”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர்.
ஒவ்வொருமனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது
வீட்டை ஒவ்வொருக்கணமும் நேசிக்கும் மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நேசிக்கும் ரசனைகொண்ட மாந்தர்களாக இருக்கின்றனர்.
ஒருவன் உலகளாவ ஓங்கி உயர்ந்து நின்றுதன் புகழ்க்கிளைகளை பரப்பினாலும் அவன் கால்கள் வேரூன்றி நிற்பது அவன வீட்டில்தான்.
உறவுப்பிரியங்களை அடையாளம் காட்டும் வீடு
இளமை முதல்முதுமைவரை நமது அந்தரங்கம் அனைத்தையும் கண்டுகொண்டிருப்பதுவீடு. நமக்கான எல்லாவற்றையும் சுமக்கும்வீடு வெறும் சுவர்களால் கட்டப்படது அல்ல , அங்கு அன்பிற்குரியவர்களின் சுவாசம் நிறைந்திருக்கிறது ! அது இளைப்பாற அமரும் மர நிழல்! விருப்பம் போல சிற்குவிரித்துப்பறக்க அகாயம் ! இயலாமையின் தோல்வி சறுக்கல்களில் கீழேவிழும்போதெல்லாம் நம்மை ஏந்திக்கொள்ளும் அன்புக்கரங்களைக் கொண்டது வீடென்பது.
வெளி உலகில் எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும் வெற்றிவாகைகளை சூடிக்கொண்டாலும் உலாசென்ற தேர் நிலைக்கு வருவது போல முடிவில் மனிதன் விட்டிற்கே திரும்புகின்றான்.
மகிழ்ச்சியுடனோ கோபத்துடனோ விருப்பமுடனோ வெறுப்புடனோ எப்படியாயினும் திரும்பும் நம்மை ஏற்றுக்கொள்ளும் வீடு கடவுளின் கருணைபோன்றது.
’என்வீடுமிகச் சிறியவீடு ஆனாலும்
வீடுதிரும்ப விரும்புகிறேன்
ஒவ்வொருவீடும்
நிரந்தரச்சூரியனை
ஜன்னல்வழியே அழைக்கிறது
படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
பின்கதவைத்
திறந்துபார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை’
என்கிறார்
தேவதச்சன் தன்கவிதை ஒன்றில்.
இல்லறம்துறந்து கானகம் செல்லும் துறவிகளுக்கும் ஆகாயமே கூரையாய் சுவர்களில்லா வீடாக இருந்திருக்கவேண்டும்.
வாழ்க்கை எந்த ஒருஇடத்திலும் நின்றுவிடப்போவதில்லை அது ஒரு பிரும்மாணட் ஊர்வலம் ஊர்வலத்தின் உயிர்நாடியாய் வீடுகளும் மனிதர்களும்.
வீடுகளில் நாம் தங்குகிறோமோ இலையோ சிலவீடுகள் நம் மனதில் தங்கிவிடுகின்றன
.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைப் பொருத்திக்கொண்டவர்களுக்கு சிக்கல்கள் இல்லை. . ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்று வருந்தும் அகதிகளாய் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, சுவர்கள், வாசல், முற்றம் தோட்டம், பூச்செடி, கிணறு, பூனைக்குட்டி முதலியன கனவாய்ப்பழங்கதையாய் போய் தவிக்கும் அவர்களின் வாழ்வு மீள்வது என்று என்ற கேள்வி நமக்கு வதைத்துக்கொண்டே இருக்கிறது
உணர்ந்திருக்கிறீர்களா நீண்டநாள் கழித்து உங்கள் வீட்டுக்குச்செல்லும் போது வீதிமுனையிலேயே கால்களோடுமனமும் வேகமாய் நகர்வதை? பலநேரங்களில் வெளிதேசங்களிலிருந்து வீடுவந்து திரும்பும் போது வராமலேயே இருந்திருக்கலாம் என்று சிலருக்குத்தோன்றிவிடுவதுண்டு. வந்து மகிழ்ந்து களித்த சில நாட்களின் நினைவுநெடியின் தாக்கம் கொடுமையானது.
கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்
என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்
வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி
இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை’
எனும் ஹரன் ப்ரசன்னாவின் கவிதையும்
,
மரங்களும் சாலைகளும்
முடிந்து போன ஒரு
புள்ளியில்
இருந்ததாக ஞாபகம்
எனக்கொரு வீடு!
எனது செளந்தர்யத்தையும்
இளமையும் எடுத்துக் கொண்டு
தன் தனிமையும் துயரையும்
திருப்பித் தந்தது அது!
ஆவேசமற்ற ஆற்றாமையுடன்
அதனிடம் முறையிட்டப் போது
இறுக்க சாத்திக் கொண்டது
தன் கதவுகளையும் ஜன்னல்களையும்!
வளையல்கள் உடைய ரத்தம் கசிய
தட்டியும் ஒரு போதும்
திறக்கவில்லை அவ்வாழ்வின் கதவுகள்.
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
மீண்டும் மீண்டும் வீடு திரும்புகிறேன்,
சாத்திய கதவுகளுக்கு அப்பால்
சாத்தியப்படும் வாழ்வினைத் தேடி!’
****************************************
எனும் உமாஷக்தியின் கவிதையும் இல்லங்களைப்போலவே நம் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன.
Tweet | ||||
எனக்கு என் வீடே உலகம் .. பதிவு எனக்கு மிகப்பிடிச்சது ஷைலஜா.
ReplyDelete// முத்துலெட்சுமி/muthuletchumi said...
ReplyDeleteஎனக்கு என் வீடே உலகம் .. பதிவு எனக்கு மிகப்பிடிச்சது
////
வாங்க முத்துலட்சுமி! பேரைஇங்க பாத்ததும் முன்னே நாம் பார்த்ததும் பேசினதும் நினைவுக்கு வருகிறது நலம்தானே?
ஆமா எங்கபோனாலும் வீட்டுக்கு வந்தா தான் நிம்மதி இல்லையா? உங்க கருத்துக்கும் வருகைக்கும் நன்றி முத்து லட்சுமி.
East or West, Home is the Best-ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க:)? எனக்கும் வீடே சொர்க்கம்:)! அருமையான பகிர்வு ஷைலஜா!
ReplyDelete//”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர்.//
ReplyDeleteநல்ல ரசனைக்காரர் தாகூர்...
//ஒவ்வொரு மனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது //
கண்டிப்பாக... வெளியில் சென்று எதை தின்றாலும், வீட்டில் வந்து அம்மாவின் கையால் ஏதாவது சாப்பிட்டால் அந்த திருப்தியே தனி...
//ஒருவன் உலகளாவ ஓங்கி உயர்ந்து நின்றுதன் புகழ்க்கிளைகளை பரப்பினாலும் அவன் கால்கள் வேரூன்றி நிற்பது அவன வீட்டில்தான்//
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க ஷைலஜா மேடம்....
//உறவுப்பிரியங்களை அடையாளம் காட்டும் வீடு
இளமை முதல்முதுமைவரை நமது அந்தரங்கம் அனைத்தையும் கண்டுகொண்டிருப்பதுவீடு. நமக்கான எல்லாவற்றையும் சுமக்கும் வீடு வெறும் சுவர்களால் கட்டப்படது அல்ல , அங்கு அன்பிற்குரியவர்களின் சுவாசம் நிறைந்திருக்கிறது ! அது இளைப்பாற அமரும் மர நிழல்! விருப்பம் போல சிற்குவிரித்துப்பறக்க அகாயம் ! இயலாமையின் தோல்வி சறுக்கல்களில் கீழேவிழும்போதெல்லாம் நம்மை ஏந்திக்கொள்ளும் அன்புக்கரங்களைக் கொண்டது வீடென்பது.//
பிரமாதம்....ஆகாயம் என்று மாற்றலாமே....
நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்...
அன்பின் சகோதரி ஷைலஜா,
ReplyDeleteஅருமையான பதிவு.
யார் எங்கு சென்றாலும் வீட்டினைச் சுற்றியே மனம் சுற்றும். உடலின் ஏதோ ஒரு பாகத்தை வீட்டில் விட்டுவந்தது போல வீட்டு நினைவு எங்கு போனாலும் கூடவே வரும். இந்த நினைவு ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிகம் !
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteEast or West, Home is the Best-ன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க:)? எனக்கும் வீடே சொர்க்கம்:)! அருமையான பகிர்வு ஷைலஜா!
12:03 PM
நன்றி ராமலஷ்மி.....
R.Gopi said...
ReplyDelete.//
நல்ல ரசனைக்காரர் தாகூர்...
//
கண்டிப்பாக... வெளியில் சென்று எதை தின்றாலும், வீட்டில் வந்து அம்மாவின் கையால் ஏதாவது சாப்பிட்டால் அந்த திருப்தியே தனி...
//
ரொம்ப நல்லா சொல்லி இருக்கீங்க ஷைலஜா மேடம்....
>>>>அன்பிற்குரியவர்களின் சுவாசம் நிறைந்திருக்கிறது ! அது இளைப்பாற அமரும் மர நிழல்! விருப்பம் போல சிற்குவிரித்துப்பறக்க அகாயம் ! இயலாமையின் தோல்வி சறுக்கல்களில் கீழேவிழும்போதெல்லாம் நம்மை ஏந்திக்கொள்ளும் அன்புக்கரங்களைக் கொண்டது வீடென்பது.//<<<<
பிரமாதம்....ஆகாயம் என்று மாற்றலாமே....
நல்ல பதிவு, வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்...
1:23 PM
..;’’’//வரிக்குவரிசிலாகித்து கருத்து சொல்லும் கோபிக்கு சிறப்பு நன்றி
// எம்.ரிஷான் ஷெரீப் said...
ReplyDeleteஅன்பின் சகோதரி ஷைலஜா,
அருமையான பதிவு.
யார் எங்கு சென்றாலும் வீட்டினைச் சுற்றியே மனம் சுற்றும். உடலின் ஏதோ ஒரு பாகத்தை வீட்டில் விட்டுவந்தது போல வீட்டு நினைவு எங்கு போனாலும் கூடவே வரும். இந்த நினைவு ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிகம் !
7:42 PM
//////வாங்க பிறந்த நாள் கொண்டாடிய கத்தார்காளையே! நலமா? கருத்துக்கு நன்றி ரிஷு
பெண்களுக்கு மிகவும் அதிகம் சரிதான்...!ஆனா எங்களுக்கெல்லாம் பிறந்தவீடு என்பது தாற்காலிகமாக இருக்கிறது
புகுந்த வீடு மனதில் பதிந்து குழந்தைகளுடன் வாழதொடங்கியதும் எங்கு போனாலும் இங்கேயே மீண்டும் வர மனம் விரும்புகிறது!
சில பதிவை வாசிக்கும் போது மனம் அமைதியாகி எல்லாப் புலன்களும் வாசிப்பில் தேய்ந்து விடும். அமைதியாய் ஒரு தாள லயத்தில் கண்கள் மேய்ந்து மூளைக்கு சேதி சொல்லும்.
ReplyDeleteஅது போல் இருந்தது சகோதரி இந்த பதிவு. ரொம்ப தேங்க்ஸ். ரீசண்ட் எழுத்துக்களில் இது ஒரு முத்து.
துபாய் போகணும் என்றதும்,தங்கியிருந்த பெங்களூர் வீட்டில் அத்தனை பொருட்களையும் விற்றோ, அன்பளிப்பாய் கொடுத்தோ, தூர வீசியோ என மூன்றே கேட்டகரியில் பணியாற்றி. மிஞ்சியதை வெறும் மூன்று சூட்கேசுகளில் அடைத்து. இனி புது வாழ்க்கை என தொடங்கிய போது, இதயம் கனத்தது.
கண்ணில் நீர் சுரந்தது.
வீடு, என்பது நமக்குத் தரும் பாதுகாப்பு மற்றும் சவுகரியம் உணர்ந்து கொள்ள ஒரு மனப் பக்குவம் வேண்டும். தாகுரை வரவழைத்து சொன்ன சொல்லில் இருக்குது சூட்சமம். அங்கு தொடங்கி
தேவதச்சன் ( நல்ல பேருங்க) ஹரன் பிரசன்னா, உமா சக்தி கவிதைகளில் சொல்லி நிறைவாய் ஒரு போஸ்ட்.
கலக்குங்க.....
படுக்காளி
ppage said...
ReplyDeleteசில பதிவை வாசிக்கும் போது மனம் அமைதியாகி எல்லாப் புலன்களும் வாசிப்பில் தேய்ந்து விடும். அமைதியாய் ஒரு தாள லயத்தில் கண்கள் மேய்ந்து மூளைக்கு சேதி சொல்லும்.
அது போல் இருந்தது சகோதரி இந்த பதிவு. ரொம்ப தேங்க்ஸ். ரீசண்ட் எழுத்துக்களில் இது ஒரு முத்து.
துபாய் போகணும் என்றதும்,தங்கியிருந்த பெங்களூர் வீட்டில் அத்தனை பொருட்களையும் விற்றோ, அன்பளிப்பாய் கொடுத்தோ, தூர வீசியோ என மூன்றே கேட்டகரியில் பணியாற்றி. மிஞ்சியதை வெறும் மூன்று சூட்கேசுகளில் அடைத்து. இனி புது வாழ்க்கை என தொடங்கிய போது, இதயம் கனத்தது. ///
<<<<<<<<<<<<
வாங்க படுக்காளி...உங்களோட இந்த வரிகள் படிச்சதும் மனசுக்கு கஷ்டமாச்சு. என்ன செய்றது எப்டி
யாவது வாழ்ந்தாகவேண்டி இருக்கே.///
//வீடு, என்பது நமக்குத் தரும் பாதுகாப்பு மற்றும் சவுகரியம் உணர்ந்து கொள்ள ஒரு மனப் பக்குவம் வேண்டும். தாகுரை வரவழைத்து சொன்ன சொல்லில் இருக்குது சூட்சமம். அங்கு தொடங்கி
தேவதச்சன் ( நல்ல பேருங்க) ஹரன் பிரசன்னா, உமா சக்தி கவிதைகளில் சொல்லி நிறைவாய் ஒரு போஸ்ட்.
கலக்குங்க.....?////
நிறைவாய் பாராட்டறீங்களே இதைப்படிக்கவே ஆனந்தமா இருக்கு.
தேவத்ச்சன்லாம் பெரிய கவிஞருங்க. உமாஷக்தி ஹரன்ப்ரசன்னாவும் புகழான கவிஞர்கள். நல்லஎழுத்து காத்துமாதிரி எங்காவது சஞ்சரிச்சிட்டே இருக்கும் இழுத்துபிடிச்சி நாமதான் அதனை இதய பலூன்ல அடைக்கணும்! நன்றி படுக்காளி வரவுக்கும் கருத்துக்கும்
படுக்காளி
3:01 PM
ஒரே கவுஜ மழயா இருக்கு, ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்
ReplyDeleteஎன்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஷைலஜா,
ReplyDeleteநல்ல கட்டுரை. பெரிதும் ரசித்தேன்.
என்னோட கட்டுரை முதல் முறையா யூத் விகடனில் ஜாலி பஜாரில் வந்திருக்கு. இதுவும் தங்கமணி மேட்டர் தான் (நான் House Boss-என்பேன்)
இந்த link -ல் படிக்கவும்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp
To read it in my blog: http://veeduthirumbal.blogspot.com
அருமையான பகிர்வு ஷைலஜா!
ReplyDelete