ரவீந்திரநாத் தாகூர்!
பாரததேசத்தின் புகழை உலகமறியச்செய்த உன்னத மனிதர் ரவீந்திரநாத் தாகூர்! வங்கம் தந்த தங்கக்கொடை! கீதாஞ்சலி எனும் சாகாவரம்பெற்ற கவிதைத்தொகுப்பினை அளித்த கவிமேதை!
வங்கமொழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தாம் எழுதிய கவிதைகளைத்தொகுத்து ’கீதாஞ்சலி ’என்றபெயரில் வெளியிட்டார் தாமே ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து உலக இலக்கிய மேதைகள் அனைவரையும் திரும்பிப்பார்க்கவைத்தார் ரவீந்திரநாத் தாகூர்.
பல ஆங்கில அறிஞர்கள் தங்களிடம் அவர் கீதாஞ்சலியின் வங்கமொழியாக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கக் கேட்டுக்கொண்டபோது அவர்கள் இப்படிப் பணிவோடு மறுத்துக்கூறினார்கள்
”கவிப்பேரரசே! கீதாஞ்சலி உங்கள் உயிர்மூச்சின் வெளிப்பாடு அதனை நீங்கள் மொழிபெயர்த்தால் அந்த ஜீவன் இருக்கும்!:
உண்மைதான்! வங்கமொழியின் அதே உயிர்த்துடிப்பு ஆங்கிலமொழியாக்கத்திலும் வெளிப்பட்டது. படித்த அங்கில அறிஞர்கள் வியந்தனர்.!
இந்தக்கவிதைகளை ஆங்கிலமொழி இலக்கிய மேதைகள் முன்னிலையில் ஆங்கிலேயநாட்டிலேயே அரங்கேற்ற வேண்டுமென அனைவரும் ஆலோசனை சொல்லினர்.அதன்படி ரவீந்திரநாத் தாகூர் லண்டன் மாநகர் சென்றார்.. அங்கு ஆங்கில இலக்கிய மேதை கீட்ஸ் போன்றவர்களுடன் அன்பொழுகப்பழகினார்
தாகூரின் கீதாஞ்சலி ஆங்கிலமொழியிலான தொகுப்புக்கவிதை அரங்கேறியது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு கீதாஞ்சலிக்குக் கிடைத்தது.
அறிவாயுதமே வறுமையை விரட்டும் சாதனம் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த தாகூர் சாந்திநிகேதனைப் படைத்தார் விஸ்வபாரதி என்ற அந்த பல்கலைக் கழகம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறது.
தாகூரின் விஸ்வபாரதிக்கு காந்தி நேரு இந்திராகாந்தி போன்ற அரசியல் பிரமுகர்கள் வந்திருக்கின்றனர்.
ஒரு மரத்தடியில் ஐந்தே மாணவர்களை வைத்துக்கொண்டு வகுப்பை நடத்ததொடங்கினார் அன்று! இன்றும் அந்தப்பகுதியை அதன் இயற்கைத்தன்மை மாறாது பாதுகாக்கின்றனர்.
விஞ்ஞானி ஐன்ஸ்டின் இலக்கியமேதை பெர்னாட் ஷா ஆங்கிலக்கவிஞர் கீட்ஸ் போன்ற உலக மகா அறிஞர்களுடன் எல்லாம் நெருங்கிப்பழகும் வாய்ப்பு பெற்றிருந்த தாகூர் கிராமமக்கள் ஏழை எளியவர்களிடமும் மிகுந்த அன்போடு இருந்தார் என்பதற்கு ஒரு நிகழ்வை மட்டும் இப்போது பார்ப்போம்.
கிழக்கு வங்காளத்தில் பிரபல நகர ம் டாக்கா. அங்கே இலக்கிய
மாநாட்டு கூட்டவேண்டுமென சில அ றிஞர்கள் ஏற்பாடு செய்தார்கள்.
கவியரசர் ரவீந்திரநாத் தாகூரை அதற்குத் தலைமை தாங்க
அழைத்திரு ந்தார்கள். அவரும் அதற்கு சம் மதம் தெரிவித்திருந்தார்
கவியரசர்.,அப்போது அவருடைய வேலை யாள் ஒருவனுடன் தனது
கிராமத்தில் ஏதோ அலுவலக வேலையா க தங்கி இருந்தார். மாநாடு
கூடுவதற்கு இரண்டுநாட்கள் முன் பாக வரவேற்புக் குழுவின்
செயலாளருக்கு ரவீந்திரரிமிருந் து இப்படி தந்தி ஒன்று வந்தது
.” அசந்தர்ப்பமாகிவிட்டது வர இய
செயலாளர் கவியரசரோடு நெருங்கி
என்னவென்று நேரில் காண விரு ம்பினார் அந்தக்கிராமத்துக்குப்
புறப்பட்டார்.
அங்கே நுழைந்தபோது மனிதசந்தடியே இல்லை. ஊர் வெட்டியான்
அங்கே நுழைந்தபோது மனிதசந்தடியே
மட்டும் தட்டுப்பட்டான். அவனை விசாரித்ததில் அங்கே கிராமம்
முழுவதும் காலரா கண்டிருப்பது தெ ரிய வந்தது.
காலரா என்பது அந்த நாளில் கலவரமான நோய்.அதனால் தி கிலுடனே
ரவீந்தரரின் வீட்டுக்குள் நுழைந்தார் நண் பர்.
கவியரசர் அவரைக்கண்டதும், வரவே
என்று தெரிவித்தார்.
நண்பருக்கு ஒரே நடுக்கம்.
ரவீந்தரரே தன்கையால் நண்பரு க்கு பழமும் சுடச்சுடப்பாலும்
நண்பருக்கு ஒரே நடுக்கம்.
ரவீந்தரரே தன்கையால் நண்பரு
கொண்டுவந்து கொடுத்தார்.
மறுபடி வேலைக்காரரை கவனிக்கபோய்
த ிகைப்பானது. இரவு அவருக்குத்தூ க்கமே வரவில்லை. விடிந்தபோது
ரவ ீந்திரர உதயகீதம் பாடிக்கொண்டே நண்பரின் அறைக்குள் நுழைந்தார்.
சிரித்தபடி,” ஆள் தேறிவிட்டான்ஆனாலும் மிகவும் பலவீனமாகவது சரியா சொல்லுங்கள்?” என்று
கவியரசருக்கு எளியவரிடம் எத்தனை அன்பு உண்டு என்பதையும்
அவரது நெஞ்சுரத்தையும் அறிந்து நண்பர் வியந்தார். காலரா எனக் கேட்டதுமே வேலை ஆளைப்பார்க்கவே தான் அஞ்சியதை நினைத்து
வெட்கினார். ஊர் திரும்பியது ம் அந்த மாநாட்டை இரண்டு
மாதங்களுக்கு ஒத்திப்போட்டுவி ட்டு பிறகு கவியரசர்
தலைமையிலேயே அதனை நடத்தினார்.
கருணை மனம் கொண்ட கவியரசரின் போராட்டசிந்தனைகள்தான் கீதாஞ்சலியாக உருப்பெற்றது.
சுதந்திரம் கிடைக்குமுன்பாகவே அதாவது 1941ம் வருடம் ஆகஸ்ட் ஏழாம் தேதி தன் இறுதிப்பயணத்தில் ஆழ்ந்த அந்த நல்லமனிதர் தனது கீதாஞ்சலியில் வர்ணிக்கும் வறியநிலையானது, சுதந்திரம்கிடைத்துஇத்தனைவருடங் களாகியும் மாறாமல்பெருகிக்கொண் டு போகிறது என்றால் நாம் பெற்ற சுதந்திரத்தைப்பேணிக் காக்கவில்லை என்றுதானேபொருள்?
தாகூரின் கீதாஞ்சலியிலிருந்து...
எங்கே மனம் அச்சமற்றுத்திகழ்கிறதோ
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ
எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ
குறுகிய சாதி சமயப்பிளவுகளால்
எங்கே உலகம் உடையாமல் இருக்கிறதோ
எங்கே உண்மையின் அடியாழத்திலிருந்து
சொற்கள் உதிக்கின்றனவோ
எங்கே தளராத முயற்சி
பூரணத்தை நோக்கிக்கை நீட்டுகிறதோ
தெளிந்த பகுத்தறிவு நீரோடை
மூடப்பழக்கவழக்கம் பாலை மணலில்
பாய்ந்து வற்றாமல் எங்கே இருக்கிறதோ
என்றென்றும் விரிந்து செல்லும்
எண்ணத்தை, செயலை, நோக்கி
என் உள்ளத்தை
எங்கே உன்னருள் அழைத்துச் செல்கிறதோ
அந்த சுதந்திரச் சுவர்க்கத்தில்
என் தந்தையே,
எனது நாடு விழித்தெழுவதாக!
Tweet | ||||
மிக அருமையான பதிவு...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅருமையானதொரு பகிர்வு.
ReplyDeleteமிக அருமையான தொகுப்பு.
ReplyDeleteஉண்மையை வெளிகொணரும்
ReplyDeleteஉண்ணதமான அறிவுச்சுடரே
உனக்குள் மறைந்திருக்கும்
உற்சாகங்களை உணர்த்தி
உலகிற்குதெரிவிக்கும் கவியே
நீர்தரும் விளக்கங்கள்
நீங்கா நினைவிருக்கும்
நீருரைக்கும் கருத்துக்கள்
நீடூடி வாழட்டும் என வாழ்த்துகிறேன்
வாழ்கபல்லாண்டு.
கருத்து தெரிவித்த அனைவர்க்கும் மிக்க நன்றி
ReplyDelete