சிறுகதை
முகு!
(ஆகஸ்ட் நம்தோழி மாத இதழில் இந்தசின்ன கதை வந்துள்ளது!(பின்குறிப்பும் பாருங்க!)
அந்த தனியார் தொலைக்காட்சி நிலையத்திற்கு ரசிகாவுடன் போய் நாற்காலியில் உட்காருகிறேன்..
ரசிகா?
என் குழந்தைதான் .ஒன்றேகால்வயது ஆகிறது. என்குழந்தை என்றேனே தவிர அதை நான் பெற்றேன் என்று சொல்லவரவில்லை..ஆமாம் தத்துக்குழந்தைதான்..முதலில் நான் பெற்ற மகன் நாலுவயதில் இருக்கிறான்.இரண்டாவதாக தத்து எடுத்து ஒரு அனாதைக்குழந்தையை வளர்ப்பதென நானும் என்கணவரும் தீர்மானித்தோம் அதன்படி தத்து எடுத்துக்கொண்ட விவரம் அறிந்து அதனைப்பாராட்டி தொலைக்காட்சியில் அதுபற்றி பேட்டி எடுக்க என்னைப்போல சிலரை இன்று அழைத்திருக்கிறார்கள்.
பிறந்தோம் வளர்ந்தோம் என்று இருக்கலாமா என்ன ஏதாவது சாதனையாய் செய்யவேண்டாமா? அதிலும் சமூகத்திற்கு உதவியாக செய்யவேண்டும் என்றுதான் நான் இந்த தத்து விஷயத்திற்குய் சம்ம்மதித்தேன்.
மொத்தம் பதினாலுபேர் வந்திருந்தோம்.அதில் ஒரு பெண்மணி- வயது என்னைப்போல முப்பதுகளில் தெரிந்தாள்- தனியே வந்திருந்தாள். அவளையும் எங்களோடு நிகழ்ச்சி அமைப்பாளர் உட்காரவைத்தது எனக்கு நெருடலாக இருந்தது.
அருகில் மடியில் சிறுகுழந்தையோடு அம்ர்ந்திருந்தவளிடம் சொன்னேன்”யார் அந்த அம்மா அவங்க நம்மைமாதிரி தத்து எடுத்து வளக்கிற நல்லமனசுக்காரங்களா என்ன? தனியே கையைக்கட்டிட்டுவந்திருக்கா அவளைப்போய் நம்மகூட உக்காத்திட்டுப்பொயிருக்காங்களே?” என்று புலம்பிவிட்டேன்.
குழந்தையை தோளுக்கு மாற்றியபடி அந்தப்பெண்மணி சொன்னாள்
“அம்மா! இந்தக்குழந்தையை அவங்கதான் தத்து எடுத்துருக்காங்க”
“என்ன நிஜமாவா? அப்போ நீங்க ஏன் குழந்தையோட உக்காந்திருக்கீங்க அவங்க கைல கொடுக்கவேண்டியதுதானே?”
“அவங்க என்னையும் தத்து எடுத்திருக்காங்கம்மா... எய்ட்ஸ் நோய்ல முத்தின நிலமைல இருக்கற நான் பெத்த எய்ட்ஸ் நோய் உளள குழந்தைதான்மா இந்தக்குழந்தையும். தத்து எடுக்கிறதுலயே வித்தியாச சாதனை செய்திருக்கிற அவங்களை என்னையும் பேசவச்சி பேட்டி எடுக்கபோறாங்க......கல்யாணம் செஞ்சிட்டும் தான் குழந்தைபெத்துக்காம இப்படி எய்ட்ஸ் உள்ளகுழந்தையை தத்து எடுத்து உறவு ஜனத்தால் ஒதுக்கப்பட்ட என்னையும் தத்து எடுத்து பேணி வளக்கிற தெய்வம்மா அவங்க”
‘
அந்தப்பெண் கண்கலங்கியபோது கர்வத்தில் நிமிர்ந்திருந்த என் தலையும் சட்டென குனிகிறது.
*************************************************************************
(நம்தோழி மாத இதழுடன் இலவச இணைப்பாக ஒரு சிடி தராங்க அதுல நல்ல சிறுகதைகள் புதுமைப்பித்தன் போன்றோர் எழுதினதை குரல்வழி கொடுக்கிறாங்க மேலும் ஒருஆன்மீக சொற்பொழிவும் இருக்கு கேட்க இனிமையான சிடி இது.
இன்னொரு இலவச இணைப்பாக சமையல்குறிப்பு புத்தகம் வருது இம்மாதம் கர்னாடக சமையல் என்னும் தலைப்பில் 6 கன்னடவாசனை அடிக்கிற சமையலை எழுதி இருக்கேன்.
அது என்னோட இன்னொரு பெயர்ல! போட்டோல்லாம் போட்டு கலக்கி இருக்காங்க!(பாக்றவங்கதான கலங்கணும்?!)
Tweet | ||||
வாங்கிப் பார்த்துடுறோம்:)!
ReplyDeleteகதை அருமை. வாழ்த்துக்கள்.
சிறுகதைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteசமையலுமா - இன்னொரு பேரா!!!
அதுல மைப்பா இல்லையோனோ ...
ப்லாக்கில் எழுத்துக்கள் ஒன்றுமே எனக்கு தெரியலையே, நான் ரீடரில் படித்தேன் ...
ReplyDeleteகதை அருமை. வாழ்த்துகள்.
ReplyDeletearumai.. ithuthan en muthal varugai endru ninaikiren
ReplyDeleteகருத்து தெரிவித்த ராமலஷ்மி ஜமால் ராதாக்ருஷ்ணன் எல் கே அனைவர்க்கும் மிக்க நன்றி
ReplyDeleteநல்லாயிருக்குங்க:)
ReplyDeleteCongratulations Shails. kidaiththaal padikkiREn.
ReplyDelete//ரசிகன் said...
ReplyDeleteநல்லாயிருக்குங்க:)
11:28 AM
வல்லிசிம்ஹன் said...
Congratulations Shails. kidaiththaal padikkiREn
////
கருத்து கூறியுள்ள ரசிகன் வல்லிமா இருவருக்கும் மிக்க நன்றி. வல்லிமா புக் கிடைச்சா படிங்க!
அடடே...
ReplyDeleteதத்து - உங்கள் எழுத்தில் இன்னொரு சூப்பர் முத்து
லேசான கன்னட வாசனையுடன் சமையல் குறிப்பா... பலே... ஜமால் கேட்ட மாதிரி அதுல ஒரு குறிப்பு மை.பா. இல்லையே!!??
//jokkiri said...
ReplyDeleteஅடடே...
தத்து - உங்கள் எழுத்தில் இன்னொரு சூப்பர் முத்து
லேசான கன்னட வாசனையுடன் சமையல் குறிப்பா... பலே... ஜமால் கேட்ட மாதிரி அதுல ஒரு
///////
நன்றி ஜோக்கிரி!
மைபா இல்லாதசமையல்குறிப்பு அது:)