Social Icons

Pages

Monday, October 19, 2009

பிரியமழை!

கொட்டு மழைமிகுதியில்
கரையுடைத்துக்கொள்ளும்
காட்டாற்றினாய் மாறாமல்
ஆழ்ந்து சூழ்ந்து
தனக்குள்ளே
பெருகிப்படர்ந்து
விளிம்புவரை
ததும்பிநிற்கும்
கேணி நீராய்
என்னுள்பொங்குகிறது
உன்மீதான
என் பிரியங்கள்
உன்னைத்திணறவைக்கும்
உத்தேசமின்றி
அவைகள்
என்னுள்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளது

அன்பென்பது
ஆதிக்கம் செலுத்த அல்ல
என்பதை
புரிந்துகொண்டிருப்பதால்
மதிக்கின்றேன்,
ஆரவாரமில்லாத
உன் பிரியமழையையும்
அமைதியை அடக்கிய
உன் புன்னகையையும்.

8 comments:

  1. //கொட்டு மழைமிகுதியில்
    கரையுடைத்துக்கொள்ளும்
    காட்டாற்றினாய் மாறாமல்
    ஆழ்ந்து சூழ்ந்து
    தனக்குள்ளே
    பெருகிப்படர்ந்து
    விளிம்புவரை
    ததும்பிநிற்கும்
    கேணி நீராய்//

    ஆஹா... இது போன்ற‌தொரு பிரிய‌ம‌ழையை பார்த்து எவ்ளோ நாளாச்சு... இதுக்கு தான் ஷைல‌ஜா மேட‌ம் வேணுங்க‌ற‌து... பாருங்க‌... வந்த‌ உட‌னே என்ன‌ பிரிய‌ ம‌ழை...

    //என்னுள்பொங்குகிறது
    உன்மீதான
    என் பிரியங்கள்
    உன்னைத்திணறவைக்கும்
    உத்தேசமின்றி
    அவைகள்
    என்னுள்
    பத்திரப்படுத்தப்பட்டுள்ளது//

    வாவ்... இந்த மாதிரி அன்புக்கு, அங்கு அடைப‌ட்ட‌வ‌ர் எவ்ளோ பாக்கிய‌ம் செஞ்சு இருக்க‌ணும்... அதானே... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

    //அன்பென்பது
    ஆதிக்கம் செலுத்த அல்ல
    என்பதை
    புரிந்துகொண்டிருப்பதால்
    மதிக்கின்றேன்,
    ஆரவாரமில்லாத
    உன் பிரியமழையையும்
    அமைதியை அடக்கிய
    உன் புன்னகையையும். //

    வாவ்... ஆதிக்க‌ம் செலுத்தினால் அது அதிகார‌ம்... அன்பே சிறந்த‌ ஆயுத‌ம்... ஆதிக்க‌ம் நெடுநாள் நிலைக்காது... அன்பு எந்நாளும் நிலைத்திருக்கும்...

    பிரியசகி... என் பிரியசகி... வருவேன் வாசல் தேடி.. வருத்தம் ஏனடி... இந்த பாடல் சட்டென்று ஞாபகம் வந்தது....

    ஷைலஜா மேடம்...வாழ்த்துக்கள்... இவ்ளோ நாள் வெயிட் பண்ணதுக்கு ஒரு நல்ல கவிதை தந்தீங்களே அதுக்கு...

    (என் குறிப்பு : அன்பு சிறையில் அடைபட்ட யாரும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வருவதில்லை...)

    ReplyDelete
  2. பிரியம் மழையாக வெகு அழகு.

    //உன்னைத்திணறவைக்கும்
    உத்தேசமின்றி
    அவைகள்
    என்னுள்
    பத்திரப்படுத்தப்பட்டுள்ளது//

    ரசித்தேன் ஷைலஜா!

    ReplyDelete
  3. R.Gopi said...
    ///ஆஹா... இது போன்ற‌தொரு பிரிய‌ம‌ழையை பார்த்து எவ்ளோ நாளாச்சு... இதுக்கு தான் ஷைல‌ஜா மேட‌ம் வேணுங்க‌ற‌து... பாருங்க‌... வந்த‌ உட‌னே என்ன‌ பிரிய‌ ம‌ழை...

    வாவ்... இந்த மாதிரி அன்புக்கு, அங்கு அடைப‌ட்ட‌வ‌ர் எவ்ளோ பாக்கிய‌ம் செஞ்சு இருக்க‌ணும்... அதானே... அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

    வாவ்... ஆதிக்க‌ம் செலுத்தினால் அது அதிகார‌ம்... அன்பே சிறந்த‌ ஆயுத‌ம்... ஆதிக்க‌ம் நெடுநாள் நிலைக்காது... அன்பு எந்நாளும் நிலைத்திருக்கும்...

    பிரியசகி... என் பிரியசகி... வருவேன் வாசல் தேடி.. வருத்தம் ஏனடி... இந்த பாடல் சட்டென்று ஞாபகம் வந்தது....

    ஷைலஜா மேடம்...வாழ்த்துக்கள்... இவ்ளோ நாள் வெயிட் பண்ணதுக்கு ஒரு நல்ல கவிதை தந்தீங்களே அதுக்கு...

    (என் குறிப்பு : அன்பு சிறையில் அடைபட்ட யாரும் அவ்வளவு சீக்கிரம் வெளியே வருவதில்லை...)

    4:12 PM///

    >>> மிக்க நன்றிகோபி
    வார்த்தைக்குவார்த்தை படித்துப்பாராட்டுவதற்கு. உண்மைதான் அன்புச்சிறைல அடைபட்டவர்கள் சீக்கிரமாய்வெளியே வர முடியாதுதான்!

    ReplyDelete
  4. //ராமலக்ஷ்மி said...
    பிரியம் மழையாக வெகு அழகு.

    //உன்னைத்திணறவைக்கும்
    உத்தேசமின்றி
    அவைகள்
    என்னுள்
    பத்திரப்படுத்தப்பட்டுள்ளது//

    ரசித்தேன் ஷைலஜா!

    7:48 PM
    ..

    நன்றி ராம்லஷ்மி

    ReplyDelete
  5. // T.V.Radhakrishnan said...
    நல்ல கவிதை

    11:55 PM

    ///
    நன்றி ராதாக்ருஷ்ணன்

    ReplyDelete
  6. சொல்ல மறந்து விட்டேனே!

    http://naachiyaar.blogspot.com/2009/10/blog-post_04.html

    இங்கே பாருங்க ஷைலஜா. திருவரங்கப் பாவை உங்களுக்கு வல்லிம்மா வைத்திருக்கும் அழைப்பு. அதை நீங்கள் ஏற்றுச் செய்யும் போது காதல் என்ற தலைப்பின் கீழ் இக்கவிதையை அப்படியே தந்திடுங்கள், மீள்கவிதையாக ஆனாலும் கூட.

    ReplyDelete
  7. //ராமலக்ஷ்மி said...
    சொல்ல மறந்து விட்டேனே!

    http://naachiyaar.blogspot.com/2009/10/blog-post_04.html

    இங்கே பாருங்க ஷைலஜா. திருவரங்கப் பாவை உங்களுக்கு வல்லிம்மா வைத்திருக்கும் அழைப்பு. அதை நீங்கள் ஏற்றுச் செய்யும் போது காதல் என்ற தலைப்பின் கீழ் இக்கவிதையை அப்படியே தந்திடுங்கள், மீள்கவிதையாக ஆனாலும் கூட.

    12:28 PM
    .///

    தகவலுக்கு நன்றி ராமலஷ்மி.....வல்லிமா பதிவினை நீங்க இங்க சொன்னதும் போய்ப்பார்த்தேன் அசத்தி இருக்காங்க பாக்றேன் நானும் தெரிந்தவரை எழுதறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.