Social Icons

Pages

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway.
வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம் வாசிக்காமல்  செல்லும் பயணிகள்  மிகக்குறைவு.தினத்தந்தி போன்ற நாளிதழாவது சிலர் கைகளில் தவழும் இப்போது அந்தப்பழக்கம் கைபேசியால் கைவிடப்பட்டுவிட்டாலும் முற்றிலும் மறையவில்லை. அடிக்கடி  பயணம் மேற்கொள்வதால்  என்னால் இதனை உறுதியாகவும் சொல்ல இயலும். புத்தகம் வாசிப்பவர் இல்லாமலா  கடைகளில்  இத்தனை  மாத வார இதழ்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்? இயற்கை சக்திகள் போல  இயல்பானதாக  என்றும் இருப்பது  புத்தகம் வாசிக்கும் பழக்கமும். இணையமும் kindle  இன்னபிற நவீன சாதனங்கள்  வந்தாலும்  ஒரு புத்தகத்தை கையில் எடுத்துவைத்துக்கொண்டு  அதை மெல்லப்பக்கம் பக்கமாய் திருப்பி  வாசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை ஏது?
 என் அப்பா  எந்தப்புத்தகமானாலும் அதை பிறந்த குழந்தையைப்போல  புத்தகத்திற்கு வலிக்காமல் மென்மையாய் எடுப்பார்.  சடசடவென பக்கங்களைப்புரட்டுவது, புத்தகத்தை  பாய்போல சுருட்டுவது, பக்க ஓரங்களை மடிப்பது, அவசரவசரமாய்  கடைசிபக்கத்திலிருந்து  ஆரம்பித்து  விரைந்து படிப்பது, படித்ததும் புத்தகத்தை தொப் என தூக்கிக்கடாசுவது என்பதெல்லாம் அப்பாவிற்கு  சுத்தமாய் பிடிக்காது. அவர் வாசிக்கும் அழகைப்பார்க்கவே நானும் என் உடன்பிறப்புகளும் தூர நின்று கவனிப்போம்.

பூஜைக்கென்று  தியானத்திற்கென்று  படுக்கவும்சமைப்பதற்ககும் என்றும் குளியல் இத்தியாதிகளுக்கு என்று பிரத்தியேக இடம் உள்ளதுபோல புத்தகங்களுக்கென்று நாம்   வீட்டில்இடம் ஒதுக்கி இருக்கிறோமா! 
  
புத்தகங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் பலர்.

கர்னாடகாவில் ஒருவர் புத்தகங்களூக்கு என்றே  வீடு கட்டி இருக்கிறார்  ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே பாண்டவபுரா என்னும் இடத்தில் வீடுமுழுக்க புத்தகங்கள்  நூலகம் எனலாம் பழையவேதங்கள் முதல் மென்பொருள்  (கணிணி) பற்றிய பல்வகைப்புத்தக்ங்கள் ஷேக்ஸ்பியர்முதல் ஹாரிபாட்டர்வரை என சம்பத்தித்ததில் தனக்கென ஒருவண்டிகூடவாங்கிக்கொள்ளாமல் புஸ்தகங்களாகவாங்கிவிடுவார் அங்கேகவுடா.
வயது 68 தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வேலையில் இருந்தபோது போனஸ்  உபரிப்பணம் என்று கிடைப்பதை புஸ்தகங்களாகவாங்கிவிடுவாராம்.
“என் கணவர் ரயில்வே ஸ்டேஷன்லிருந்து சாக்கு மூட்டையில் புஸ்தகங்களாக  தோளில் சுமந்து வருவார்..இவருடன் வேலைபார்த்தவர்கள் எல்லா கார் ஸ்கூட்டர் நிலம் என்றுவாங்கிவார்கள் இவருக்குப்புஸ்தகங்கள்தான் எல்லாமே” என்கிறார் இவர் மனைவி விஜய லஷ்மி.


“என்னிட நாலுபாண்ட் நாலுஷர்ட் தான் இருக்கின்றன,. பத்துவருஷம் முன்பு ஒருநிலத்தை பத்துலட்சத்துக்கு(இப்போது அதன் மதிப்பு ஒருகோடிக்குமேல்) விற்று நூலகத்தை கவனிக்க  விருப்பஓய்வும் பெற்றுக்கொண்டேன்” என்கிறார் அங்கே கவுடா
ஹரிகோட்டா என்ற பிசினஸ் புள்ளி ஒருமுறை கிருஷ்ணராஜ் சாகரில் கோவிலை புனருத்தாரணம் செய்யவந்தபோது இந்த நூலகத்தையும் வந்துபார்த்தாராம் அப்போது 70000 புத்தகங்கள் இருந்தனவாம். அவரே இந்த இடத்தில் 2005ல் நூலகமாய் கட்டிக்கொடுத்தாராம்.
அப்போதைய முதலமைச்சர் அங்கேகவுடாவைப்பாராட்டி 2கோடி நன்கொடைதருவதாக வாக்களித்தாராம் ஆனால்கிடைத்தது 25லட்சம் மட்டுமே!
பல எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் படிப்பாளிகள் இங்குவந்துபோகின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்துபோகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து இங்கேவந்து இந்த நூலகத்தைப்பார்த்த ரன்மல்ஸ்மித் என்பவர் பார்வையாளர்கள் புத்தகத்தில்,” இந்தியாவில் உயர்ந்தது தாஜ்மகால்மட்டுமல்ல இந்த நூலகமும்தான் .தாஜ்மஹாலைவிடவும் உயர்ந்தது என்பேன் அங்கே கவுடாவிற்கு எந்த உதவும் கிடைக்காதது துரதிர்ஷடம்தான்’என எழுதி உள்ளார்.

இந்த நூலகத்தில் காந்தீஜிபற்றிய 2500புத்தகங்களும் பகவத்கீதை பற்றி 2500புத்தகங்களும் 250000 உலக இதழ்கள் உலகநாடுகள்பற்றி 7000வரைபடங்கள் வேதங்கள் உபநிஷத்துகள் புராணங்கள் இவைபற்றி 2000 நூல்கள் ஆங்கில எழுத்தாளர்களின் 2லட்சம் புத்தகங்கள் இந்துகிறிஸ்துவ ஜைன இஸ்லாமிய புத்தகங்கள் பிரபலங்களின் அபூர்வபுகைப்படங்கள் பழையகால நாணயங்கள் கன்னடமொழி நாவல்கள் சிறுகதை தொகுப்புகள் கவிதைகள் கலை இலக்கியபுத்தகங்கள் தவிர தமிழ் மராட்டி ஒடிசி உருது பெர்சியன் அராபிக் தெலுகு வங்காளம் சீனா ரஷ்ய மொழி புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கன.


-

10 comments:

  1. தஞ்சையை விட்டு சென்னைக்கு வந்தபோது என்னிடம் சுமார் 750 புத்தகங்கள் இருந்தன. அவற்றில் பல உளவியல், மருத்துவ இயல், பிலாசபி, தியாலஜி, மற்றும் இதிகாசங்கள், நமது சங்கத்தமிழ் நூல்கள், திருக்குறள், தொல்காப்பிய உரைகள்,
    உபநிஷத் எல்லாம். இது போல.

    ஆயினும், என் வாசிப்புக்கும் எனது வாரிசுகளின் வாசிப்பு நிலைக்கும் மலைக்கும் மேட்டுக்கும் இருக்கும் நிலை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. சுப்புத்தாத்தாவின் வருகைக்கு நன்றி ஆமாம் நீங்கள் சொல்வதுபோல தற்காலத்தினர் வாசிப்பு உங்கள் வாசிப்பின் அளவு இல்லைதான் ஆனாலும் புத்தகம் பிரிக்கிறார்களே என சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியதுதான் கருத்துக்கு நன்றி

      Delete
  2. மிகவும் பயனுள்ள பதிவு. ஆச்சர்யம் அளிக்கும் தகவல்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் நன்றிகள்.

    ReplyDelete
  3. //என் அப்பா எந்தப்புத்தகமானாலும் அதை பிறந்த குந்தையைப்போல //

    என்பதில் ’குந்தையைப்போல’ என்ற வார்த்தைக்கு பதிலாக ’குழந்தையைப்போல’ என இருப்பின் இன்னும் குழந்தையைப்போல அழகாக இருக்கும் அல்லவா ! :)

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார் குழந்தையை திருத்திவிட்டேன்! நீங்கள் தெரிவிக்கவில்லையெனில் கவனிக்க வாய்ப்பு இல்லை நன்றி மிக.. தங்களின் மேலான கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் அதீதமான ஈடுபாடு இருப்பது சாத்தியமே. ஆனால் தன்னுடைய சுய சம்பாத்தியத்தை இப்படி புத்தகங்களை சேகரிப்பதிலும் பராமரிப்பிலும் உபயோகிப்பது ஆச்சரியமான சமாசாரம். நீங்கள் எழுதி இருக்காவிட்டால் பல பேருக்கு தெரியாமலேயே இருந்திருக்கும். மிக்க நன்றி

    ReplyDelete
  5. வெகுஜன பத்திரிகைகள் அதிகமாகியிருந்தாலும் வாசிப்பு என்னவோ குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. பத்திரிக்கை விலை relatively stating அதிகம் தான். வாசகர் குறைவை ஈடுகட்ட பத்திரிக்கை விலை அதிகமாக்கியிருக்கிரார்களோ? இத்தனைக்கும் பாதிப் பக்கங்களில் விளம்பரம்.

    சமீபப் பயணத்தில் பக்கத்து இருக்கைக்கரர் என்னிடமிருந்த குமுதம், கல்கி, விகடன், குங்குமம் அத்தையையும் வாங்கிப் படித்தார். ரெண்டு நிமிடங்கள் தான். சினிமா பக்கங்களை மட்டும் மேய்ந்து திருப்பிக் கொடுத்துவிட்டார்.

    நாற்பது வயதுக்குக் கீழே தினசரி வாசிப்பு பழக்கம் குறைந்து வருவதாக நம்புகிறேன்.

    ReplyDelete
  6. நூலகம் கட்டியவரை பாராட்டுவதா பொருமுவதா? எத்தனை ஏழைகள் பள்ளிக்கூடம் போகமுடியாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடும் பொழுது.. நல்ல மனங்கள் கூட காய்ந்துப் பொடியாகும் காகிதத்தில்..

    ReplyDelete
  7. //குங்குமம் அத்தையையும் வாங்கிப் படித்தார்.

    பாழாய்ப் போன கூகில் மொழிமாற்றி.

    ReplyDelete
  8. சுவாரசியமான பதிவு, வாழ்த்துகள். இன்று கணினி தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு, புத்தகங்களை வாசிப்பதென்பது அரிதாகவுள்ளது. கைக்குள்ளேயே எல்லாம் கிடைப்பதால் உலகம் சுருங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. என்னதான் இதுபோன்ற வளர்ச்சிகள் நிகழ்ந்தாலும் புத்தகமாகப் படிக்கும் சுவையே தனி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.