Social Icons

Pages

Friday, November 03, 2006

குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கு)

மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நிலமகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.

14 comments:

  1. நச்சுன்னு முடிச்சுருக்கீங்க. தூள்.

    ReplyDelete
  2. Anonymous2:23 PM

    Nalla eshuti irukeenga :)

    ReplyDelete
  3. கவிதை மிக அருமை.பரிசு கிடைக்க வாழ்த்துகள்.

    ஆனா இப்போ ஆக்ஸிஜன் பார்லர்களை ஆரம்பிச்சு காத்தையும் வெலை போட்டில்ல விக்கிறாய்ங்க...

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  5. badnewsindia ஜெயன், ஹனீஃப்., சுதர்சன்(ஆக்சிஜனுக்கும் விலையா? நீங்க சொல்றதும் சரிதான்)
    பாஸ்டன் பாலா! அனைவருக்கும் நன்றி

    ஷைலஜா

    ReplyDelete
  6. ஐம் பூதங்களையும் பூடகமாய் :-) கவிதைக்குள் கொண்டு வந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள் ஷைலஜா!

    இலவசங்கள்,
    இல(இல்லை)
    வசங்கள் :-))

    ReplyDelete
  7. இதனால்,நீங்கள் கூற வரும் உட்கருத்து என்ன?

    அறியவே கேட்கிறேன்.

    ReplyDelete
  8. இதனால் நான் கூற வரும் உட்கருத்து என்ன எனக்கேட்கும் தமிழினிக்கு..

    காற்று இலவசமாய் கிடைக்கிறது..அதனால் அதை நாம் அவ்வளவாய் போற்றவில்லை என எண்ணுகிறேன்.அந்த ஆதங்கத்தில் எழுந்த கவிதை.

    கண்ணபிரானுக்கு மனம் கனிந்த நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  9. நல்ல கவிதை

    //இலவசங்கள் என்றைக்குமே
    இரண்டாம்பட்சம்தான்.//

    தேவையற்றதை தருவதே இலவசத்தின் நோக்கம், இதில் இது மட்டும் விதி விலக்கோ.

    ReplyDelete
  10. ஆஹா பஞ்ச பூதங்களையும் துணைக்கு அழைத்துள்ளீர்கள் தேன்கூடு பரிசுக்கு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இலவசங்கள் இரண்டாம் பட்சம்ங்கறது, அது நம்ம கைக்கு வந்ததுக்கு அப்புறம்தானே..அதுக்கு முன்னாடி அது ஒரு இழுக்கும் ஈர்ப்புதானே..

    நல்லா எழுதியிருக்கீங்க..வசந்த் ஒரு பக்கம் கற்பனைக் குதிரையை தட்டி விடுறார்-னா, நீங்க இன்னொரு பக்கம் கதை,கவிதைன்னு தூள் கிளப்புறீங்க.

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  12. சுருக்கமா நறுக்குன்னு இருக்கு!!

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  13. சிவமுருகன்,திராச,நெல்லைசிவா,அருட்
    பெருங்கோ..அனைவர்க்கும் என் நன்றி

    ஷைலஜா

    ReplyDelete
  14. இலவசங்களின் இன்றியமையாமையை கேள்விக்குள்ளாக்கியமை நன்று..

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.