மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைக்கழியில் நின்றசெல்வன் வாழியே
நேமிசங்கள் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருந்தலத்தில் வாழியே!//
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து
என்கிறார் மணவாள மாமுனிகள்.
முதலாழ்வார்கள் மூவரில் இன்று பேயாழ்வாரின் திருநட்சத்திரம்ஐப்பசி சதயம்.
.பேய்க்காற்று பேய்மழை என்போம் அல்லவா அதிகமாய் காற்றும் மழையும் வரும்போது? அப்படித்தான் இந்த ஆழ்வாரும் மால்மீது பேய்க்காதல்கொண்டவர் பேய்பக்தி பூண்டவர் அதனால் பேயாழ்வார்.கல்விகேள்விகளில் வல்லவர். பேரறிவுப்பெட்டகமாகவும் விளங்கிய பெருமைக்கு உரியவர்.
அல்லும்பகலும் ஆண்டவனின் அருளமுதில் ஆழ்ந்து திளைத்திருந்தார்.
முதலாழ்வார்கள் மூவரும் மலர்க்கருவறைகளில் பூத்துவந்த தமிழ் மலர்கள்.
பொய்கைத்தாமரையில் ஒருவரும் திருக்கடல் மல்லையில் குருக்கத்திப்பூவில் இன்னொருவரும் திருமயிலை கிணற்றில் அல்லிமலரில் பேயாழ்வாரும் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.
சேமமுடன் நெடுமாலைக் காணப்புக்குத்
‘திருக்கண்டேன்’ என உரைத்த தேவே! உன்றன்
பாமருவு தமிழ் மாலை நூறுபாட்டும்...’ என்று வேதாந்த தேசிகர் குறிப்பிடுகிறார்.
திருக்கண்டேன் என ஆரம்பித்து..
சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுலாய்த்
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த
வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கண்
தேனமரும் பூமேல் திரு
என முடித்த நூறு அந்தாதி வெண்பாக்களையும் அண்ணலுக்குக்காணிக்கையாக்குகி றார் ஆழ்வார் பெருமான்.
நாவாயில் உண்டே நமோ நாராயணா என்று
ஒவாதுரைக்கும் உரையுண்டே
எனப் பொய்கையாரும்
ஞானத்தால் நன்குணர்ந்து நாராணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினான்
எனப் பூதத்தாழ்வாரும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே
எனப்பேயாழ்வாரும் ஒரே கருத்தைப் பாடியுள்ளனர்
/திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
ஒவாதுரைக்கும் உரையுண்டே
எனப் பொய்கையாரும்
ஞானத்தால் நன்குணர்ந்து நாராணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினான்
எனப் பூதத்தாழ்வாரும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே
எனப்பேயாழ்வாரும் ஒரே கருத்தைப் பாடியுள்ளனர்
/திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே
மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே
மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே
நெருக்கிடவே இடைக்கழியில் நின்றசெல்வன் வாழியே
நேமிசங்கள் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே
பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே
பேயாழ்வார் தாளிணை இப்பெருந்தலத்தில் வாழியே!//
(ஆழ்வார்கள் வைபவம் தொடரும்)
Tweet | ||||
ஆழ்வார்கள் ஆண்டவன் மேல் திளைத்தார்கள்.. நீங்கள் ஆழ்வார் பாசுரங்களில் திளைத்து பகிரும் பதிவுகளில் லயிக்கிறேன் !
ReplyDeleteநன்றி ரிஷபன்..
Deleteநல்ல பகிர்வு.
ReplyDeleteநன்றி குமார்
Deleteதேனமரும் பூ மேல் திரு. சின்ன வயதில் இந்தப் பாடலைப் படித்த ஞாபகம் எழுகிறது. அருமையான பதிவு.
ReplyDeleteஆமாம் ஜனா ஆழ்வார் பெருமான் அருளிய வெண்பாக்களிலொன்று இது எல்லா பாக்களுமே தேன் தான் நன்றி வருகைக்கு
Delete