Social Icons

Pages

Thursday, March 27, 2014

செர்ரி ப்ளாஸங்கள் பூத்துவிட்ட​ன!

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் டிசியில் வருடா வருடம் ஸ்ப்ரிங்சீசனில் செர்ரிப்ளாசம் மலர்கள்சொல்லிவைத்த மாதிரி பூக்கின்றன. .

மாதக்கணக்கில் கடும்பனியில் அதிகம் இலைகளை இழந்து மொட்டைமரமாய் விண்நோக்கி தியானித்தமரங்கள் எல்லாம் மார்ச் கடைசிவாரத்தில் மக்களால் கவனிக்கப் படுகின்றன.. சின்ன சின்ன வெள்ளைப்பூக்கள் கொத்து கொத்தாய் மரம்முழுவதும் காணப்படுகிறது.பூக்கும்போது வெட்கப்படும் புதுமணப் பெண்போல வெள்ளைபூக்களில் மிக இலேசான செம்மை. சில இடங்களில் மட்டும் முழுவதும் ரோஸ்நிறத்திலானபூக்கள்.பூலோகம்  இதுதானா!

இந்த வருடம் செர்ரிப்ளாசம் திருவிழா தாமதமாகிறது. பனிப்பொழிவுதான் காரணம்.ஏப்ரல்  முதல்வாரம்  ஆரம்பமாகுமாம்,.  10லிருந்து 15நாட்கள்தான் இந்த மலர்க்காட்சி.அதற்குப்பிறகு மலர்கள் அனைத்தும் கொட்டி மரம் முழுவதும் இலைகள் வந்துவிடுகின்றன.

முதன் முறை  நாலைந்துவருடம் முன்பு அமெரிக்கா வந்தபோது...

அதிசயமாய் சூரியன் வெளியே வந்த அந்த ஒரு நாளில் நாங்களும் மலர்களைக்காணப் புறப்பட்டோம். நாங்கள் இருந்த இடத்திலிருந்து (வியன்னா)
வரை(ஒருமணி நேரப்பயணம்) வரை ரயிலில் சென்று அங்கிருந்து பொடி நடையாக நான்குமைல்(அமெரிக்காவில் கிலோமீட்டர் கணக்கே இல்லை! இன்னும் பழமை இதில் மட்டும்:)

நடந்தபடியே செர்ரிப்ளாசங்களை சென்ற இடமெல்லாம் பரவலாய்க்கண்டுமகிழ்ந்தோம். இலைகளேஇல்லாமல் மரம் முழுவதும் பூக்கள்தான்.அருகருகே அடர்த்தியாய் பார்ப்பதற்கேரம்மியமாய் இருக்கிறது. செர்ரிப்பழம்  நாலு  கிடைக்குமோ எனப்பார்த்தால் பெயர்தான் செர்ரி ப்ளாஸமாம்  செர்ரிப்பழத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல’ என்றார்கள்..’செரி’யென்றேன்!

ஜார்ஜ் வாஷிங்டன் நினைவுக்கட்டிடம் வழியாக எங்கள் நடைப்பயணம் தொடங்கியது.

போகும் வழியிலெயே நிறைய மரங்கள் பூக்களைப்போர்த்திக்கொண்டு இருக்கின்றன. பூச்சாற்று உற்சவம்  போலும்!

வாஷிங்டன் நினவுக்கட்டிடம் கான்கிரீட்டில் செய்த பெரியபென்சிலை சீவி
நிமிர்த்தி வைத்தமாதிரி இருக்கிறது

. அதற்கு ஒருபுறம் எதிரில் காபிடல்ஹில். மறுபுறம் ஆப்ரஹாம் லிங்கன்நினவுக்கட்டிடம்
லிங்கன்   ஜம்மென்று பளிங்குசிலையாய்  உட்கார்ந்திருக்கிறார்.

.இடதுபக்கம்தாமஸ்ஜெஃப்ர்சன் நினைவுக்கட்டிடம். வலதுபக்கம் பொடாமக் ஆற்றின் வளைந்தநீரோட்டம்.( டைடல் பேசின்)

இந்த ஆற்றினைச்சுற்றிலும்  தோப்புபோல  செர்ரிப்ளாசமரங்கள்பூத்துக்
குலுங்குகின்றன .ஆற்றில்சில வாத்துக்கள்,கழுத்துப்பகுதி மயில்பச்சையிலும் உடல் வெளிர்நீலத்திலும் முகம்கருப்புமாக அவைகள் வண்ண வாத்துக்களாய் தெரிந்தன. அவைகளுக்கு சிறப்பு வா(ழ்)த்துகள்  தெரிவித்தேன்:)

ஜெஃப்ர்சன் கட்டிடத்தின் விளிம்பத் தொட்டுச் செல்வதுபோல் ஆறு வளைந்துஓடுகிறது. மோட்டார்படகுகளிலும் தானியங்கி படகுகளிலும் தனியாகவும் ஜோடியாகவும் பலர் ஆற்றினில் சென்று பூக்களை அருகில்போய் பார்க்கலாம்
.
ஆற்றின் ஒருபக்கத்து பாலத்தின்மீது நின்று வேடிக்கைபார்த்தபோது
தலைக்குமேல் மூன்று நான்கு ஹெலீகாப்டர்கள் பறந்துபோயின. ஏதும் மருத்துவ அவசரம் என்றால் இப்படி ஹெலிகாப்டர்கள் உதவப் போகுமென உடன்வந்த உறவினர்சொன்னார்.

சில நேரங்களில்  அமெரிக்கஜனாதிபதி  சிறப்பு ஹெலிகாப்டரில்
செல்வாராம்.

. மேலே அப்படி நான் ஒரு ஹெலிகாப்டரை
அண்ணாந்துபார்த்தபோது ஜனாதிபதி  எனக்கு மட்டும்
 கை அசைத்து," ஹலோஷைலஜா!  நல்வரவு!
நலம்தானா?' என்று கேட்பது போல இருந்தது.!


நிறைய டூரிஸ்டுகள்  உலகின் பலபகுதியிலிருந்து செர்ரிப்ளாசம் பார்க்க வருகை தருகின்றனர். அழகு அழகாய்ப்பெண்கள் பலர்  மலர்களைத்தலைகுனிய வைத்தனர்!(இந்த வாக்கியத்தின் கவிதை நயம் புரிகிறதா?:)

இந்த புகழ் பெற்ற மரங்களை 1912ல் ஜப்பான் ஜனாதிபதியின் மனைவி,
அமெரிக்காவிற்கு அன்பளிப்பாய் தந்தவைகளாம்.

மக்கள் இதனைப்பார்க்க வந்துகொண்டே இருக்கின்றார்கள்..
ஜெஃப்ர்சன் நினைவுக்கட்டிடத்திற்கு எதிரே பெரிய வளாகத்தில் செர்ரிப்ளாசசிறப்பு நிகழ்ச்சிகள் தினமும் நடக்கின்றன. இம்முறை இந்திய நாட்டியநிகழ்ச்சிகளும் இடம் பெற இருக்கின்றன.

செர்ரிப்ளாசம் சிறப்பு உணவுகள் என்று ஹோட்டல்களும், சிறப்பு விற்பனை என பலகடைகளும் இதைக் கொண்டாடுகின்றன. அமெரிக்காக்காரங்க  இன்னும் விவரமா சொல்லலாம்  டூரிஸ்டாக வந்த  எனக்கு இதுக்கு மேல  தகவல்  கிடைக்கவில்லை!!

மிகக்குறைந்த நாட்கள் தான் தங்கள் வாழ்க்கை என்றாலும் மற்றவர்களை
மகிழ்விக்க மலர்ந்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன செர்ரிப்பூக்கள்!
***************************************************************************­
 

6 comments:

  1. மலர்களை ரசித்த அனுபவத்தை அழகா விவரிச்சு எங்களையும் ரசிக்க வெச்சுட்டீங்க அக்கா. அந்த நேரம் கையில காமிரா எடுத்துப் போகலையா நீங்க..? படங்களை ரசிக்கற வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காம போய்டுச்சே. ஜெபர்சன் கட்டடம், டைடல் பேசின் பத்தி எல்லாம் நீங்க எழுதிருக்கறதப் படிக்கும் போது சாவி ஸார் எழுதின வா.தி. நினைவுக்கு வந்தது. ..

    ReplyDelete
  2. எத்தனை அழகான மலர்கள். வாத்யார் கணேஷ் சொன்னது போல இன்னும் சில படங்களைப் பகிர்ந்திருந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்திருக்கும்.....

    ReplyDelete
  3. ஒரு படமே மனதை கவர்கிறது... "நலம்" கேட்டது உட்பட அனைத்தும் ரசனை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. செர்ரி பிளாசம் பூத்த பதிவு நன்றாக இருந்தது.அமெரிக்க பயணத்தில் ,பார்த்தது,ரசித்தது பற்றி மேலும் எழுதவும்

    ReplyDelete
  5. மலே மலர்ந்தது போல் அழகாக எழுதியிருக்கீங்க அம்மா.

    ReplyDelete
  6. நன்றி பின்னூட்டமிட்ட அனைவர்க்கும்!

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.