சென்றவாரத்தின் ஆரம்பதினத்தில் மதியம் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்த நிகழ்ச்சி பற்றி பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் முதல்
ஒ.பாமா(ஒரத்த நாடு பாமா! தூரத்து உறவினர்)வரை அனைவருக்கும்
தண்டோரா போடாத குறையாக அறிவித்துவிட்டுக்காத்திருந்தேன்.
அப்போது வரவில்லை.பிறகு திங்கள் இரவு வழக்கம்போல 9-30க்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்தது. கொட்டகொட்ட 11மணிவரை முழித்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்! வரவே இல்லை!
கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் என்னும் நிகழ்ச்சி யைப்பற்றி பலர் அறிந்திருக்கலாம்.பொதிகை தொலைக்காட்சியில் ஒருவருடமாக வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 930லிருந்து 10வரை ஒளீபரப்பாகும்.
நிகழ்ச்சியை அமைப்பவர் இசைக்கவி ரமணன் .ரமணன் கவிஞர் பாடகர் இசை அமைப்பாளர் சொற்பொழிவாளர் 24தடவை இமயம் சென்றுவந்தவர், பாரதி பக்தர் பராசக்தி மைந்தர்! அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதே பெருமையான விஷயம்.
மார்ச்மாதம் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சிபதிவானது. வழக்கமாய் திங்கள் கிழமை வரவேண்டியது சித்திரை புத்தாண்டிலிருந்து நாள்+நேரம் மாறிப்போனது.
என்னுடன் திரு ஹரிகிருஷ்ணன்(இலக்கிய ஆர்வலர்களுக்கு இவரை கண்டிப்பாக தெரியும்) அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்படி இப்படிபோன செவ்வாய்க்கிழமை மதியம்
4-10க்குஇஞ்சித்தேநீர்போட்டுக்கொண்டிருக்கிறேன் குறுஞ்செய்தி மணியடித்தது 4 30க்கு கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி நீங்கள் பங்குகொண்டது வருகிறது என.
யாருக்கும் தெரிவிக்க நேரம் இல்லை அப்படியும் கொஞ்சம் பேருக்கு தெரிவிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும்போலாகிவிட சொல்லிவிட்டேன்.
“அன்னிக்கே மத்தியானம் ஒருமணீக்குமேல காத்திருந்து ஏமாந்தோம்...என்னவோ போ” என்று அலுத்துக்கொண்டாள் காலனி சிநேகிதி
விசிஆரை உயிர்ப்பித்து காசட்டை நுழைத்து அது மறுத்து திரும்பிவர
அதட்டிக்கெஞ்சி ஒழுங்காய் நிகழ்ச்சியை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்துக்காத்திருந்தேன்
நல்லவேளையாய் 430க்கு நிகழ்ச்சி வந்தேவிட்டது.
பதிவும் செய்துவிட்டேன் முப்பது நிமிஷ நிகழ்ச்சி,ஆனால்பாருங்கள் அதை விசிடியாக மாற்றி யுட்யூப்பில் அளிக்க மறுநாள் ஆர்வமாய் கடையில் கொண்டுகொடுத்தேன் இரண்டொருநாளில் தருவதாக சொன்ன கடைக்காரர் கடையைப்பூட்டிக்கொண்டு எங்கேபோனாரோ தெரியவே இல்லை.செல்லில் ஒரு சொல்லும் கிடைக்கவில்லை!
அன்று திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களும் நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தார் ஆனால் கடைசி சில நிமிஷங்களில்அவர் பதிவிலும் மின் தடை ஏற்பட்டுவிட்டது பெரும்பாலும் நிகழ்ச்சிபதிவானதை யுட்யூப்பில் அளித்துள்ளார் இங்கே அதையே உங்களுக்கும் அளிக்கிறேன்.
பார்த்து கேட்டு கருத்துகூறினால் மகிழ்வேன் நன்றி. இரண்டு சுட்டிகளும் அல்லது ஏதேனும் ஒன்றாகிலும் வேலை செய்யும்!
கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி இங்கே
அல்லது இங்கே
http://youtu.be/0S4KJBwBF-0