Social Icons

Pages

Saturday, July 25, 2009

கனாக்கண்டேன் தோழீ நான்!வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி

(ஆண்டாள்-நாச்சியார் திருமொழி.)


வாரணம் என்றால்யானை

பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்.,

பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது

நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்) எதிரில்
நடக்கின்றான்
(எனவே எதிர்கொண்டழைக்க)

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்

நீர் நிறைந்த தங்கக்குடங்களை பூரண கலசங்களாய்வைத்தபடி அவ்னை வணங்க மக்கள் காத்திருக்க,
எங்கும் அலங்காரத் தோரணம் நட்டிருப்பதாக கனவுகண்டேன்

தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ)

நான்’

இப்படி ஆண்டாள் சொல்வதாக பாடல் அமைந்திருக்கிறது.

----------------------------------------------------------------
ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.

அதாவது பெருகிய அறிவுக்களம். (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் நல்ல அறிவுடையது யானை)

வெளியெங்கும் விரிகிறது. அவள்பார்வை.

விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது.


பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!
எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!

( அவள் தன் அனுபவத்தை
சொல்லெடுத்து சேர்த்து வார்த்தைகளாக்கி சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் உட்பொருளாய்-மனக்கண்ணின்
தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது.

ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுவங்கள் வித்தியாசமானவை

அகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம் கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!

34 comments:

 1. Happy Birthday dee my dearest thozhi, Kothai :)

  Akka, paiya vaaren...Just boarding the bus...veedu vanthu chera innum 1 hr aagum...

  ReplyDelete
 2. ////அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!////

  நன்றாக உள்ளது. பதிவிட்டுப் படிக்கத்தந்த மேன்மைக்கு நன்றி!

  ReplyDelete
 3. கோதையையும் அவள் யானையையும் காணத் தந்ததற்கு நன்றி ஷைல்ஸ்.

  உண்மைதான். கனவிலே கண்டு களித்து அவள் நடத்திய அறிவுக் கல்யாணம் எத்தனையோ கற்பனைகளுக்கு வித்திட்டது என் மனதில்.

  நம்பிக்கை பெருக,வாழ்க்கையில் ஆனந்தம் நிறைய இவள் ஒருத்தியே போதும்.

  அவளும் அவள் நாயகனும் என்றும் நம்மைக் காப்பார்கள்.

  ReplyDelete
 4. காலையில் வந்தவுடன் ஆண்டாள் சேவை...... நன்றி தோழி....

  //வாரணமாயிரம் சூழ வலம் செய்து....//

  முழு விளக்கம் அருமை..... மிக சமீபத்தில் இந்த பாடல் கேட்டேன்..... அன்னக்கிளி படத்தின் ஆரம்ப காட்சியில் வரும்......

  //அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.! //

  வெகு உண்மை..... தாங்கள் கண்டதை, கேட்டதை, அறிந்ததை இப்போது மிக தெளிவாக எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்களே, அதுபோல்......

  வாழ்த்துக்கள் ஷைலஜா......

  ReplyDelete
 5. இம்பூட்டு மேட்டரு இருக்கா இந்த பாட்டுக்கு பின்னால்

  அறியத்தந்தமைக்கு நன்றி.  [ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.]]

  சரிதான் ...

  ReplyDelete
 6. வல்லிசிம்ஹன் said...
  // அவள் யானையையும் காணத் தந்ததற்கு நன்றி ஷைல்ஸ்.

  உண்மைதான். கனவிலே கண்டு களித்து அவள் நடத்திய அறிவுக் கல்யாணம் எத்தனையோ கற்பனைகளுக்கு வித்திட்டது என் மனதில்.

  நம்பிக்கை பெருக,வாழ்க்கையில் ஆனந்தம் நிறைய இவள் ஒருத்தியே போதும்.

  அவளும் அவள் நாயகனும் என்றும் நம்மைக் காப்பார்கள்.//

  வழிமொழிகிறேன்

  ReplyDelete
 7. ஆண்டாள் அழகு.. உங்கள் ஆய்வும் மிக அழகுக்கா.. அப்புடியே ஒரு பாட்டு எழுதி பாடியிருப்பீங்கன்னு நினைச்சேன்க்கா. :)

  ReplyDelete
 8. //நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்//

  கல்யாண குணங்கள்னா என்ன அக்கா !கொஞ்சம் விளக்குங்களேன்..

  ReplyDelete
 9. நல்லதொரு பதிவு.

  ஆண்டாள் & ஆனைப்படம் அருமை.

  ReplyDelete
 10. //Raghav said...
  கல்யாண குணங்கள்னா என்ன அக்கா !கொஞ்சம் விளக்குங்களேன்..//

  வெவரமாத் தான் கேக்குறான்-க்கா! அதுவும் கல்யாணத்தைப் பத்திக் கேக்க வேண்டிய நேரத்தில் சரியாக் கேட்டுத் தெரிஞ்சிக்கறான் போல! வெளக்குங்க! வெளக்குங்க! :))

  ReplyDelete
 11. //பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி)//

  எண் வழுவமைதியா? எங்கேயோ எப்பவோ படிச்ச ஞாபகம்! இப்போ அது "என்" வழுவமைதி ஆயிரிச்சி! :))

  //ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.//

  உண்மை! அவள் கூர்மையே அவளைச் சூழ வலம் செய்குது போல! :)

  ReplyDelete
 12. //ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson//

  ஆனால் என் தோழி மறைந்தும் வெளிப்படையாகவும் இரண்டுமேயாக நிற்கிறாள்! :)
  வாரணம் ஆயிரம் என்னும் போது மறைந்து
  வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் என்னும் போது நேரடியாக!

  ReplyDelete
 13. //வாரணம் ஆயிரம்//

  பொதுவாக, திருமண காலங்களில் மாப்பிள்ளையை மட்டும் தான் யானை மேல் ஏற்றி வருவார்கள்! அவருக்கு மட்டும் தான் மாப்பிள்ளை அழைப்பில் அந்தச் சிறப்பு!

  ஆனால் கண்ணனோ அடியார்க்கு நல்லான்!
  தன்-அவள் திருமணத்தைக் கோதை அவள் மன வெளியில் நடத்துகிறாளே, மற்ற அடியார்களும் பார்க்க வேணுமே என்று....

  அத்தனை அடியார்களையும், அவன் கைங்கர்ய பாராளையும் யானைகள் மேல் ஏற்றித் தான் மட்டும் நடந்து வருகிறானாம்!
  வாரணம் ஆயிரம் சூழ....
  நாரணன் நம்பி "நடக்கின்றான்"

  யாருக்கு வரும் இந்த அடியார் பரிவு? பக்த வத்சால்யம்?

  ReplyDelete
 14. வாரணம் ஆயிரம் என்று பாசுரம் யானையில் துவங்கி,

  அங்கவனோடு சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் என்று யானையிலேயே முடிகிறது!

  இதுவும் வாரணம் ஆயிரப் பாசுரத்தின் சிறப்பு!
  முதலில் அடியார்கள் யானைகளில் வர
  முடிவில் அவனும் அவளும் யானை உலா வருகிறார்கள்!

  ReplyDelete
 15. நன்றாக உள்ளது!! நன்றி !

  ReplyDelete
 16. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  Happy Birthday dee my dearest thozhi, Kothai :)

  Akka, paiya vaaren...Just boarding the bus...veedu vanthu chera innum 1 hr aagum...

  7:06 AM
  >>>>>>>>>....இதை நான் இப்போதான் பார்த்தேன் பின்னூட்டங்கள் இட்டுவிட்டீர்கள் போல இருக்கே இருங்க படிச்சிட்டுவரேன்

  ReplyDelete
 17. SP.VR. SUBBIAH said...
  ////அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!////

  நன்றாக உள்ளது. பதிவிட்டுப் படிக்கத்தந்த மேன்மைக்கு நன்றி!

  7:41 AM
  <<<<<<<<<<<<<<<<<<<<<<..பதிலிட்டு பின்ன்னூட்டத்தில் கருத்துசொன்ன தங்கள் மேன்மைக்கு நன்றி சகோதரரே!

  ReplyDelete
 18. //வல்லிசிம்ஹன் said...
  கோதையையும் அவள் யானையையும் காணத் தந்ததற்கு நன்றி ஷைல்ஸ்.

  உண்மைதான். கனவிலே கண்டு களித்து அவள் நடத்திய அறிவுக் கல்யாணம் எத்தனையோ கற்பனைகளுக்கு வித்திட்டது என் மனதில்.

  நம்பிக்கை பெருக,வாழ்க்கையில் ஆனந்தம் நிறைய இவள் ஒருத்தியே போதும்.

  அவளும் அவள் நாயகனும் என்றும் நம்மைக் காப்பார்கள்.

  7:59 AM
  //
  >>>>>>>>>>>>>>>>>>
  வல்லிமா வாங்கோ...நீங்க வந்தாலே கூடவே மகிழ்ச்சியும் வருகிறது...... நம்மைக்காப்பார்கள் ஆண்டாளும் அவள் நாயகனும் எனும் தெய்வீக வாக்குக்கு நன்றி.

  ReplyDelete
 19. //Gopi said...
  காலையில் வந்தவுடன் ஆண்டாள் சேவை...... நன்றி தோழி....>>>>>


  ஆண்டாளைக்கண்டு கண்குளிர்ந்தீர்களா?

  //

  முழு விளக்கம் அருமை..... மிக சமீபத்தில் இந்த பாடல் கேட்டேன்..... அன்னக்கிளி படத்தின் ஆரம்ப காட்சியில் வரும்......//

  அப்படியா?

  .! //

  வெகு உண்மை..... தாங்கள் கண்டதை, கேட்டதை, அறிந்ததை இப்போது மிக தெளிவாக எங்களுடன் பகிர்ந்து கொண்டீர்களே, அதுபோல்......///  தெளிவாகக்கூற முயன்றேன் அதில் வென்றேனா தெரியவில்லை!

  /வாழ்த்துக்கள் ஷைலஜா.../...
  >>>மிக்க நன்றி கோபி படித்து அழகாய் கருத்து சொன்னதற்கு
  8:54 AM


  //

  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  ReplyDelete
 20. நட்புடன் ஜமால் said...
  இம்பூட்டு மேட்டரு இருக்கா இந்த பாட்டுக்கு பின்னால்

  அறியத்தந்தமைக்கு நன்றி.  [ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.]]

  சரிதான் ...

  9:16 AM
  ///


  >>>ஆமா ஜமால்..கடல்ல ஒரு துளி இது...... கைமண்ணில் சிறு துகள் இது.....
  வந்து கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றி மிக

  ReplyDelete
 21. Eswari said...
  வல்லிசிம்ஹன் said...
  // அவள் யானையையும் காணத் தந்ததற்கு நன்றி ஷைல்ஸ்.

  உண்மைதான். கனவிலே கண்டு களித்து அவள் நடத்திய அறிவுக் கல்யாணம் எத்தனையோ கற்பனைகளுக்கு வித்திட்டது என் மனதில்.

  நம்பிக்கை பெருக,வாழ்க்கையில் ஆனந்தம் நிறைய இவள் ஒருத்தியே போதும்.

  அவளும் அவள் நாயகனும் என்றும் நம்மைக் காப்பார்கள்.//

  வழிமொழிகிறேன்

  3:35 PM
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

  வாங்க ஈஸ்வரி வல்லிமாவின் கருத்தை வழிமொழியும் உங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 22. Raghav said...
  ஆண்டாள் அழகு.. உங்கள் ஆய்வும் மிக அழகுக்கா.. அப்புடியே ஒரு பாட்டு எழுதி பாடியிருப்பீங்கன்னு நினைச்சேன்க்கா. :)

  4:26 PM

  <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<’’ராகவ்! ஆண்டாளின் பாடலைப்போட்டு கூடவே என்பாட்டா?:) சூரியன் முன்பு மின்மினியாடுவது சாத்தியமா?

  உன் பதிவில் உள்ள பாடலை பாடப்பாக்கறேன்!

  ReplyDelete
 23. //Raghav said...
  //நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்//

  கல்யாண குணங்கள்னா என்ன அக்கா !கொஞ்சம் விளக்குங்களேன்..

  4:28 PM
  //

  கல்யாணராமன்னா என்ன? போயி ஆன்மீக சுப்பர் ஸ்டார் கே ஆர் எஸ்சைக்கேளூ! அதான் இது! கல்யாணம்னாலே நிறைவு என சொல்லலாம். அனைத்திலும் பரிபூரணமானவன் இறைவன் அவனிடம் மட்டுமே அந்த மேன்மைகுணங்கள் இருக்கும் கல்யாண குணங்கள்

  ReplyDelete
 24. //துபாய் ராஜா said...
  நல்லதொரு பதிவு.

  ஆண்டாள் & ஆனைப்படம் அருமை.

  5:18 PM
  //


  ந்னறி துபாய்ராஜா
  படங்கள் இணையத்தில் சுட்டதே!

  ReplyDelete
 25. /kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //Raghav said...
  கல்யாண குணங்கள்னா என்ன அக்கா !கொஞ்சம் விளக்குங்களேன்..//

  வெவரமாத் தான் கேக்குறான்-க்கா! அதுவும் கல்யாணத்தைப் பத்திக் கேக்க வேண்டிய நேரத்தில் சரியாக் கேட்டுத் தெரிஞ்சிக்கறான் போல! வெளக்குங்க! வெளக்குங்க! :))

  5:48 PM
  >>>>>>> இதென்ன வெள்ளிப்பாத்திரமா பளிச்சுனு வெளக்க?:) ஏதோ தெரிஞ்சதை சொல்லிட்டேன் உங்க டர்ன் இப்போ சொல்லுங்க:)

  ReplyDelete
 26. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி)//

  எண் வழுவமைதியா? எங்கேயோ எப்பவோ படிச்ச ஞாபகம்! இப்போ அது "என்" வழுவமைதி ஆயிரிச்சி! :))>>>>

  குறும்புதான் ரொம்ப:0

  //////ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.//

  உண்மை! அவள் கூர்மையே அவளைச் சூழ வலம் செய்குது போல! :)
  /////////


  உண்மை! சுடர்மிகும் அறிவு அதான் பிரகாசிக்கிறது பாருங்க!
  5:52 PM

  ReplyDelete
 27. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson//

  ஆனால் என் தோழி மறைந்தும் வெளிப்படையாகவும் இரண்டுமேயாக நிற்கிறாள்! :)
  வாரணம் ஆயிரம் என்னும் போது மறைந்து
  வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் என்னும் போது நேரடியாக!

  5:54 PM
  >>>>>
  உங்க தோழியை மறைஞ்சாலும் கண்டுபிடிக்க உங்களைமாதிரி சிலர் இருக்காங்க:0

  ReplyDelete
 28. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  //வாரணம் ஆயிரம்//

  பொதுவாக, திருமண காலங்களில் மாப்பிள்ளையை மட்டும் தான் யானை மேல் ஏற்றி வருவார்கள்! அவருக்கு மட்டும் தான் மாப்பிள்ளை அழைப்பில் அந்தச் சிறப்பு!

  ஆனால் கண்ணனோ அடியார்க்கு நல்லான்!
  தன்-அவள் திருமணத்தைக் கோதை அவள் மன வெளியில் நடத்துகிறாளே, மற்ற அடியார்களும் பார்க்க வேணுமே என்று....

  அத்தனை அடியார்களையும், அவன் கைங்கர்ய பாராளையும் யானைகள் மேல் ஏற்றித் தான் மட்டும் நடந்து வருகிறானாம்!
  வாரணம் ஆயிரம் சூழ....
  நாரணன் நம்பி "நடக்கின்றான்"

  யாருக்கு வரும் இந்த அடியார் பரிவு? பக்த வத்சால்யம்?

  5:59 PM

  >>>>>>>>>>>>>>>>>..அதனால்தானே பக்தவத்சலன் எனப்பெயர் பெறுகிறான்?

  ReplyDelete
 29. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
  வாரணம் ஆயிரம் என்று பாசுரம் யானையில் துவங்கி,

  அங்கவனோடு சென்று அங்கு ஆனை மேல் மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் என்று யானையிலேயே முடிகிறது!

  இதுவும் வாரணம் ஆயிரப் பாசுரத்தின் சிறப்பு!
  முதலில் அடியார்கள் யானைகளில் வர
  முடிவில் அவனும் அவளும் யானை உலா வருகிறார்கள்!

  6:01 PM
  //


  >>>>>>>இப்போதான் இந்தக்கோணத்தில் நானும் பாக்றேன் கருத்துகளுக்கு நன்றி ரவி

  ReplyDelete
 30. //
  T.V.Radhakrishnan said...
  நன்றாக உள்ளது!! நன்றி !

  6:24 PM

  /////வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதாக்ருஷ்ணன்.

  ReplyDelete
 31. //இதென்ன வெள்ளிப்பாத்திரமா பளிச்சுனு வெளக்க?:) ஏதோ தெரிஞ்சதை சொல்லிட்டேன் உங்க டர்ன் இப்போ சொல்லுங்க:)//

  **********

  Super punch.........

  ReplyDelete
 32. அக்கா நான் உங்களை மறப்பேனா?? வந்து போய்க்கொண்டுதான் இருக்கின்றேன். நேரமின்மையால் பின்னூட்டமிடுவதில்லை.

  அப்புறம் நான் பாடின பாட்டைக் கேட்டீங்களா??

  ReplyDelete
 33. /// வெளியெங்கும் விரிகிறது, அவள்பார்வை.விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது.

  பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!////  நண்பர் கோபியின் வலைப் பதிவு வழி இங்கு வந்தேன். நல்லா இருக்கு. ரொம்ப ஆழமான கருத்துக்களா இருக்கு.

  ஆண்டாள் பற்றி நிறைய சிந்திக்க வைத்து இருக்கீறீர்கள்.

  இது வரை நான் நினைத்தது, அடைய முடியாத இலக்கை குறிக்கோளாய் கொண்டதனால், கனவு காண்பது அவள் இயல்பு.

  எத்தனையோ இலக்கிய விமர்சகர் அதை பேதமை என்று கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

  ஆனால் தங்கள் பார்வையின் படி குறுகிய மனித வட்டத்துக்கும் பரந்த இறை வட்டத்துக்கும் இடையே அவள் என்கிறீர்கள்.

  நம் மனித வாழ்வின் மிகப் பெரிய போராட்டமே காலம் கட்டுப்ப்டுத்தாத, இருப்பு கட்டுப் படுத்தாத உயர் நிலை அடைவதோ என தோன்றுகிறது.

  என்றாலும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதி, கொஞ்சம் பொதுப் படையாக உள்ளது. (நாஸ்டர் தாமஸ் மொழி போல், நம் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடி போல, தங்கள் வார்த்தைகள் என்னிடமிருந்து அர்த்தங்கள் திருடிக் கொள்கின்றன.


  போனால் போகட்டுமே இன்னும் இரண்டு பத்தி எழுதுங்கள். தெளிவாய் சொல்லுங்கள், எங்களுக்கு உதவும்.)

  ReplyDelete
 34. படுக்காளி said...'  வாருங்கள் படுக்காளி நல்வரவு!  ///நண்பர் கோபியின் வலைப் பதிவு வழி இங்கு வந்தேன். நல்லா இருக்கு. ரொம்ப ஆழமான கருத்துக்களா இருக்கு.

  ஆண்டாள் பற்றி நிறைய சிந்திக்க வைத்து இருக்கீறீர்கள். //


  நன்றி கோபிவலைமூலமாக இங்கே வந்தமைக்கும் கருத்துக்களை ஆழ்ந்து வாசித்தமைக்கும்

  //இது வரை நான் நினைத்தது, அடைய முடியாத இலக்கை குறிக்கோளாய் கொண்டதனால், கனவு காண்பது அவள் இயல்பு. //


  இல்லையே ஆண்டாள் அடையமுடியாதென அவநம்பிக்கை எங்கு கொண்டாள்?
  மற்றவர் இயல்பு அதுவாக இருக்கலாம் ஆனால் ஆண்டாள் கனவு கண்டதை நனவில் முடிக்கும் வலுவான திடமனம் கொண்டவள்

  //எத்தனையோ இலக்கிய விமர்சகர் அதை பேதமை என்று கூட குறிப்பிட்டு இருக்கிறார்கள். //

  கனவுகளை பேதமை என்லாம் தவறில்லை ஆண்டாளின் மன உறுதி அண்ணலை நோக்கி அவள்பாடிய பாட்டின் வரிகளைப்பார்த்தால் புரட்சிக்காரப்பெண்ணாகவே என் கண்ணுக்குத்தெரிகிறாள். அவள் கனவில் கண்டதை நனவாக்கமுடியுமென நினைத்தால் தான் கனவையே இப்படி விமர்சித்திருக்கிறாள்!

  //ஆனால் தங்கள் பார்வையின் படி குறுகிய மனித வட்டத்துக்கும் பரந்த இறை வட்டத்துக்கும் இடையே அவள் என்கிறீர்கள். //

  ஆமாம் அவள் மானுடப்பெண்ணாய் அவதாரம் செய்து விட்டாள் ஆனால் நினைவெல்லாம் இறைவனை அடைவதே அதனால் அவள் வட்டம் மனித எல்லைக்குள்குறுகினாலும் அவள் செல்லும் வட்டம் பெரிது அது மாலின் வட்டம்!

  //நம் மனித வாழ்வின் மிகப் பெரிய போராட்டமே காலம் கட்டுப்ப்டுத்தாத, இருப்பு கட்டுப் படுத்தாத உயர் நிலை அடைவதோ என தோன்றுகிறது. //

  பெரிதினும் பெரிது கேள் பாரதியின் வாக்கும் கூட! தவறில்லையே அது?

  //என்றாலும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதி, கொஞ்சம் பொதுப் படையாக உள்ளது. (நாஸ்டர் தாமஸ் மொழி போல், நம் பிம்பம் பிரதிபலிக்கும் கண்ணாடி போல, தங்கள் வார்த்தைகள் என்னிடமிருந்து அர்த்தங்கள் திருடிக் கொள்கின்றன. //

  பொதுப்படையாக எழுத வேண்டி இருப்பதின் காரணம் ஆழ்ந்த மற்றும் தத்துவார்த்தமான இலக்கியங்கள் அனைவருக்கும் போய்ச்சேருவதில்லை என்பதால் என்னதான் வாழ்க்கையைக்காட்டும் காலக்கண்ணாடி இலக்கியம் என்றாலும்!

  நன்றி என்னையும் மீண்டும் சிந்திக்கவைத்தமைக்க்கும் தங்களின் ஆழ்ந்த கருத்தினை இங்கு கூறியமைக்கும்.


  போனால் போகட்டுமே இன்னும் இரண்டு பத்தி எழுதுங்கள். தெளிவாய் சொல்லுங்கள், எங்களுக்கு உதவும்.)

  8:12 PM

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.