Social Icons

Pages

Sunday, July 17, 2011

பூமியை வாழவிடு.









//கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: ‘வைரத்தின் நிழல்கள்’, சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28
வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது//



இப்படி ஒரு அறிவிப்பினை தினகரனை ஆன்லைனில் படித்ததும் எழுதி அனுப்பிவைத்தேன் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால் கவிதையை வாசித்தார்களா இல்லையா பரிசு கிடைத்ததா ஒன்றும் தெரியவில்லை.ஆனாலும் எனது அன்புநட்புவட்டம் வாசித்துக்கூறும் கருத்துக்களைவிட பெரிய பரிசென்ன வேண்டும்என்று வலைப்பூவில் அளித்திருக்கிறேன்!










பூமியைவாழவிடு!








புன்னகையை முற்றிலும்

இழக்குமுன்னமே

எனக்குப் புதை குழி

தோண்டப் போகிறீர்களா மனிதர்களே?

புகையிலைப் படுக்கையை

தயார் செய்து

ஆலைப் புகையிட்டு

பிளாஸ்டிக் மாலை அணிவிக்க

ஆயத்தமாகி விட்டீர்கள்!



என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன்

அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன்

பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன்

கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன்

வனங்களை அமைத்தேன் விலங்கு

இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்

இங்குஎன் குழந்தைகளான

ஆறுகளின்ஆராவரசத்தம் இருந்தன

பறவைகள் ஓயாத ஓசையுடன்

இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.

வனங்களும் பச்சைவயல்களும்

வயல் வரப்பின் மீது அமர்ந்து

வாய்க்கு ருசியாய் அயிரமீன்குழம்புடன்

வெங்காயம் சேர்த்த நீர்ச்சோறு உண்ட

வெள்ளந்திமக்களும் வாழ்ந்தனர்



நாட்டுப்பற்றுகொண்ட

தியாகிகளையும் தலைவர்களையும்

புலவர்களையும் புரவலர்களையும்

என்று நல்லோர்கள் பலரைக்

கண்ட புண்ணியத்தாய் நான்!



இன்று..



தர்மம் தலைகுனிகிறது

ஊழல் உற்சாக ஊற்றாய்

ததும்பி வழிகிறது.



அஹிம்சை அழிந்து

அன்பும் மனிதநேயமும்

அற்பமாகிவிட்டது.



தீவிரவாதிகளுக்குப்

புகலிடமாய் இந்த

பூமித்தாய் ஆகலாமா?.



என்னைக் கண்டபடி

கூறு போட்டு

அடுக்குமாடிக் கட்டிடங்களை

அண்ணாந்து பார்க்குமளவுக்குக்

கட்டிவிட்டீர்கள்

என்கோபத்தை

சின்னக் குலுக்கலில்

சிறுபுருவ நெரிப்பில்

நியாயமாய் தெரிவித்தேன்

புரிந்து கொள்ளவில்லை நீங்கள்

.அல்லது

புரிந்தும் புரியாதது போல்

அலட்சியமாய் இருக்கின்றீரோ?

இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்

தேடுகிறீர்களா என்ன?

அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்

பத்திரப்படுத்தி விட்டீர்களே!




தாயென்கிறீர்கள் என்னை

பேணிக்காக்கத்தான்

மறந்துவிட்டீர் மைந்தர்களே!




ஆறுகளை நீரற்ற சகதி

சேறுகளாக்கிவிட்டீர்,

விலங்கினங்களைத்துரத்தி

வனத்தினில்புகுந்து

வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப

மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.




விட்டுவிடுதலையாகிப்பறந்த

சிட்டுக்குருவிகள் எல்லாம்

விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்

கண்கட்டுவித்தைபோல

காணாமல்போய்விட்டனவே!



ஓசோன் ஓட்டை ஆனதனால்

உலகின் வெப்பமும் கூடியதே!

பருவத்தில்பெய்தமழையை

வருமோஇனி மழை

என ஏங்கி நின்று

வான்பார்த்து

வருத்தத்தில்

வாடி நிற்கிறீர்கள்!



மேனியெங்கும் பாளம்பாளமாய்

வெடிப்புவந்து வேதனையுற்று

மூச்சுவிடவும் முடியாமல்

முனகும் இந்த பூமித்தாயினை

தவிக்கவிடும் மானிடரே!

எந்தையும்தாயும்

மகிழ்ந்துகுலாவி

இருந்த நாடென்று இதனை

உமது சந்ததியினருக்குக்

கைகாட்டிடவும்

பொய்யாய்க்கனவாய்

பழங்கதையாய்

பூமித்தாயின் வரலாறு

போகாதிருக்கவும்

புரிந்துகொண்டு வாழுங்கள்.



வெறும் வேஷமிட்டுவாழும்

வாழ்க்கையினின்றும்

வெளியே வாருங்கள்!

வேருக்குத்தான் நீர் தேவை எனும்

விவேகச்சிந்தனைஉங்களுக்கு

விரைவில்தானே வந்துவிட்டால்

பூமித்தாயாம் நானும்தான்

’பூமியைவாழவிடு’ என்று

பூகம்பமுழக்கமிடமாட்டேன்

பூப்போலே பூமண்டலத்தை

புரிந்து என்றும் காத்திடுவேன்!

4 comments:

  1. வேருக்குத்தான் நீர் தேவை எனும்

    விவேகச்சிந்தனைஉங்களுக்கு

    விரைவில்தானே வந்துவிட்டால்//

    நல்லன எண்ணியது நன்று
    எண்ணிய முடிய பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி said...
    வேருக்குத்தான் நீர் தேவை எனும்

    விவேகச்சிந்தனைஉங்களுக்கு

    விரைவில்தானே வந்துவிட்டால்//

    நல்லன எண்ணியது நன்று
    எண்ணிய முடிய பிரார்த்திப்போம்.

    9:59 PM

    <<<>>>

    ஆமாம் இராஜராஜேஸ்வரி....எண்ணியமுடிந்துவிட்டால் நல்லனவே நடந்துவிடும்..அழகா என் வலைப்பெயர்ல கருத்து சொல்லி இருக்கீங்க அதுக்கு ஸ்பெஷல் நன்றி.

    ReplyDelete
  3. //என்கோபத்தை

    சின்னக் குலுக்கலில்

    சிறுபுருவ நெரிப்பில்

    நியாயமாய் தெரிவித்தேன்

    புரிந்து கொள்ளவில்லை நீங்கள்

    .அல்லது

    புரிந்தும் புரியாதது போல்

    அலட்சியமாய் இருக்கின்றீரோ?

    இரண்டுமே மெய்தான்//

    எப்போ புரிஞ்சிக்கறோமோ அப்பவே பூமித்தாய் பிழைத்துவிடுவாள்.. நம்மையெல்லாம் அரவணைக்க.

    நல்லதே நடக்கும்ன்னு நினைப்போம்.. செயல்படுத்துவோம்.

    ReplyDelete
  4. //26 PM

    அமைதிச்சாரல் said...
    ///எப்போ புரிஞ்சிக்கறோமோ அப்பவே பூமித்தாய் பிழைத்துவிடுவாள்.. நம்மையெல்லாம் அரவணைக்க.

    நல்லதே நடக்கும்ன்னு நினைப்போம்.. செயல்படுத்துவோம்.///

    12:39 AM

    அந்த நினைப்புதான் நம்மை வாழவைக்கிறது நன்றி அமைதிச்சாரல் வருகைக்கும் பின்னுட்டம் இட்டதற்கும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.