Social Icons

Pages

Wednesday, May 05, 2010

தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் இதழான தென்றல் எனும் மாதப்பத்திரிகையில் இந்தமாதம் எனது நேர்காணல் வந்துள்ளது! இலங்கையின் வீரகேசரி இதழுக்குப்பிறகு ஒரு வெளிநாட்டுப்பத்திரிகையில் என் நேர்காணல் வருவது மிகவும் மகிழ்ச்சியைத்தருகிறது!

http://www.tamilonline.com/thendral/Contentnew.aspx?id=114&cid=2

இந்தச்சுட்டில இருக்கு...எதுக்கும் அங்க இருப்பதை இங்கயும் அப்படியே அளிக்கறேன்போட்டோ மட்டும் என்னவோ வரவில்லை(தப்பிச்சீங்க)!

///////
நவீன கதைப்போக்குக்கு ஏற்றவாறு நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காத்திரமான படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் ஷைலஜா.

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தில் பிறந்த ஷைலஜாவின் இயற்பெயர் மைதிலி. தந்தை பிரபல எழுத்தாளர் ஏ.எஸ். ராகவன். பள்ளிப்படிப்பு ஸ்ரீரங்கத்தில். அப்போதே ஆனந்த விகடனுக்கு ஒரு நகைச்சுவைத் துணுக்கை எழுதி அனுப்ப, அது உடனடியாகப் பிரசுரமாக, அதுவே ஷைலஜாவின் எழுத்தார்வத்துக்குப் பிள்ளையார் சுழி ஆனது. திருச்சி எழுத்தாளர் சங்கத்திற்குத் தந்தையுடன் சென்று பல எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டதில் எழுத்தார்வம் கொழுந்து விட்டது. வீட்டுக்கு வருகை தந்த சாவி, மணியன், ஜெயகாந்தன் போன்ற பல பிரபலங்களைச் சந்திக்க முடிந்ததும் சிறுவயதிலேயே ஷைலஜாவுக்கு எழுத்தின் மீதான காதலை அதிகரிக்கச் செய்தது.

பள்ளியில் நாடகங்களுக்கு கதை-வசனம் எழுதியதுடன் தொடர்ந்து கதை, கவிதை எழுத ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும்போது எழுதிய நகைச்சுவைக் கட்டுரை விகடனில் பிரசுரமானது. அது எழுத்தில் தன்னம்பிக்கையை அளித்தது. முதல் சிறுகதை குமுதம் இதழில் 1983ல் வெளியானது. அதற்கு கிடைத்த வரவேற்பில் இவரது பேனா சுறுசுறுப்படைந்தது. விகடனில் வெளியான 'வானைத்தொடலாம் வா' என்ற இவரது தொடர்கதைக்குச் சிறப்புப் பரிசு கிடைத்ததுடன் பிரபல எழுத்தாளர்கள் முன்னிலையில் பாராட்டு விழாவும் நடந்தது. தொடர்ந்து கல்கி, கலைமகள், அமுதசுரபி, தினமலர் போன்ற இதழ்களில் எழுதினார். இணையத்திலும், மடற்குழுக்களிலும் கதை, கவிதை, கட்டுரைகள் என்று கலக்கத் தொடங்கினார்.

இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை எழுதியிருக்கும் ஷைலஜா, தான் எழுத ஆரம்பித்த நாளில் தந்தையார் ஊக்கம் தந்திருக்காவிட்டால் தொடர்ந்து எழுதியிருக்கச் சாத்தியமே இல்லை என்கிறார்.

வாழ்க்கையின் லட்சியம் எதுவோ அதைத்தான் இலக்கியம் என்று தாம் கருதுவதாகக் கூறும் இவர், வாழ்க்கையும் இலக்கியமும் வேறல்ல என்றே தமக்குத் தோன்றுவதாகக் கூறுகிறார். "அப்பாவின் சில சிறுகதைகளை இப்போது படித்தாலும் அந்தக் கதைகளில் ஜீவன் இருப்பதை உணரமுடியும். எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" என்று கூறும் இவர், லாசராவில் ஆரம்பித்து, குபரா, திஜார, சுஜாதா, ஆர். சூடாமணி, வசுமதி ராமஸ்வாமி, ராஜம் கிருஷ்ணன், மேலாண்மை பொன்னுச்சாமி, பிரபஞ்சன், இரா. முருகன், உஷா சுப்ரமணியன், எஸ் ராமகிருஷ்ணன், அழகியபெரியவன் என பலரது எழுத்துக்கள் தன்னைக் கவர்வதாகச் சொல்கிறார்.

ஷைலஜாவின் எழுத்துக்கு உறுதுணையாக இருந்து ஊக்குவிப்பது தம் கணவர்தாம் என்று கூறும் ஷைலஜா, பிரபல எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்திரராஜன், இலக்கியபீடம் விக்கிரமன், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் போன்றோரது அக்கறையும், ஊக்குவித்தலும் தம்மைத் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கச் செய்கிறது என்கிறார்.

"கலைமகள் பத்திரிகையில் அமரர் கி.வா. ஜகந்நாதன் சிறுகதைப்போட்டியில் பரிசுபெற்ற எனது 'சருகு' சிறுகதைக்கு, முதியோர் இல்லத்திலிருந்து ஒரு பெண்மணி நெகிழ்ச்சியுடன் எழுதிய விமர்சனக் கடிதத்தை மறக்க முடியாத பாராட்டாகக் கருதுகிறேன்" என்று கூறும் ஷைலஜா, அரங்கன் கோயில், ஆழ்வார் பாடல்கள், ஆண்டாள் பாசுரங்கள், அகண்ட காவிரி, தெளிந்த கொள்ளிடம், தெற்கு வாசல் என்ற பசுமையான ஊர்ச் சுவைகளே இன்றும் தனது எழுத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதாகக் கூறுகிறார்.


தினபூமி, தினச்சுடர், மாலைமதி, குடும்ப நாவல், குங்குமச் சிமிழ் என பல மாத இதழ்களில் இவரது நாவல்கள் வெளியாகியுள்ளன. 'திரும்பத் திரும்ப' என்னும் சிறுகதைத் தொகுப்பு திருமகள் வெளியீடாக வெளியாகியுள்ளது. பல சிறுகதைத் தொகுப்புகளிலும் இவரது சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. திரிசக்தி பதிப்பகம் 'அவனும் இவனும்' என்ற சிறுகதைத் தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இவரது இரு சிறுகதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தினமலர் சிறுகதைப் போட்டி, கலைமகள் கிவாஜ சிறுகதைப் போட்டி எனப் பல போட்டிகளில் பரிசு வென்றிருக்கும் ஷைலஜா, இணையத்தில் மரத்தடி, தமிழுலகம் ஆகியவை நடத்திய கதை, கவிதைப் போட்டிகளிலும் பரிசு வென்றதுண்டு.

விக்கிரமன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட 'இலக்கியபீடம்' இதழ் நடத்திய அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியில் இவர் எழுதிய 'திக்குத் தெரியாத காட்டில்' என்னும் நாவலுக்கு முதற் பரிசு கிடைத்துள்ளது. விளம்பரப் படங்கள் மற்றும் குறும் படங்களுக்கு பின்னணிக் குரல் கொடுத்துவரும் ஷைலஜா, இணைய வானொலியில் சிலகாலம் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இசை, ரங்கோலி, ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு உண்டு. மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் அனைத்துத் தமிழ் நாடக மன்றங்களுக்கான நாடகப் போட்டியில் இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது. கோவை, திருச்சி, பெங்களூரு வானொலிகளில் இவரது படைப்புகள் ஒலிபரப்பாகியுள்ளன. பொதிகைத் தொலைக்காட்சியில் சித்தர்கள் பற்றிய கலந்துரையாடலில் பதினெட்டு வாரங்கள் கலந்துகொண்டிருக்கிறார்.

நிறைவாக இன்னும் எதுவும் எழுதவில்லை எனும் நெருடல் இருக்கிறது என்று கூறும் ஷைலஜா, "சொற்களையே சார்ந்திருக்கும் எழுத்துத் துறையில், அனைவரும் பாராட்டி வியக்கும்படியான சிறப்பான சிறுகதை ஒன்றைப் படைக்கவேண்டும், அது மொழி எல்லையைக் கடந்து எல்லாருடைய மனங்களையும் ஊடுருவிச் செல்லவேண்டும், காலத்தால் அழியாத கலைப் படைப்பாய் இருக்கவேண்டும். இதுவே எனது லட்சியம்" என்கிறார்.

கணவர், குழந்தைகளுடன் பெங்களூரில் வசித்து வரும் ஷைலஜா, அங்குள்ள கன்னட அமைப்பினருடன் இணைந்து சமூகப் பணிகளும் ஆற்றுகிறார். "பெண்கள் அழுமூஞ்சிகள். அவர்களால் நகைச்சுவை எழுதமுடியாது என்ற பொதுவான கருத்தை என் எழுத்தின் மூலம் மாற்றியமைக்க விரும்புகிறேன்" என்கிறார் மாறாத புன்னகையுடன் ஷைலஜா. அதில் அவர் வெற்றி கண்டிருக்கிறார் என்பதைத்தான் அவரது எழுத்துகள் சொல்கின்றன.//////


************************************************************************


இதை சொல்லாமல் விட்டால் சிலர் ஏன் சொல்லல்லேன்னு கோபிக்கிறார்கள் சொன்னால் ரொம்பத்தான் பெருமையடிச்சிக்கிறோமோன்னும் எனக்குத்தோன்றுகிறது! என்னவோ போங்க எப்போதும் நான் தோற்கிறேன்!

சரி அப்படியே அன்னிக்கு நூல்வெளியீட்டில் பட்டிமன்ற பேச்சாளர் திருமதி.பாரதிபாஸ்கர் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் பாராட்டிப்பேசினதையும் சிலவரிகள் சொல்லிடறேன்.


“பேச்சாளர்களுக்கு பேசினதும் உடனே கைதட்டல் கிடைச்சி அந்த மகிழ்ச்சி சில நிமிஷங்களுக்குத்தான், ஆனா எழுத்தாளர்களுக்கு அவங்களைப்பார்க்காமலேயே வாசகர்கள் அவங்க எழுத்துக்களை தினமும் நினைச்சி மகிழ்கிறாங்க.அது நிரந்தர நினைவுகள்! கதை சொல்லும் யுத்தி காலங்காலம் ஆனாலும் அழியாது மாறாது! என்றோ படித்த ஒரு சிறுகதையின் ஒரு சில வரிகளும் படைப்பில் வந்த கதாபாத்திரங்களும் என்ரும் நம்மனசில் பூவாய் வாசம் வீசிக்கொண்டிருக்கும்! மாமியார்களையும்(சீரியலில்) சாமியார்களையும்(செய்தியில்) காண்பித்துக்கொண்டிருக்கும்
தொலைக்காட்சியில் மனங்களைத்தொலைத்துவிடாமல் இப்படி எழுத்தாளர்களின் சங்கமத்திற்கும் நூல் வெளியீட்டுவிழாவிற்கும் இத்தனை பேர் வந்திருப்பது வாசிப்பின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது ”

இன்னும் சுவைபட பேசினார் அதை நான் இங்கே எழுதுவதைவிட காதாரக்கேட்டால்தான் இனிமை! பேச்சுகக்லை எல்லாருக்கும் வந்துவிடுமா என்ன?அல்லது யார் பேசினாலும் நம்மால்தான் கேட்டுவிடமுடிகிறதா? அன்று பாரதிபாஸ்கர் ஒருமணிநேரம் பேசினதை முடித்தபின்பே உணர்ந்தோம் அப்படி ஒரு கட்டிப்போட்ட பேச்சு!


ஏப்ரல் 10ம்தேதி நங்கநல்லூர்ல ஒரு கவியர்ங்கம்ல கவிதை வாசிச்சேன் அன்னிக்கு எடுத்துட்ட போட்டோ இது! மதுமிதா இசைக்கவிரமணன் ஆர் எஸ் மணி ஹரிக்ருஷ்ணன் த்ரிசக்தி சுந்தர்ராமன் இவர்களோட கீழ படத்துல நானும் ஆரஞ்சு சல்வார்ல !

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7bu9-BpwPJznR5jHJWsenuTZppXpJk3FXP76BU3cGt2SQ3yw6uGC91dfhLXkpmpd3Mw8DYLSf7xdBy-kgWXezyGlPQbTr_FUbP2y4tuJ5u0ZxauIZ706w3fcvgzySwxD1dXLWJg/s1600/kaviyarangam+with+Madhumitha+Rasmaniji+ramanan+ad+thrishakthi+MD.jpg">










இதுல பாரதிபாஸ்கர் என் நூலை வெளியிட முதலில்பெறுபவர் மக்கள்குரல் ராம்ஜி அவர்கள் நீலசேலைல நான்!

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjz6jq3dFzagoQNLryez6i_axOk5OJuz3ehKnji0aJVPqcn47b2NKd-F38zcmC9nczQpwm8vNKjo-vor0raU2Qi2wsIhjbMPOr0yYhYZHUyl3eu4oJ_TnC3u0kJifDrVmCG5-52Xw/s1600/bookrelease+snap2.jpg">

இதுவும் புத்தகவெளியீட்டில் மேடையில் நிற்கும்போது.....




<

எனது நூல் அவனும் இவனும் சிறுகதைத்தொகுப்பு நூல் தெரியுதா? .... அங்கே ஸ்டாலில் விற்பனையில்!




மதுமிதா தமிழ்ச்செல்வியின் நூல் மேடையில் மஞ்சள்பட்டுசேலையில் மது!

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi5lNAP8SzFVYgMbgbM3PW7a4IF5DEz3qXwQLwNxUEuhyphenhyphenW5_3zYYvydZ-hRsDjdPKM4WXx_8KUgB6xgjOqmVhQefQYqD4ajfCtvQI_00IscvYsJ0uYGEoIP8-QFnWTo114T8UGCsQ/s1600/jamal+++ithula.jpg">

ஜம்முனு சிரிச்சிட்டு ஜமால் எங்களுடன்! துளசி மேடத்துடனும்///







யார் இந்த நால்வர்? கண்டுபிடிச்சா...யெஸ்...அதான் பரிசு!



எனக்காக அன்று வந்த துளசிமேடம் உஷா நிர்மலா ஜமால் மற்றும் அனைவருக்கும் மறுபடி நன்றி.

45 comments:

  1. முதலில் தென்றல் வந்தது. பிரமிக்க வைத்தது. உங்கள் லட்சியங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் ஷைலஜா!

    அடுத்து சேதி வந்தது நூல் வெளியீட்டு விழா பகிர்வாய்:)! படங்களுக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ஷைலஜா!

    ReplyDelete
  3. வாழ்த்துகள் சைலஜா

    ReplyDelete
  4. //இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை//

    kaalai kaatunga-kka!
    225 post kooda naangellam ezhuthinathu illa :)

    //இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது//

    video plz...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்...:)

    ReplyDelete
  6. வாழ்த்துகள்!
    அன்றைய தினம் நான் உங்களைச் சந்தித்துப் பேசலாம் என எண்ணினேன். ஆனால் ஏதோ சிறு தயக்கம். பேசாமல் வந்துவிட்டேன் :-)

    ReplyDelete
  7. //சிறுகதைத்தொகுப்பு நூல் தெரியுதா? .... அங்கே ஸ்டாலில் விற்பனையில்!//

    தெரியுது தெரியுது பளிச்சென்று
    தெரியுது :)

    //ஜம்முனு சிரிச்சிட்டு ஜமால் எங்களுடன்!//

    ஓ..இவர்தான் ஜமாலா!

    //யார் இந்த நால்வர்? கண்டுபிடிச்சா...யெஸ்...அதான் பரிசு!//

    ஹேய்! ஷைலு.. சொல்லட்டுமா சொல்லட்டுமா வரிசையாக சொல்லட்டுமா...?

    மது,நிர்மலா,உஷா,ஷைலஜாமேடம்:)

    பரிசை எப்ப அனுப்பப்போறீங்க? :)

    ஏன் துளசி அதில் இல்லை?!

    மேலும் வளர மீண்டும் என் வாழ்த்துகள் ஷைலு :)

    ReplyDelete
  8. இன்னும் இன்னும் வர வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை]]

    ரகத்துக்கு ஒரு ப்லாக் வைக்கலாம் போலிருக்கே ...

    ReplyDelete
  10. //ராமலக்ஷ்மி said...
    முதலில் தென்றல் வந்தது. பிரமிக்க வைத்தது. உங்கள் லட்சியங்கள் எல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் ஷைலஜா!

    அடுத்து சேதி வந்தது நூல் வெளியீட்டு விழா பகிர்வாய்:)! படங்களுக்கும் மிக்க நன்றி!

    2:44 PM
    /மிகவும் நன்றி ராமலஷ்மி ! தென்றலாய் உங்களின் முதல்பின்னூட்டம்!

    ReplyDelete
  11. // Kanchana Radhakrishnan said...
    வாழ்த்துக்கள் ஷைலஜா!

    3:11 PM


    மஞ்சூர் ராசா said...
    வாழ்த்துகள்
    .......


    மிகக் நன்றி காஞ்சனா மற்றும் மஞ்சூர்ர்ராசா!

    ReplyDelete
  12. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை//

    kaalai kaatunga-kka!
    225 post kooda naangellam ezhuthinathu illa :)

    //இவர் நடித்ததற்குச் சிறந்த நடிகைக்கான முதல் பரிசு கிடைத்திருக்கிறது//

    video plz...

    5:55 PM


    <<<>>>>>>
    ஹலோ நியூயார்க்நாயகரே!10வய்சிலிருந்து எழுதறேனே இதுக்கு என்ன பெரிய பெருமை? ஒருபக்கக்கதைலாம் இதுல சேர்த்து அடிச்சிவிட்ருக்கேங்கிற ரகசியம் உங்களூக்கு மட்டும் என்ன?:)

    ReplyDelete
  13. ரவி...நாடக வீடியோல்லாம் கிடையாது! போட்டோதான் இருக்கு சாட்சிக்கு விருதுவாங்கின பித்தளைக்க்கேடயம் இருக்கு..நல்லா தேச்சி பளபளகக் வச்சி போட்டோ எடுத்து இஙக் சேக்கறேன்!

    ReplyDelete
  14. /////

    நன்றி மௌலி இந்த ஷைலஜா எதையாவது இப்படி போட்டுக்கிட்டே போரடிக்கிறாங்கன்னு யாராவது சொல்லப்போறாங்க இனிமே ஒண்ணும் கிடையாது ஷ்டாப்பு என்ன?:)

    ReplyDelete
  15. // "உழவன்" "Uzhavan" said...
    வாழ்த்துகள்!
    அன்றைய தினம் நான் உங்களைச் சந்தித்துப் பேசலாம் என எண்ணினேன். ஆனால் ஏதோ சிறு தயக்கம். பேசாமல் வந்துவிட்டேன் :-)

    1:51 PM
    ////வாஙக் உழவன் அடட்டா அன்னிக்கு வந்திருந்தீங்களா நான் தெரிஞ்சா தயங்காமல் பேசி இருப்பேனே! இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்!

    ReplyDelete
  16. meenamuthu said...
    //சிறுகதைத்தொகுப்பு நூல் தெரியுதா? .... அங்கே ஸ்டாலில் விற்பனையில்!//

    தெரியுது தெரியுது பளிச்சென்று
    தெரியுது :)

    //ஜம்முனு சிரிச்சிட்டு ஜமால் எங்களுடன்!//

    ஓ..இவர்தான் ஜமாலா!

    //யார் இந்த நால்வர்? கண்டுபிடிச்சா...யெஸ்...அதான் பரிசு!//

    ஹேய்! ஷைலு.. சொல்லட்டுமா சொல்லட்டுமா வரிசையாக சொல்லட்டுமா...?

    மது,நிர்மலா,உஷா,ஷைலஜாமேடம்:)

    பரிசை எப்ப அனுப்பப்போறீங்க? :)

    ஏன் துளசி அதில் இல்லை?!

    மேலும் வளர மீண்டும் என் வாழ்த்துகள் ஷைலு :)

    2:40 PM

    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.

    வாங்க மீனாஜி! மகிழ்ச்சியா இருக்கு உங்க வருகையே!’’நால்வரையும் கண்டு பிடித்த மலேசியநங்கையே வாழ்க பல்லாண்டு!

    துளசிமேடம் போட்டோ ஜமால்கூட எடுத்துட்டது இருக்கு அதையும் அளிக்கிறேன் வாழ்த்துக்கு நன்றி மீனா!

    ReplyDelete
  17. //நட்புடன் ஜமால் said...
    இன்னும் இன்னும் வர வாழ்த்துகள்.

    2:58 PM


    நட்புடன் ஜமால் said...
    இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை]]

    ரகத்துக்கு ஒரு ப்லாக் வைக்கலாம் போலிருக்கே ...

    2:58 PM

    //////<<<>சூ ரொம்பல்லாம் கிண்டல்பண்ணக்கூடாது ஜமால்:):)

    ReplyDelete
  18. வாழ்த்துக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன் ஜமால் ஸாரி...நன்றி!(இந்த சாக்குல பின்னூட்ட எண்ணிக்கையை அதிகமாக்குகிறேன்னு யாராவது சொல்லப்போறாங்க:)(அது நிஜம்னாலும்:))

    ReplyDelete
  19. ஷைலஜா அக்காவிற்கு வாழ்த்துகள்.

    உங்களுடைய படைப்புகளைக் காணாமல் இத்தனை நாளாய் என்ன செய்து கொண்டிருந்திருக்கும் என் கண்கள்?

    இனி தேடிப்பிடித்து படித்து... பகிர்ந்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  20. vaazhthukal madam

    ReplyDelete
  21. //எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" //

    இதை சொன்னாதில் உங்களுக்கு எம்புட்டு மகிழ்ச்சியோ அதை விட ஒரு படி எனக்கு மேல அக்கா....அன்னையர் தினத்தில் நீங்க போட்ட அந்த பதிவையும் மறக்கவோ முடியாது ;)

    மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    அந்த 4பேர்ல ஒருதங்க ! ;)

    ReplyDelete
  22. ஆகா! புல்லரிக்கிறது. எங்கேயோ போயிட்டிருகிறீங்க! மேலும் மேலும் படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்!!
    ஹரி கிருஷ்ணன் ஐயாவையும் மை.பா. அக்காவையும் தான் எனக்கு அடையாளம் காண முடிகிறது.

    ReplyDelete
  23. நால்வரில் மூவரை நன்கு அடையாளம் தெரிகிறது :)

    கண்டுபிடித்தால் பரிசு கண்டிப்பாக மைசூர் பாகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விடை சொல்லாமல் எஸ்ஸாகிறேன் :))))

    ReplyDelete
  24. வாழ்த்துகள் ஷைலஜா.

    ReplyDelete
  25. சூப்பர் அக்ஸ், கலக்குங்க, வாழ்க வளமுடன்
    ஷிவ்ஸ் :)

    ReplyDelete
  26. காப்பர் சல்பேட் புடவையில இருக்குற மைதிலியக்கா. உங்களைப் பத்தி ஒன்னுமே தெரியாம வாலாட்டிக்கிட்டு இருக்கோமோன்னு இருக்கு. சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதீர்!

    ReplyDelete
  27. ////’மனவிழி’சத்ரியன் said...
    ஷைலஜா அக்காவிற்கு வாழ்த்துகள்.

    உங்களுடைய படைப்புகளைக் காணாமல் இத்தனை நாளாய் என்ன செய்து கொண்டிருந்திருக்கும் என் கண்கள்?

    இனி தேடிப்பிடித்து படித்து... பகிர்ந்துக்கொள்கிறேன்.

    4:28 PM

    ////


    நன்றி மனவிழி சத்ரியன்! விலாசம் தேவைன்னா தரேன் நீங்க அங்கே வாங்கிக்கலாம் என் புத்தகங்களை!

    ReplyDelete
  28. ///Annam said...
    vaazhthukal madam

    4:32 PM


    முத்துலெட்சுமி/muthuletchumi said...
    vaazthukkal
    /////

    மிக்க நன்றி அன்னம்
    நன்றி முத்துலட்சுமி !நலமா?

    ReplyDelete
  29. ////கோபிநாத் said...
    //எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" //

    இதை சொன்னாதில் உங்களுக்கு எம்புட்டு மகிழ்ச்சியோ அதை விட ஒரு படி எனக்கு மேல அக்கா....அன்னையர் தினத்தில் நீங்க போட்ட அந்த பதிவையும் மறக்கவோ முடியாது ;)

    மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

    அந்த 4பேர்ல ஒருதங்க ! ;)

    2:24 AM

    //////
    நினைவிருக்கா கோபி அந்தப்பதிவு? நன்றி மிக எல்லாத்துக்கும்/

    ReplyDelete
  30. ///Vijay said...
    ஆகா! புல்லரிக்கிறது. எங்கேயோ போயிட்டிருகிறீங்க! மேலும் மேலும் படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்!!
    ஹரி கிருஷ்ணன் ஐயாவையும் மை.பா. அக்காவையும் தான் எனக்கு அடையாளம் காண முடிகிறது.

    9:30 AM

    ////

    வாங்க எனதருமை இலங்கைச்சகோதரனே! எங்கயும் போகல இதே ஊர்லதான் இருக்கேன்....வாழ்த்துக்கு நன்றி . ஹரி அண்ணா வீட்டுக்கு அன்னிக்கு நாம் போனதால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரிகிறது!

    ReplyDelete
  31. ///ஆயில்யன் said...
    நால்வரில் மூவரை நன்கு அடையாளம் தெரிகிறது :)

    கண்டுபிடித்தால் பரிசு கண்டிப்பாக மைசூர் பாகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விடை சொல்லாமல் எஸ்ஸாகிறேன் :))))

    10:11 AM
    ////////

    ஆயில்! கண்டுபிடிச்சிடீங்களா? வெரிகுட் ...அதை உஙக்ளுக்கே அனுப்பிடறேன் நன்றி ஆயில்யன் வருகைக்கும் குறும்புக்கும்!

    ReplyDelete
  32. பாலராஜன்கீதா said...
    வாழ்த்துகள் ஷைலஜா.

    12:57 PM


    Dr.Srishiv said...
    சூப்பர் அக்ஸ், கலக்குங்க, வாழ்க வளமுடன்
    ஷிவ்ஸ்
    ///
    நன்றி பாலராஜன் கீதா சிவசங்கர் என்னும் ஷிவ்ஸ்!

    ReplyDelete
  33. ///குமரன் (Kumaran) said...
    காப்பர் சல்பேட் புடவையில இருக்குற மைதிலியக்கா. உங்களைப் பத்தி ஒன்னுமே தெரியாம வாலாட்டிக்கிட்டு இருக்கோமோன்னு இருக்கு. சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதீர்!

    11:53 PM
    ///

    <<<<>>>.குமரரே! சிறுபேரா அதானே எப்போதும் நிரந்தரம்?:) அதுல தானேஅன்பும் பாசமும் வழிகிறதாம்?
    அந்தப்பத்திரிகை அன்புடன் கேட்டதால் எல்லாத்தியும் சொல்லவேண்டியதாபோச்சு மத்தபடி அதுல ஏதாவது பெரிய சாதனைன்னு தெரியுதா உங்ககண்ணுக்கு எல்லாம் தகவல்களே! அதனால வழக்கம்போல வாலாட்டிட்டே இருந்தாதான் நானும் ரசிப்பேன் புரிஞ்சுதா குமரா?:)

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் ஷைலு அக்கா! கலக்கறீங்க போங்க!

    ReplyDelete
  35. இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை]]::))


    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. வாவ் வாழ்த்துக்கள் அக்கா..இப்பதான் பார்த்தேன் :-)

    ReplyDelete
  37. Amazing -
    Chandru...

    ReplyDelete
  38. அதுல ஒருத்தர தெரியும்.. மதுமிதா மேடம் எப்படி இருக்காங்க..விசாரிச்சேன்னு சொல்லுங்க.

    ReplyDelete
  39. ஹலோ ஷைல்ஸ், பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு. சொல்லி முடியாது. மரத்தடி குழு எழுத்தாளர்கள் அனைவருமே முத்துக்கள். அதிலிருந்து வந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்மா. துளசி,உஷா,நிர்மலா,மது,ஸ்ரீஹரிகிருஷ்ணன் எல்லோரையும் பார்த்ததும் சந்தோஷம்.
    எல்லா நலமும் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. அனன்யா ரிஷான் சந்துரு கமலக்கண்ணி அம்மன்கோயில்,வல்லிமா எல்லார்க்கும் நன்றி.
    வல்லிமா உங்க பாராட்டில் மனம் குளிர்ந்தேன். ரிஷபன் ! மதுமிதா உஷா நிர்மலா அதுல இருக்காங்க.
    மறுபடி நன்றி

    ReplyDelete
  41. வாழ்த்துக்கள் அக்கா.
    முதல் முறை உங்கள் தளம் வந்தேன்...
    பிரமித்தேன்.
    மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. சே.குமார் said...
    வாழ்த்துக்கள் அக்கா.
    முதல் முறை உங்கள் தளம் வந்தேன்...
    பிரமித்தேன்.
    மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்
    <<>>நன்றி குமார்
    மன்னிக்கவும் தாமதமாய் பதில் இடுவதற்கு!

    ReplyDelete
  43. கலக்கிட்டீங்க ஷைலஜா! என்னால் முடிந்தால், நானும் நூல் வெளியீட்டுக்கு வந்திருப்பேன்.

    தென்றல்ல படிச்சிட்டு அப்பவே வாழ்த்து சொன்னேன். இப்ப மறுபடியும்.

    ஸ்ரீரங்கத்து தேவதை இன்னும் பல நூல் வெளியிட்டு வாழிய பல்லாண்டு:-) ரொம்ப பெருமையா இருக்கு.

    ReplyDelete
  44. //கெக்கே பிக்குணி said...
    கலக்கிட்டீங்க ஷைலஜா! என்னால் முடிந்தால், நானும் நூல் வெளியீட்டுக்கு வந்திருப்பேன்.

    தென்றல்ல படிச்சிட்டு அப்பவே வாழ்த்து சொன்னேன். இப்ப மறுபடியும்.

    ஸ்ரீரங்கத்து தேவதை இன்னும் பல நூல் வெளியிட்டு வாழிய பல்லாண்டு:-) ரொம்ப பெருமையா ///////



    நன்றி கெபி
    ஆனா இங்க வந்திருந்த உங்களை நான் பார்க்க முடியாம போய்டிச்சேன்னு இருக்கு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.