கனக்கும் செல்வமும் நூறுவயதும் கணபதியிடன் தரவேண்டிப் பாடியவன்!அமுதம்தரவேண்டி அன்னை சக்தியின் தாள் பணிந்தவன்! கனக்கும் செல்வத்தையும் அவன் காணவில்லை அன்னையிடம் அமுதம்பெற்று ஆயுள் நீண்டு வாழவுமில்லை. ஆனாலும் சத்தியமாய் உரைத்திட்ட அவனது சாகாவரிகளில் நித்தியம் வீற்றிருப்பான் பாரதி!
உணவின்றி ஒருமனிதன் பசித்திருந்தாலும்கூட உலகினை அழிப்பதுதான் சரியென்று சொன்னவன். ஜாதியில் பேதம் சொன்ன பாவிகளைப்பார்த்து சவுக்கடியாய் அவன் கேட்ட கேள்விகளில் தலைகுனிந்தது அந்தக்கூட்டம். அடுப்பூதப் பிறந்தவளா ஆரணங்கு அவள் மகத்துவத்திற்குத் தலைவணங்கு என்றான் மகாகவி!
காக்கையும் குருவியும் உறவென்று சொல்லிக்களிநடம்புரிந்தவன் எரியும் தீக்குள் விரலைவைத்தால் அது தெய்வத்தின் தீண்டலான இன்பம் என்று உணர்ந்து உரைத்தவன்!
நிலைகெட்ட மனிதரை நினைத்துக்கொதித்தவன், நெஞ்சு பொறுப்பதில்லையே என்று துடித்தவன்! எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று இயற்கை அழகினில் மனத்தை பறிகொடுத்தவன்!
ஒருநாள் பாரதி தெருவில் நடந்துபோய்க்கொண்டிருந்தான் அப்போது ஒருவீட்டில் அழும் குழந்தையை வாய்வார்த்தைபேசி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தாள் அது கேட்கவில்லை வீறிட்டு அழுதபடியே இருக்கவும் வீட்டின் உள்ளிருந்த ஒரு வயதான பெண்மணி வாசலுக்குவந்தவள் நடந்துபோகும் பாரதியைப்பார்த்தாள்
“அப்பா பாரதி! இந்தக்குழந்தை ஓயாமல் அழுகிறது இதைதூங்க வைக்க நீ ஒரு தாலாட்டுப்பாடேன்” என்று கேட்டுக்கொண்டாள்.
அதற்கு பாரதி,”தமிழர்கள் எல்லாரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் அதனால் நான் தாலாட்டுப்பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பும் சக்தி கொண்டபாடல்களையே பாட விரும்புகிறேன்” என்று கூறி பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி பாடினார்.
கடைசிவரை பாரதி ஒரு தாலாட்டுப்பாடல்கூட பாடவில்லை!
Tweet | ||||
சுவையான பதிவு.
ReplyDelete"ஓடி விளையாடு நீ
ஓய்ந்திருக்கல் ஆகாது" என்றான் அல்லவா. அவனது மக்கள் உறங்கும் போதும் எழுப்பி விட்டு எழுச்சிப் பாடலை புகட்டியிருப்பானோ?
சுகமொன்றும் பிரமாதமாய் காணாத வாழ்வு அவன் வாழ்வு. ஏனோ லேசாய் மனம் கனக்கிறது.
மகாகவியை நினைவுகூர்ந்து மரியாதை செய்யும் பதிவு. தாலாட்டுப் பாடல் பற்றிய விவரம் எனக்குப் புதிது.
ReplyDeleteமகாகவி பாரதியை நினைவு கூர்ந்து எழுதப்பட்ட இந்த பதிவு மிகவும் சுவாரசியம்....
ReplyDeleteபாரதி அவர்கள் கடைசி வரை ஒரு தாலாட்டு பாட்டு கூட பாடவில்லை என்று நீங்கள் எழுதியதை படித்தவுடன், அட ஆமாம்ல என்று சொல்ல வைத்தது...
மற்றுமொரு நல்ல சுவையான பதிவிற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்....
மகாகவி பாரதியை நினைவு கூர்ந்து எழுதப்பட்ட இந்த பதிவு மிகவும் சுவாரசியம்....
ReplyDeleteபாரதி அவர்கள் கடைசி வரை ஒரு தாலாட்டு பாட்டு கூட பாடவில்லை என்று நீங்கள் எழுதியதை படித்தவுடன், அட ஆமாம்ல என்று சொல்ல வைத்தது...
மற்றுமொரு நல்ல சுவையான பதிவிற்கு வாழ்த்துக்கள் ஷைலஜா மேடம்....
அட! ஆமால்லே!!!!
ReplyDeleteஅருமையான அவதானிப்பு ஷைலூ.
சுவாரசியமான நினைவுகூர்தல்
ReplyDeleteஇதுவரை கேள்விப் படாத தகவல் அதுவும் உங்கள் நடையில் பாரதி இன்னும் அருகில் வருகிறார். நன்றி ஷைலஜா.
ReplyDeletenandri ingu pinnuttam itta anaivarkkum!
ReplyDeleteஅருமை . புதிய விஷயம்.
ReplyDelete