Social Icons

Pages

Tuesday, November 10, 2009

கலங்குகிறேன்.

பாலில்நீரைக்கலப்படம் செய்த
காபியை காலையில் அருந்திவிட்டு
கலப்படம் பற்றிக் கவிதைஎழுத
கணிணியைத்திறந்தால்
கணிணிக்குள்ளே
வைரஸின் கலப்படம்


’அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’
என்று சொல்ல வரும்போது
கண்கள் கலங்குகின்றன

காரணம்..
காற்றில்வரும் தூசியிலும்
கரியமலவாயுக்கலப்படம்

சுவாசிக்கும் மூச்சிலும்
சுற்றுபுறசூழலின்
நச்சுப்புகைக்காற்றின் கலப்புஉயிரையே பலிவாங்கும்
கலப்பட மருந்துகள்
நோயைவிட மனித உடம்பை
மேலும் பாதிக்கும்

சிமெண்டில் கலப்படமாம்
சரிந்துவிழுகிறது கட்டியசுவர்கள்
மிளகுக்கு நடுவே பப்பாளிவிதையாம்
மிளகாய்த்தூளில் செங்கல்தூளாம்
உணவுப்பொருளில் கலப்படம்
எப்படிச் செய்வதென்பது தேர்ந்த
வியாபாரிகளுக்கு மனப்பாடம்

இன்னும் இன்னும் இருக்கிறது
கேட்கக்கேட்க மனம் பதறுகிறது
எல்லா உரிமையும் ஜனநாயகநாட்டில்
இருக்கின்றது என்பதினால்
கலப்பட உரிமையை பட்டாபோட்டு
களிக்கின்றது ஒருகூட்டம்.

ஆயகலைகள் இப்போது 65
கலப்படம் கடைசியாய் புகுந்த
கைவந்தகலையாய் ஆகியது.
இந்த அக்கிரமங்களை
தமிழில் எழுதவந்தால்
அங்கும் கலப்படம ஆடுகிறது
சென்னைத்தமிழாம் நெல்லைத்தமிழாம்
தஞ்சைத்தமிழாம் அதெல்லாம் அமிழ்தாம்!

தொலைக்காட்சிகென்று
வெள்ளைக்காரன்மொழியொடுகலந்த
ஒரு தொல்லைத்தமிழைக்
கேட்கவும் கொடுமை.

இந்திரலோகத்து அமுதமாயினும்
கலப்படமின்றி
ஏதும் நம்கைக்குவராத நிலமை
எனும்போது தமிழ் என்ன செய்யும் பாவம்!பாலில் நீரினை
பகுத்தறிந்த
அன்னப்பறவையையும்
அடியோடு காணோம்
நளன் தமயந்திக்கு
தூதுசென்றதில்
சோர்ந்து ஓய்வு
எடுக்கின்றதோ?

சாராயத்தில் கலப்படமாம்
சாவுஎண்ணிக்கை சொல்கிறது

கலப்படம் என்பதை
ஜாதிகள்மலிந்த நம்தேசத்தில்காணும்
கலப்புத்திருமணத்தில் வரவேற்போம்

பொன்னுடன் செம்பைசேர்த்தால்தான்
மின்னும நகைகள் உருவாகும்

புதுப்புதுவர்ணங்களின்கலவை
ஓவியக்கலைதரும் பிரமிப்பு

ஆணும்பெண்ணும் கலப்பதில்
அதிசியத்தக்கமனிதப்படைப்பு

ஆயின்
நோய்தீர்க்கும் மருந்தில்
குழந்தைஉணவில்
கலப்படம் செய்யும்கயவர்களை
விரல்நகம்போல்
வெட்டி எறியவேண்டும்
இல்லாவிடில் நம்
விரல்களே பறிபோய்விடும்.


--

18 comments:

 1. கலங்கியபடியேதான் கழிகிறது வாழ்வு. கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது
  சரியான தீர்ப்பு.

  ReplyDelete
 2. Anonymous2:37 AM

  கலங்குகிறேன் - கலக்கல்

  ReplyDelete
 3. காலையில் காஃபி சரியாக இல்லாவிட்டால் இப்படித்தான் கவிதை எழுதும்படி ஆகி விடும்!

  ReplyDelete
 4. "கலங்குகிறேன்" நினைத்தால் கலக்கம்தான்.

  இன்னும் என்னென்ன கலப்படங்கள் வருமோ...

  ReplyDelete
 5. //பாலில்நீரைக்கலப்படம் செய்த
  காபியை காலையில் அருந்திவிட்டு
  கலப்படம் பற்றிக் கவிதைஎழுத
  கணிணியைத்திறந்தால்
  கணிணிக்குள்ளே
  வைரஸின் கலப்படம்//

  ஆஹா... திவ்ய‌மான‌ ஆர‌ம்ப‌ம்.... ஓப்ப‌னிங்கே க‌ளை க‌ட்டுதே...

  //’அங்கிங்கெனாதபடி
  எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’
  என்று சொல்ல வரும்போது
  கண்கள் கலங்குகின்றன

  காரணம்..
  காற்றில்வரும் தூசியிலும்
  கரியமலவாயுக்கலப்படம்

  சுவாசிக்கும் மூச்சிலும்
  சுற்றுபுறசூழலின்
  நச்சுப்புகைக்காற்றின் கலப்பு//

  ச‌ரியாக‌ தான் சொல்லி இருக்கிறீர்க‌ள் ஷைல‌ஜா மேட‌ம்... தாய்ப்பால் த‌விர‌ இன்றைய‌ உல‌கில் அனைத்தும் க‌ல‌ப்ப‌ட‌மே என்று சொல்ல‌ வைத்து விட்டார்க‌ள்...

  //சிமெண்டில் கலப்படமாம்
  சரிந்துவிழுகிறது கட்டியசுவர்கள்
  மிளகுக்கு நடுவே பப்பாளிவிதையாம்
  மிளகாய்த்தூளில் செங்கல்தூளாம்
  உணவுப்பொருளில் கலப்படம்
  எப்படிச் செய்வதென்பது தேர்ந்த
  வியாபாரிகளுக்கு மனப்பாடம்//

  ம்ம்...இதுதான் இன்று எங்கும் ந‌ட‌க்கிற‌து... டீ தூளில் ம‌ர‌த்தூளை க‌ல‌க்கும் த‌மிழ‌னின் மூளையே மூளை...

  //ஆயகலைகள் இப்போது 65
  கலப்படம் கடைசியாய் புகுந்த
  கைவந்தகலையாய் ஆகியது.//

  நெத்தி அடி மேட‌ம்...

  //தொலைக்காட்சிகென்று
  வெள்ளைக்காரன்மொழியொடுகலந்த
  ஒரு தொல்லைத்தமிழைக்
  கேட்கவும் கொடுமை.//

  விவேக் ப‌ட‌ காமெடிதான் நினைவுக்கு வ‌ருகிற‌து...

  //பாலில் நீரினை
  பகுத்தறிந்த
  அன்னப்பறவையையும்
  அடியோடு காணோம்
  நளன் தமயந்திக்கு
  தூதுசென்றதில்
  சோர்ந்து ஓய்வு
  எடுக்கின்றதோ?//

  ஆஹா... சூப்ப‌ரா இருக்கு இப்ப‌டி சிந்தித்து எழுதிய‌து...

  //பொன்னுடன் செம்பைசேர்த்தால்தான்
  மின்னும நகைகள் உருவாகும்

  புதுப்புதுவர்ணங்களின்கலவை
  ஓவியக்கலைதரும் பிரமிப்பு

  ஆணும்பெண்ணும் கலப்பதில்
  அதிசியத்தக்கமனிதப்படைப்பு//

  ஃபென்டாஸ்டிக்க்க்க்க்க்க்க்

  //நோய்தீர்க்கும் மருந்தில்
  குழந்தைஉணவில்
  கலப்படம் செய்யும்கயவர்களை
  விரல்நகம்போல்
  வெட்டி எறியவேண்டும்
  இல்லாவிடில் நம்
  விரல்களே பறிபோய்விடும்.//

  விர‌ல் போகும் முன், அவ‌ர்க‌ளின் குர‌ல்வ‌ளை பிடித்து நெறிப்போம்...

  ReplyDelete
 6. ராமலக்ஷ்மி said...
  கலங்கியபடியேதான் கழிகிறது வாழ்வு. கடைசிப் பத்தியில் சொல்லியிருப்பது
  சரியான தீர்ப்பு.

  4:40 PM


  சின்ன அம்மிணி said...
  கலங்குகிறேன் - கலக்கல்

  2:37 AM
  >>>>>>நன்றி ராமலஷ்மி சின்னம்மிணி

  ReplyDelete
 7. // லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...
  காலையில் காஃபி சரியாக இல்லாவிட்டால் இப்படித்தான் கவிதை எழுதும்படி ஆகி விடும்!

  4:34 AM
  //

  வாராதுவந்த மாமணியே வந்ததுமே குறும்பா?:0 filtercoffeeக்கு எப்போ பெங்களூராம்?:)

  ReplyDelete
 8. Kanchana Radhakrishnan said...
  கலக்கல்

  7:25 AM


  மாதேவி said...
  "கலங்குகிறேன்" நினைத்தால் கலக்கம்தான்.

  இன்னும் என்னென்ன கலப்படங்கள் வருமோ...

  9:15 AM
  >>
  நன்றி காஞ்சனா ராதாக்ருஷ்ணன்(நலமா?)
  மாதேவி இருவருக்கும்

  ReplyDelete
 9. கோபிநாத் said...
  தூள் ;)

  10:57 AM
  >>>>>


  தூளிலும் கலப்படம் இருக்குமோ?:) உஙக் கருத்தில் இல்லை கோபி நன்றிமிக

  ReplyDelete
 10. R.Gopi said...
  //பாலில்நீரைக்கலப்படம் செய்த
  காபியை காலையில் அருந்திவிட்டு
  கலப்படம் பற்றிக் கவிதைஎழுத
  கணிணியைத்திறந்தால்
  கணிணிக்குள்ளே
  வைரஸின் கலப்படம்//

  ஆஹா... திவ்ய‌மான‌ ஆர‌ம்ப‌ம்.... ஓப்ப‌னிங்கே க‌ளை க‌ட்டுதே...

  ஃபென்டாஸ்டிக்க்க்க்க்க்க்க்//////


  >>>நன்றி ஆர்கோபி கடைசிவரை படிச்சி வழக்கம்போல கருத்துக்களைபாராட்டுக்களை சொல்லியதுக்கு

  ReplyDelete
 11. //பாலில்நீரைக்கலப்படம்
  காற்றில்வரும் தூசியிலும்
  கலப்பட மருந்துகள்
  சென்னைத்தமிழாம் நெல்லைத்தமிழாம்
  தஞ்சைத்தமிழாம் அதெல்லாம் அமிழ்தாம்!
  சாராயத்தில் கலப்படமாம்//

  //பொன்னுடன் செம்பைசேர்த்தால்தான்
  மின்னும நகைகள் உருவாகும்

  புதுப்புதுவர்ணங்களின்கலவை
  ஓவியக்கலைதரும் பிரமிப்பு

  ஆணும்பெண்ணும் கலப்பதில்
  அதிசியத்தக்கமனிதப்படைப்பு//

  எதிரும், நேரும் கலந்த கலப்பு இந்த பதிவு. !!!!! நல்ல பதிவு

  ReplyDelete
 12. யக்கோவ்
  வைரஸ் கலப்படம் நல்லா வந்திருக்கு,
  எப்படி வருமுன்னு பாக்க ஆவலாயிருந்தேன், நல்லா இருக்கு
  கவுஜ தவிர வேறெதாவது எழுதுங்களேன், என்னப் போன்ற பாமரன்களுக்கு
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 13. Anonymous11:20 PM

  கொஞ்சம் எட்டிப் பார்க்க:
  http://aris-ungaliloruvan.blogspot.com/

  ReplyDelete
 14. பதிவுலகில் முத்திரை பதித்துவரும் அன்பரே,

  இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்….

  http://idhayame.blogspot.com/2009/11/blog-post_12.html

  அன்புடன்

  செல்லத்துரை…..

  ReplyDelete
 15. :-)

  உங்கள் ப்ளாக் இங்கே.

  http://pengalpathivugal.blogspot.com/2009/12/blog-post.html

  ReplyDelete
 16. எல்லா உரிமையும் ஜனநாயகநாட்டில்
  இருக்கின்றது என்பதினால்
  கலப்பட உரிமையை பட்டாபோட்டு
  களிக்கின்றது ஒருகூட்டம்.

  we cant change it anyway my friend..!

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.