சியாட்டில் தமிழ்சங்கமும் சியாட்டல் நகரத்தின் பிரபல கீதாஞ்சலி இசைக்குழுவும் இணைந்து நடத்திய11வது ஆண்டு மெல்லிசைநிகழ்ச்சி ஏப்ரல் 19ம்தேதி மாலை
யூனிவர்சிடி ஆஃப் வாஷிங்டனில் ஏறக்குறையஆயிரம்பேர் அமரக்கூடிய "Kane hall" அரங்கினில் அமர்க்களமாக நடந்தது .
பல நூறு தமிழ் முகங்கள்! அத்தனைபேரையும் அயல்நாட்டில் ஒரேசேர ஒரே இடத்தில்பார்க்கையில் தமிழ்நாட்டில் இருப்பதுபோலவே இருந்தது!
.
சூபர் சிங்கர் ப்ரகதியும், ரவியும் நிகழ்ச்சியின் சிறப்பு பங்கேற்பாளர்கள்.
.ப்ரகதி யின் குரலில் இன்னமும் இனிமைகூடி உள்ளது. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடலுடன் உள்ளே நுழைந்தார்.பிறகென்ன இசைமழைதான்!
பார்க்கவும் SPB மாதிரி இருந்தசுரேஷ் தன் குரலில் என்காதலி என்ன செய்யபோகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..என உருக்கமாகப்பாடவும் அனைவரும் நெகிழ்ந்தனர்.
.மேடைமுழுவதும் இசைக்கருவிகள் இசைக்கலைஞர்கள்.(அமெரிக்கர்கள் சிலரும் இதில் அடக்கம்) சாக்ஸோபோன் வாசித்தவரும் ஃப்ளூட்வாசித்தவரும் பாடலுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர் எனினும் அனைவரின் பங்கும் அவர்களை மேடையில் அறிமுகப்படுத்தியவிதமும் சிறப்பானது
.
தனியார்தொலைக்காட்சிகளுக்கு ஈடாக இங்கும் மைக்ரோ சாஃப்டில் பணிபுரிகிற இளைஞர்கள் யுவதிகள் காம்பியரிங்கில் கலக்குகிறார்கள். அந்நியமண்ணில் இருக்கும் உணர்வேதெரியாத அழகுத்தமிழ் கொஞ்சுகிறது.
நடுநடுவே ஆடியன்சை உற்சாகப்படுத்த சிலபாடல்வரிகளை பாடகர்கள் தங்களுடன் பாடவும் வைப்பது புதுமை.
நீதானே என் பொன் வசந்தம் பாடலை ப்ரகதி பாடுகையில் இருக்கையில் இருந்தபடியே ஓரிருவரிகள் இணைந்துபாட மைக்கைக்கொண்டுவந்து கொடுத்தார் நிகழ்ச்சித்தொகுப்பாளர் (அழகிய) லதா ! (விஜய்டிவி டிடி போல குறும்பும் இனிமையுமாக நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு சென்றார்)
மேடைக்குக்கீழே ஆடவும் அழைக்க பலர் குறிப்பாக சிறுமிகள் ஆடிய ஆட்டம் அரங்கிற்கு களை சேர்த்தது. சிங்காரி சரக்கு பாடலுக்கு மேடை மீதே பலர் ஏறி ஆட ஆரம்பித்துவிட்டனர்!உற்சாக நயாகாராவை அரங்கம் கண்டது உண்மைதான்.
அங்கே..மேடைகலைஞர்களை ஊக்குவிக்க கைத்தட்டலுடன் விசில் வேறு! ஆஹா எங்கே போனாலும் நம் தமிழர்களின் அளவுகடந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் பார்க்கவே பரவசம்.. ப்ரகதி வேறு அடிக்கடி இந்தமாதிரி சியாட்டல் நகரமக்கள்மாதிரி இப்படி உற்சாகமாய் எங்களைஊக்கப்படுத்தியவர்களைப் பார்த்ததே இல்லை என பாராட்டிக்கொண்டே இருந்தார். அறிமுகப்பாடகர்கள் பாடகிகள் அனுபவசாலிகள் சிறுவயதினர் என பலரகங்களில் பலர் பாடினார்கள். அனைவரையும் குழுவில் ஏற்று பயிற்சி கொடுக்கும் திரு எல்மோ பாராட்டுக்குரியவர். அமெரிக்கர்கள் சிலர் ராஜாவின் பாடல்களுக்கு அனுபவித்து வயலின் வாசித்தனர்.
மழைநகரமான சியாட்டலில் வெளியேயும் மழை, அரங்கின் உள்ளேயும் இசைமழை!
இந்த நிகழ்ச்சி கல்விக்கான அறப்பணி இதுபற்றிவிவரம் இதோ..
Asha is a non-profit organization that is dedicated to bringing about socio-economic change in India primarily through education. We pride ourselves on being an action group that disburses 100% of donations to our partner groups in India. The Seattle chapter of Asha, formed in December 1994, actively supports development initiatives in health care and livelihood, care for people with special needs, and gender issues in addition to education related projects Support A Child (SAC) program makes it possible for an individual to sponsor the cost of education or total living expenses for one underprivileged child in India. இடைவேளையின்போது ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விப்பணிக்குஉதவப்பலர்முன் |
Tweet | ||||
சென்னையை விட்டா பெங்களூரு.... அவ்ளவ்தான் எனக்குத தெரிஞ்ச வெளியூர்/நாடு பயணம். இப்ப பேரிக்கா... ஸாரி அமெரிக்காலருந்து நீங்க படங்களோட பதியற விஷயங்கள்லாம் பாக்கறப்ப கொள்ளை கொள்ளையா சந்தோஷமா இருக்குது. கூடவே நான் நேர்ல பாக்கலையேன்னு கொஞ்சம் பொறாமையாவும்... ஹி... ஹி... ஹி...
ReplyDeleteவாங்க கணேஷ் ..அமெரிக்கா நல்லாதான் இருக்கு ஆனாலும் நம்மூர்போல ஆகாது:) அதனால பொறாமைலாம் வேண்டாம் :) நானும் இதோ திரும்பிவந்துட்டே இருக்கேன்:)
Delete//நம் தமிழர்களின் அளவுகடந்த உற்சாகமும் மகிழ்ச்சியும் பார்க்கவே பரவசம்...//
ReplyDeleteசிறப்பு...
ஆமா டிடி...தமிழை வெளி இடத்துல கேட்டா கூடுதல் மகிழ்ச்சி
Deleteவணக்கம்,
ReplyDeleteநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
அழகான இடம். யூனிவர்சிடியை சுத்திப் பாத்தீங்களா?
ReplyDeleteஅழகான் இடம்தான் அப்பாதுரை ஸார்.ஆனா யூனிவர்சிடி முழுக்க சுற்றிப்பார்க்க நேரமில்லை ... ஓரளவுபார்த்தவரை பிரமிப்பு அடங்கவில்லை... நீங்க அமெரிக்கால இருக்கீங்களா என்ன?
Deleteயெஸ்ஸு.
Deleteவேரு?:) I mean where?:) கிளம்பிப்போகுமும் போன்லயாவது பேசிட்டுப்போறேனே
Deleteமழைநகரில் இசை மழை... இசையில் நனைந்ததை உணர முடிந்தது....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.