அப்பாவின் பட்டுவேஷ்டிமீது
அண்ணனுக்கு ஒருகண்
தம்பிக்கு இரண்டு கண்
பெண்ணானஎனக்கும்
அதன் மீதான
பார்வையைக்கண்டு
அம்மா சிரிப்பாள்
அகலஜரிகை கரையிட்டு
சற்றே பழுப்புநிறமானாலும்
பளபளக்கும் பட்டுவேஷ்டியை
தாவணியாய் அணிந்துகொள்ள
தணியாத ஆசை இருந்தது
சுபநாட்களில்
கல்யாணப்பந்தலில்
அப்பாவின் பட்டுவேஷ்டி
அவரது மேனியில்
அமர்க்களமாய் ஜொலிக்கும்
திருபுவனம்பட்டாம்
திருமணத்தில் மாமனார் சீராம்
அருமையாய் அதைப்பேணுவார்
’ஆளழகா துப்படிக்காரா என்பதுபோல
செல்வநிலை அதிகமில்லாத என்னை
பட்டுவேஷ்டி பணக்காரனாக்குகிறது’
என்று சொல்லி சிரித்துக்கொள்வார்
கூட்டங்களில் அப்பாவின் கம்பீரத்தை
சட்டென அடையாளம்காட்டும்
அப்பாவால் வேஷ்டி அழகாகிறதா
வேஷ்டியால்அப்பா அழகாயிருக்கிறாரா
பட்டிமன்றக்கேள்விகள்
பட்டுவேஷ்டியைச்சுற்றியே
வந்துகொண்டிருக்கும்
ஒருநாளும் அதை
யார் தொடவும் அனுமதித்ததில்லை
பொக்கிஷமாய்ப்பேணி
பெட்டிக்குள் பத்திரப்படுத்துவார்
சந்தன சோப்பிட்டு
வேஷ்டிக்கு நோகாமல் துவைத்து
வெய்யில்மறைந்ததும்
நிழலில்காயவைத்து
நேசமுடன் பாதுகாப்பார்
பட்டுவேஷ்டியை
பத்துமாதக்குழந்தைபோலத்தான்
பெட்டியினின்றும் எடுப்பார்
மடித்த இடம் கத்தியின் கூர்மையாய்
வாளின்பளபளப்பாய்
முப்பதுவருஷமானாலும்
அழகாய் ஜொலிக்கும்
நாள்பட இருக்கவேண்டுமென
நான்கு வசம்புத்துண்டங்களை
பட்டுவேஷ்டிக்குப்
பக்கதில்போட்டிருப்பார்
எதிர்பாரா அப்பாவின் மரணத்தில்
நிலைகுலைந்து போய்விடவும்
பட்டுவேஷ்டியைப்பற்றியெல்லாம்
பலநாட்கள் நினைக்கவே இல்லை
அன்றுஅப்பாவின்
பெட்டியைத்திறந்தபொழுது
அதில் அந்த பட்டுவேஷ்டி இல்லை.
சின்னக்கவர் ஒன்று தென்படவும்
’திறந்துபார்த்தோ ம்
அதில்பட்டுவேஷ்டியை
விலைக்குபோட்ட ரசீதும்
இரண்டாயிரம் ரூபாயும் சில்லறையும்
‘எனது மரண காரிய செலவுக்கு..’
என்ற அப்பாவின் கையெழுத்திட
கடிதமும்இருந்தது.
Tweet | ||||
வேதனை
ReplyDeleteநெஞ்சை உருக்குவதாக இருந்தது.
ReplyDeleteநெஞ்சை உருக்குவதாக இருந்தது.
ReplyDeleteஉருக்கம்.
ReplyDeleteஉருக்கம்.
ReplyDeleteநன்றி ராமலஷ்மி இருமுறை கருத்து வந்தும் தனியே நன்றி சொல்ல மறந்துவிட்டேன்
Deleteகடைசி வரிகள் கண்கலங்கச் செய்து விட்டன.
ReplyDeleteசரியான பராமரிப்பு இல்லாவிட்டால் ‘பட் பட்’ எனப் பட்டுப்போகும் பட்டு வேஷ்டியைப்பற்றி மிக அழகாகவே, அருமையாகவே வர்ணித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
என்னைக்கேட்டிருந்தால் ஒரிஜினல் பட்டு வேஷ்டியின் படத்தினையே தங்களுக்கு அனுப்பி வைத்திருப்பேன். தாங்கள் காட்டியுள்ள ஜரிகை வேஷ்டிக்கு பதில் பட்டு வேஷ்டியாகவே காட்டியிருந்திருக்கலாம். :)
கருத்துகூறிய அனைவர்க்கும் மிக்க நன்றி @வைகோ சார்..பட்டுவேஷ்டி சட்டென கிடைக்கவில்லை. தாங்கள் அனுப்பித்தந்தால் இதை மாற்றி உண்மையான பட்டு சேர்க்கிறேன் தங்களின் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteபட்டுவேஷ்டி படங்கள் அனுப்பித்தந்த வை கோ சாருக்கு மிக்க நன்றி. பதிவே பட்டாகிறது இப்போதுதான்!
ReplyDelete//பட்டுவேஷ்டி படங்கள் அனுப்பித்தந்த வை கோ சாருக்கு மிக்க நன்றி.//
Deleteஅடடா, BUT ... பட்டுவேஷ்டிகளை அனுப்பியதை இப்படி பகிரங்கமாகச் சொல்லத்தான் வேண்டுமோ.
//பதிவே பட்டாகிறது இப்போதுதான்!//
பட்டான பதிவுக்குப் பாராட்டுகள்.
-=-=-=-
இட்டது பட் ஆனால் வாட் என்ன?
என நாங்கள் பிறரிடம் கேட்போம்.
தெரியாமல் விழிப்போர்களுக்கு
IT=அது, But=ஆனால், What=என்ன?
என பிறகு விளக்குவோம். :)
வைகோ சார்...டக்கென அனுப்பித்தந்தீர்கள் அல்லவா அதை அன்போடு நினைக்கவேண்டுமே...
Deleteஇட் அது பட்டானால் வாட் என்ன சட்டென எல்லாரும் சொல்லிடுவாங்களே:)
உருக்கம்.....
ReplyDeleteநன்றி திரு வெங்கட் நாகராஜ்
Deleteநெகிழ்ச்சி
ReplyDeleteநன்றி திரு சென்னைப்பித்தன்
Deleteசந்தோஷமாய் படித்து வந்தால் முடிவில் நெகிழ்ச்சி...
ReplyDeleteDeeply emotional. appa is always special, ..... I remembered by dad's unworn and worn shirts and wardrobe now adorning my husband. When I visit my mom's place I smell his wardrobe........ like a child I feel my dad's presence.... Very well written.
ReplyDelete