யாகங்கள் பல செய்தீர் உங்கள்மன
சோகம் நீங்கிடவேண்டுமென்றே
தாகம் தணிக்க வந்தேன் தவறா?
சோகம் நீங்கிடவேண்டுமென்றே
தாகம் தணிக்க வந்தேன் தவறா?
கண்ணுக்கு எட்டாத்தொலைவில்
காணாபொருள்போலிருந்தேன்
காட்சிகொடுத்ததும் தவறா?
காணாபொருள்போலிருந்தேன்
காட்சிகொடுத்ததும் தவறா?
கோடிக்குரல் அழைத்தால்
தேடிவருவது தெய்வகுணம்
ஓடிவந்ததும் தவறா?
தேடிவருவது தெய்வகுணம்
ஓடிவந்ததும் தவறா?
என்பாதைஅத்தனையும்
எங்கும் அடைத்துவிட்டீர்
எப்படியோ வந்ததும் தவறா?
எங்கும் அடைத்துவிட்டீர்
எப்படியோ வந்ததும் தவறா?
என்குணம் எதிலும் அடங்கும்
என்பது தெரிந்திருந்தும்
ஏரிகுளங்களை அழித்தது தவறு
என்பது தெரிந்திருந்தும்
ஏரிகுளங்களை அழித்தது தவறு
இல்லாத பொழுதினில் ஏங்குவதும்
வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
வாழும் மனிதன் செய்யும் தவறு
வருகின்றபொழுதினில் சேமிக்காததும்
வாழும் மனிதன் செய்யும் தவறு
இயற்கையின் கொடைதன்னை
இயன்றவரை அழிப்பதுதான்
இன்றைய மனிதனின் தவறு
இயன்றவரை அழிப்பதுதான்
இன்றைய மனிதனின் தவறு
பொறுத்ததுபோதுமென்றுதான்
பொங்கி எழுந்து வந்தேன்
புரிந்ததா உங்கள் தவறு?
பொங்கி எழுந்து வந்தேன்
புரிந்ததா உங்கள் தவறு?
Tweet | ||||
மழைப்பேச்சு மழலைப்பேச்சுபோல அழகோ அழகு. :) பாராட்டுகள்.
ReplyDeleteமழையின் குரல்.......
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅழகிய கவிதை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புரிந்தது சகோ...
ReplyDeleteமனிதன் செய்யும் தவறு...
ReplyDelete