Social Icons

Pages

Saturday, August 20, 2011

ஓ.. பட்டர் ஃப்ளை!

வண்ணாத்திப்பூச்சிகள் பார்க்க அழகானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது பட்டாம்பூச்சி என்றும் இதை சொல்கிறார்கள்..வண்ணாத்துப்பூச்சியா வண்ணாத்திப்பூச்சியா எது சரி? வண்ணாத்திப்பூச்சி வயசென்ன ஆச்சி என்று திரைப்பாடல் நினைவுக்குவருகிறது. பூப்பூவா பறந்து செல்லும் பட்டுப்பூச்சி அக்கா என்ற பாட்டு ஓ..பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை இப்படி சில பாட்டுக்களும் நினைவுக்கு வரணுமே!

வண்ணாத்திப் பூச்சிகள் எப்போதும் தோட்டங்களில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் அவற்றை சில இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படி உட்காருகின்றன தெரியுமா? தங்கள் உடலுக்குத் தேவையான உப்பினை உரிஞ்சி எடுத்துக் கொள்வதற்காகத் தான்.(இந்ததகவலை பறவைகளைப்பற்றீய பரந்த ஞானம் உள்ள திரு கல்பட்டுநட்ராஜன் சார் சொல்லி்ருக்கிறார்)


.
பட்டர்ஃபிளை எபெக்ட் என்றால் ஒரு சிறிய மாற்றமும் பெரிய ஒரு மாற்றத்தை தோற்றுவிக்க கூடிய தன்மை உடையது எனும் பொருள்பட உள்ளதை விக்கிப்பீடியா மூலம் அறிந்துகொண்டேன். அதாவது வண்ணாத்திப்பூச்சி பறக்கும் எபெக்டு பெரிய சுனாமிவரக் காரணம் ஆகலாமாம். பூனை நாய்க்கெல்லாமும் பூமில வரப்போகிற இயற்கை சீற்றங்கள் பற்றிய முன் எச்சரிக்கை உணர்வு இருக்குமாம்.பட்டர்ஃப்ளை பார்க்குகள் வெளிநாட்டில் குறிப்பா கனடாவில் மிகவும் பிரபலம் என்றாலும்

கார்டன் சிடி ஆஃப் இண்டியா என்கிற் பெங்களூரின் பன்னார்கட்டா பகுதியில் சற்றும் செயற்கை சூழலின்றி காடுகள் அமைந்த பகுதியில் நகரின் தெற்கே சிடியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பன்னார்கட்டா நேஷனல் பார்க்கிற்கு தினமும் பல்லாயிரம் மக்கள் வந்துபோகிறார்கள்.-- லையன் சஃபாரி (Lionsafari)எனப்படிம் சிங்கங்களை சுதந்திரமாய் அலையவிட்டு நாம் வாகனக்கூண்டிலிருந்து அவைகளை அருகே சென்று பார்ப்பது இங்கு பலவருடங்களாக உள்ளது ஆனால் சிலவருடங்களாக மட்டுமே பட்டர்ஃப்ளைபார்க் என்று வண்ணாத்திப்பூச்சிகளுக்கென்றே பிரத்தியேகப்பூங்காவினை அமைத்துள்ளனர். இதைப்பற்றி சொல்லத்தான் வண்ணாத்திப்பூச்சி பற்றி சின்ன அறிமுகத்தோட பதிவு ஆரம்பமானது!

இந்த பட்டர்ஃப்ளை பார்க்குல பெரியவர்களுக்கு30ரூபாயும் சிறுவர்களுக்கு 15ரூபாயும் டிக்கட் வசூலிக்கின்றனர்.

இந்தப்பார்க்கில் நீங்கள் புகுந்துவிட்டால் அவ்வளவுதான்! சிறகடிக்கும் பட்டுப்பூச்சியாய் மகிழ்ந்துபோய்விடுவீர்கள். அழகழகான வண்ணத்துப்பூச்சிகளைப்பார்க்கும்போதே ’ஓ பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை பறித்தாய் என் மனதை’ என்று பாடத்தோன்றும். எத்தனை வண்ணங்கள் அதன் உடலில்! வண்னத்துப்பூச்சிகள் வந்து அமருவதற்காகவே வளர்க்கப்படும் ரோஜா தோட்டம் பழம் கொண்ட மரங்கள் சிறு ஓடைகள் என்று உள்ளம் கொள்ளைபோகும் விததில் அமைந்துள்ளது இந்த பட்டர்ஃப்ளைபார்க்கில் .விதம்விதமான ரோஜாக்களைப் பார்ப்பதா பச்சை ஆரஞ்ச் மஞ்சள் நீலம் சிவப்பு என்று சிறகில் கொண்ட ஓவியத்தீற்றலுடன் வண்ணத்துப்பூச்சிகள் அங்கும் இங்கும் பறக்கின்றதைப்பார்ப்பதா?


நம் கையில் நம் தலைமேல் அமர்ந்து ஹலோ சொல்லிப்போகின்றன. எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாரதிபோல பாடத்தோன்றும் அளவிற்கு அந்த இடத்தில் நமக்குப்பரவசம் தோன்றுவது நிஜம்!

ஏழரைஏக்கர் நிலப்பரப்பில் 10000சதுர அடி டோம் அதாவது வட்டவடிவமான வளைவுப்பகுதிகொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தபார்க்கில் ஒரேநேரத்தில் இருபதிலிருந்துமுப்பது வகை வண்ணத்துபூச்சிகளைப் பார்க்கலாம்

விலங்குகளுக்கு மட்டும் தான் பூங்கா இருந்தது இப்பொழுது வண்ணத்துப்பூச்சிகளுக்கும் உள்ளது இது அக்டோபர்நவம்பர் மாதங்களில் மட்டுமே திறந்திருக்கும் ஏனெனில் வண்ணத்துப்பூச்சிகளுக்கான சீசன் இதுதான் என்பதால் குறிப்பிட்ட இருமாதங்கள் மட்டுமே நீங்கள் அதிகம் அவைகளைக்கண்டு மகிழலாம்! சில நேரங்களில் பட்டாம்பூச்சிகள் நம்ம கண்ணுக்கு தென்படாம ஏமாத்துது என்று சிலர் புகார் சொல்கிறார்கள். அதென்னவோ நாங்கபோகிறபோதெல்லாம் வந்துடுதே(மலர்முகம் என்பதாலோ? !!(ஓவர்தான் பொறுத்துக்குங்க)!!

என்ன எல்லோரும் இந்த சீசனுக்கு புறப்பட்டுவிட்டீர்களா பெங்களூர் பட்டர்ஃப்ளைபார்க்கிற்கு?!


--

2 comments:

  1. பறக்கும் பூக்கள் போலிருக்குது வண்ணத்துப்பூச்சிகள்.

    ReplyDelete
  2. //இந்த சீசனுக்கு புறப்பட்டுவிட்டீர்களா பெங்களூர் பட்டர்ஃப்ளைபார்க்கிற்கு?! //

    பெங்களூரிலேயே இருந்து கொண்டே இன்னும் போகலை:))! இந்த சீசனுக்கு முடிகிறதா பார்க்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.