பாலீஷில் பளபளத்த ஷூவிற்குள் தன் பாதங்களை நுழைத்துக்கொண்டிருந்த
நந்தகுமார் ,தங்கையின் கிண்டலான பேச்சை ரசித்தபடி,”தாங்க்ஸ் நித்யா “ என்றான்.
முதல் நாள் அலுவலகம் போகிற டென்ஷனில் அவனுடைய
முகம் அந்த ஃபான்காற்றிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.
வாசலுக்குசென்று பைக்கினைஆரோகணித்து அமரும்போது உள்ளிருந்து அவன் அம்மா ஓடிவந்தாள்.
வரும்போதே கையில் இருந்த சின்னகாகிதப்பொட்டலத்தைபிரித்தபடி அவள்வரவும் அதைப்பார்த்த நந்தகுமார் சட்டென முகம் மாறினான் .
பிறகு எரிச்சலாக,” அம்மா உஙகளுக்குத்தான் தெரியும் இல்ல, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு? என்றான் .
“இல்லடா நந்து. முத நாள் ஆபீசுக்குப்போறே! அங்க நல்லபேரு வாங்கி நீடிச்சி இருக்கணுமே அதுக்கு தெய்வம் துணை இருக்கணுமே அதுக்குத்தான் நெத்தில அண்ணாமலையான் விபூதியை வைக்கலாமேன்னு ...” தயக்கமாய் இழுத்தபடியே அவள்பேசுவதை கேட்கவும் பிடிக்காமல் நந்தகுமார் பைக்கைஉசுப்பி சாலைக்கு
விரைந்தான்.
’’நல்லபையன் தான், ஒருகெட்டபழக்கம் கிடையாது,எல்லார்க்கும் உதவற நல்ல உள்ளம்.
ஆனா கடவுள் நம்பிக்கைமட்டும் இல்லாம இப்படியே வளர்ந்துட்டுவரானே .... எனக்குக்கவலையா இருக்கே..’ புலம்பியபடியே வீட்டிற்குள் திரும்பிவந்தாள் நந்தகுமாரின் அம்மா.
நந்தகுமார் பைக்கை அந்த நெரிசலான சாலையில் செலுத்திக்கொண்டு வந்தபோது சாலைநடுவே பதட்டமுடன் தட்டுத்தடுமாறி நடந்துவந்துகொண்டிருந்த அந்த வயதான கிழவியைக்கண்டான்.
பார்வையை இழந்த நிலையில் ஒருகையில் அலுமினியதட்டை ஏந்திக்கொண்டு
இன்னொரு கைவிரல்களால்காற்றைத் தடவியபடி சாலையைக் கடக்கமுயன்றுகொண்டிருந்தாள். சுற்றி நடக்கும் மக்கள் யாரும் கிழவியைக்கண்டுகொண்டதாகத்தெரியவில்லை.
எந்தநேரமும் ஏதாவது ஒரு வாகனம் அவள்மீது ஏறிவிடும் அபாயசூழ்நிலையை நந்தகுமார் தூரத்திலிருந்தே பார்த்து உணர்ந்தான்.
சட்டென பைக்கை சாலை ஓரமாய் நிறுத்திவிட்டு அவளருகில் சென்றான் .
அவள்கையைபிடித்து ,”பாட்டியம்மா! ரோடைக்ராஸ் செய்ய நான் உதவறேன் என் கையைப்பிடிச்சிட்டு வாங்க!” என்றுதன் கரத்தை அவள் கரத்தோடு இணைத்துக்கொண்டான்.
கிழவியின் சுருக்கம் விழுந்த முகம் விரிந்துமலர்ந்தது !பார்வையில்லாத விழிகளில் நம்பிக்கை ஒளிபிரகாசமாய் தெரிய அவன்கைவிரல்களை இறுகப்பிடித்துக்கொண்டாள்.
சாலையின் எதிர்ப்புறத்திற்கு இருவரும் வந்தனர்.
“இங்க அவ்வளோ நெரிசல் இல்லை ..கவனமா நடங்க பாட்டிம்மா...நான் வரேன் ” என்று சொல்லியபடியே கையைவிடுவித்துக்கொண்டு நகர இருந்தவனிடம் அந்தக்கிழவி நெகிழ்ந்த குரலில் சொன்னாள்.
”தம்பீ! நீ நல்லா இருக்கணும்! சமயத்துல கடவுள் மாதிரிவந்து என்னைக் காப்பாத்தினியேப்பா !”
Tweet | ||||
ஷைலஜா மேடம்...
ReplyDeleteஅதிரடி ஆட்டம் ஆரம்பம் ஆயிடுத்து போல இருக்கு...
நச்னு ஒரு கதை... நிஜமாவே "நச்"னு தான் இருக்கு... அதுவும் அந்த முடிவு, என்னை மிகவும் நெகிழ வைத்தது...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
போட்டியை பற்றிய விவரங்கள் இருப்பின் தரலாமே ஷைலஜா மேடம்...
//
ReplyDeleteR.Gopi said...
ஷைலஜா மேடம்...
அதிரடி ஆட்டம் ஆரம்பம் ஆயிடுத்து போல இருக்கு...
நச்னு ஒரு கதை... நிஜமாவே "நச்"னு தான் இருக்கு... அதுவும் அந்த முடிவு, என்னை மிகவும் நெகிழ வைத்தது...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
போட்டியை பற்றிய விவரங்கள் இருப்பின் தரலாமே ஷைலஜா மேடம்...
8:46 AM
///
http://surveysan.blogspot.com/2009/09/500-2009.html
இங்க இருக்கு கோபி
ரொம்ப நன்றி...சூடாபடிச்சி கருத்து சொன்னதுக்கு!
ஆஹா அருமை.
ReplyDelete//ILA(@)இளா said...
ReplyDeleteஆஹா அருமை.
8:50 AM
///
நன்றி இளா..(நலமா?)
சூப்பர், ஷைலூ.
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
அருமை :)
ReplyDeleteசிம்பிளா அழகான கதை.
ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?
வெற்றி பெற வாழ்த்துக்கள் ஷைலஜா
ReplyDelete//
ReplyDeleteஇங்க இருக்கு கோபி
ரொம்ப நன்றி...சூடாபடிச்சி கருத்து சொன்னதுக்கு!//
மிக்க நன்றி ஷைலஜா மேடம்...
உங்க கிட்ட இருந்து லிங்க் வாங்கி, கோதாவில் நானும் குதிக்கப்போறேன்... என்னை வாழ்த்துங்கள்...
இருப்பினும், இந்த போட்டியில் உங்களுக்கு "பரிசு" கிடைக்க வாழ்த்துகிறேன்...
நல்லாயிருக்கு அக்கா ;) போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஅழகான கதை ஷைலஜா! முடிவு வெகு அருமை!
ReplyDelete@ சர்வேசன்,
உங்களுடைய ‘நச்’ கண்டிஷன்தான் ஹி.. எல்லோருக்கும் ப்ராப்ளமாய் இருக்கிறது. ஆனால் அதுதானே சவாலும்.
//ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?//
கூடக் குறைய இருந்தாலும் பார்த்து செய்யுங்க. நானும் முடிந்தால் முயற்சிக்கிறேன்:)!
அன்புள்ள அக்கா,
ReplyDeleteஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் உங்களது அதகளம் ஆரம்பித்துவிட்டதே :)
முடிவு நச்!
பார்வையாளர்கள் வரிசையிலிருந்து
நிலாரசிகன்.
அழகான கதை
ReplyDelete// துளசி கோபால் said...
ReplyDeleteசூப்பர், ஷைலூ.
வெற்றிபெற வாழ்த்து(க்)கள்.
9:21 AM
//
துள்சிமேடத்தின் அன்பான வாழ்த்துக்கு ரொம்ப நன்றி
//SurveySan said...
ReplyDeleteஅருமை :)
சிம்பிளா அழகான கதை.
ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?
9:43 AM
///
அப்டியா சர்வேஸ் நச்சிட்றேன் இன்னொரு கதையை எழுதி:)
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள் ஷைலஜா
9:50 AM
..///நன்றி சின்னம்மிணி நீங்க எழுதியாச்சா?
//Gopi said...
ReplyDelete//
இங்க இருக்கு கோபி
ரொம்ப நன்றி...சூடாபடிச்சி கருத்து சொன்னதுக்கு!//
மிக்க நன்றி ஷைலஜா மேடம்...
உங்க கிட்ட இருந்து லிங்க் வாங்கி, கோதாவில் நானும் குதிக்கப்போறேன்... என்னை வாழ்த்துங்கள்...
இருப்பினும், இந்த போட்டியில் உங்களுக்கு "பரிசு" கிடைக்க வாழ்த்துகிறேன்...
10:17 AM
////
<<<>>உங்க பதிவில் வாழ்த்திட்டேன் ...பரிசு கிடைக்கறதைவிட இப்படி எழுத ஒரு உத்வேகம் வர்து பாருங்க அதுதான் நச்சுன்னு இருக்கு!
//கோபிநாத் said...
ReplyDeleteநல்லாயிருக்கு அக்கா ;) போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)
11:04 AM
///
மிக்க நன்றி கோபிநாத்
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅழகான கதை ஷைலஜா! முடிவு வெகு அருமை!
@ சர்வேசன்,
உங்களுடைய ‘நச்’ கண்டிஷன்தான் ஹி.. எல்லோருக்கும் ப்ராப்ளமாய் இருக்கிறது. ஆனால் அதுதானே சவாலும்.
//ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?//
கூடக் குறைய இருந்தாலும் பார்த்து செய்யுங்க. நானும் முடிந்தால் முயற்சிக்கிறேன்:)!
12:24 PM
/////
அதானேராமல்ஷ்மி ரொம்ப நச்சறார் இந்த சர்வேஸ் ம்ம்ம் விட்றதா இல்ல இன்னொரு கதை எழுதி அவரை நச்சிடணும்:) நீங்களும் எழுதுங்க!
//நிலாரசிகன் said...
ReplyDeleteஅன்புள்ள அக்கா,
அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் உங்களது அதகளம் ஆரம்பித்துவிட்டதே :)
முடிவு நச்!
பார்வையாளர்கள் வரிசையிலிருந்து
நிலாரசிகன்.
5:41 PM
/////
நிலாவின் உலா முன்பு இதெல்லாம் என்ன தம்பி?! ஆனாலும் வாழ்த்துக்கு நன்றி உங்க கதை எங்க நிலா?
//T.V.Radhakrishnan said...
ReplyDeleteஅழகான கதை
///நன்றி ராதாக்ருஷ்ணன்
super.
ReplyDeleteநல்லாயிருக்குங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete//SurveySan said...
ReplyDeleteஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?//
ரிப்பீட்டே! :)
அக்கா அமெரிக்காவை விட்டு கிளம்பிப் போனாலும் போனாங்க! பதிவாப் போட்டுத் தாக்குறாங்க!
oops...
ReplyDeleteமுந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) விட்டுப் போச்சி! :))
//சதங்கா (Sathanga) said...
ReplyDeleteநல்லாயிருக்குங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
4:37 AM
//
நன்றி சதங்கா!
..///kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//SurveySan said...
ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?//
ரிப்பீட்டே! :)
அக்கா அமெரிக்காவை விட்டு கிளம்பிப் போனாலும் போனாங்க! பதிவாப் போட்டுத் தாக்குறாங்க!
5:54
///
வாங்க தம்பிவாங்க! அவர்தான் நச்சு நச்சுங்கிறார்னா நீங்களுமா?:) சரிசரி இன்னொருகதைல முயற்சிபண்றேன்பா);
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteoops...
முந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) விட்டுப் போச்சி! :))
5:55 AM
///
விட்டதை அப்போதே விடாமல் புரிந்து சிரித்தேலோ ரெம்பவாய்னு பாடிட்டேனே:)
//C said...
ReplyDeletesuper.
12:38
//
நன்றி C for சந்துரு!
என் கதை இங்கே இருக்குக்கா
ReplyDeletehttp://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_20.html
அருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDeleteஇறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம்,
நச்சுதான். கலக்குங்க.
நேரம் இருந்தா நான் ஒரு (பி) நச் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
//ராம்குமார் - அமுதன் said...
ReplyDeleteஅருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
4:16 PM
//நன்றி ராம்குமார்
//படுக்காளி said...
ReplyDeleteநல்லா இருக்குங்க.
இறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம்,
நச்சுதான். கலக்குங்க.
நேரம் இருந்தா நான் ஒரு (பி) நச் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
7:39 PM
.//
இதோ வந்துட்டே இருக்கேன் படுக்காளி நன்றி கருத்துக்கும் வருகைக்கும்
நல்ல கதை. தெரிந்த முடிவு. நச் மிஸ்ஸிங்.Sorry I supp I am gonna be a strong critic for u. இன்னொண்ணு எழுதுங்க ஷை.
ReplyDeletebtw, இதை விட, எனக்கு அடுத்த கதை நெஞ்சுபொறுக்குதிலையே ல லாஜிக் இல்லைன்னாலும் "நச்" மாஜிக் இருக்குன்னு ஒரு ஃபீலிங்!
நெகிழ்வான கதை, ஷைலஜா!
ReplyDeleteஆனா செல்லமான நச்!
// Shakthiprabha said...
ReplyDeleteநல்ல கதை. தெரிந்த முடிவு. நச் மிஸ்ஸிங்.Sorry I supp I am gonna be a strong critic for u. >>>>>
அதானே வேணும்! i know u r a good critic shakthi! i enjoy yr comments!
///இன்னொண்ணு எழுதுங்க ஷை.>>>
இன்னொண்னா எழுதிட்டேனே:)
’///btw, இதை விட, எனக்கு அடுத்த கதை நெஞ்சுபொறுக்குதிலையே ல லாஜிக் இல்லைன்னாலும் "நச்" மாஜிக் இருக்குன்னு ஒரு ஃபீலிங்!//
9:48 AM
./////
அப்படியா ஷக்தி?நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் நன்றிமா கருத்துக்கு
//நானானி said...
ReplyDeleteநெகிழ்வான கதை, ஷைலஜா!
ஆனா செல்லமான நச்!
10:18 AM
//
நானானி வாங்க.....ரொம்ப நன்றி கருத்துக்கு ஆமா செல்ல நச் தான் கொடுக்கமுடிஞ்சது இந்தக்கதைல:0
ஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச்! -- கே.பி.ஜனா
ReplyDelete// K.B.JANARTHANAN said...
ReplyDeleteஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச்! -- கே.பி.ஜனா
5:22 PM
//
நன்றி கேபி ஜனார்த்தன். குமுதம் விகடன் தேவில கதைகள் எழுதும் எழுத்தாளர் இங்கவந்து படிச்சி பாராட்டறார்... அதுக்கு ஸ்பெஷல் நன்றிஜனா ஸார்!
நல்ல கதை...நல்ல முடிவு..
ReplyDeleteஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்..ஆனா இந்த கதையை பாஸிட்டிவா வேற எப்படி நச்னு முடிக்கிறதுன்றதும் தெரியல..நெகட்டிவ் முடிவுன்னா சில விஷயங்களை ட்ரை பண்ணலாம்.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
//Swami said...
ReplyDeleteநல்ல கதை...நல்ல முடிவு..
ஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்..ஆனா இந்த கதையை பாஸிட்டிவா வேற எப்படி நச்னு முடிக்கிறதுன்றதும் தெரியல..நெகட்டிவ் முடிவுன்னா சில விஷயங்களை ட்ரை பண்ணலாம்.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
8:34 PM
///
வாஙக் சுவாமி..சுவாசிகா என்பது யாரோட பேரு? நல்லாருக்கு’
கதையை பாசிடிவா முடிக்கறமாத்ரிதான் யோசிசேன் அதனால அப்படி வந்தது அதனால நச் மிஸ்ஸிங்கா இருக்கலாம்..என்னவோ போங்க குழப்பறேன்னு நினைக்கிறேன்:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான கதைங்க.
ReplyDelete-வித்யா
ரொம்ப லேட்டா சொல்றேன்.
ReplyDeleteகதை ரொம்ப நல்லா இருக்கு. கடவுளுக்கு ஆபத்சகாயன் என்று பெயர் இருக்கு.
அதாவது கஷ்டப் படும் நேரத்தில் வந்து கை கொடுப்பவன் என்று பொருள்.
சமயத்தில் கை கொடுப்பவன் எவரும் கடவுள்தான் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்!
Vidhoosh said...
ReplyDelete:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான கதைங்க.
-வித்யா
5:29 PM
பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ரொம்ப லேட்டா சொல்றேன்.
கதை ரொம்ப நல்லா இருக்கு. கடவுளுக்கு ஆபத்சகாயன் என்று பெயர் இருக்கு.
அதாவது கஷ்டப் படும் நேரத்தில் வந்து கை கொடுப்பவன் என்று பொருள்.
சமயத்தில் கை கொடுப்பவன் எவரும் கடவுள்தான் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்!
9:31 AM
//////
ரொம்ப நன்றி வித்யாக்கும் பெயர்சொல்லவிருப்பமில்லை அவர்களுக்கும்.....
தெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்தியது. எளிய நடை. உங்களுக்கு சொல்லியா தரனும்?
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
*******
கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/
நல்ல கதை :-)
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துக்கள்
Mohan Kumar said...
ReplyDeleteதெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்தியது. எளிய நடை. உங்களுக்கு சொல்லியா தரனும்?
வெற்றி பெற வாழ்த்துக்கள்
*******
கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/
3:46 PM//
நன்றிமோகன்குமார் உங்க் கதையையும் படிச்சி அங்க பின்னூட்டம் இட்டுவிட்டேன்
// அடலேறு said...
நல்ல கதை :-)
வெற்றி பெற வாழ்த்துக்கள்//
நன்றி அடலேறு!(வித்தியாசமான பெயர்!)
6:26 PM