மரக்கிளையோடு
பற்றி இருக்கும்
'அற்றது பற்றெனில்
உற்றது வீடு'
என்பதைஅறிந்தாற்போல்
இளமைப்பசுமையை
காலக் கரைசலில்
இழந்துவிட்டு
இனி வரும்மரணத்திற்கு
இசைவாகக்
காத்திருக்கும்
அடித்த பெருங்காற்றில்
அப்படியே உடல் சரியும்
பழுத்த இலை பார்த்து
பச்சை இலை
பரிகாசமாய் சிரிக்கும்
வளர்த்த வேருக்கு
வாழ்க்கை முடியுமுன்
வணங்கி நன்றி சொல்ல
விரைந்து தரை தொடும்
பழுத்த இலைதான்
நாளை சருகாகி
உரமாகப் போவதை
இளமை கர்வத்தில்
காற்றோடு கைகுலுக்கும்
பச்சை இலைதான்
அறியுமா என்ன?
Tweet | ||||
Its a Good Kavithai
ReplyDelete-Ravi
என் தாயார் கூறுவார்கள் குருத்த ஓலை கருத்த ஓலையைப் பார்த்துச் சிரித்ததாம்.அந்தக் கருத்தையே ஒரு அழகன கவிதையாக அளித்துவிட்டீர்கள்.நல்ல கவிதை
ReplyDeleteகவிதை நன்றாக வந்திருக்கிறது. ஆனால் கடைசி வரிகளில் வாக்கிய அமைப்பு சரியாக இல்லையோ என்றொரு தோணல்
ReplyDeleteசருகுகளில் ஒலியில் மலரும் நினைவுகள்
Athutaan vaashkai , nalla kavithai ;)
ReplyDeleteவண்ணதாசனின் ஏதோஒரு சிறுகதையில் இது பற்றி படித்த நினைவு...அது...குருத்தோலை என்கிற கதையா..?? என்னவோ..இதைப் படிக்கையில் எங்கோ என் நெஞ்சு போகிறது....உங்களுக்கு மரபு வாய்த்திருப்பது ஒரு பிள்ஸ் பொயின்ற்..கவிதை சுகத்தையும்..இனம் புரியாத..துல்லிய உணர்வையும் தருகிறது.
ReplyDeleteம்...ம்....
எல்லாம் இருந்தும்
ReplyDeleteஎல்லாம் மறக்கும்
இனிமைக்காலம் இளமை
தனிமை அங்கு இல்லை
பச்சை இலை பழுக்கையிலே
பச்சைஇலையுடன் பேசாதோ
தானிருந்த காலத்தை
அதனுடன் பகிராதோ
உரமாகிப் போவதுவும்
வேரோடு இணைவதுவும்
பசும் இலையாய் துளிர்ப்பதுவும்
பாழ் இலையாப் போவதுவும்
காலத்தின் கணக்கே
ஏனிந்த பிணக்கே!
தாமத பதிலுக்கு மன்னிக்க திராச, மஞ்சூர்ராசா
ReplyDeleteசூர்யகுமார்...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
எஸ்கே!கவிதை மடல் அருமை! நன்றி
ஷைலஜா
சைலஷா!
ReplyDelete"நாளைக்கு நமக்கு இதே" ...நல்லாச் சொல்லியுள்ளீர்கள்.
யோகன் பாரிஸ்
வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
ReplyDeleteசுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html
இது வாழ்க்கையின் தத்துவக்கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜோதிபாரதி said...
ReplyDeleteவலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.
சுட்டி இதோ!
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_26.html
8:58 AM
>> பார்த்தேன் ஜோதிபாரதி மகிழ்ச்சி\அங்கே பின்னூட்டமிட்டுவிட்டேன்
\\அன்புமணி said...
இது வாழ்க்கையின் தத்துவக்கவிதை! வாழ்த்துக்கள்!
12:34 PM\\
நன்றி அன்புமணி
///
ReplyDeleteபழுத்த இலைதான்
நாளை சருகாகி
உரமாகப் போவதை
இளமை கர்வத்தில்
காற்றோடு கைகுலுக்கும்
பச்சை இலைதான்
அறியுமா என்ன?
////
நால்ல வரிகள்
நாளை நாமூம் பழுத்த இலையாவோம் என்பதை இளமை உணர வேண்டூம்
பிரியமுடன் பிரபு said...
ReplyDelete///
பழுத்த இலைதான்
நாளை சருகாகி
உரமாகப் போவதை
இளமை கர்வத்தில்
காற்றோடு கைகுலுக்கும்
பச்சை இலைதான்
அறியுமா என்ன?
////
நால்ல வரிகள்
நாளை நாமூம் பழுத்த இலையாவோம் என்பதை இளமை உணர வேண்டூம்
9:42 PM
<<
வாங்க ப்ரபு! பலநாள்முன்பு எழுதின கவிதை இது ஆமாம் பழுத்த இலையாவோம் நாமும் என்பதை உணரவேண்டும்தான்..கருத்துக்கு நன்றி.