அமெரிக்காவில் சியாட்டல் நகரம் இயற்கை அழகில் எழிலாகத்தான் இருக்கிறது காடு மலை ஆறு எரி என இயற்கைச்செல்வம் பொங்கி வழிகிறது காணுமிடமெங்கும் பச்சை கண்ணை அள்ளுகிறது.
மழைக்காதல் நகரமாக பல நேரங்களில் இருந்தாலும் கிழக்குப்பகுதியைப்போல கடும் குளிர் இல்லை.
நல்லவெய்யில் அடித்த நேற்றைய பொழுதில் சியாட்டல்நகரின் பிரபலமான Snoqualmie Falls என்னும் நீர்வீழ்ச்சிக்குப்போனோம்..
அடேயப்பா போகிறவழியிலேயே எங்கும் பச்சை எதிலும் பச்சையின் ஆட்சியைக்கண்டோம்(அரசியல் கண்டிப்பாக இல்லை)\
சிறு சிறு வளைவுகளில் ஆங்காங்கே பசுமையான காட்டுப்பகுதிபோல இருக்குமிடத்தின் நடுவில் தனித்தனியாக பங்களாக்கள் தென்படும் மில்லியண்டாலர் பணக்காரர்களாம்! நாமெல்லாம் தெருவுல ஒரு வீட்டில் இருப்போம் இவங்க ஒரு வீட்டிற்கு ஒருதெரு ஓடுகிறது.!
வளைந்துவளைந்து செல்லும் பாதை என்று செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாட்டில் வருமே அப்படிப்பட்ட பாதைகளில் சுகமான பயணம். அரைமணியில் அருவியின் பக்கம்அடைந்துவிட்டோம்.. அதிகம் நடக்க சிரமமில்லாமல் அருகிலேயே அந்த அருவி ஹோஓஓ என்று இரைச்சலுடன் காட்சி அளிக்கிறது
.’ நலமா? அமெரிக்கா வந்திருக்கும் ஷைலஜாக்கு நல்வரவு’என்று மழைச்சாரலாய் அருவி என்முகத்தில் தெளித்து விஜாரித்தது..ஊருக்குக்கிளம்ப இருக்கறப்போ இயற்கையாவது நமக்கு பன்னீர் தெளிக்கிறதே என சின்ன மகிழ்ச்சி:)
ஜூனியர் நயாகராதான்! அதே வேகம் வீழ்ச்சி.(கனடாவும் போய் மெயின் நயாகரா பார்த்து வந்துட்டேன் என்பதை எப்படி மறைமுகமா சொல்றேன் பாருங்க:) அமெரிக்கா வந்தும் அமரிக்கையா இருக்கக்கூடாதா என யாரோ முணுமுணுக்கிறாங்க:)
டன் டன்னாக மலைமேலிருந்து பால் அண்டாவைக்கவிழ்ந்ததமாதிரி அப்படி ஒரு வெண்நிறம்! 400அடிக்கு நீரை தொபுகடீர் என தள்ளிவிடுகிறது. சுத்தி 200அடிஉயரத்துக்கு மரமெல்லாம் கூட்டம்கூட்டமாய் தினம் இந்தக்காட்சியை வேடிக்கைப்பார்க்கிறது.
(ஷைலஜா ரெஸ்டரண்ட் அருவிக்குப்பின்னாடி பாருங்க:)
க்ராஆஆங் என கத்திக்கொண்டு அருவிக்குப்பின்னால் காட்டுப் பாதையில் ரயில் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நல்ல சினிமாப்பாட்டுக்கு படப்பிடிப்பு நடத்தக்கூடிய லோகேஷன்! நீர்வீழ்ச்சியை வேடிக்கைப்பார்க்க கூட்டம் வருவதும் போவதுமாய் இருந்தது.
ரொம்பப்பெரிய பிக்னிக் ஸ்பாட் இல்லையெனினும் ஓரிருசின்னப்பூங்காக்கள் இருக்கிறது . சாப்பிட மரமேஜை பெஞ்சுகள். கிஃப்ட்ஷாப் ஒன்று..
அப்புறம் மறந்துவிட்டேனே நீர்வீழ்ச்சியின் அருகேயே ஷைலஜா லாட்ஜ் என்று போர்டு பார்த்ததும் திகைப்பானது.. என்னடாது கடல்கடந்தும் நமக்கு ரசிகர்களா என் பெயரில் ஹோட்டலா என புல்லரித்தது:) மறுபடி சரியாப்பார்த்தேன்.. Salish Lodge and Spa (with restaurant) iஎன்றிருந்தது!
அருவிக்குப்போற வழில நான்..
__________________________________________________________________________________
படங்களைப்பாருங்க சின்ன நயாகாரா என நான் பேர் வச்சது சரியா சொல்லுங்க:)
ஒருபடத்துல நீர்வீழ்ச்சிக்குப்பின்னாடி என்பேர்மாதிரி ஏமாத்தின ரெஸ்டாரண்ட் இருக்கிறது.
-
Tweet | ||||
சின்ன நயாகரா - படம் பார்க்கும்போதே சில்லென்று இருக்கிறது....
ReplyDeleteதில்லியில் அடிக்கும் வெயிலுக்கு இந்த நீர்வீழ்ச்சி இங்கே இருந்திருக்கலாமே என்றும்... :)))
டில்லில கடும் வெய்யிலா> ? அடடா நீர்வீழ்ச்சி ஆறு நதியென அமெரிக்கால தான் தண்ணீர் நிறைய நம் ஊர்ல இப்படி இருந்தா அருமையாத்தான் இருக்கும் வருகைக்கு நன்றி வெங்கட்செல்வராஜ்.
Deleteவெகு பொருத்தமாகத்தான் பெயர் சூட்டியிருக்கீங்க அக்கா.... பார்ப்பதற்கு மினியேச்சர் நயாகரா மாதிரியே இருக்கிறது. இங்கே வறுத்தெடுக்கும் வெயிலுக்கு படங்களைப் பார்த்ததுமே கண்ணுக்குக் குளிர்ச்சியாக... ஷைலஜா ரெஸ்ட்டாரண்ட்டும் ஜோர் படத்தில். ஹா... ஹா... ஹா...
ReplyDeleteபெயர் பொருத்தமென அன்புத்தம்பிதான் அழகா சொன்னார் நன்றி அதுக்கு முதல்ல:) சென்னைலயும் ரொம்ப வெய்யில்லா பார்த்து கவனமா இருங்க கணேஷ்
Deleteஆயிரம் இருந்தும்.. குளிக்க அனுமதிக்காம என்ன நீர்வீழ்ச்சிகளோ? அனுமதித்தாலும் அந்த ஐஸ் தண்ணீரில் குளிக்க முடியாது என்பது வேறு விஷயம்!
ReplyDelete--என் புலம்பல்..
பந்து அவர்கள் சொல்வது ரொம்ப சரி ஒரு அருவின்னா குளிக்க வேண்டாமோ? என்னவோ போங்க இங்க எல்லாம் கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா பாட்டு பாக்கறாப்லதான் இருக்கு. உங்கபுலம்பலே நமது புலம்பலும்:)
Delete//பால் அண்டாவைக்கவிழ்ந்ததமாதிரி// Great analogy....
ReplyDeleteபால் அண்டாவைவிட இன்னும் பொருத்தமா யோசிச்சேன் கிடைக்கல:)
ReplyDeleteதங்களின் வர்ணனை பார்க்கவேண்டிய ஆவலைத் தூண்டுகிறது
ReplyDelete