Social Icons

Pages

Tuesday, April 24, 2012

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்!

சென்றவாரத்தின் ஆரம்பதினத்தில்  மதியம் ஒளிபரப்பாகும் என்று அறிவித்திருந்த  நிகழ்ச்சி பற்றி பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் முதல்
ஒ.பாமா(ஒரத்த நாடு பாமா! தூரத்து உறவினர்)வரை அனைவருக்கும்
தண்டோரா போடாத  குறையாக   அறிவித்துவிட்டுக்காத்திருந்தேன்.
அப்போது வரவில்லை.பிறகு திங்கள் இரவு  வழக்கம்போல  9-30க்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வந்தது. கொட்டகொட்ட 11மணிவரை முழித்துக்கொண்டு இருந்ததுதான் மிச்சம்! வரவே இல்லை!

கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்  என்னும்  நிகழ்ச்சி யைப்பற்றி  பலர் அறிந்திருக்கலாம்.பொதிகை தொலைக்காட்சியில் ஒருவருடமாக  வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு 930லிருந்து 10வரை ஒளீபரப்பாகும்.
நிகழ்ச்சியை அமைப்பவர் இசைக்கவி ரமணன் .ரமணன் கவிஞர் பாடகர் இசை அமைப்பாளர் சொற்பொழிவாளர் 24தடவை இமயம் சென்றுவந்தவர், பாரதி பக்தர் பராசக்தி மைந்தர்! அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதே பெருமையான விஷயம்.

மார்ச்மாதம்  பொதிகை தொலைக்காட்சி நிலையத்தில்  நிகழ்ச்சிபதிவானது. வழக்கமாய்  திங்கள் கிழமை வரவேண்டியது சித்திரை புத்தாண்டிலிருந்து நாள்+நேரம் மாறிப்போனது.


என்னுடன் திரு ஹரிகிருஷ்ணன்(இலக்கிய ஆர்வலர்களுக்கு  இவரை கண்டிப்பாக தெரியும்) அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அப்படி இப்படிபோன செவ்வாய்க்கிழமை மதியம்
  4-10க்குஇஞ்சித்தேநீர்போட்டுக்கொண்டிருக்கிறேன்  குறுஞ்செய்தி மணியடித்தது  4 30க்கு  கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி நீங்கள் பங்குகொண்டது வருகிறது என.

யாருக்கும் தெரிவிக்க  நேரம் இல்லை அப்படியும்  கொஞ்சம் பேருக்கு  தெரிவிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும்போலாகிவிட சொல்லிவிட்டேன்.
“அன்னிக்கே மத்தியானம்  ஒருமணீக்குமேல காத்திருந்து  ஏமாந்தோம்...என்னவோ போ” என்று அலுத்துக்கொண்டாள் காலனி சிநேகிதி

 விசிஆரை  உயிர்ப்பித்து காசட்டை நுழைத்து   அது மறுத்து திரும்பிவர
அதட்டிக்கெஞ்சி ஒழுங்காய் நிகழ்ச்சியை பதிவு செய்ய  உத்தரவு பிறப்பித்துக்காத்திருந்தேன்
நல்லவேளையாய்  430க்கு  நிகழ்ச்சி வந்தேவிட்டது.
பதிவும் செய்துவிட்டேன்   முப்பது நிமிஷ நிகழ்ச்சி,ஆனால்பாருங்கள்  அதை விசிடியாக மாற்றி யுட்யூப்பில் அளிக்க மறுநாள் ஆர்வமாய்   கடையில் கொண்டுகொடுத்தேன்  இரண்டொருநாளில் தருவதாக சொன்ன கடைக்காரர் கடையைப்பூட்டிக்கொண்டு எங்கேபோனாரோ தெரியவே இல்லை.செல்லில் ஒரு சொல்லும் கிடைக்கவில்லை!

அன்று திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களும்  நிகழ்ச்சியை பதிவு செய்திருந்தார் ஆனால் கடைசி சில நிமிஷங்களில்அவர் பதிவிலும் மின் தடை ஏற்பட்டுவிட்டது  பெரும்பாலும் நிகழ்ச்சிபதிவானதை யுட்யூப்பில் அளித்துள்ளார் இங்கே அதையே உங்களுக்கும் அளிக்கிறேன்.

பார்த்து கேட்டு  கருத்துகூறினால் மகிழ்வேன் நன்றி. இரண்டு சுட்டிகளும் அல்லது ஏதேனும் ஒன்றாகிலும்  வேலை செய்யும்!


கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் நிகழ்ச்சி இங்கே


அல்லது  இங்கே

http://youtu.be/0S4KJBwBF-0



20 comments:

  1. வாழ்த்துகள் ஷைலஜா. நிகழ்ச்சியை ஒளிப்பரப்பிலேயே பார்த்து மகிழ்ந்தவர்களில் நானும் உண்டு:)!

    ReplyDelete
  2. நிகழ்ச்சியை பார்த்தேன் மகிழ்ந்தேன் . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  3. Anonymous6:03 PM

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  4. நிகழ்ச்சி ஒளிபரப்பான நேரத்து கரண்ட்டைடப் பிடுங்கின மின்சாரத் துறையை நான் எவ்வளவு சபிச்சிருப்பேன்னு எனக்குத் தான் தெரியும். இப்ப யூடியூப்ல கிடைச்சதுல ‌கொள்ளை சந்தோஷம்க்கா. (டவுன்லோடு போட்டுட்டேன்) பாத்து மகிழ்ந்து பின்ன பேசறேன். அதுக்கும் முன்னாடி மட்டற்ற மகிழ்வோடு என் வாழ்த்துக்கள் உங்களுக்கு! (இதோ திரட்டிகள்ல இணைச்சுடறேன்...)

    ReplyDelete
  5. Anonymous6:49 PM

    நல்ல நிகழ்ச்சி கொடுத்ததற்கு நன்றி

    ReplyDelete
  6. Anonymous7:25 PM

    சில மாதங்களுக்கு முன்தான் தற்செயலாக இந்த நிகழ்ச்சியை பார்த்தேன். இந்த வயதிலும் ரமணன் அவர்கள் எவ்வளவு அழகாக பாடுகிறார். அவர் தமிழ் உச்சரிப்பும், குரலும் பிரமாதம். எவ்வளவு ரசித்து, அனுபவித்து பாடுகிறார். நான் மிகவும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சியாகிவிட்டது இது. அன்றிலிருந்து தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன்.
    இந்த நிகழ்ச்சியையும் பார்த்து மிகவும் ரசித்தேன். இப்பொழுது உங்கள் பதிவை படித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன் அந்த ஷைலஜா நீங்கள்தான் என்று. மிகவும் சந்தோஷம். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. எங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் ஷைலஜா.
    நிகழ்ச்சியை பார்த்தேன் ரசித்தேன்.

    ReplyDelete
  9. வாழ்த்துகள். டவுன்லோட் செய்து பார்த்து மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அக்கா...
    கண்டிப்பாக பார்க்கிறேன்...

    ReplyDelete
  11. படத்தை க்ளிக் செஞ்சு அஞ்சு நிமிசம் எதுவும் காணமா.. அப்புறந்தான் யூடி லிங்க் பார்த்தேன்.. :)
    அருமையா வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. எனக்கு ஹரிகிருஷ்ணன் யாருனு தெரியாதுங்க.. கேக்கலாம்னு பாத்தா.. அதான் சொல்லிட்டீங்களே அப்புறம் என்ன?

    ReplyDelete
  13. கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி..ஹரிகிருஷ்ணன் யாருன்னுதெரில்லயா அப்பாதுரை?:) என்ன பண்றது என்பக்கத்துல யார் அமர்ந்தாலும் இதேகதிதான்:) முதல்ல இளைச்சாகணும்!ஆனாலும் டிவி ஸ்க்ரீன் என்னை ரொம்ப மோசமா காட்டிவிட்டது:)

    ReplyDelete
  14. கூகிள் ப்ளஸ்ஸில் பகிர்வைப் பார்த்தேன் ஷைலஜா மேடம்,.. அருமையான விருந்து. ரமணன் அவர்களின் குரலா, உங்கள் கவிதையா, ஆண்டாளைப் பற்றிய பகிர்வா,.. ஹரிகி அவர்களின் பகிர்வா.. எதையென்று குறிப்பிடுவேன். வெல்லப் பிள்ளையாரின் எந்தப் பக்கம் இனிப்புக் கூடுதலென்று சொல்ல முடியும். அதைப் போலத்தான்..

    ReplyDelete
  15. நல்ல வேளை யூ டியூப் இருக்கோ.. பார்க்க முடிஞ்சிதோ.. வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. அக்கா... இன்று வலைச்சரத்தில் உங்கள் பதிவைக் குறிப்பிட்டுள்ளேன். சமயம் கிடைக்கும் போது பார்த்துக் கருத்துச் சொல்லவும்.

    http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_30.html

    ReplyDelete
  18. கிளியக்கோவ்வ்வ்வ்வ்வ்வ்

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  19. திருமதி.ஷைலஜா, எதேச்சையாக உங்கள் வலைக்கு வந்தேன். வாழ்த்துக்கள். இதற்கு முன்பு ஒரு முறை சுந்தர்ஜி பங்கு கொண்ட நிகழ்ச்சி பார்த்திருக்கிறேன்.உறவுகள் பற்றிய இந்த நிகழ்ச்சி பார்த்தபோது நான் எழுதி இருந்த உறவுகள் என்ற கட்டுரையையும் , அம்மா, மர்ரும் யாதுமாகி நின்றாய் என்னும் கவிதைகளையும் நீங்கள் வாசிக்க வேண்டும் என்ற அவா எழுகிறது. இதை நான் உங்கள் மின் அஞ்சல் முகவரி இல்லாததால் இங்கு குறிப்பிடுகிறேன். நிகழ்ச்சியில் வாசிக்கப் பட்ட கவிதைகள் பிரதி இருந்தால் அனுப்பினால் மகிழ்வேன்.

    ReplyDelete
  20. வாழ்த்துகள். பொதிகைத் தொலைக் காட்சியில் பல நல்ல நிகழ்ச்சிகள் வருகின்றன. இது நான் பார்த்ததில்லை. ராஜ் டிவியில் கொஞ்ச நாட்கள் முன் (இப்பவும் வருதோ) விசாலி கண்ணதாசன் வழங்கும் கவிதை நேரம் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.