Social Icons

Pages

Sunday, June 15, 2008

அப்பாவின் நினைவில்....

இலையைச்செய்யமுடியும்
அதன் ஈரத்தை செய்ய முடியுமா
விசிறியைச் செய்யமுடியும்
காற்றைக்கொண்டுவரமுடியுமா
என்ற ஏதோ ஒருகவிஞனின் கூற்றாய்

'அப்பா...! '
உங்களைப்பற்றி நினைக்கலாம்,
ஆனால் நேரில்நின்று
பேசுவது போலாகுமா?
உங்களைப்பற்றிய
ஒலிப்பதிவில் குரலும்
ஒளிப்பதிவில் உடலும்முகமும் உண்டு
ஆனாலும் அதில் உயிருண்டா?
உணர்வுப்பரிமாற்றங்கள்
அருகில் இருக்கும்போதுதானே?
பிறந்த வீட்டு நினைவுகளை
அவ்வப்போது
அசைபோடும்மாடுகள்தான்
புகுந்தவீடுவந்துவிட்ட
பெண்கள்!

13 comments:

  1. ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அருமை! வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதை
    இப்'பாவை' தன்வலையுள் இட்டுவைத்தாள்! -அப்'பா'வைக்
    கண்டு களித்தேன் கவிகூறும் செம்பொருளை
    உண்டு உருசித்தேன் ஓர்ந்து!

    அகரம்.அமுதா

    ReplyDelete
  3. பெண்களுக்கு அப்பானா கொஞ்சம் ஸ்பெஷல் தான். :p

    ReplyDelete
  4. அப்பாவின் நினைவை அருமையுடன் அசைபோட்டிருக்கிறீர்கள்.

    //இலையைச்செய்யமுடியும்
    அதன் ஈரத்தை செய்ய முடியுமா
    விசிறியைச் செய்யமுடியும்
    காற்றைக்கொண்டுவரமுடியுமா//

    இதுவும் நல்லாருக்கு.

    ReplyDelete
  5. Anonymous8:21 AM

    romba nalla irukku shyla akka...

    ReplyDelete
  6. உங்களின் உணர்வுப்பகிர்தல் அருமை.எனது அப்பாவிடம் எனக்கு மிகுந்த பாசம்.ஆனால் வெளிப்படுத்துதல் எனக்குத் தெரியவில்லை(நேரிலும்,கவிதையிலும்).ஒருவேளை பெண்ணாய்ப் பிறந்திருந்தால் வீரியமாக வெளிப்பட்டிருக்குமோ..?

    ReplyDelete
  7. அகரம்.அமுதா said...
    ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அருமை! வாழ்த்துக்கள்

    7:44 AM
    அகரம்.அமுதா said...
    அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதை
    இப்'பாவை' தன்வலையுள் இட்டுவைத்தாள்! -அப்'பா'வைக்
    கண்டு களித்தேன் கவிகூறும் செம்பொருளை
    உண்டு உருசித்தேன் ஓர்ந்து!

    அகரம்.அமுதா

    >>வாங்க வெண்பாத்தென்றல் அமுதா.
    அருமையா பா எழுதறீங்க நன்றி ரசித்தேன்.

    ReplyDelete
  8. அகரம்.அமுதா said...
    ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அருமை! வாழ்த்துக்கள்

    7:44 AM
    அகரம்.அமுதா said...
    அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதை
    இப்'பாவை' தன்வலையுள் இட்டுவைத்தாள்! -அப்'பா'வைக்
    கண்டு களித்தேன் கவிகூறும் செம்பொருளை
    உண்டு உருசித்தேன் ஓர்ந்து!

    அகரம்.அமுதா

    >>வாங்க வெண்பாத்தென்றல் அமுதா.
    அருமையா பா எழுதறீங்க நன்றி ரசித்தேன்.

    ReplyDelete
  9. ambi said...
    பெண்களுக்கு அப்பானா கொஞ்சம் ஸ்பெஷல் தான். :p

    >>>>வாங்க அம்பி..சீக்ரமேவ புத்ரி பாக்ய ப்ராப்திரஸ்து!

    ReplyDelete
  10. கவிநயா said...
    அப்பாவின் நினைவை அருமையுடன் அசைபோட்டிருக்கிறீர்கள்.

    //இலையைச்செய்யமுடியும்
    அதன் ஈரத்தை செய்ய முடியுமா
    விசிறியைச் செய்யமுடியும்
    காற்றைக்கொண்டுவரமுடியுமா//

    இதுவும் நல்லாருக்கு.
    ///
    நன்றி கவிநயா..
    முகுந்தா போஸ்ட் வந்ததுல இங்க அப்பாவை மறந்தே போயிட்டேன் இப்போதான் பார்த்து பின்னூட்டங்களை இட்டு பதிலும் அளிக்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்க.

    ReplyDelete
  11. //தமிழ்ப்பறவை said...
    உங்களின் உணர்வுப்பகிர்தல் அருமை.எனது அப்பாவிடம் எனக்கு மிகுந்த பாசம்.ஆனால் வெளிப்படுத்துதல் எனக்குத் தெரியவில்லை(நேரிலும்,கவிதையிலும்).ஒருவேளை பெண்ணாய்ப் பிறந்திருந்தால் வீரியமாக வெளிப்பட்டிருக்குமோ..?

    //வாங்க தமிழ்பறவை...நேரிலும் கவிதையிலும் அப்பாவிடம் பாசத்தை
    வெளிப்படுதத தெரியாவிட்டால் என்ன, உங்க மனசு அவருக்குத் தெரியுமே? நன்றி வருகை+கருத்துஇரண்டிற்கும்.

    ReplyDelete
  12. அப்பா பற்றிய வலையுலக மைபா மகள் மிக அழகாகச் சொன்னீர்கள் :)

    ReplyDelete
  13. அக்கா...ரொம்ப சாரி...;(

    கவிதை அருமை...;)

    ஆனால் எனக்கு அந்த மாடு என்ற வார்த்தை பிடிக்கல ;(

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.