புதைந்துவிட்டாற் போல்
என்னுடையதான உன்
நினைவுகள்
குழப்பமான
வண்ணக்கலவையாய்
ஓவியத்தில் நீயும்
வார்த்த அச்சினைப்போன்ற
கையெழுத்தாய் நானும்
பூவினைப் பறிக்காதவரை
கவிதையின் வரிகளில்
செடிக்கும் இடம் உண்டு
பனித்துளி மறையாதவரை
புற்கள் கவனிக்கப்படும்
நிலவு உள்ளவரை
நீள் வானம்
நோக்கப்படும்
நிலைக்கண்ணாடிமுன்
நின்றால் ஓர் உருவம்
உடைந்த் கண்ணாடியின்
ஒவ்வொரு சில்லிலும்
ஒன்றின்பலமுகம்
மறந்தாயோ
மறைந்தாயோ
உடைந்த கண்ணாடியாய்
சிதறிக்கிடக்கிறது
உன் நினைவு.
Tweet | ||||
/குழப்பமான
ReplyDeleteவண்ணக்கலவையாய்
ஓவியத்தில் நீயும்
வார்த்த அச்சினைப்போன்ற
கையெழுத்தாய் நானும்/
அழகான உவமை...
/பூவினைப் பறிக்காதவரை
கவிதையின் வரிகளில்
செடிக்கும் இடம் உண்டு/
அதனால்தானே பூஞ்செடி என்று சேர்த்தே சொல்லப்படுகிறது? :)
வாழ்த்துக்கள் ஷைலஜா...
உருக்கமான கவிதை. அருமையாயிருக்கிறது.
ReplyDeleteஎங்க வீட்டுக்கு வந்து பாரதியின் ஞானப்பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.
http://pirakeshpathi.blogspot.com/
நினைவுகள் கொடுமையானவை
ReplyDeleteசுகமானவை என அவை நம்பப் படுகின்றன
மறந்தாலும், மறைந்தாலும்
அவை என்ற்றும் சுமையே!
மறத்தலே சுகம்!
வாங்க எஸ்கே.நன்றிஉங்கமடலுக்கு\
ReplyDeleteஷைலஜா
நன்றாக இருக்கிறது கவிதை.
ReplyDeleteNalla kavithai :)
ReplyDeleteமுதல் பாகம் சூப்பர்.
ReplyDeleteஆனா, நிலைக்கண்ணாடியில் சிதறித் தெரியும் முகத்துக்கும் மேலே சொல்லப்பட்ட பூ, நிலா, புல்லுக்க்லெல்லாம் என்னா லிங்கு?
உவமை புரியலியே..
வயசாவுதோ எனக்கு? :)