Social Icons

Pages

Thursday, January 07, 2010

நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!

ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன்.

”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!

”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).


”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!



கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம் விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.

பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்ல ஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி 'தீஈஈர்ர்க்கசுமங்கலிபவ' ன்னு முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இந்த் ஒருவார்தையோட சொல்லி முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.



ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.


நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.

மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சொ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் ஆகும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)

. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாதுஙக்றது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!

ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்

ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும் அன்புத்தம்பிராகவ்விடமும் நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

வாய்ப்புண் வலி அதிகரித்தது.

ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.

அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.

அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...

“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”

அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது

:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”

தடவினதை ருசித்து சாப்பிட்டுவிட்டேன்!

”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”

அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..எங்க நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!

“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.

மணி 8 45

வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க ஏறினேன்.


ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே நீஙக் ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!

மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.


. ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே நர்ற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!

அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!

எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!

இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?!

20 comments:

  1. ஹஹ்ஹா .. புண்நகையா இருந்தாலும் உங்க புன்னகை பொன்நகையாட்டம் இருந்திருக்கும் .. :)

    ReplyDelete
  2. மிக,மிக அருமை!

    :-)))

    ReplyDelete
  3. முத்த்லெட்சுமி சரியாச் சொன்னாங்க. பொன்னகையேதான்:)!

    //அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!//

    நூறு சதவிகிதம் நிச்சயமா! வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  4. அரங்கனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததே ஷைல்ஸ். மனம் நிறைந்த பாராட்டுகள். எல்லோரும் சொன்ன மாட்திரி மணத்தக்காளிக் கீரையும்,ரைபோவின்
    மாத்திரைகளும் சீக்கிரம் சரிசெய்துவிடும். வாய் புண்ணாக இல்லாமல் அரங்கப் பண் இசைக்க அவனையே வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. விறு விறுப்பான நாவல் படிக்கிற மாதிரி ஆச்சி ...

    இப்போ எப்படி இருக்கு அக்ஸ் ...

    ReplyDelete
  6. சங்கரா தொலைக்காட்சியா?? என் பேருல எல்லாம் எதுக்கு-க்கா தொலைக்காட்சி தொடங்குறாங்க? அதுக்கு நீங்களும் லைவ் ரிலே கொடுக்க போனீங்களாக்கும்...பாவம் அரங்கன் :)

    ReplyDelete
  7. வாய்ப் புண்ணா?

    சங்கரா தொலைக்காட்சியில் வாய்ப் புண்ணும் பேச்சும்
    விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே! :)

    ReplyDelete
  8. அடடே!, என்னிடம் பேசும்போது வாய்புண் இருந்ததைச் சொல்லையே...

    ஆமாம், பார்த்தேன் குரலைக் கேட்டேன், வாய்புண்ணால் எந்த வித இடரும் குரலில் தெரியல்லைன்னா நீங்க நம்பவா போறீங்க?... :)

    ReplyDelete
  9. // முத்துலெட்சுமி/muthuletchumi said...
    ஹஹ்ஹா .. புண்நகையா இருந்தாலும் உங்க புன்னகை பொன்நகையாட்டம் இருந்திருக்கும்
    //

    முத்துலட்சுமி! இப்போ புன்னகை சரியானது.நன்றி உங்க பஞ்ச் கருத்துக்கு!!!!

    ReplyDelete
  10. பா.ராஜாராம் said...
    மிக,மிக அருமை!

    ..///

    நன்றிங்க ராஜாராம்

    ReplyDelete
  11. //ராமலக்ஷ்மி said...
    முத்த்லெட்சுமி சரியாச் சொன்னாங்க. பொன்னகையேதான்:)!

    //அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!//

    நூறு சதவிகிதம் நிச்சயமா! வாழ்த்துக்கள் ஷைலஜா!

    6:29 PM
    ////
    ராமல்ஷ்மியும் முத்துலஷ்மிபோலவே சொல்றீங்களா? லஷ்மீகரமாய் ரெண்டுபேரும் சொல்றீங்க மறுக்கவா போறேன்? நன்றி வாழ்த்துக்கு!

    ReplyDelete
  12. //வல்லிசிம்ஹன் said...
    அரங்கனுக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததே ஷைல்ஸ். மனம் நிறைந்த பாராட்டுகள். எல்லோரும் சொன்ன மாட்திரி மணத்தக்காளிக் கீரையும்,ரைபோவின்
    மாத்திரைகளும் சீக்கிரம் சரிசெய்துவிடும். வாய் புண்ணாக இல்லாமல் அரங்கப் பண் இசைக்க அவனையே வேண்டுகிறேன்.

    8:38 PM
    ..........

    இப்போ மணத்தக்காளிக்கீரை பச்சடி சாப்ட்டு முழுக்க சரியாச்சு வல்லிமா ரொம்ப நன்றி உங்க அன்பான பின்னூட்டத்துக்கு

    ReplyDelete
  13. //நட்புடன் ஜமால் said...
    விறு விறுப்பான நாவல் படிக்கிற மாதிரி ஆச்சி ...

    இப்போ எப்படி இருக்கு அக்ஸ் ...

    5:09 AM
    ..///

    இப்போதான் சரியாச்சு ஜமால் நன்றி பின்னூட்டமிட்டதுக்கு

    ReplyDelete
  14. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    சங்கரா தொலைக்காட்சியா?? என் பேருல எல்லாம் எதுக்கு-க்கா தொலைக்காட்சி தொடங்குறாங்க? அதுக்கு நீங்களும் லைவ் ரிலே கொடுக்க போனீங்களாக்கும்...பாவம் அரங்கன் :)

    8:57 AM
    ////////

    சங்கராபயணமூஊஊஊஊ ந்னு போய்வந்தாச்சு!!! உங்கபேரு சங்கராவா நாங்க இணையத்தின் ஆன்மீக ரஜனி ன்னுதான் அழைப்போம்!!!!

    ReplyDelete
  15. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    வாய்ப் புண்ணா?

    சங்கரா தொலைக்காட்சியில் வாய்ப் புண்ணும் பேச்சும்
    விருப்புற்று கேட்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே! :)

    9:00 AM
    ///////

    சொல் ஆழியா நான் வழக்கம்போல உங்க தோழியோன்னு(ஆண்டாள்) நு நினச்சேன்!!!!!

    ReplyDelete
  16. /// மதுரையம்பதி said...
    அடடே!, என்னிடம் பேசும்போது வாய்புண் இருந்ததைச் சொல்லையே...<<>>>

    யார்ட்டயுமே அப்போ சொல்லல்ல மௌலி. ஆனா சமாளிக்க ரொம்ப க‌ஷ்டப்பட்டேன்.

    //ஆமாம், பார்த்தேன் குரலைக் கேட்டேன், வாய்புண்ணால் எந்த வித இடரும் குரலில் தெரியல்லைன்னா நீங்க நம்பவா போறீங்க//

    நீஙக் சொன்னா நம்புவேன்!!!
    //////

    ReplyDelete
  17. யக்கோவ்..
    மொதல்ல வாழ்த்துக்கள் - பிடியுங்க..

    தமிழ் வெளையாடுது எழுத்தில்.. அன்று பேசும்போதும் இப்படியே என நினைக்கிறேன்...

    அப்புறம் “ இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல்’’ இதே மாதிரி எப்பவும் நீங்களும் இன்னும் பலரும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? :) :)
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  18. // sriram said...
    யக்கோவ்..
    மொதல்ல வாழ்த்துக்கள் - பிடியுங்க..
    >>>

    நன்றி ஸ்ரீ!
    ///
    தமிழ் வெளையாடுது எழுத்தில்.. அன்று பேசும்போதும் இப்படியே என நினைக்கிறேன்.../////

    ஓரளவு சமாளிச்சேன்!

    ///அப்புறம் “ இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல்’’ இதே மாதிரி எப்பவும் நீங்களும் இன்னும் பலரும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்? :) :)
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    7:43 PM
    //

    ..<>>>>>>>>>>>>>>>

    அதெல்லாம் கனவுதான் உங்களுக்கு! கவிதை எழுதாம எப்படி இருக்கிறதாம்?

    ReplyDelete
  19. //ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...//

    ஆஹா... ரொம்ப பேர் டிஸ்டர்ப் பண்ணிட்டா போல இருக்கே.... சரி...சரி... ஆழ்வார்கள் கிடைத்தார்களா??

    //அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன். //

    ஆஹா... திவ்யம்... சொல்லுங்கோ... கேட்க தயாராக இருக்கிறேன்.... ஹா...ஹச்....ஹச்.......

    //”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!//

    அவருக்கு உங்கள் திறமை பற்றி தெரியாதோ என்னவோ?

    //”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).//

    ஆஹா... எவ்ளோ சிரத்தையாய் சொல்லி இருக்கிறார் அண்ணா.....

    //கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?//

    தூசி விழுந்துடுத்தோ என்னவோ? கேட்டு பார்ப்போம்...

    //அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி 'தீஈஈர்ர்க்கசுமங்கலிபவ' ன்னு முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இந்த் ஒருவார்தையோட சொல்லி முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.//

    ஹா...ஹா...ஹா.... 6 நிமிஷத்துலயாவது முடிச்சாரே... எனக்கு 10 நிமிஷம்லாம் ரெக்கார்ட் இருக்கு....
    //மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சொ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் ஆகும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)//
    அடடா.... இது என்ன சோதனை?? அப்புறம் என்ன ஆச்சு...

    //ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன் //

    கண்டிப்பா யாராக இருந்தாலும் இதையே தான் சொல்லி இருப்பார்கள்!!! இது தெய்வத்தின் சோதனை!!

    //இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) //

    ஹா...ஹா... இந்த கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு... ம்ம்ம்..... இருக்கட்டும்.... மேல சொல்லுங்க....

    //டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.//

    5% தானா?? நான் கூட 50 தான் தப்பா எழுதி இருக்கீங்களோன்னு நெனச்சேன்...
    //“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”

    அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது

    :”நெய் அல்லது தேன் தடவிக்கோ”

    தடவினதை ருசித்து சாப்பிட்டுவிட்டேன்!//
    ஹா...ஹா....ஹா.... நல்ல நகைச்சுவையுடன் கூடிய வர்ணனை... உங்களுக்கு உடம்பு சரியில்லை... ஆனாலும், இதை படிச்சு சிரிக்கறோம்..

    //மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!

    “ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.//
    ழழு ழழி.. ழிழ்ழோ ழெழ்ழ்ழி ழிழுழ்ழு.... (அது சரி... இப்போ எப்படி இருக்குங்கறத தான் இப்படி கேட்டேன்...)

    //”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!//
    வெற்றி....வெற்றி.....

    //இன்னிக்குத்தான வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!//

    பேஷ்.... நல்லதா போச்சு....

    //எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!//

    ஆஹா... எனக்கும் கேட்கணும் போல இருக்கே... ஏதாவது சான்ஸ் இருக்கா மேடம்??

    //இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?! //

    அது “புன்னகை” அல்ல “புண்”ணை என்பதை யார் அறிவாரோ... நான் அறிவேனே.....

    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....ஷைலஜா மேடம்... வாழ்த்துக்கள்... தற்போது நீங்கள் பரிபூரண நலம் என்று நம்புகிறேன்....

    ReplyDelete
  20. // R.Gopi said

    //
    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....ஷைலஜா மேடம்... வாழ்த்துக்கள்... தற்போது நீங்கள் பரிபூரண நலம் என்று நம்புகிறேன்....

    1:03 PM

    ///


    நீண்ட பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி கோபி இப்போ100% சரியாகி பழையபடி அரட்டை!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.