முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
மு.கு 2....
ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (ஜூலை3ம்தேதி இடவேண்டிய பதிவு இது,,சிலகாரணங்களினால்தாமதமாகிவிட்டது)
முகு3..தவறாம பின்குறிப்பு படிங்க!
**********************************************************************
நிறையப்பேசின ஆழ்வார்கள் மூவர்!
ஸ்ரீநம்மாழ்வார் ஸ்ரீகலியன் ஸ்ரீபெரியாழ்வார்,முறையே 1296 , 1253, 473 பாசுரங்கள் அருளியுள்ளனர்.
’ஒளிபுத்தூர் வித்தகன் விட்டுச் சித்தன் விரித்த தமிழ்’ என்று பெரியாழ்வார் தன்னை வித்தகன் என்று சொல்லிக்கொள்கிறார் ஒருபாடலில். வித்தகன் என்றால் கெட்டிக்காரர் என்று அர்த்தம். பாண்டியன் சபையில் வாதத்தில் வென்ற வித்தகராயிற்றே!
புதுவைக்கோன்பட்டன் புதுவைமன்னன் பட்டர்பிரான் என்று பெரியாழ்வார் வில்லிபுத்தூருக்கே ராஜாவாக இருந்திருக்கிறார்.
பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!
மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! குழந்தையை நினைக்கும்போதே தாய்க்கு நெஞ்சகம் பொங்கிவிடும்! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!
பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்
தமிழில் அபியும் நானும் என்று சிலநாள்முன்பு ஒருபடம் வந்தது.அப்பா-மகள் பாசம்பற்றிய கதை.
ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது! வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!
ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!
’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.
தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.
அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின்
நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.
மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.
’நல்லதோர் தாமரைப்பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்தாலொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என்மகளை எங்கும் காணேன்
மல்லரையட்டவன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள்கொலோ’
கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.
கண்பனித்தது என்பார்கள்.
ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?
பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.
நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.
பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!
பின்குறிப்பு
எனக்குத்திருமணம் முடிந்து என்னை திருவரங்கத்திலிருந்து பெங்களூருக்கு அனுப்பும்போது தன் கண்ணீரைபேனாவில் நிரப்பி என் தந்தை எழுதிய பாடல் இது!
மணமகளாய் என்மகள்தான்
மணம்முடித்துச்செல்கின்றாள்
குணம் நிறைந்த கணவருடன்
குதூகலமாய்ச் செல்கின்றாள்
இத்தனை நாள் நான் வளர்த்த
என் இனியத்திருமகள்
இன்றென்னைப்பிரிந்து
தொலைதூரம் செல்கின்றாள்
வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!
*********************************************
Tweet | ||||
அக்கா.. எப்புடி இருக்கீங்க.. ஒபாமாவிற்கு நீங்க செஞ்ச மை.பா கொண்டு போய் கொடுத்தீங்களா :)என்ன சொன்னாரு :)
ReplyDeleteஉங்க அப்பாவின் கவிதை அருமையோ அருமை.. உங்க திறமைக்குக் காரணம் இப்பல்ல தெரியுது.. ஒரு வெற்றிகரமான பெண்ணுக்குப் பின் ஒரு ஆண் :)
ReplyDeleteRaghav said...
ReplyDeleteஅக்கா.. எப்புடி இருக்கீங்க.. ஒபாமாவிற்கு நீங்க செஞ்ச மை.பா கொண்டு போய் கொடுத்தீங்களா :)என்ன சொன்னாரு :)
6:29 PM
>..>>>.
]
rராகவ் வாப்பா வா நலமா?
ஒபாமா மைபா சாப்ட்டு வாயடைச்சிப்போயிட்டார்!:):) சரி பதிவைப்படிச்சிகருத்து சொல்லலாமே! கஷ்டப்பட்டு எழுதி இருக்கேன் இல்ல அக்கா!!!:)
Raghav said...
ReplyDeleteஉங்க அப்பாவின் கவிதை அருமையோ அருமை.. உங்க திறமைக்குக் காரணம் இப்பல்ல தெரியுது.. ஒரு வெற்றிகரமான பெண்ணுக்குப் பின் ஒரு ஆண் :)
6:30 PM
.......................
ஆஆமாம் ராகவ் என்கிட்ட ஒருசதவீதம் ஏதும் திறமைஇருந்தா எல்லாம் என் அப்பாக்கே அந்தப்பெருமைலாம் நன்றி உன் கருத்துக்கு!
அருமை ஷைலஜா..
ReplyDeleteநினைத்துப் பார்த்தால் ஆன்மிகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறது..
உங்களது அப்பா இன்னொரு பெரியாழ்வார்..!
அந்தப் படத்தின் பெயர் ‘அபியும் நானும்’. இன்றைக்குதான் அந்தப் படம் பார்த்தேன்:)!
ReplyDeleteஉங்கள் அப்பாவின் கவிதை அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடு. வெகு அருமை.
[சூப்பர் தலைப்பு:)!]
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅந்தப் படத்தின் பெயர் ‘அபியும் நானும்’. இன்றைக்குதான் அந்தப் படம் பார்த்தேன்:)!
உங்கள் அப்பாவின் கவிதை அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடு. வெகு அருமை.
[சூப்பர் தலைப்பு:)!]
6:56 PM
>>>>>>>
நன்றி ராமலஷ்மி
படம்பெயரைத்திருத்தம் செய்துவிட்டேன்
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteஅருமை ஷைலஜா..
நினைத்துப் பார்த்தால் ஆன்மிகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நமக்கு ஒரு அர்த்தம் கிடைக்கிறது..
உங்களது அப்பா இன்னொரு பெரியாழ்வார்..!
6:40 PM
>>>>>>>>>
வாங்க உண்மைத்தமிழன்.
வருகைக்கு முதலில் நன்றி
ஆமாம் ஆன்மீகப்புதையலில் நவரத்தினங்கள் உள்ளன அதிலும் நன் செந்தமிழ்ப்பாக்களில் கோடிக்கணக்கில் ..வாசிக்கத்தான் ஆயுள்போதாது!
கருத்துக்கும் என் தந்தையை பெரியாழ்வார் என்றதற்கும் நன்றி.
சூப்பர்.........!!!!!!!
ReplyDeleteபொண்ணைபெத்தவன்...ஹி ஹி
//வரும் நாளில் அவள் நினைவில்
ReplyDeleteவாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?//
அருமையான அசை போடல்!
அசை போட அசை போட வாட்டம் ஏது? வசந்தம் தானே அப்பாவுக்கு? :))
தாயைப் போல பிள்ளை-ன்னுவாங்க! நீங்க தந்தையைப் போல் கவி பொண்ணா? :)
அன்புடையீர்! ஆழ்வார்கள் தொடர்பாக் இரண்டு இடுகைகள் இட்டிருக்கிறேன். பாருங்கள். வைணவப் பாரம்பரியம் உள்ள நீங்கள் கருத்துச் சொன்னால் தொடர எனக்கு உதவியாய் இருக்கும்.
ReplyDelete//தன்னை வித்தகன் என்று சொல்லிக்கொள்கிறார் ஒருபாடலில்//
ReplyDeleteவித்தகன் = அறிஞன் என்ற ஒரு பொருள் உண்டு!
ஆனால் பெரியாழ்வார் தன்னைத் தானே அறிஞன் என்று சொல்லிக் கொள்ளவில்லை! நாயேன், அடியேன் என்றெல்லாம் சொல்பவர் தன்னை "வித்தகன்" என்று பேசிக் கொள்ளவில்லை!
வித்தகன் = வித்து + அகன்
எம்பெருமான் திருவடிகளான வித்து, அகத்திலே கொண்டிருப்பதால் வித்தகன்!
விஷ்ணு சித்தகத்தே இருந்ததால் விட்டு சித்தன்!
செவ்வடித் திருக்காப்பு வித்து அகத்தே இருந்ததால் வித்தகன்!
இதே பொருளில்
வேதப்பொருளே என் வேங்கடவா
வித்தகனே இங்கே போதராயே
என்று பாடுகிறார்!
எம்பெருமானை வெறுமனே அறிஞன், வித்தகன் என்று சொல்லுவாரா?
என் வேங்கடவா, வித்து அகனே, இங்கு போதராயே என்று எப்படிக் கொள்கிறோமோ, அதே போலத் தான், பெரியாழ்வார் தன்னைத் தானே "வித்தகன்" என்று சொல்வதையும் கொள்ள வேணும்!
//ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம்//
ReplyDeleteஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அடியேன் நட்சத்திரம்! :))
//மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
ReplyDeleteஇவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!//
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வஅளவு தானன்றி - பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
"பெரிய"ஆழ்வார் என்னும் பெயர்!
இது மணவாள மாமுனிகள் கவிதை!
//ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது!//
ReplyDeleteஅக்கா அபி அப்பாவைப் போட்டுத் தாக்கிட்டாங்க!
தொல்ஸ் அண்ணே, ஓடியாங்க, ஓடியாங்க! :))
அவள் நினைவில்
ReplyDeleteவாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!\\
அருமையக்கா ...
//Raghav said...
ReplyDeleteஒபாமாவிற்கு நீங்க செஞ்ச மை.பா கொண்டு போய் கொடுத்தீங்களா :)என்ன சொன்னாரு :)//
வெள்ளை மாளிகை கிச்சனுக்குள் அக்காவைக் கூப்பிட்டிருக்காரு!
வெள்ளை மாளிகை முழுக்க நெய் வாசம்! வறுத்த முந்திரி வாசம்! வறுக்காத மந்திரிகளும், வறுத்த முந்திரி வலையில் வீழ்ந்தனரே! எல்லாம் அக்காவின் கைவண்ணம்!
ஷைலஜா...
கைவண்ணம் பெங்களூரில் கண்டேன்!
நெய்வண்ணம் வாஷிங்டனில் கண்டேன்! :)
//பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே//
ReplyDeleteபெரியாழ்வார் மனதாலேயே அவளைப் பெற்று விடுகிறார்!
பெற்று, பின்பு துளசிச் செடிக் கீழ் எடுத்துக் கொள்கிறார்!
மனத் துழாயில் பெற்று,
மலர்த் துழாயில் எடுக்கிறார்
பெற்று, எடுத்தல்...
அதான் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!
//கண்பனித்துத்தான் போனது.
ReplyDeleteஅவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?
பெண்ணிருந்தவரை இல்லம்...//
அருமையான தந்தை-மகள் கவிதைக்கா!
எல்லாரும் பொதுவா, "ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்" என்ற பாட்டைத் தான் சொல்வாய்ங்க! நீங்க வித்தியாசமா இன்னொரு அழகான பாட்டைக் கொடுத்திருக்கீங்க!
//இல்லம் வெறியோடிற்றாலோ//
வெறிச்சோடிப் போச்சு என்பதை எப்படி அழகான தமிழில் சொல்கிறார் பாருங்கள்!
இங்கே வீடு வெறிச்சிப் போச்சி!
ஆனால் அங்கே கண்ணன் வீட்டில் பொண்ணு என்ன வேலை செய்கிறாளோ? சமையல் கூடத் தெரியாதே...ன்னு எல்லாம் அங்கலாய்த்துக் கொள்கிறார்!
நடையொன்றும் செய்திலன் நங்காய். நந்தகோபன் மகன் கண்ணன்
இடையிரு பாலும் வணங்க இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கிக் கைதழும்பு ஏறிடுங் கொலோ?
தயிர் கடைந்து பொண்ணுக்கு கைத் தழும்பு வந்துருமோ? ஹையோ! போயும் போயும் ஒரு இடைப் பையன் மவனுக்கு பொண்ணு கொடுத்தேனே! ஹா ஹா ஹா! :))
லதானந்த் said...
ReplyDeleteஅன்புடையீர்! ஆழ்வார்கள் தொடர்பாக் இரண்டு இடுகைகள் இட்டிருக்கிறேன். பாருங்கள். வைணவப் பாரம்பரியம் உள்ள நீங்கள் கருத்துச் சொன்னால் தொடர எனக்கு உதவியாய் இருக்கும்.
8:18 PM
>>>>>>
கண்டிப்பா படிக்கறேன் லதானந்த்
செந்தழல் ரவி said...
ReplyDeleteசூப்பர்.........!!!!!!!
பொண்ணைபெத்தவன்...ஹி ஹி
7:22 PM
>>>வாங்க ரவி
கங்கிராட்ஸ்! எப்போ பொறந்தா பொண்ணூ?
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteஅவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!\\
அருமையக்கா ...
8:23 PM
////ஜமால் வாங்க.
அருமையான வரி தான் எளிமையாய் இருப்பதால் அப்படி இருக்கலாம் நன்றி கருத்துக்கு
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?//
அருமையான அசை போடல்!
அசை போட அசை போட வாட்டம் ஏது? வசந்தம் தானே அப்பாவுக்கு? :))////
ஆமாம் சரியா சொன்னீங்க..ஆனா நினைவுகளின் அசைவு பலநேரங்களில் நம்மை எங்காவது வீழ்த்தியும் விடுகிறதே!
//தாயைப் போல பிள்ளை-ன்னுவாங்க! நீங்க தந்தையைப் போல் கவி பொண்ணா? :)//
ஜோக்க்கா ரவி?:) எனக்கு,மைல்ஸ் டு கோ!
8:11 PM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//தன்னை வித்தகன் என்று சொல்லிக்கொள்கிறார் ஒருபாடலில்//
வித்தகன் = அறிஞன் என்ற ஒரு பொருள் உண்டு!
ஆனால் பெரியாழ்வார் தன்னைத் தானே அறிஞன் என்று சொல்லிக் கொள்ளவில்லை! நாயேன், அடியேன் என்றெல்லாம் சொல்பவர் தன்னை "வித்தகன்" என்று பேசிக் கொள்ளவில்லை!
வித்தகன் = வித்து + அகன்
எம்பெருமான் திருவடிகளான வித்து, அகத்திலே கொண்டிருப்பதால் வித்தகன்!
விஷ்ணு சித்தகத்தே இருந்ததால் விட்டு சித்தன்!
செவ்வடித் திருக்காப்பு வித்து அகத்தே இருந்ததால் வித்தகன்!
இதே பொருளில்
வேதப்பொருளே என் வேங்கடவா
வித்தகனே இங்கே போதராயே
என்று பாடுகிறார்!
எம்பெருமானை வெறுமனே அறிஞன், வித்தகன் என்று சொல்லுவாரா?
என் வேங்கடவா, வித்து அகனே, இங்கு போதராயே என்று எப்படிக் கொள்கிறோமோ, அதே போலத் தான், பெரியாழ்வார் தன்னைத் தானே "வித்தகன்" என்று சொல்வதையும் கொள்ள வேணும்!
8:19 PM
>>>>>>>
தவறில்லை ரவி. தான் மெய்யான பரம் சத்யவாதி என்பதை நம்மாழ்வாரும் சொல்லிக்கொள்கிறார்.
பொய்யில்பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் வையம் மன்னி வீற்றிருந்து விண்ணுமாள்வர் மண்ணூடே(திருவாய்மொழி 4.3.11)
பொய்மொழி ஒன்றில்லாத மென்மையாளன் புல மங்கைக்குல வேந்தன் புலமையார்ந்த அம்மொழிவாய்க்கலிகன்றி இன்பப்பாடல்பாடுவார்
என்று கலியனும் திருமொழில சொல்கிறார்
உங்கள் கருத்தும் பொருத்தமானதே.
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம்//
ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் அடியேன் நட்சத்திரம்! :))
8:20 PM
>>>>>>>>ஆழ்வார்க்கடியார்க்கு இப்போதே பல்லாண்டு கூறுமினோ! இன்னும் பல நூற்றாண்டிரும் ரவீஜீ!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது!//
அக்கா அபி அப்பாவைப் போட்டுத் தாக்கிட்டாங்க!
தொல்ஸ் அண்ணே, ஓடியாங்க, ஓடியாங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடடே ச்சும்மா இருங்கப்பா அவரு இப்போ தூங்கிட்டு இருப்பாரு மேலும் அபி அப்பா நல்லவரு இதுக்கெல்லாம் கோச்சிக்கவே மாட்டாரே!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஆண்டாள்்மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தின் முன்பு அபியாவது அவள் அப்பாவாவது!//
அக்கா அபி அப்பாவைப் போட்டுத் தாக்கிட்டாங்க!
தொல்ஸ் அண்ணே, ஓடியாங்க, ஓடியாங்க
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடடே ச்சும்மா இருங்கப்பா அவரு இப்போ தூங்கிட்டு இருப்பாரு மேலும் அபி அப்பா நல்லவரு இதுக்கெல்லாம் கோச்சிக்கவே மாட்டாரே!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//Raghav said...
ஒபாமாவிற்கு நீங்க செஞ்ச மை.பா கொண்டு போய் கொடுத்தீங்களா :)என்ன சொன்னாரு :)//
வெள்ளை மாளிகை கிச்சனுக்குள் அக்காவைக் கூப்பிட்டிருக்காரு!
வெள்ளை மாளிகை முழுக்க நெய் வாசம்! வறுத்த முந்திரி வாசம்! வறுக்காத மந்திரிகளும், வறுத்த முந்திரி வலையில் வீழ்ந்தனரே! எல்லாம் அக்காவின் கைவண்ணம்!
ஷைலஜா...
கைவண்ணம் பெங்களூரில் கண்டேன்!
நெய்வண்ணம் வாஷிங்டனில் கண்டேன்! :)
8:26 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆஹா! பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ ந்னு கம்பன் பாடினமாதிரி பாடணும் போல இருக்கே..ஆ ஊன்னா கவிதைமழையாகொட்டறீங்களே அருமைத்தம்பியே!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே//
பெரியாழ்வார் மனதாலேயே அவளைப் பெற்று விடுகிறார்!
பெற்று, பின்பு துளசிச் செடிக் கீழ் எடுத்துக் கொள்கிறார்!
மனத் துழாயில் பெற்று,
மலர்த் துழாயில் எடுக்கிறார்
பெற்று, எடுத்தல்...
அதான் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!
8:29 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நான் போடறதெல்லாம் கோடே
தாங்கள்போடறதே ரோடு!
அருமை ரவி!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//கண்பனித்துத்தான் போனது.
அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.
பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?
பெண்ணிருந்தவரை இல்லம்...//
அருமையான தந்தை-மகள் கவிதைக்கா!
எல்லாரும் பொதுவா, "ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன்" என்ற பாட்டைத் தான் சொல்வாய்ங்க! நீங்க வித்தியாசமா இன்னொரு அழகான பாட்டைக் கொடுத்திருக்கீங்க!
//இல்லம் வெறியோடிற்றாலோ//
வெறிச்சோடிப் போச்சு என்பதை எப்படி அழகான தமிழில் சொல்கிறார் பாருங்கள்!
இங்கே வீடு வெறிச்சிப் போச்சி!
ஆனால் அங்கே கண்ணன் வீட்டில் பொண்ணு என்ன வேலை செய்கிறாளோ? சமையல் கூடத் தெரியாதே...ன்னு எல்லாம் அங்கலாய்த்துக் கொள்கிறார்!
நடையொன்றும் செய்திலன் நங்காய். நந்தகோபன் மகன் கண்ணன்
இடையிரு பாலும் வணங்க இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கிக் கைதழும்பு ஏறிடுங் கொலோ?
தயிர் கடைந்து பொண்ணுக்கு கைத் தழும்பு வந்துருமோ? ஹையோ! போயும் போயும் ஒரு இடைப் பையன் மவனுக்கு பொண்ணு கொடுத்தேனே! ஹா ஹா ஹா! :))
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அடடா என்ன அழகான பாடல்!
அதென்ன கடசில ஹஹான்னு சிரிப்பு?:)பெரியாழ்வார் வந்து சாத்தப்போறார் ஜாக்ரதை!
ஒற்றைப் பதிவில் இவ்வளவு விருந்தா? நிறைய புதிய கோணங்கள் வாசிக்கக் கிடைத்தன.ஷைலஜா மேடம் ரவிஷங்கர் இருவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteRATHNESH said...
ReplyDeleteஒற்றைப் பதிவில் இவ்வளவு விருந்தா? நிறைய புதிய கோணங்கள் வாசிக்கக் கிடைத்தன.ஷைலஜா மேடம் ரவிஷங்கர் இருவருக்கும் மிக்க நன்றி.
10:55 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வருகைக்கு நன்றி ரத்னேஷ்
கண்ணபிரான் ரவிசங்கர் பதிவுல வந்தா புயல்தான்! கருத்துக்கு நன்றிரத்னேஷ்
\\மணமகளாய் என்மகள்தான்
ReplyDeleteமணம்முடித்துச்செல்கின்றாள்
குணம் நிறைந்த கணவருடன்
குதூகலமாய்ச் செல்கின்றாள்
இத்தனை நாள் நான் வளர்த்த
என் இனியத்திருமகள்
இன்றென்னைப்பிரிந்து
தொலைதூரம் செல்கின்றாள்
வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்\\
ஒரு ஜுவல்லரி விளம்பரம் கல்யாணம் ஆகி செல்லும் ஒரு மகள் கையை பிடிச்சு அழும் ஒரு தந்தை - இதை அபி 4 வயதிலேயே பாஅர்த்து விட்டு அப்பா இது நீ தான் என சொல்லுவா!
நான் இப்பொதே தயாராகி விட்டேன். எல்லா அப்பனுக்கும் இதே அழுகைதான் போலிருக்கு ஆழ்வார்-ஆண்டாள் காலம் முதல், ஆண்டவனே வந்து கட்டிகிட்டு போனா கூட:-((
//முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.//
ReplyDeleteஆரம்பமே அசத்தலா இருக்கே.........
//வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!//
மிக நல்ல கவிதை........... அந்த வெறுமையையும், பிரிவின் வேதனையையும் எவ்வளவு அழகாக எழுதி உள்ளார்?
ஒரே வரியில் சொன்னால்
சூப்பரோ சூப்பர்........ .
வாழ்த்துக்கள்.......
(தொடர்ந்து வருவேன்.............)
முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
ReplyDelete//
எதோ சண்டை போடுவீங்கனு வந்தேன்.. :)
@அபி அப்பா said...//எல்லா அப்பனுக்கும் இதே அழுகைதான் போலிருக்கு ஆழ்வார்-ஆண்டாள் காலம் முதல், ஆண்டவனே வந்து கட்டிகிட்டு போனா கூட:-((//
ReplyDeleteமனதை தொட்ட வரிகள்
அபி அப்பா said...
ReplyDelete\\மணமகளாய் ....
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்\\
ஒரு ஜுவல்லரி விளம்பரம் கல்யாணம் ஆகி செல்லும் ஒரு மகள் கையை பிடிச்சு அழும் ஒரு தந்தை - இதை அபி 4 வயதிலேயே பாஅர்த்து விட்டு அப்பா இது நீ தான் என சொல்லுவா!
நான் இப்பொதே தயாராகி விட்டேன். எல்லா அப்பனுக்கும் இதே அழுகைதான் போலிருக்கு ஆழ்வார்-ஆண்டாள் காலம் முதல், ஆண்டவனே வந்து கட்டிகிட்டு போனா கூட:-((/////
ஆமாம் ஆனா எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான் பெண்ணுக்கு ஒருகுழந்தைபிறந்தா பாசமெல்லாம் அங்கே ஓடிப்போய்டும் இப்ப எங்கப்பா இப்படித்தான் இருக்கார்:)
4:45 AM
R.Gopi said...
ReplyDelete//ஆரம்பமே அசத்தலா இருக்கே.........//
அப்படியா?
//வரும் நாளில் அவள் நினைவில்
வாடித்தான் இருப்பேனோ
வசந்தமான நினைவுகளை
அசைபோட்டுத்தான் இருப்பேனோ?
மறுபடியும் சந்திக்கும்
நாளுக்குக் காத்திருப்பேன்
மனமெல்லாம் மகள்நினைவில்
மானசீகமாய் வாழ்வேன்!//
மிக நல்ல கவிதை........... அந்த வெறுமையையும், பிரிவின் வேதனையையும் எவ்வளவு அழகாக எழுதி உள்ளார்?
ஒரே வரியில் சொன்னால்
சூப்பரோ சூப்பர்........ .
வாழ்த்துக்கள்.......>>>
நன்றிகோபி
(தொடர்ந்து வருவேன்.............)
>>வரணும் கண்டிப்பா.எதிர்பார்ப்பேன்
8:06 AM
மின்னுது மின்னல் said...
ReplyDeleteமுன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.
//
எதோ சண்டை போடுவீங்கனு வந்தேன்.. :)
>>>>>>>>>>>>>>>>>>>>
அடடா சண்டையா அதெல்லாம் நமக்கு வராதே மின்னல்:)
Eswari said...
ReplyDelete@அபி அப்பா said...//எல்லா அப்பனுக்கும் இதே அழுகைதான் போலிருக்கு ஆழ்வார்-ஆண்டாள் காலம் முதல், ஆண்டவனே வந்து கட்டிகிட்டு போனா கூட:-((//
மனதை தொட்ட வரிகள்
2:42 PM
>>>>>>>>>>>>>>>>>>>>>>
ஆமாம் எனக்கும் பிடிச்சிருக்கு வருகைக்கு நன்றி ஈஸ்வரி
நல்லாவே இருக்கு
ReplyDeleteஉங்கள் படைப்பு
அருமையான படைப்பு
ReplyDeleteஉங்கள் தந்தையின் கவிதை அழகு உங்கள் திறனின் காரணம் புரிகிறது
வாழ்த்துக்கள்..!
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteநல்லாவே இருக்கு
உங்கள் படைப்பு
11:08 PM
>>>> ]]
நன்றி ராஜன்
’’’நேசமித்ரன் said...
ReplyDeleteஅருமையான படைப்பு
உங்கள் தந்தையின் கவிதை அழகு உங்கள் திறனின் காரணம் புரிகிறது
வாழ்த்துக்கள்..!
7:49 PM
.....’’’
<<<>><>>>>> நன்றி நேசமித்ரன்
ஏதும் சிறுதிறன் என்னிடம்இருந்தா அப்பாதான் காரணம் அதுக்கு. அதை ஊக்குவிக்கும் என் கணவர் அடுத்த காரணம்.