இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!
மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!
காவிரி வெள்ளமென களிமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!
--~--~---------~--~----~------------~-------~--~----~
Tweet | ||||
அறிஞர் அண்ணா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
ReplyDeleteதமிழ் மக்களுக்குத் தமிழ் மட்டும் போதாது, மானுடமும் வளமான வாழ்வும் தேவை என்பதனை உணர்ந்து செயலாற்றியவர்!
தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் மட்டும் போதாது...
வாழ்க்கைக்கு, சுயமரியாதை திருமணங்கள், சட்டப் பூர்வமாக ஒப்புதல்(அங்கீகாரம்) பெற வேண்டும் என்றும் எண்ணிப் பார்த்து வழி வகுத்தவர்!
இன்னும் சில காலம் இருந்திருந்தால், தமிழக அரசியலில் சொல்லத் தகுந்த மாற்றங்களும் மனித நேயமும் உருவாகி இருக்கும்!
அறிஞர் அண்ணா அவர்களை அவரின் கழக உடன்பிறப்புகளே மறந்த நிலையில் நீங்கள் நினைவு கூர்ந்து எழுதியது நன்றாக இருந்தது...
ReplyDeleteபகுத்தறிவு பற்றி அழகாக சொன்னவர்.. பின்பற்றுவோர் தோளில் இன்று மஞ்சள் துண்டு...
அடுத்தவர்களுக்காக உழைக்க சொன்னார். குடும்பத்தில் உள்ள அனைத்து அடுத்தவர்களுக்காகவும் உழைக்கிறார்கள் இவரின் அரசியல் வாரிசுகள்..
நிறைய சொல்லலாம்... இங்கே வேண்டாம்...