நான்பாட்டுக்கு வாடகைவீட்டுக்கு விசிட் அடிச்சி அப்பப்போ விழிக்கு விருந்து கொடுத்திட்டு பின்னூட்டம் மட்டும் இட்டு டபாய்ச்சிட்டு இருந்தேன் டாக்டர் விஎஸ்கே, லபக்குனு பிடிச்சிட்டார்! மரியாதையா எழுதுங்கன்னு அன்பு அதட்டல், மறுக்க முடில்ல.
பூட்டி இருந்த சொந்தவீட்டுக்குமறுபடி சித்திரைல திரும்ப வந்திருக்கேன்.. ஒரே தூசியாகிடக்கு..ஒழிச்சி சுத்தம் செஞ்சிட்டு கொஞ்சம் பூக்களை அடுக்கிவச்சிட்டு புத்தாண்டுக்கு நல்வரவு கட்டியம் கூறிட்டு அழகு பத்தி பேசத்தயாராகபோறேன்.
பூக்கள்தான் அழகு லிஸ்ட்ல முதல்ல இருக்கு.
சமீபத்துல தான் வாஷிடன் தலைநகரம்போய் செர்ரிபூக்களைக் கண்குளிர பார்த்துவந்தேன்...மரமெல்லாம் பூப்போர்வைதான். ஆனா அதுக்கப்றம் அடிச்சகுளிர்ல எல்லாபூக்களும் அழுது உதிர்ந்துபோயிட்டுது.
அப்புறம் குழந்தைங்க கன்னம்குழிவிழ சிரிச்சா எப்போதும் அழகு.
நீ நடந்தால் நடை அழகு அப்படீன்னு நக்மா பாடுவாங்களே ரஜனியப்பாத்து ஒருபடத்துல !ஆமா,
காதல் வசப்பட்டால் காதலியிடம்-காதலனிடமும் காணும் எல்லா அம்சமும் அழகுதான்!
சரியான பதத்துல ரவாகேசரி செய்து நிறம்மணம் குணத்தோடு அதை பாத்திரத்தில் பார்க்கிறபோதே அழகு!
ஆடிமாசம் அம்மாமண்டபத்தில் காவிரி கையைவீசி வரும் பாருங்க அது அழகு,,அங்கேபத்துறைல நின்றபடியே தூரத்து உச்சிப்பிள்ளையார் கோயில் மலைமுகடுதெரியுமே அதுஅழகு..அரங்கன். கோயில், மதில்கள், வீதிகள்,அத்தனையும் அழகு! திருவரங்கமில்லை அழகரங்கம் அது!
தமிழுக்கு அழகென்று பேர் !
இதயம் தொட(ர்)கட்டுரை எழுதும் விஎஸ்கே எழுதுவது அழகு
மாதவிப்பந்தலில் மாதவன் பற்றி கண்ணபிரான் ரவி எழுதுவது அழகு.
நுனிப்புல் எனச் சொல்லி முழுத்திறமைகாட்டும் உஷாவின் பதிவு அழகு
அடக்கமே உருவான துளசியின் அன்பு அழகு
குமரனின் குமரன்(முருகன்) அழகு
ராகவனின் கள்ளியிலும்பால் அழகு.
ஆசிஃபின் கிண்டல் அழகு
சர்வேசனின் சர்வே அழகு
தம்பிகதிரின் வறட்டி அழகு
புதுப் பாடலாசிரியர்'ஜியின் சீனப்பாடலின் தமிழாக்கம் அழகு
மதுமிதாவின் காதல் கவிதைகள் அழகு
பாட்நியூஸ்ஆஃப் இண்டியாவின் ர ற பிழையும் அழகு!
இன்னும் தமிழ்மணத்தில் நான் ரசித்துப்படிக்கும் பலரது பதிவுகள் மிக அழகு!எதைச் சொல்ல எதை விட?
எப்டியோ ரொம்ப நாளைக்கப்றம் நான் எழுதி இருக்கிறது எப்படி? கொஞ்சமாவது அழகாஇருக்கா?:)
Tweet | ||||
//கொஞ்சமாவது அழகா இருக்கா?:)//
ReplyDeleteஆகா, என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க ஷைலஜா!
பூட்டி இருந்த வீட்டில், சித்திரையில் தூசு தட்டி, பூக்களை அடுக்கி வைத்து, ரவா கேசரி கிண்டி, தலைவர் பேரைச் சொல்லி, காதலன்-காதலியைக் கூப்பிட்டு, காவிரி நீர் கொடுத்து, அரங்கனைத் துணைக்கு அழைத்து!!!!!!!
அப்பப்பா...இவ்ளோ அழகா!!!!
ஆங், முக்கியமான ஓரழகை விட்டுவிட்டீர்களே!
ReplyDeleteஅரங்கன் என்றவுடன், திருவரங்கப்ரியா என்பவர், மிகவும் லயித்து இடும் பின்னூட்டமும் அழகே!!!
அழகுக்கு மதிப்பளித்து,
ReplyDeleteஅழகாக எனை மதித்து,
அழகுடனே தூசிதட்டி,
அழகான பதிவெழுதி,
அழகான பல சொல்லி,
அழகான புத்தாண்டில் பதமான ரவாகேசரி கிளறி,
அழகென ரசித்த பலவையும் அளவோடு
அழகாகாக எழுதிய,
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!
இந்த பதிவும் அழகாத்தானே இருக்கு....அதையும் லிஸ்ட்ல சேத்துருங்க....
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்க!
ReplyDeleteஅழகு அருமையோ அருமை!
இப்படியும் அழகு படுத்தலாமோ? ;)
ReplyDeleteம்ம்...வித்தியாசமாக... நன்றாக அழகு படுத்திருக்கீற்கள்!
வாழ்த்துக்கள்!
//கொஞ்சமாவது அழகாஇருக்கா?:)//
ReplyDeleteஅழகாவே இருக்கு!
உங்க பங்குக்கு யாரையுமே கூப்பிடலையே?
everything is very beatiful indeed. romba nalla pathivu. first time I saw your name in Thamizhmanam, and "better late than never."
ReplyDeleteஅழகாக இருக்கிறது பதிவு திருவரங்கப்ரியா. இரவிசங்கரின் பதிவில் அந்தரங்கனை அந்தரங்கத்தில் என்று அழகுபட சொல்லியிருந்தீர்களே அந்த அழகையும் இரசித்தேன்.
ReplyDeleteம்ஹீம்
ReplyDeleteஇதெல்லாம் ஒத்துக்க முடியாது
குறைஞ்சது பத்து பாரா இருக்கணும்
எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு பெரிய பெரிய அழகு பதிவு போட்டா நீங்க சிம்பிளா போட்டு ஏமாத்த பாக்கறிங்களா...
//எப்டியோ ரொம்ப நாளைக்கப்றம் நான் எழுதி இருக்கிறது எப்படி? கொஞ்சமாவது அழகாஇருக்கா?:)//
ReplyDeletereally good!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//ஆகா, என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க ஷைலஜா!
பூட்டி இருந்த வீட்டில், சித்திரையில் தூசு தட்டி, பூக்களை அடுக்கி வைத்து, ரவா கேசரி கிண்டி, தலைவர் பேரைச் சொல்லி, காதலன்-காதலியைக் கூப்பிட்டு, காவிரி நீர் கொடுத்து, அரங்கனைத் துணைக்கு அழைத்து!!!!!!!
அப்பப்பா...இவ்ளோ அழகா!!!!//
நன்றி ரவி! கை வண்ணம் அங்கே(மாதவிப்பந்தலில்) கண்டதில் ஏதோ கொஞ்சம் சொல்வண்ணம் இங்கு அழகுக்கு!
ஷைலஜா
VSK said...
ReplyDelete//அழகுக்கு மதிப்பளித்து,
அழகாக எனை மதித்து,
அழகுடனே தூசிதட்டி,
அழகான பதிவெழுதி,
அழகான பல சொல்லி,
அழகான புத்தாண்டில் பதமான ரவாகேசரி கிளறி,
அழகென ரசித்த பலவையும் அளவோடு
அழகாகாக எழுதிய,
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! //
நான் நன்றி சொல்வேன்
டாக்டர்விஎஸ்கேக்கு
என்னை இங்கே திரும்ப
கொண்டுவந்ததற்கு!
ஷைலஜா
//பங்காளி... said...
ReplyDeleteஇந்த பதிவும் அழகாத்தானே இருக்கு....அதையும் லிஸ்ட்ல சேத்துருங்க....
வாழ்த்துக்கள்//
வாங்க பங்காளி! அழகான பதிவா பதிவாலேஅழகா?:) நன்றி கருத்துக்கு!
ஷைலஜா
//நாமக்கல் சிபி said...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்க!
அழகு அருமையோ அருமை//
நன்றி சிபி
இனிமே தொடர்ந்து எழுதறேன்...
தென்றல் said...
ReplyDeleteஇப்படியும் அழகு படுத்தலாமோ? ;)
ம்ம்...வித்தியாசமாக... நன்றாக அழகு படுத்திருக்கீற்கள்!
வாழ்த்துக்கள்! '//
ஆ !தென்றலின் வருகையா? பதிவில் வரும்போதே அதான் இத்தனை ரம்மியமா? நன்றி உங்க வாழ்த்திற்கு தென்றல்!
ஷைலஜா
மேடம்,
ReplyDeleteஇந்த பதிவு ரொம்பவே அழகு..... :)
சென்றமுறை பெங்களூரூலில் வலைபதிவர் சந்திப்பில் கொடுத்த கேசரியோ ருசியோ ருசி.... :)
இலவசக்கொத்தனார் said...
ReplyDelete//அழகாவே இருக்கு!
உங்க பங்குக்கு யாரையுமே கூப்பிடலையே//
வாங்க கொத்ஸ்! ரொம்ப நாளா உங்ககிட்ட ஒருகேள்வி கேக்க நினைப்பேன் இப்போ கேக்கப்போறேன் இதென்ன இலவசகொத்தனார்னு பேரு?:) புதுமையா இருக்கே? உங்க பாராட்டுக்கு நன்றி. என் பங்குக்கு யாரைக் கூப்பிட்றதுன்னு தெரியல..கூப்பிட நினச்சவங்கள்ளாம் எழுதிட்டாங்களா பாத்திட்டு மறுபடி பதிவுல அழைக்க்கிறேன்.நன்றி
//கீதா சாம்பசிவம் said...
ReplyDeleteeverything is very beatiful indeed. romba nalla pathivu. first time I saw your name in Thamizhmanam, and "better late than never." //
வாங்க கீதா! உங்க பதிவுல நகைச்சுவை இழையோட நீங்க எழுதுவதை ரசிப்பேன் ஆனா பின்னூட்டம் இட்டதில்ல இனி வருகைதரேன்.. ரொம்பநாள் ஆனதும் தமிழ்மணம் வரேன் முதல்தடவை இல்லகீதா இது.
நன்றி உங்ககருத்துக்கு என்னாச்சு இன்னமும் தமிழ் தட்டச்ச முடியலயா? அமெரிக்கா வந்துருக்கீங்க போல, நானும் இங்கதான்...!!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅழகாக இருக்கிறது பதிவு திருவரங்கப்ரியா. இரவிசங்கரின் பதிவில் அந்தரங்கனை அந்தரங்கத்தில் என்று அழகுபட சொல்லியிருந்தீர்களே அந்த அழகையும் இரசித்தேன்//
வாங்க குமரன்!
ஆமா அரங்கனைப்பற்றி படித்தாலே உற்சாகம் காவிரியாய் ஊற்றெடுக்க ஏதாவது சொல்லிவிடுவேன்..ரசித்தமைக்கு நன்றி
//தம்பி said...
ReplyDeleteம்ஹீம்
இதெல்லாம் ஒத்துக்க முடியாது
குறைஞ்சது பத்து பாரா இருக்கணும்
எல்லாரும் உணர்ச்சிவசப்பட்டு பெரிய பெரிய அழகு பதிவு போட்டா நீங்க சிம்பிளா போட்டு ஏமாத்த பாக்கறிங்களா... //
அன்புத்தம்பியே! அக்காவை இப்படி சங்கடப்படுத்தலாமா? பெரிய பெரிய பதிவு எல்லாம் நீ எழுதினா அழகா
நல்லா இருக்கும். ஒரு விறட்டி தட்றதை அமக்களமா சொன்னதை ரசிச்சேன்... சிம்பிளா ஸ்விட்டா முடிச்சிட்லாம்னு பாத்தா விடமாட்டே போல்ருக்கே?:)
Bharateeyamodernprince said...
ReplyDelete//really good! //
thankyou prince!
ஷைலஜா,
ReplyDeleteநம்ம பதிவுல போயி முதல் மூணு நாலு இடுகைகளைப் பாருங்க. உங்க கேள்விக்குப் பதில் இருக்கு!!
(எப்படி எல்லாம் ஆள் பிடிக்க வேண்டி இருக்கு. ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ. கண்ணைக் கட்டுதே) :)))
//இலவசக்கொத்தனார் said...
ReplyDeleteஷைலஜா,
நம்ம பதிவுல போயி முதல் மூணு நாலு இடுகைகளைப் பாருங்க. உங்க கேள்விக்குப் பதில் இருக்கு!!
(எப்படி எல்லாம் ஆள் பிடிக்க வேண்டி இருக்கு. ஸ்ஸ்ஸ்ப்பாஆஆ. கண்ணைக் கட்டுதே) :))) //
ஆள்பிடிக்க இப்படி ஒரு ஐடியாவா?:)
என்னவோ போங்க நாங்க இலவச சித்தாளு ன்னு எல்லாம் பேரு வச்சிட்டா டேஞ்சர்தான்!!சரி பாக்றேன் அங்க போயி நன்றி கொத்ஸு!(கத்திரிக்காயா?:)
ஷைலஜா
ஷைலஜா,
ReplyDeleteரவா கேசரி நல்ல ஆரஞ்சு கலர்ல, இளஞ்சூட்டோட, பஞ்சு மாதிரி இருந்தா, அழகா தான் இருக்கும். :)
கலக்கிபுட்டீங்க.
ஆமா, பாட்டு எங்கங்க? கடவுள் உள்ளமே 'அழகா' பாடி அனுப்புங்களேன்.
அப்படியே, உங்க ரெகமண்டேஷன்ல உள்ள வந்த ஸ்ரீஷிவ் கிட்ட மேடைக்கு வரச் சொல்லுங்க :)
:)
வந்து மார்க் போடுங்கோ.
ReplyDeleteஆயர் பாடி மாளிகையில்
பட்டியலில் என் பெயர் விட்டுப் போனதே :-)
ReplyDeleteதொடர்ந்து எழுத நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
என் சுரேஷ், சென்னை
இராம் said...
ReplyDelete//மேடம்,
இந்த பதிவு ரொம்பவே அழகு..... :)
சென்றமுறை பெங்களூரூலில் வலைபதிவர் சந்திப்பில் கொடுத்த கேசரியோ ருசியோ ருசி.... :) //
ராம்! இன்னொரு சந்திப்புல மறுபடி அதே கேசரி செய்துடலாம்!
ஒகே சரியா?:) கருத்துக்கு நன்றி பாலகனே!(ஆனாலும் குட்டிப்பையன் நீ!)
ஷைலஜா
// SurveySan said...
ReplyDeleteஷைலஜா,
ரவா கேசரி நல்ல ஆரஞ்சு கலர்ல, இளஞ்சூட்டோட, பஞ்சு மாதிரி இருந்தா, அழகா தான் இருக்கும். :)
கலக்கிபுட்டீங்க.
ஆமா, பாட்டு எங்கங்க? கடவுள் உள்ளமே 'அழகா' பாடி அனுப்புங்களேன்.
அப்படியே, உங்க ரெகமண்டேஷன்ல உள்ள வந்த ஸ்ரீஷிவ் கிட்ட மேடைக்கு வரச் சொல்லுங்க :)//
சர்வ்ஸ்! கடவுள் உள்ளமே பாட்டை அழகாப் பாட தைரியம் இல்லாமத்தானே விட்டு வச்சிருக்கேன்! வேற பாட்டுல கலக்கிடலாம்.ஆயர்பாடிமாளிகை வந்து பார்த்திட்டு மார்க் போட்றேன் கொஞ்ச்சம் வெயிட்டீஸ்!
//N Suresh, Chennai said...
ReplyDeleteபட்டியலில் என் பெயர் விட்டுப் போனதே :-)
தொடர்ந்து எழுத நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
என் சுரேஷ், சென்னை //
வாங்க சுரேஷ்! பட்டியலில் உங்க பேர்மட்டுமா பலரது பெயர் விட்டுபோயிருக்கு! இன்னொரு பதிவில் பதித்துவிடுகிறேன் விட்டுப்போனவர்களை!
நன்றி கருத்துக்கு.
ஷைலஜா
ரொம்ப நாளா பூட்டியே கெடக்குன்னு நானும் இந்தப் பக்கம் வராம இருந்துட்டேன்... பாத்தா எக்கச்சக்கமா எழுதியிருக்கீங்க.. ஒன்னொன்னா படிக்கிறேன்....
ReplyDeleteஅழகானப் பதிவு... ஆனாலும் சின்னதா முடிச்சிட்டீங்க. மத்த மக்களையும் இந்த ஆட்டத்துல இழுத்து விடல... ஸோ.. இந்தப் பதிவு செல்லாது செல்லாது... :))
யு டூ ஜீ?:0 சரி எல்லாரும் சொல்றதால மறுபடி பெரிய பதிவா எழுதறேன்...அப்றோம் புதுசா கோடம்பாக்கத்துக்கு என்ன பாட்டு எழுதினே தம்பி?:)
ReplyDeleteஷைலஜாக்கா
அய்யய்யோ ஷைலஜா,
ReplyDeleteஅழகுன்னா ஏதாவது அழகான படம் இருக்குமோன்னு ஓடோடி வந்தேன் :-)
என்னோட கிண்டல் அழகுன்னு சொல்லி என்னைக் கிண்டல்தானே செஞ்சிருக்கீங்க?
அழகா இருந்தா சரி!
சாத்தான்குளத்தான்
// ஆசிப் மீரான் said...
ReplyDeleteஅய்யய்யோ ஷைலஜா,
அழகுன்னா ஏதாவது அழகான படம் இருக்குமோன்னு ஓடோடி வந்தேன் :-)//
ஹலோ அதுக்குதான் இருக்கே உங்கபதிவு நயன்ஸ் (நயனதாரா) அசின் பிசினுனு ஏதாவது போடுவீங்காளே:))
//என்னோட கிண்டல் அழகுன்னு சொல்லி என்னைக் கிண்டல்தானே செஞ்சிருக்கீங்க?//
நல்லதுக்கே காலமில்லப்பா:)
//அழகா இருந்தா சரி!//
கைரளி பாக்றதவிட்டு பெரியதலை நீங்கள்ளாம் இங்க வந்ததே அழகுதான் போங்க:) நன்றி