Social Icons

Pages

Tuesday, April 01, 2014

கின்னஸ் புத்தகத்தில் என்பெயர்!

நாதஸ்வரம்’ மெகாத்தொடர் இயக்குனர் திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது!…


***********************************************(மெகாத்தொடர்களை  விடாமல்பார்க்கிறோமே  எங்களுக்கு  என்ன விருது என  மெகாலஷ்மி  அய்யனாவரத்திலிருந்து கேட்கிறார்)
*******************************************************
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து 87 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். சாதனை செய்வதற்கு மன உறுதியும்,  விடாத முயற்சியும் மட்டுமே அவசியம். அந்த வகையில்,  கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக அமெரிக்காவில் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் போட்டி ஒன்று நடை பெற்றது. இதில்,  தொடர்ந்து 87 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் வெற்றி பெற்று,  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்
****************************************************
(என்னைவிட்டால் தொடர்ந்து 100மணி நேரம் பார்ப்பேன் ஆனால் அரைமணிக்குமேல்   க்யூரியஸ் ஜார்ஜ் பார்க்க அம்மா அனுமதிப்பதில்லை இல்லாவிட்டால்  கின்னஸ் சாதனையை நான் என்  மூன்றுவயதிலேயெ முறியடித்திருப்பேன் என்கிறான் நான்குவயது சிறுவன் சதீஷ்)
*************************************
பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் - ஹேமா தம்பதியின் மகன் ககன்(5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.
பெங்களூரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் ககன் பங்கேற்றான். இதற்காக, 39 கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அதாவது சுமார் 69.2 மீட்டர் தூரத்துக்கு கார்கள் நின்றன. காரின் அடிப்பகுதிக்கும், தரைக்கும் இடையிலான உயரம் வெறும் 8 அங்குலம் தான் இருந்தது.
அவ்வளவு குறுகிய இடைவெளிக்குள் ககன் ஸ்கேட்டிங் உபகரணத்தை அணிந்து கொண்டு உடலை வில்லாக வளைத்து பயணித்து லாவகமாக வெளியே வந்தான். சுமார் 69.2 மீட்டர் தொலைவையும் வெறும் 28 நொடியில் கடந்து சாதனை படைத்தான்.
இதற்கு முன்பாக பெல்காமை சேர்ந்த ரோகன் என்ற 9 வயது சிறுவன் 24 கார்கள் அணிவகுத்து நிற்க அதற்கு அடியில் பயணித்து 47 நொடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ககன் இந்த சாதனை மூலம் ரோகனை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.
சிறுவனின் திறமையை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவனை வெகுவாக பாராட்டினார்கள்.
- **************
(போன ஜன்மத்துல கந்துவட்டிக்காரனா  இந்தப்பையன் இருந்திருக்கனும் இல்லேன்னா  இந்த சாதனை சாத்தியமே இல்லை என்கிறார் ( வட்டிக்குப்பணம்வாங்கி அதைத்திருப்பமுடியாத பெயரில்மட்டும்)  கோடீஸ்வரன்)

இப்படிப்பலர்ன் சாதனைகளைக்கேள்விப்பட்ட  எனக்கும்  ஏதும் சாதனை செய்ய ஆவல் எழுந்தது. 

அதனை  அமைதியாக நிறைவேற்றினேன்அமெரிக்காவும் வந்துசேர்ந்தேன்..உடன்பிறப்புகள்  தன்னடக்கச்செல்வமே  என்னை  வாயாற வாழ்த்துவது காதில்  விழுகிறது :)

ஆனால் கின்னஸ் புத்தகத்தில் என்பெயர் இடம்பெற்றதை நான் சொல்லாமல் போவது சரி இல்லை என மனசாட்சி உறுத்துகிறது.ஆகவே  சொல்லிவிட்டேன். சாட் சி இணைப்பில்   உள்ளபடங்கள்  தான்:)

முதல் படத்தில்  என்னை  அமெரிக்காவில் கின்னஸ் வழங்கும்  .பெரிய ஹாலில் அமரவைத்தார்கள்.  நானும் நம் இந்தியப்பண்பைக்கட்டிக்
காப்பாற்ற  சேலை அணிந்தே சென்றேன். அதைப்புகழ்ந்தவர்கள்  அடுத்து   2014ம்  ஆண்டில் வந்துள்ளகின்னஸ் புத்தகத்தை என்னிடம்  கொடுத்தார்கள்.

நானும் நன்றியை மட்டும் ஆங்கிலத்தில் சொன்னேன்  (அவங்க ஆக்சண்ட்  இன்னும் பிடிபடல  என்ன  சொன்னார்களோ என்று  புரிஞ்சாதானே?:)

கின்னஸில் எந்தப்பக்கத்தில் என்பெயர் இடம் பெற்றுள்ளது என அக்கறையும் ஆர்வமுமாய் விழுந்தடித்துக்கேட்பவர்களுக்காக  இந்தத்  தகவல்... அதாவது முதல்பக்கத்திலேயெ இருக்கிறது என் பெயர்  ஆமாம் புக் வாங்கினதும் அவங்க அவங்க பெயரை முதல் பக்கம்தானே எழுதிக்கொள்வோம்?:)

(இன்னி பொழுதுக்கு நம்மால முடிஞ்சது:)
12 comments:

 1. வாழ்த்துக்கள்.....(வந்தால்)

  ReplyDelete
 2. ஆஹா... கின்னஸ் புக்கில் இடம் பிடிக்க இப்படி ஒரு சூப்பரான வழிகூட் இருக்கா அக்கா...? அசத்திட்டேள் போங்கோ...! அதுசரி... கின்ன்ஸ்க்காக 87 மணி நேரம் டிவி பார்த்தவர் அதுக்கப்புறம் என்ன மனநிலையில இருந்தாராம்...? விசாரிச்சீங்களோ..?

  ReplyDelete
 3. இன்றைக்கு ஏற்ற பதிவோ...?

  வாழ்த்துக்கள்...(!)

  ReplyDelete
 4. தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து கின்னஸில் இடம் பெற்றவர்கள் பற்றிய விவரம் ஏதும் சொல்லவில்லையே இப்பதிவில். (நம் நாட்டினரா அல்லது அமெரிக்கர்களா?)_ பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  ReplyDelete
 5. கின்னிட்டீங்க, சாரி, பின்னிட்டீங்க!

  ReplyDelete
 6. தலைப்பைப் பார்த்தவுடன் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லலாமென்று வந்தேன். சரி, சொல்லவந்த வாழ்த்துக்களைத் திரும்பக் கொண்டுசெல்லவா முடியும்?
  அமெரிக்கப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நீங்களும் கடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா!?

  ReplyDelete
 8. சும்மா ஏப்ரல் ஒன்றென்றால் இப்படி செய்வது வழக்கம் வேற ஒண்ணுமில்ல...யாரும் ஏமாறமல் புத்திசாலியா இருக்கீங்க:) நன்றி பின்னூட்டங்கள் இட்டமைக்கு.சிறப்பு நன்றி அமுதவன் அவர்களுக்கு!

  ReplyDelete
 9. இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. முரளிதரன்:) ச்சும்மா ஏப்ரல் ஒன்று என்றால் இப்படி ஏதாவது எழுதுவது வழக்கம் அதான்...:)

   Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.