சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு!
இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார்பள்ளிகளுக்கு இணையாக 10மட்டும் 12ம் வகுப்பு பொதுதேர்வுகளில் தேர்ச்சி சதவீததை சாதித்துள்ளார்கள்.
ஆசிரியர்களை கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாக சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி தன்னுடைய பள்ளிப்பருவ அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவரதுபேச்சு தனது ஆசிரியர்கள்மீது அவர் வைத்திருந்த அன்பை உணர்த்துவதாக இருந்தது
மனதைத்தொடும் ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார் தன் பேச்சில்.
ஒருமுறை தனது ஆசிரியரின் பிறந்தநாளை ஞாபகம் வைத்து அதனை பத்திரிகை ஒன்றில்புகைப்படத்துடன் அளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.
படத்தைக்கண்ட் பல நண்பர்களுக்குப் பழையநினைவுகளை அது கிளறிவிட அவர்களும் ஆசிரியருக்கு உடனே போனில் வாழ்த்துசொன்னார்களாம் !ஆசிரியர் நெகிழ்ந்துபோய்விட்டாராம்.
இதைத் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் இவருடைய நண்பர்கள் ஆசிரியரின்பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறார்களாம்! இதைச் சொன்ன முரளி மாணவர்களும் ஆசிரியர்களை தங்கள் வாழ்நாளில் மறவாமல் இருக்க வேண்டும் என்றார். ஆசிரியர்களும் மாணவரிடம் அன்போடும் பரிவோடும் நடந்துகொள்ளவேண்டும் அப்போதுதான் சிறந்தகுடிமகனாக ஒரு மாணவன் உருவாகமுடியுமென்றார்.
சென்னை ஐஐடியின் துணைப்பதிவாளர் சூர்யகுமாரும் ஆசிரியரின்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தினார் .விருதுபெற்ற் ஆசிரியர்களுக்கு மறகக்முடியாதபொன்னாளாக அன்றைய தினம் அமைந்தது .
சிலமாதங்கள் முன்பு வாழ்ககையில்வெற்றிபெற்ற பிரபலங்களின் அன்னையர்களை கௌரவித்தது இதே கிருஷ்ணாஸ்வீட்ஸ் நிறுவனம் .அதனை தொலைக்காட்சி ஒன்றில் பிறகு காண்பித்தார்கள். இப்போது நாளைய தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை கௌரவிக்க விழா எடுத்திருப்பது வேர்களை என்றும் நினைவுபடுத்துவதாக இருக்கிறது!
Tweet | ||||
அருமையான பகிர்வு அழகான தலைப்புடன்.
ReplyDeleteஅனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள்
ReplyDeleteஷைலஜா மேடம்....
ReplyDeleteநேற்று ஏன், இன்று நடந்த நிகழ்வையே அவ்வப்போது மறந்து விடும் இந்த இயந்திர உலகில், தான் படித்த பள்ளியையும், தனக்கு எழுத்தறிவித்த ஆசிரியர்களையும் நினைவில் வைத்து, நினைவு கூர்ந்து செய்யும் இது போன்ற நிகழ்வுகள் இன்று மிக மிக அரிதாகி வருகிறது... சுயநலமே வாழ்க்கை என்றாகி விட்ட இந்த நாளில், இது போன்ற நிகழ்வுகள் படிப்பதற்கே மகிழ்ச்சியை தருகிறது..
இந்த அரிய நிகழ்வை நிஜத்தில் நிகழ்த்தி காட்டிய ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி அவர்கள் பாராட்டுக்குறியவர்....
எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்பதை நினைவு கூர்ந்தமை மிக்க நன்று...
பாராட்டுக்கள் ஷைலஜா மேடம்....
பாராட்டத்தக்கதே..
ReplyDeleteபின்னூட்டம் அளித்த ராமலஷ்மி ஜமால் திகழ் கோபி உழவன் ..அனைவர்க்கும் மிக்க நன்றி.
ReplyDelete