கதிரவனை சந்திரனை
காலத்தில் ஞாலத்திற்காய் அனுப்புவதால்
விண்ணுக்குப்பெருமை
உடலிலே உயிருக்குத்துணையாக
ஊடுருவி இருப்பதால்
காற்றுக்குப்பெருமை
நிலமங்கை மனம்குளிர
மழை அளிக்கமுயல்வதால்
நீருக்குப்பெருமை
ஏழைக்கு இன்னல் செய்யும்
ஏமாற்றுமனிதர்களைப்பொசுக்குவதா ல்
நெருப்புக்குப்பெருமை
அவர் இவர் என்றில்லாது
அனைவரையும் தாங்கி நிற்கும்
பூமிக்குப்பொறுமையே பெருமை.
Tweet | ||||
கவிதை அருமை...
ReplyDeleteமனதிற்கு இதமான கவிதை.வாழ்த்துகள்.
ReplyDeleteஅடடே... அழகான கவிதையைச் சொல்லி அசத்திட்டீங்க அக்கா.
ReplyDeleteகருத்துக்களை அளித்த கணேஷ் டிடி கேபி சார் குமார் அனைவர்க்கும் நன்றி மிக
ReplyDelete