Social Icons

Pages

Friday, September 21, 2012

அறுபது ஐம்பது நாற்பது முப்பது இருபது!!

பதினைந்து நாள் முன்னாடியே சென்னைக்கு ரயிலில் டிக்கட்டை ரிசர்வ்

செய்து, பட்டுப்புடவை அதற்கு மேட்சாக (கண்ணாடி) வளை முதல் பொட்டு

 வரை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டாயிற்று. சொந்தக்காரங்க

 கல்யாணத்துக்குப்போவதுபோல ஒரே த்ரில்.பின்ன

 மரத்தடிப்பெண்பட்டாளமே வரப்போகுதே என்பதை ஓர்மிச்சாலே மதுரிக்காதா

 என்ன?!
இரவு ரயிலில் ஏறிப்படுத்த அரைமணியில் எங்கள் கம்பார்ட்மெண்டில்

 ஆட்டோ ஒன்று ஓடுவதை உணர்ந்து திடுக்கிட்டு முழித்தேன். அப்பர் பெர்த்

ஆசாமியின் ஆரவாரமான குறட்டை என்று புரிந்துபோனதும் காதுக்குள்

கர்சீப்பை சுருட்டிவைத்துக்கொண்டு தூங்க ஆரம்பிக்கும்போது, எதிர் பெர்த்

 இளம் பெண்,’நோயா...கீப் கொய்ட்.. டெல் மி நௌ அதர்வைஸ்...?” என்று

 ஆங்கிலத்தில் எதிர்முனையுடன் செல்ல ஊடலில்

 இருந்தாள்/கிசுகிசுவெனதான் பேசினாள் கர்சீப் அடைத்த செவிகளிலும் அவள்

 செல்லில்பேசியது கேட்டுவிட்டது:)(சத்தியம் வேணுமென்றே கேட்பேனா

என்ன?:)
அடுத்த கம்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை ஓயாமல் அழுதது. ஆக

சென்னைவரும்போது தூக்கமின்மையில் கண் எரிய ரயிலடியில் காலை

 வைத்தால் சுள் என யாரோ பின் கழுத்தில் சூடு போட்டமாதிரி இருந்தது!

ஆதவனின் நீண்ட கரங்களில் ஒன்றுதான் அது! எங்க பெங்களூர் சன்

  கூலானவர்!
அப்போ ஆரம்பிச்ச வெய்யில் பெருமூச்சு துளசி-கோபால் அறுபதின்


வைபவத்திற்குக்காலை புறப்பட்டு ஓசியில் கிடைத்த ஏசி காரில் சென்று

இறங்கியும் தொடர்ந்தது. சின்ன மணடபமானாலும் சிறப்பானமேடை அங்கே

  மணக்கோலத்தில் துள்சியும் அவர் கணவரும் !
”ஷைலூஊஊஉ”
என்னடா மண்டபத்துல குயில்கூவுதேன்னு பார்த்தா நம்ம மதுமிதா!
பக்கத்துல ரோஜாப்பூக்கு சே லை உடுத்தினமாதிரி வல்லிமா! சிரித்த முகமாய்

 அருணா சினிவாசன்! தொடர்ந்து மரத்தடி தோழி கவிஞர் நிர்மலா! லஷ்மி


என்னும் திருமதி பாலபாரதி! சுப்புத்தாதா(சுப்புரத்தினம்)சுபாஷிணி என்கிற

வலை உலக ரசிகை. பிரபல சிங்கபூர் எழுத்தாளர் சித்ரா ரமெஷின் பெற்றோர்!

 மின்னல் வரிகள் வலைப்பூக்காரர் கணேஷ்!
ஆஹா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா என்று மனசுக்குள்

மத்தாப்பு விரிய பேச ஆரம்பித்தோம்.
யுவக்ருஷ்ணா உண்மைத்தமிழன் பாரதி மணி போன்றோரை மது

அறிமுகப்படுத்தினார். யுவக்ருஷ்ணாவிடம்,”மணமக்களை வாழ்த்திக்கவிதை

கொண்டுவந்திருக்கேன்” என்றதும் அந்த இளைஞரின் முகத்தில்

 புயலடிச்சமாதிரி ஒரு திகில்..அப்புறம் தெரிஞ்சுது அவருக்குக்கவிதை

அவ்வளவா பிடிக்காதாம்!

-- ஹோமம் வளர்த்து பாசுரம் சொல்லி வேதம் ஓதி அறுபதாம்

கல்யாணச்சடங்கு நடந்து தாலி கட்டலும் முடிஞ்சதும் நாங்கள் நாலைந்துபேர்

 கூட்டம் கலையுமுன்பாக அவசர அவசரமாக ஒரு பாட்டு பாடினோம்

 அந்தப்பாட்டு வழக்கமா கல்யாணங்களில் நான் பாடும்பாட்டுதான் ஒரு சில

வரிகளை மாறறினால் போதும் அதே மெட்டுதான் ஆனா புதுசா கேக்க்றவங்க

ஏமாந்துடுவாங்க ரொம்ப பிரமாதமபோல பிரமையை உண்டு பண்ணும்...:)

 என்னபாட்டுன்னு கேக்கறீங்களா காதலிக்க நேரமில்லை படத்துல வருமே

  நாளாம் நாளாம் திருநாளாம் அதான்:)
கைத்தட்டலைக்கேட்டு வாங்கிவிட்டு சாப்பிடப்போனோம்.
அப்போதே சபதம் எடுத்தேன் மனசுக்குள்ள இனிமே இந்த சென்னல

 ஃபங்கஷனுக்கு சேலையே கட்டக்கூடாது காட்டன் சூடிதார்தான் என்று.

 
அதன்படி மாலை உட்லண்ட்ஸுக்கு சென்றேன் கைப்பையில் கவிதை

பத்திரமாக இருந்தது
அந்த மினிஹாலில் மெனிமெனி முகங்கள் ! பாராமுகங்களை பார்த்து

அறிமுகம் செய்துகொண்டோம்.. மரத்தடி உஷா (பழைய பப்பாளிகலர்

போய்விட்டது இப்பொ உஷாக்கு என்பதில் உள்ளூற சந்தோஷம்தான் பின்ன

 எப்பவும் ஃப்ரிட்ஜ்ல எடுத்த தக்காளிமாதிரி்யே இரு்ப்பாங்களாம் இவங்க நாங்க

மட்டும்..?”)
“சென்னை வந்து சுத்தல் ஜாஸ்தி ஷைலஜா வெளிநாட்ல அதிகம் வெளிய

 போகமாட்டேன் அப்டியெபோனாலும் ஏசிகார்லதான் அதான்் இந்தியா வந்து

கொஞ்சம் நிறம்மங்கிட்டென் ”என்றாங்க உஷா.
கேபிள் சங்கர் லதானந்த அண்ணாகண்ணன் அப்துல்லா மோகன்குமாமார்

(வீடுதிரும்பல்)
ஸாதிகா, உண்மைத்தமிழன், , , பலாபட்டறை சங்கர், புதுகை அப்துல்லா,

 ஜோதிஜி, கேஆர்பி செந்தில், வலைச்சரம் சீனா ஐயா, வெங்கட் நாகராஜ்,

யுவகிருஷ்ணா, அதிஷா சிமுலெஷன் சாதிகா ஜாப்பர் சார் பால கணேஷ்

  பட்டர்ஃப்ளை சூர்யா சீனாசார், இன்னும் பலர்பலர் வரலாறுகாணாத

கூட்டதுல நம்ம கல்பட்டு நடராஜன் சார் மாமிகூட சாகி சார்,(மைபா எங்கன்னு

  அங்கயும் யாரோ கேட்டுட்டாங்க)
யாரோ கேட்டாங்க ஹரிகிருஷ்ணன் வந்திருக்காரா என்று? இல்லையே என

சந்தேகமாய் நானும் தேடிப்பார்த்தேன் மரத்தடிப்புகழ் ஷக்திப்ரபா வை பலர்

விஜாரித்தார்கள்.ஜீவ்சை பாலபாரதி நினைத்துக்கொண்டார்.
நான் தான் மோர் என மோருக்கு எதிர் நிறத்தில் வந்தார் அருமை்த்தம்பி மோர்

சுப்ரா!( கண்ணுக்கு மை அழகு காளையர்க்கு கருப்பழகு..அதனால மோர்

 கோச்சிக்கமாட்டாரு:) அருகே வினோத் கூடவே அச்சு! ஆஹா

 இங்கிவரையான் பெறவே எனப்பாடலாம்போல ஒர்ரெ குஷி.
.உதயன் வெறும்கையுடன் வந்தார் நான் வர்ர இந்தமாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம்

 கைல காமிரா இல்லாம வந்த உதயனுக்கு தக்க தண்டனை தர

 யோசிக்கறேன்.

 
பின்ன என்னங்க  தட்டான்பூச்சி சிட்டுக்குருவி ஈ எறும்ம்பெல்லாம் தேடித்தேடி

  பின்னாடி ஓடிப்போயிபோட்டோ எடுப்பாராம் ஒருத்தி புகழ்பெற்ற

 புகைப்படக்காரரின் காமிரால தான் விழ நினைப்பதை பலமுறை சொல்லியும்

 கண்டுக்கமாட்டாராம்! போயா போ உதயா உனக்குக்கல்யாணம் இந்த

ஐபபசில இல்லை கார்த்திகைல தான்:)
அப்புறம் துள்சிகோபால் மேடைல கேக்வெட்டினாங்க நிறைய போட்டோ

எடுத்தாங்க யாராவது போடலாம் இருங்க எல்லாரும் உதயன் இல்லையே:)
அடுதத அரைமணில அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி

நடந்தது ஆமாம் நான் மதுமிதா மற்றும் துள்சிகிட்ட ரகசியமா கெஞ்சிக்கேட்டு

  கவிதைக்கொஞ்ச்ம வாசிக்கவிடுங்க இல்லேன்னா் 11மணிக்குபெங்கலூர்

ரயில்ல ஏறினால் தூக்கமவராதுன்னேன் ”:)
ச்செசேஎன்ன ஷைலு உங்க கவிதை கேட்க ஓடோடி வந்த என்னை

ஏமாத்தாதீங்க என்பதுபோல துளசிமேடம் சொன்னாரா அசரீரியா தெரியலை:)
“உஷ் என் கூட்டத்தை அதட்டிவிட்டு ”அமைதி அமைதி ஷைலஜா

பெங்கலூஊஉர்லேருந்து (எதோ சந்திர்மண்டலம்போலபில்டப்): கவிதை

வாசிக்கன்னே வந்துருக்காங்க” என்றார்.
எழுதிவச்சதை மேடை ஏறி வாசிக்க ஆரம்பிக்கும்போதே யாரோ

கைதட்டினாங்க(பின்னாடி முடியாதுன்னு தெரிஞ்சிருக்கும்:) ஒருவழியா

  வாசிச்சேன் ஏகப்பட்ட காமிராக்கள் கிளிக்கின அடட்டா இப்படியெல்லாம்

காமிராக்கள் க்ளிக்கும்னா இன்னும் நல்ல சல்வார் போட்டிருக்கலாமோ ?
“ என்ன போட்டா என்ன அக்கா இருக்றதுதான் வரும் ?”என்ற

 ஸ்னாபக்வினோத்தின் பின்னாடி ஸ்விம்மிங்பூல் இருந்தது.கண்ணால்

 அதைக்காட்டினேன் தம்பி உடனேகப் சிப் பாவம்:)
அப்புறம் அமர்க்களமாய் பஃஃபே அருமை எல்லாமே! சாப்பிடும்போதே

அரட்டை அரட்டை அரட்டை அதன்றி வேறெதுமில்லை!  எல்லா

வயதுக்காரர்களும் அங்க  இருந்தோம் அதான்  தலைப்பு  இப்படி:)
 
நிறைந்த  மனத்துடன்   ஊருக்குத்திரும்ப  ரயிலேறினேன்.
 
***************************************************************************
 
பிகு...ரொம்ப நாளா என் பச்சைக்கிளி வலைவானில் பறக்கவில்லை...காரணம்  பலருக்குத்தெரிஞ்சிருக்கும்  அருமை அப்பாவை  நான் இழந்து  எழுபது நாட்கள் ஆகின்றன.. மனதைத்தேற்றிக்கொள்ள இத்தனைகாலம் தேவையாக இருந்தது.
 
இதனால்  பொதிகை  நிகழ்ச்சி ஒன்றில் நான் வந்ததையும் இங்கே  தெரிவிக்கமுடியாமல்போனது (யாரது  அதெல்லாம்  அவசியமில்லை என்பது?:)    அதனால் நிகழ்ச்சி யு ட்யூப்  லிங்க் இங்கே!!  மதுமிதா   இரூக்காங்க என் கூட அதனால கண்டிப்பா  பாருங்க என்ன?:)

http://www.youtube.com/watch?v=QVMBDauapG8&feature=youtu.be

27 comments:

  1. யாராவது திரட்டில இணைக்க இயலுமா? நன்றி

    ReplyDelete
  2. காவிரியில் தண்ணீர் ஓடினமாதிரி ஒரு கலகலப்பு ஜிலுஜிலுப்பு.. இண்ட்லியில் இணைத்து விட்டேன் .. தமிழ்மணம் மக்கர் பண்ணுகிறது

    ReplyDelete
  3. ”நாளாம் நாளாம் திருநாளாம் “ என்ற பாட்டோடு வலைப் பக்கம் மீண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! துளசி கோபால் தம்பதிக்கு வாழ்த்துக்கள்! GOOGLE + இல் உங்கள் பதிவை பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  4. சுடச் சுட உங்க பாணியில நகைச்சுவை கலந்த அருமையான பகிர்வுக்கா. ரொம்ப நாளைக்கப்பறம் பாக்கறதால இன்னும் இனிமையா இருக்கு. திரட்டிகள்ல் இணைக்க... தம்பியிருக்க பயமேன். முடிச்சாச்சு.

    ReplyDelete
  5. அக்கா,நேற்றிரவு தங்களை சந்தித்து அளாவாளாவியதில் மகிழ்ச்சி.சுடச்சுட பதிவும் போட்டு விட்டீர்கள்.காலையில் நடந்த பங்சனுக்கு வரமுடியாமல்,அதனால் நீங்கள் பாடிய பாடலை கேட்கமுடியாமல் போய்விட்டது என்று நான் கூறிய வார்த்தைக்காக உங்கள் தேன் குரலில் எனக்கே எனக்காக மட்டும் என் முன் அமர்ந்து நீங்கள் பாடிக்காட்டியது இன்னும் என் செவியில் ஜீராவாக இனிக்கின்றது.

    ReplyDelete
  6. நன்றி கணேஷ் தமிழ் இளங்கோ

    ரிஷபன்.. என்ன ரிஷபன் , காவேரியோட கம்பேர் பண்ணிட்டீங்க கேட்கவே ஜிலுஜிலுப்பாத்தான் இருக்கு ரொம்ப நன்றி அதுக்கு!!

    ReplyDelete
  7. ஸாதிகாsaid...
    அக்கா,நேற்றிரவு தங்களை சந்தித்து அளாவாளாவியதில் மகிழ்ச்சி.சுடச்சுட பதிவும் போட்டு விட்டீர்கள்.காலையில் நடந்த பங்சனுக்கு வரமுடியாமல்,அதனால் நீங்கள் பாடிய பாடலை கேட்கமுடியாமல் போய்விட்டது என்று நான் கூறிய வார்த்தைக்காக உங்கள் தேன் குரலில் எனக்கே எனக்காக மட்டும் என் முன் அமர்ந்து நீங்கள் பாடிக்காட்டியது இன்னும் என் செவியில் ஜீராவாக
    இனிக்கிறது//


    நேத்து நேர்ல பாத்ததுல மிக்க மகிழ்ச்சி சாதிகா...நேரம் மட்டுமிருந்தா உங்களுக்காக நிறையப்பாட்டு பாடி இருப்பேன் மேடைல ஒரு அந்த்தாஷரி ஏற்பாடு செஞ்சிருக்கலாம் தோணாம போயிட்டதே..நெக்ஸ்ட் டைம் சாதிகாவுக்காகவே பாடிடுவேன்.நன்றி சாதிகா

    ReplyDelete
  8. வெல்கம் பேக்கு.
    சுவாரசியமா எழுதியிருக்கீங்க.. இத்தனை பதிவர்கள் வந்திருந்தாங்களா? மரத்தடி என்னது?

    ReplyDelete
  9. உங்களை நேற்று காலை சந்தித்ததில் மகிழ்ச்சி.
    எனை நினைவு கூர்ந்து குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com
    PS:
    I am sorry to learn the demise of your beloved dad.
    May Lord Ranganatha give you all the courage to bear the irreparable loss.
    subbu rathinam
    meenasury@gmail.com

    ReplyDelete
  10. பொதிகை காணொளி தனைக் கண்டு ரசித்தேன்.
    இது கொஞ்சம் கவிதை அல்ல !
    கொஞ்சும் கவிதை..
    எல்லோர் மனங்களையும்
    விஞ்சும் கவிதை.

    மதுமிதா அவர்களுக்கும் ஷைலஜா அவர்களுக்கும் எமது
    பாராட்டுகள்.

    இங்கு இன்று இது

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  11. உங்களுடனே இரயிலேறி விழாவில் கலந்து மகிழ்ந்து பெங்களூர் திரும்பிய உணர்வைத் தந்தது பதிவு:)! பகிர்வுக்கு நன்றி ஷைலஜா.

    ReplyDelete
  12. நேர்ல வர முடியலைங்கற ஏக்கத்தை தீர்த்து வெச்சுட்டது உங்க நேரடி வர்ணனை. நீண்ட இடைவெளிக்கப்புறம் க்லகலன்னு ஆரம்பிச்சுருக்கீங்க. வலைப்பக்கம் கொஞ்சம் நடமாடினாலே மனசு கொஞ்சம் கொஞ்சமா தேற ஆரம்பிச்சுரும்.

    தமிழ்மணம் ஒத்துழையாமை போராட்டம் செய்யுது ஷைலஜாக்கா. இணைக்க முடியலை.

    ReplyDelete
  13. இனிய பகிர்வை ரசனையுடன் பகிர்ந்துள்ளீர்கள்.

    ReplyDelete
  14. அப்பாதுரைsaid...
    வெல்கம் பேக்கு.
    சுவாரசியமா எழுதியிருக்கீங்க.. இத்தனை பதிவர்கள் வந்திருந்தாங்களா? மரத்தடி என்னது


    thanks Appaadhurai sir! மரத்தடி டாட் காம் என்று 2004 முதல் 2006 வ்ரை கலகலப்பான குழுமம் அதில் பலர் உறுப்பினராகி நண்பர்களானோம்

    ReplyDelete
  15. மிக்க நன்றி மதிப்பிற்குரிய திரு சுப்பு ரத்தினம் நேற்று அதிகம் பேச முடியவில்லை ...ஆனால் சந்தித்ததில் மகிழ்ச்சி..
    நன்றி ராமல்ஷ்மி அமைதிச்சாரல் மாதேவி!

    ReplyDelete
  16. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாட்டு கேட்க முடியலை கவிதை கேட்டேன் நல்லா இருந்தது

    ReplyDelete
  17. மோகன் குமார்said...
    உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பாட்டு கேட்க முடியலை கவிதை கேட்டேன் நல்லா இருந்தது
    ///


    மிக்க நன்றி மோகன்குமார்...எனக்கும் உங்களையும் இன்னும் பலரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி

    ReplyDelete

  18. பழைய நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சி பதிவில் தெரிகிறது. காணொளியில் “ கொஞ்சம் தேநீர், கொஞ்சம் கவிதை பார்த்தேன். என் க்ணினியில் ஸ்பீக்கர் வேலை செய்வதில்லை. ஆகவே கேட்க முடியவில்லை. வாழ்த்துக்கள். ‘ டச் விட்டுப் போகிறதோ. ?

    ReplyDelete
  19. ஷைலு முழு பாடலும் போடுங்களேன்.
    நான் தான் ’அமைதி ஷைலு கவிதை வாசிக்கப் போறாங்க’ என்றேன். துள்சி அதை வழிமொழிந்தார். துள்சிக்கு நன்றி நம் அனைவரையும் சந்திக்க வைத்தமைக்கும், பாட வைத்தமைக்கும்.

    உங்கள் பாடல், கவிதை பரிசு மிக நன்று ஷைலு

    ReplyDelete

  20. 12:53 PM



    G.M Balasubramaniam said...

    பழைய நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சி பதிவில் தெரிகிறது. காணொளியில் “ கொஞ்சம் தேநீர், கொஞ்சம் கவிதை பார்த்தேன். என் க்ணினியில் ஸ்பீக்கர் வேலை செய்வதில்லை. ஆகவே கேட்க முடியவில்லை. வாழ்த்துக்கள். ‘ டச் விட்டுப் போகிறதோ. ?

    3:43 PM
    <<<<<<

    நலமா ஜி எம் பி ஸார்? மிக்க நன்றி கருத்துக்கு... காணொளி இப்போ கேட்க வைக்குதா>?

    ReplyDelete



  21. மதுமிதாsaid...
    ஷைலு முழு பாடலும் போடுங்களேன்.
    நான் தான் ’அமைதி ஷைலு கவிதை வாசிக்கப் போறாங்க’ என்றேன். துள்சி அதை வழிமொழிந்தார். துள்சிக்கு நன்றி நம் அனைவரையும் சந்திக்க வைத்தமைக்கும், பாட வைத்தமைக்கும்.

    உங்கள் பாடல், கவிதை பரிசு மிக நன்று ஷைலு

    7:54 PM
    >.

    வாங்கம்மா பொன்மனசெம்மலே யாரையாவது எதையாவது நல்லா இல்லேன்னு என்னிக்காவது நீங்க சொன்னதுண்டா?:0 அன்னிக்கு நீங்கதான் என் கவிதை வாசிக்க அமைதிக்காக்கச்சொல்லி அந்த இடத்துல கேட்டுக்கிட்டீங்க மது ஆனா அதுக்கு ஆசிஃப் மாதிரி எத்தனை பேரு கைல கத்தியோட உங்களை நோக்கி வராங்க தெரியுமா?:) என் கவிதையின் சக்தி அப்படி:)

    ReplyDelete
  22. முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வந்தேன். திருமதி துளசி அவர்களின் 60 ஆம் கல்யாண விழாவை மிக அழகாக எழுத்தோவியமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நானும் ஸ்ரீரங்கம் தான். இப்போது இருப்பது பெங்களூரில்.



    என் வலைத்தளம்: ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
  23. ஹ்ம்ம்....மரணம் என்பது இயற்கை..மனதைத் தேற்றிக் கொண்டு
    பழையபடி நிகழ்ச்சிகளில் ஈடுபடவும்.

    ReplyDelete
  24. Ranjani Narayanan said...
    முதல்முறையாக உங்கள் தளத்திற்கு வந்தேன். திருமதி துளசி அவர்களின் 60 ஆம் கல்யாண விழாவை மிக அழகாக எழுத்தோவியமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நானும் ஸ்ரீரங்கம் தான். இப்போது இருப்பது பெங்களூரில்.

    >.நன்றி ரஞ்சனி வருகைக்கும் கருத்திற்கும்... நீங்களும் ஸ்ரீரங்கமா இருப்பது பெங்களூரா? ஆஹா சந்திக்கலாமே! உங்கள் வலைப்பூவுக்கும் வருகிறேன்

    ReplyDelete
  25. சமுத்ராsaid...
    ஹ்ம்ம்....மரணம் என்பது இயற்கை..மனதைத் தேற்றிக் கொண்டு
    பழையபடி நிகழ்ச்சிகளில் ஈடுபடவும்.

    2:21 PM
    >>.ஆமாம் சமுத்ரா இப்போது மனதை தேற்றிக்கொண்டு பழையபடி இருக்கிறேன் நன்றி ஆறுதலான வார்த்தைகளுக்கு

    ReplyDelete
  26. என்ன நம்பியார்தனம் :-) இந்த மாச மளிகை லிஸ்டுல நாலு டூயூப் பேஃர் அண்டு லவ்லி வாங்கிட வேண்டியதுதான்

    ReplyDelete
  27. //ramachandranusha(உஷா)said...
    என்ன நம்பியார்தனம் :-) இந்த மாச மளிகை லிஸ்டுல நாலு டூயூப் பேஃர் அண்டு லவ்லி வாங்கிட வேண்டியதுதான்

    9:16 PM
    ///

    மாசாமாசம் நாங்க வாங்கறோம் இல்ல இந்தமாசமாவது நீங்க வாங்குங்க உஷா:) நன்றி வருகைக்கு!
    இப்படிக்கு
    நம்பியாரிணி!!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.