசூப்பரா இருக்கு! அருமையான என் சமீபத்திய வாசிப்பு கவிதை இது!
9:53 AM
<<<<<<<<<<<>>
வாங்க அபிஅப்பா உடல் நலமாகிட்டீங்களா? நன்றி கருத்துக்கு.
rooto said...
ReplyDeletestunning!! that was Mesmerizing!! i read it again and again!!
10:00 AM
>???????????????
ரொம்ப நன்றிங்க மறுபடிமறுபடி நீங்க படிச்சி மகிழ்வதற்குரிய கவிதையா வார்த்தை ஆனதற்கு
dhamayanthi said...
ReplyDeleteshailajakaa..neenga bangaloreaa
10:25 AM
dhamayanthi said...
shailajakaa..neenga bangaloreaa
10:25 AM
>>>>>>>>
2தடவை கேட்டாலும் ஒரேபதில் ஆமாம் என்பதே...ஆமா தமயந்தி நீங்க?
SP.VR. SUBBIAH said...
ReplyDelete”வார்த்தைஇல்லா உலகில்
வாழ்வதும்
சாத்தியம் இல்லை!”
என்று முடித்திருக்கலாம்!
நன்று!
10:32 AM
>>>>>>>>>>>>>>>>>>வாங்கோ சுப்பையா ஸார்.
சாத்தியமில்லைன்னு தீர்ப்பா சொல்லிட்டா பேச இயலாதவர்களுக்கு
அது மனசுக்குக் கஷ்டமாயிடுமேன்னு தோன்றியது.
கருத்துக்கு நன்றி
Raghav said...
ReplyDelete//
குதூகலமாக்கி
உற்சாகத்தைக்
கொடுக்கவும் செய்யும்.//
உண்மைக்கா... உற்சாகமான வார்த்தைகளைக் கேட்டாலே நமக்கு ஒரு நிம்மதி மனதில் பிறந்து விடும்.. சிறப்பான கவிதை
>>>>>>>>>>>>>>>
என் அருமைத்தம்பி பெங்களூர் நாயகன் சொன்ன இந்த வார்த்தைக்கு மறுப்பேது? நன்றி ராகவ்
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteயாழையும்குழலையும்
ஓரங்கட்டிவிடும்
மழலையின்
சொல்லாகும்.\\
துவக்கமே அருமை.
10:45 AM
<<<<<<<<<<
ஜமால் நலமா?
அருமை என்ற உங்க சொல்லும் அருமை!
நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஇது சிதறினால்
அள்ள இயலாதென்று\\
சொன்னது சிறப்பு
10:47 AM
>>>>>>>>>>>>>>>>>>>>
அது நிஜம்தானே ஜமால்?
கருத்துக்கு நன்றி
மிக அருமை....
ReplyDeleteகவிதை மொத்தமும் அருமை
ReplyDeleteஅக்கா அக்காதான்! சூப்பர் :)
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு
ReplyDeleteஹூம்ம்ம் நான் எப்போ இப்படி எல்லாம் எழுதப்போறேனோ?
மதுரையம்பதி said...
ReplyDeleteமிக அருமை....
4:43 PM
>>>>>>>வருக மௌலி.
உங்க 32க்கு நான் அளித்த பின்னூட்டம் நோடிதீரா?!
வார்த்தை அருமைன்னு சொன்னதுக்கு ஒருவார்த்தை நன்றி சொல்லிடறேன்.
திகழ்மிளிர் said...
ReplyDeleteகவிதை மொத்தமும் அருமை
7:25 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.மிக்க நன்றி திகழ், நலமா?
எம்.எம்.அப்துல்லா said...
ReplyDeleteஅக்கா அக்காதான்! சூப்பர் :)
11:47 PM
>>>>>>>>>>>>>>
சூப்பர்னு சொன்ன தம்பிதம்பிதான்!
குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteகவிதை நல்லாயிருக்கு
ஹூம்ம்ம் நான் எப்போ இப்படி எல்லாம் எழுதப்போறேனோ?
1:52 AM
>>>>>
அடடா பேரை இப்படி வச்சிட்டுக்குறைப்பட்டுக்கலாமோ?
எழுதிட்டே இருங்க வரும்
நான் ரொம்ப வருஷமா எழுதிட்டி இருந்தும் இப்படி சுமாராத்தான் எழுதறேன்.. மைல்ஸ் டு கோ!