காமனைப்போலக் கவினுடலம் உற்றாலும்
வில்விசயன் போலவே வெற்றியினைக்கொண்டாலும்
கல்விச்சிறப்பினில் கம்பனைப்போலானாலும்
குற்றமிலாச்செல்வம் குபேரன்போல் சேர்த்தாலும்
எற்றைக்கும் இந்திரன்போல் ஏற்றமுற வாழ்ந்தாலும்
நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்
அஞ்சிக்கடல்போல் அடக்கமாய் வாழ்ந்திடுக.
கற்றுயர்ந்த சான்றோரைக்கண்டு வணங்கிடுக
ம்ற்றன்னார் சொல்லை மதித்து நட்ந்திடுக
அன்புற்றடியவரை ஆண்டவனாய் எண்ணிடுக
பின்புற்றவர்க்குப் பெருந்தொண்டு செய்திடுக
எல்லோரும் இன்புறவே என்றென்றும் எண்ணிடுக
நல்லோரை எந்நாளும் நண்பராய்க் கொண்டிடுக
பாரோருக் கெல்லாம் பலனும் அளிக்கின்ற
சீரார் திருவரங்கத் தெய்வத்தை சிந்தித்து
நாவார நாளெல்லாம் போற்றிடுக நல்லமணப்
பூவாலே என்றென்றும் பூசிக்க பூவுலகீர்
இங்கிந் நெறியில் இன்புறு வீர்க்குச்
செங்கண் திருமால் அருளால்
மங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!
********************************************
(மரபுக்கவிதை---மருட்பா வியனிலை வகையைச்சேர்ந்தது)
Tweet | ||||
உக்காந்து யோசிப்பிங்களோ
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDelete------------------
இப்படியெல்லாமா”பா” எழுது-வீங்க
தமிழ்மணத்துடன் மலர்ந்த மலர்
ReplyDeleteநறுமணம் வீசிடும் புது மலர்
வெற்றி பெற வாழ்த்துகள்
இனிய பொங்கல்,தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeletehappy pongal
ReplyDeleteகவிதை அருமை....
ReplyDeleteகுறிப்பாக அந்த அரங்கனை உள்ளே இழுத்த விதம் பாராட்டத்தக்கது...
//பாரோருக் கெல்லாம் பலனும் அளிக்கின்ற
சீரார் திருவரங்கத் தெய்வத்தை சிந்தித்து
நாவார நாளெல்லாம் போற்றிடுக நல்லமணப்
பூவாலே என்றென்றும் பூசிக்க பூவுலகீர்
இங்கிந் நெறியில் இன்புறு வீர்க்குச்
செங்கண் திருமால் அருளால்
மங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!//
மிக மிக அருமை...
அரங்க அரங்க அரங்க நாதா...
வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteசெங்கண் திருமால் அருளால்
ReplyDeleteமங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!::))
நல்ல வார்த்தை! அருமை!!
//நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்
ReplyDeleteஅஞ்சிக்கடல் போல் அடக்கமாய் வாழ்ந்திடுக//
அருமை.
கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அருமையாய் மலர்ந்துள்ளது கவிதை நறுமணத்துடன்! வெற்றிபெற வாழ்த்துக்கள் ஷைலஜா!
ReplyDelete//
ReplyDeleteசக்தியின் மனம் said...
உக்காந்து யோசிப்பிங்களோ
//<<<>><<>>>>
எப்படியோ யோசிக்கறேன், அது நிச்ச்சயம்:)நன்றி கருத்துக்கு சக்தியின்மனமே!
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்
------------------
இப்படியெல்லாமா”பா” எழுது-வீங்க
5:53 AM
////
<<நன்றி ஜமால்... மரபுல ஒரு முயற்சி இது ஜமால் என்ன பா பிடிக்கலையா?:)
//திகழ் said...
ReplyDeleteதமிழ்மணத்துடன் மலர்ந்த மலர்
நறுமணம் வீசிடும் புது மலர்
வெற்றி பெற வாழ்த்துகள்
8:30 AM
//////
நன்றி திகழ்!
//
ReplyDeleteT.V.Radhakrishnan said...
வெற்றி பெற வாழ்த்துகள்
8:44 AM
///
நன்றீ ராதா க்ருஷ்ணன்
. R.Gopi said...
ReplyDeleteகவிதை அருமை....
குறிப்பாக அந்த அரங்கனை உள்ளே இழுத்த விதம் பாராட்டத்தக்கது...
//>>>>>>>>>......மிக்கநன்றிகோபி வழக்கம்போல விவரமான பின்னூட்டம்
//
ReplyDeleteS.A. நவாஸுதீன் said...
வெற்றி பெற வாழ்த்துகள்
6:46 PM
/////
நன்றிங்க
//narasimmah said...
ReplyDeleteசெங்கண் திருமால் அருளால்
மங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!::))
நல்ல வார்த்தை! அருமை!!
6:58 PM
//
<<>>>>>>>>>>>>>>>>>> நன்றி நரசிம்மா
//கோமதி அரசு said...
ReplyDelete//நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்
அஞ்சிக்கடல் போல் அடக்கமாய் வாழ்ந்திடுக//
அருமை.
கவிதைப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
7:37 PM
,,,,,,,,,,,,
மிக்க நன்றி கோமதி அரசு
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமையாய் மலர்ந்துள்ளது கவிதை நறுமணத்துடன்! வெற்றிபெற வாழ்த்துக்கள் ஷைலஜா!
7:44 PM
///
,...............
மிக்க நன்றி ராமலஷ்மி