ஆற்றில் இருக்கும் மணலை அள்ளி
அமுதக்காப்பாய் இருக்கும் வரப்பை நீக்கி
ஊற்றுக்குழிகளின் வழிகளை அடைத்து
ஊரெல்லாம் ஆழ்துளையில் கிணறு போட்டு
நேற்றுவரை நம் முன்னோர் சேர்த்துக்காத்த
நீரையெல்லாம் காலி செய்தே புலம்புகின்றோம்
கண்முன் காணும் நீர்ப்பஞ்சம் தீர்க்க
கச்சிதமாய் ஓர் இலக்கு கொள்வோம்
எறும்புகூட நாளைக்கென்றே எண்ணி
எண்ணி சேமித்து வைக்கும்
மண்ணில் வீழும் மழைதன்னை சேர்க்கும்
மாண்புதன்னை அறிந்துகொள்வோம்
மழைதன்னைப்பெரிதும் பொழியவைக்க
மரங்கள் பலவும் நட்டிடுவோம்
மழை நீர் பெருகிவரும்பொழுதில்
மனம் கொண்டதனை சேர்த்து வைப்போம்
மக்கள் துயரம் மறைந்து போக கொள்வோம்
’மழைநீர் சேகரிப்பு ஒன்றே இலக்கு’ என்று!
Tweet | ||||
நல்ல சிந்தனை.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteகற்பனை நன்று பகிர்வுக்கு நன்றி...த.ம 1
தங்களின் சிறுகதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சி நான் உடனடியாக தங்களுக்கு அஞ்சல் அனுப்பி விட்டேன்... பாருங்கள்...
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த இலக்கு எல்லோருக்கும் தேவை....
ReplyDeleteமிக்க நன்றி கருத்திட்ட
ReplyDeleteடி டி ரூபன் வெங்கட் நாகராஜ் கேபி சார் அனைவர்க்கும்
ரூபன்சாருக்கு சிறப்புநன்றி என் கதைபற்றிய தகவல் தெரிவித்தமைக்கு!!!