Social Icons

Pages

Tuesday, September 15, 2009

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக.







இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!

மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!

காவிரி வெள்ளமென களீமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!

16 comments:

  1. வாங்க ஷைலஜா...எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து... நலமா?

    அண்ணா கவிதை வழக்கம் போல பட்டைய கெளப்புதுங்கோ...

    ஒரு நல்ல கவிதையோட உங்களையும் சந்தித்ததில் எனக்கு சந்தோஷம்...

    வாழ்த்துக்கள் ஷைலஜா...

    ReplyDelete
  2. ஆஹா.. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாளாச்சு.

    அண்ணா பற்றிய பதிவில் அண்ணாவின் தமிழ் போலவே அற்புதமான வார்த்தை கோர்வைகள். கலக்குங்க.

    'ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார்
    தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வருமையை தந்தார்'

    தமிழ் மட்டும் அல்லாது ஆங்கிலத்தை அவனுக்கே சொல்லி அதிசயப் படுத்தியவர்.
    a sentence can not end with because because because is a conjunction.

    இதெல்லாம் முடியுமா என்று ஹிந்திக்கு சவால் விட்டு பண்டிட்களை வாய் மூடி விட்டவர். கமல், கமலா எனும் இரண்டையும் ஒரே விதமாய் எழுதும் ராஷ்டிர பாஷையை கேலி செய்தவர்

    திராவிடம் எனும் வித்தை விதைத்து, இன்று வரை வாழ வைத்து கொண்டு இருப்பவர்.

    அவரது மேன்மையை அறிந்து நாம் தந்தது அறிஞர் எனும் பட்டம்.

    ஒரு வேண்டுகோள், இன்றைய சமுதாயம் அண்ணாவை அவரது தமிழை அறியாது. அவரது நல்ல படைப்புக்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.

    படுக்காளி

    ReplyDelete
  3. அண்ணா பற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. R.Gopi said...
    வாங்க ஷைலஜா...எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து... நலமா?//


    >>நலம் கோபி வெளிநாட்டில் இருப்பதால் ஊர்சுற்றலில் அதிகம் இங்கு வர இயலவில்லை

    ///அண்ணா கவிதை வழக்கம் போல பட்டைய கெளப்புதுங்கோ...

    ஒரு நல்ல கவிதையோட உங்களையும் சந்தித்ததில் எனக்கு சந்தோஷம்...

    வாழ்த்துக்கள் ஷைலஜா...//

    நன்றி கோபி கருத்துக்கும் வருகைக்கும்.,

    8:06 AM

    ReplyDelete
  5. ppage said...

    ஆஹா.. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாளாச்சு.

    அண்ணா பற்றிய பதிவில் அண்ணாவின் தமிழ் போலவே அற்புதமான வார்த்தை கோர்வைகள். கலக்குங்க.///



    நன்றி சகோதரரே

    '///ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார்
    தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வருமையை தந்தார்'

    தமிழ் மட்டும் அல்லாது ஆங்கிலத்தை அவனுக்கே சொல்லி அதிசயப் படுத்தியவர்.
    a sentence can not end with because because because is a conjunction.

    இதெல்லாம் முடியுமா என்று ஹிந்திக்கு சவால் விட்டு பண்டிட்களை வாய் மூடி விட்டவர். கமல், கமலா எனும் இரண்டையும் ஒரே விதமாய் எழுதும் ராஷ்டிர பாஷையை கேலி செய்தவர்///

    புதிய தகவல்கள் ம்ம் கலக்கறீங்க.

    //திராவிடம் எனும் வித்தை விதைத்து, இன்று வரை வாழ வைத்து கொண்டு இருப்பவர்.

    அவரது மேன்மையை அறிந்து நாம் தந்தது அறிஞர் எனும் பட்டம்.

    ஒரு வேண்டுகோள், இன்றைய சமுதாயம் அண்ணாவை அவரது தமிழை அறியாது. அவரது நல்ல படைப்புக்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன். ///


    இயன்றவரை சொல்லமுயலுகிறேன் நன்றிபடுக்காளி கருத்துக்கு

    படுக்காளி

    ReplyDelete
  6. // " உழவன் " " Uzhavan " said...
    அண்ணா பற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்!

    5:20 PM
    ////மிக்க நன்றி உழவன்

    ReplyDelete
  7. எல்லோர்க்கும் அண்ணன் அவன் ..இந்நாட்டு செல்வ மகன்!

    ReplyDelete
  8. ஜோ/Joe said...
    எல்லோர்க்கும் அண்ணன் அவன் ..இந்நாட்டு செல்வ மகன்!

    8:31 PM
    ///

    ஆமாம் தமிழ்நாட்டுச்செல்வம் பேரறிஞர் அண்ணா!
    கருத்துக்கு நன்றி ஜோ

    ReplyDelete
  9. யக்கா
    கவுஜைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்
    ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்
    என்றும அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  10. //a sentence can not end with because because because is a conjunction. //

    யப்பா....

    மீ த எஸ்கேப்பு... ஆனா, எஸ்கேப் ஆகறதுக்கு முன்னாடி, ஒண்ணு சொல்லிட்டு போறேன்...

    யக்கக்க ஜக்க ஜகக்க‌
    மக்க‌க்க டக்கா நண்டு...

    இதுக்கு என்ன அர்த்தம்னு யாருக்காவது தெரியுமா?/

    ReplyDelete
  11. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. நல்ல பதிப்பு ..தொடர்க.. :)

    ReplyDelete
  13. கவிதைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  14. அருமை அருமை அக்கா!!!!

    ReplyDelete
  15. Anonymous7:48 PM

    காஞ்சித்தலைவரை பல
    காவியம் படைத்தவரை
    கடமை கண்ணியம்
    கட்டுப்பாட்டு செப்பியவரை

    கட்டுரை நாயகரை
    கவிநடை பேச்சாளரை
    காலம் போற்றும கதாசிரியரை
    கடவுள்தந்த தமிழரை
    கையெடுத்து கும்பிட்டு
    கொண்டாடும் குடிமகனை
    கண்ணிமைக்கும் நேரத்தில்
    கதிகலங்க பதில் தந்தவரை
    காட்டாறு பாய்வதுபோல

    ReplyDelete
  16. காட்டாறு பாய்வது போல
    கருத்துக்களோ ஒருகனத்திலே
    காவியங்களோ மறுதினத்தில்
    கவிதைகளோ கண்ணிமைக்கும் பொ ழுதில்
    உரைகளை உரைநடைகளை
    உலகினுக்கு தந்த பேரறிஞர்
    அண்ணா அவர்களை புகழ்ந்து
    பா ட எல்லோருக்கும் கடமையுண்டுகடமையுண்டு.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.